கவிதை 10 / 77

அருமறையில் அறுவர்

Six in the Noble Scripture

X

அருமறையில் அறுவர்

10.8.68 அன்று தமிழ் வட்டத்தின் சார்பில்சென்னையில் "அருமறையில் அறுவர்"எனுந் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு. கருணாநிதிஅவர்களின் தலைமைக் கவிதையுரை
அவை நடுவினிலே வீற்றிருக்கும் ஆன்றோரே,அறிவுசால் பெரியோரேஅன்புத் தாய்மாரே,அருமறையாம் திருக்குறளில் அறுவர் காட்ட - தமிழ்த்திருமலியும் கவிதையுடன் வந்திருக்கும்பெருமைமிகு புலவர்களே! வணங்குகின்றேன்!ஆறிரண்டு திங்கள் அதற்கு மேல் நாலு திங்கள்ஆயிற்றுப் பதினாறு திங்கள் - நான்அமைச்சனாய்ப் பதவியேற்றுஇதற்கிடையேஐந்தாறு கவியரங்கில் அவைத் தலைமை ஏற்கச் சொல்லிப்பைந்தமிழை மறவாமல் பதவியில் இருக்கச் செய்தார்!பாட்டெழுதும் புலவன் என்று பரிந்து அழைக்கவில்லைநாள்தோறும்சீட்டெழுதி வருகின்றார் கணக்கற்றோர்மனுக்களுடன்
உழல்கின்றேன் அவரிடையே - ஓய்வே இல்லைசுழல்கின்ற பம்பரமும் சுற்றிப்பின் படுத்துக் கொள்ளும்உருள்கின்றேன் ஊரூராய் உதைபட்ட பந்தைப்போல்!உடல் இளைத்துப் போனாலும் உயிர்மட்டும் இளைக்கவில்லைநெஞ்சில்
சுடர்வழங்கத் தமிழிருக்கச் சோர்வுதான் மேவிடுமோ?அடலேறு மொழித் தமிழே - இன்பக்கடலேறு மலைத் தமிழே - சோலைமடலேறு சுவைத் தமிழே - நீ என்உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய்; வணங்குகின்றேன்.
இலக்கணத்தை எதிர்க்கும் எண்ணம் என்பால் இல்லைஇலக்கணம் தான் ஊடல் செய்யும் அன்புக் கிள்ளைஒருபாட்டும் இலக்கணமுடன் ஒருப்பட்டு வராவிடினும்நான் தரும்பாட்டு தமிழ் உணர்வைக் கொல்லாதெனும் துணிவுடனேகரும்பாட்டும் ஆலையிலே வேம்பொன்று புகுந்தது போலஇக் கவிக் கூட்ட மேடையிலே வீரமாய்ப்புகுந்து விட்டேன், தென்றல்.அரும்பாட்டும் பூங்காவில் உங்கள்அரும் பாட்டு, தமிழ் மாலையிலே பூவாம்அந்தப் பூவாடும்சுரும்பாட்டம் இருக்கின்றீர் நீங்கள்; நானோதுரும்பாட்டம் இருக்கின்றேன் உம்மிடையே!எறும்பாட்டும் இரும்புத் தூண் என்றால்;எறும்பு ஆட்டும் இரும்புத் தூண் என்றால்;என் வெறும் பாட்டும் வென்று விடும் நும்மை!
தமிழ் வட்டம் அமைத்திங்கேதமிழ் விழா நடத்துகின்றதகைசால் வி.கே.சி. நடராசன்தந்திடுக வருகை என்றார்இட்டமுடன் அழைத்ததனால் அவர் என்னைவட்டமிடல் ஆகாதென்று வருகின்றேன் எனச் சொன்னேன்வந்து விட்டேன் தலைமை தாங்க
வட்டமெனில் வகைப்படுத்தும் பேராம் - ஒருதிட்டமுடன் செயலாற்றும் கூறாம்.பொட்டிடும் பாவைக்கு நெற்றியிலே வட்டம்கொட்டிடும் ஒளிமழை நிலவுமோர் வட்டம்மட்டில்லாத் தொலைவுகொள் கதிருமொரு வட்டம்; சிலமாணவர்கள் வாங்குகின்ற எண்களோ முழுவட்டம்!காதல் செயலுக்குக் கட்டிலொரு வட்டம்கனிமொழிப் பிள்ளைக்குத் தொட்டிலொரு வட்டம்மாதர் வாழ்வுக்குக் கற்புநெறி வட்டம்மறவர் பெருமைக்குப் போர்க்களமே வட்டம்உழவர் ஏருக்கு விளைநிலமே வட்டம்நண்பர் உறவுக்கு அன்பகமே வட்டம்துறவோர் தூய்மைக்கு மனக்கூண்டே வட்டம்கயவர் வாழ்வுக்குத் தெரியாது வட்டம்கண்டபின்னர் அமைவதுதான் 'கயவர்:' எனும் பட்டம்
முதலில் 'வீரன்' எனும் தலைப்பினிலேமுரசறைவார் கணேச நல்லார்!இறந்திடுவேன் எதிர்ப்பினிலே என் தலைவன்இருவிழியும் நீர் பொழிய!அச்சாவை இரந்திடுவேன்....மறந்திடுமோ திருக்குறளும்?மறக்கவில்லை!மானினத்தார் வீரங்காட்டிஆண் இனத்தைப் புறங்காணும் புறப்பாடல்பழைய திறப்பாடல்!விழுப்புண் படாத நாள் எல்லாம் வீரன்வீணான நாள் என்பான் என்ற குறட்பாடல்துள்ளிவருகுது வேல் என்றுதுடித்து நின்றது இமையென்றால்எள்ளி நகைப்பான் வள்ளுவனும்ஏறு தழுவுதல் வீரர்க்கழகு - அவர்வாயில்வெற்றிலைச் சேறு தடவுதல் மகளிர்க்கழகுசாக அஞ்சார் களம் செல்வார்சா. க. அஞ்சார் கவி சொல்வார்வீரன்' கவி சொல்வார்:
(கவிஞர் கம்பன் அடிப்பொடி சா.கணேசன் எம்.எல்.சி. 'வீரன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
படுத்திருக்கும் எழுத்தெல்லாம் பாய்ந்து துள்ளகொடுத்திருக்கும் புதுவேகம் என்ன சொல்ல?"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்" என்றேமறவர்க்கிலக்கணம் வரைந்தது குறளும்! அதை- மறந்தவர் சிலரோ வரியை மாற்றி"உயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்மயிர் நீப்பர் மானம் வரின்' என்றுமொட்டையடிக்கின்றார் தேர்தல் பந்தயத்தில்!"யானையினைக் குறிபார்த்துத் தவறும் வேல்கானமுயல் கொன்றெறியும் அம்பின் மேல்"இந்த மானமொழி வழங்குகின்றான்"குறள் வீரன்" இன்று;பூனை குறுக்கானால் போச்சுதடா உயிர் என்றுஞான மொழி பேசுகின்றான் தமிழ் வீரன்!
களம் காண்பான் வீரன் என்றால்நெற் களம் காண்பான் உழவர் மகன்!போர் மீது செல்லுதலே வீரன் வேலைகணேசர் வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை.பகைவர்
முடி பறித்தல் வீரன் நோக்கம் - நாற்றுமுடி பறித்தல் நடவின் நோக்கம்உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டுவேற்றுமையோ ஒன்றே ஒன்றுஉழவன் வாழ வைப்பான்வீரன் சாக வைப்பான்!உழவனது பெருமையெலாம் உரைப்பதற்குஉழுவலன்பர் சாரதியும் வருகின்றார்பார்த்தசாரதிபாட்டுச் சாரதியாய் மாறிப் பைந்தமிழ்த் தேர் ஓட்டிடுவார்இல்லை..இல்லை ஏர் ஓட்டிடுவார்உழவன் பற்றிப் பாடுகின்றார்; அதனாலே:
(கவிஞர் நா.பார்த்தசாரதி 'உழவன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
உழவே தலை என்றுரைத்ததனால்உழவனுக்குத் தலைவனில்லைஉழவன் பற்றி பாடுவோர்க்கும் தலைவனில்லைஅறிந்திடுக!"இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்"எதுவுமில்லையென ஏங்கியிருப்பாரைக் கண்டு"எது இல்லை என் மகனே?வெடித்திருக்கும் என் வயிற்றில் மண்வளம் பார்வெட்டியெடுத்தாலோ நீர்வளம் மிகுந்துவிடும்வெகுதூரம் அகழ்ந்திட்டால் வைரமணி வழங்கிடுவேன்வெகுளியாய் வாழாமல் வேளாண்குடி பெருக்கிடுக!"எனச் சிரித்து நிலமடந்தை நிற்கின்றாள்உழவர் திருமகனே உணர்ந்திடுகபுவிச் சிரிப்புஉழைத்துப் பெற்றிடுக உடனடியாய்ப் புதுச் செழிப்பு;
அடுத்து;நண்பர் வருகின்றார்அடுத்து வரும் நண்பர்களை ஆதரித்து அன்புகொண்டுபடுத்துறங்கும் வேளையிலும் அவர் நினைவாய் நானிருந்துஎனைக்கெடுத்திடவே துணிந்தபோதும் நட்புடனே அணுகி நைந்துஇனித் தடுத்திடவே முடியாது அவர் வீழ்ச்சி என்பதாலேமுடித்துவிட்ட கேண்மையெலாம் பெரிய கதை.எதில் முதல்வனாய் இருக்க வேண்டும் நண்பன்;இன்ப விளையாட்டிலா?இடித்துரைக்கும் பண்பாட்டிலா? இதில்எதில் முதல்வனாய் இருக்கவேண்டும் நண்பன் என்றுஎழில் முதல்வன் எழுத்தாரம் சூட்டுகின்றார்தொழில் பேராசிரியர்; கவிப்பொழில் தமிழ்க் குயில்கூவிடுக நன்றுகூறிடுக நண்பர்:
(பேராசிரியர் எழில் முதல்வன் 'நண்பன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நட்புக்கோர் அதிகாரம்நட்பாராயப் பிறிதோர் அதிகாரம்பழகுதலுக்கோர் அதிகாரம்பாங்குடனே "தீ நட்பு" "கூடா நட்பு" எனப்பகுத்து ஒவ்வொன்றுக்குமோர் அதிகாரம்வகுத்தளித்த வள்ளுவனும்
நண்பர்களால் மெத்தப் பாடுபட்டானோ நம்மைப்போல!நண்பர் எனில் நமது எழில் முதல்வன் சொன்னதுபோல்நட்புக்கோர் அடையாளம்பிசிராந்தை -கோப்பெருஞ்சோழனன்றோ!திருமணத்தில் போர் ஓலை வந்தவுடன்தேனமுதைப் புறம் விடுத்துத்தேசிங்குப்படை சேர்ந்த மகமத்கான்சரித்திரத்துப் புத்தகத்தில் சரியாத ஏடானான்.
ஆண்களிடை அதிக நேரம் நின்றுவிட்டோம்வீரன் என்றும் உழவன் என்றும்,நட்பு விதைக்கின்ற தோழன் என்றும்வெகு நேரம் ஆனதனால்களைப்பாறப் பெண் வேண்டும்பெற்றுக் கொடுக்கவொரு புலவர் வருகின்றார்!பெறுவதெப்போது? வளர்வதெப்போது? நம்பேரனுக்குத் திருமணமா? எனக் கேட்பீர்சந்தக்கவிமணியாம் தமிழழகன்தந்தப் பெண்மணியைத் தருகின்றார்.கண்டிடுவீர்சந்தக் கவி தந்தச் சிமிழ்சிந்துத் தமிழ் செவி மடுப்பீர்.
(சந்தக்கவிமணி தமிழழகன் 'பெண்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
பெண்கள்பெய் என்றால் பெய்து விடும் மழை என்றார் கவிஞர்கற்புநிறை பெண்ணை அந்தக் கடுஞ்சோதனைக்கு ஆளாக்கி
மழை பெய்யா விட்டாலோ மாசு தூவிடல் முறையன்றுபெய்யெனப் பெய்யும் மழை என்று பெண்ணைப்பெருமையாய்ச் சொன்ன குறள் - நல்லபெண்ணொருத்தி பெய்யெனப் பெய்கின்ற மழை போன்றாள்எனும் கருத்தை நிலை நாட்டும்.பழங்கருத்து தலை காட்டும்; துரத்த வேண்டும்.
அடுத்து; பெண்ணைத் தொடர்ந்து துறவு வருவானேன்? நம்கண்ணையெலாம் 'காவி' மறைப்பானேன்?பெண்வந்தால் துறவு வரும் சில துறவிக்குத் துறவுக்குத் துறவு வரும்.இரு துறவு ஏற்றவர்கள் இந்தத் தமிழகத்தில் பலருண்டுஇனியதாம் இல்லறத்தை முதலில் துறந்துகனிரசம், பால், தயிர், கமண்டலம் என்றிருந்துகன உடல் கொழுத்தவுடன்துறவறத்தைத் துறக்கின்றார் வெளிப்படையாய்!இலைமறை காயாக இருக்கின்றார் கெட்டிக்காரர் இந்தத்தலைமறைவு வேலையெல்லாம் தகுமா என்றுகலைமிகு பாவாணர் தூரனாரும்நெருங்கி வந்து நெஞ்சம் திறக்கின்றார்!துறக்கின்றார் என எண்ணாதீர்திறக்கின்றார் கவிதை நெஞ்சம்!
(கவிஞர் பெரியசாமித்தூரன் 'துறவு' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
துறவு நன்றெனினும்தூய்மையாய் இருத்தல் வேண்டும்வேடமாய்த் தொடர்தல் தீது; தீயிற்சூடமாய்ப் பற்றிக் கொள்ளும் நெஞ்சுக்குத்
துறவுநிலை ஆடிக்காற்றுப் பஞ்சாம்நஞ்சாம் வாழ்க்கை என்பார் பகலில்பஞ்சாமிர்தம் தேவையென்பார் இரவில் அதனைஅஞ்சாமல் கண்டிக்கும் உரம் வேண்டும் மனதுக்குஅரசு கட்டில் மணிமகுடம் அணிமணிகள் துறந்துவிட்டுஆரண்யம் சென்ற முனி விசுவாமித்திரரும்மேனகையின் விசுவாசமித்திரராய் ஆனகதை அறியீரோ?''மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்துவிடின்"இதை மறுப்பார் கயவரிலே ஒருவகையாம்; அதில்பலவகையும் பாடுதற்குத்திருச்சிற்றம்பலம் வருகின்றார்தித்திக்கும் தமிழ் தருகின்றார்:
(கவிஞர் திருச்சிற்றம்பலம் 'கயவர்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
மொழிந்தகவி அத்தனையும் முகமலர்ந்து கேட்டிருந்த நல்லோரேமுழுநிலாப் போல் அமர்ந்திருக்கும் எனதருமை நாவலரே!முடிவுரையை நிகழ்த்துகின்றேன் முடிந்த பின்னர் சென்றிடுவீர்ஆண்மை கொள் வீரனையும்அன்பு சால் பெண்ணினையும்கேண்மை மிகு நண்பனையும்கேடு சூழ் கயவனையும்பழகு தவத் துறவியையும்உழவு செய் மனிதனையும்அறுமறையில் அறுவராய்த் தேர்ந்தெடுத்து அளித்திடுக விளக்கமென்றார் அமைச்சனைத்தான் விட்டுவிட்டார்.அருகில் வைத்துக் குறை கூறக் கூடாதென்ற எண்ணம் போலும்!
"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு"
"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு''
"பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துட் தெவ்வோர்எழுபதுகோடி உறும்"
இழிவினைத் தேடும் அமைச்சனை விடவேஎழுபது கோடிப் பகைவர்கள் மேலாம்இவ்வாறு அமைச்சு பற்றிச்செவ்வாழைக் குறள் கருத்தில்ஒவ்வாமல் போனவர்கள்எவ்வாறு சிறப்புறுவர்?மங்காத ஒளி விடுத்து மண்டபத்து இருட்டுக்குள்வௌவாலைப் போன்றவர்தான் தொங்கிடுவர்நிலமாளும் எங்களுக்குத்தூங்காமை கல்வி துணிவுடைமைநீங்காமல் இருக்க வேண்டுமென்றார்; நான்கற்றது சிறிதெனினும் கவியெழுத இரவெல்லாம்தூங்கவில்லை வேறு ஓய்வுமில்லைதுணிவுடைமை இருப்பதாலேஅணி சீர் தளை தொடை எதுவுமின்றிக் கவிஅரங்கேற வந்து விட்டேன்புவியாளப் புகன்ற குறள் என்கவியாளத் திருத்திக் கொண்டேன்.அதற்காகக் கவியரங்கீர்கடி தோச்சி மெல்ல எறிக எனக் கேட்டுக் கொள்வேன்.அமைச்சனுக்குத் தனியாக விளக்கம் ஏன்?பகை அஞ்சாமை கொண்டிருந்தால் வீரனாவான்பழி அஞ்சாமை கொண்டிருந்தால் கயவனாவான்அன்புடைமை காட்டுவதில் பெண்ணாவான்
நல்லேர் உழுவதிலும் சிறப்பாகச்சொல்லேர் உழுவதிலும் செம்மை சால் உழவனாவான்வாய்ப்பதிகம் எனினும் வருகின்ற வசதிகளைஇழப்பதிலே துறவியாவான்நகுதற் பொருட்டன்று நட்டல் மேற் சென்றிடித்தல்பொருட்டெனும் குறள் உணர்ந்த தன்மையினால்திறன் வாய்ந்த நண்பனாவான்
பெண்ணுக்குப் பெருமை தற்காத்தல்;வீரனுக்கு விழுப்புண்ணில்;நண்பனுக்கு நன்றியிலே;துறவிக்குக் கல்லறையில்;கயவனுக்குக் காணும் பெருமையெல்லாம்;குயவனது மண்பாண்டம்!என்பெருமை உம்மிடையே இருப்பதுதான்!இப்பெருமை நிலைத்தாலே போதுமென்பேன்.
வணக்கம்வாழ்க

மூலமும் சான்றும்