கவிதை 48 / 77
பகுத்தறிவுப் பாண்டியனார்!
Rationalist Pandianar!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பகுத்தறிவுப் பாண்டியனார்
எமது அருமைப் பாண்டியரே!சவுந்தரம் உமது மேனிமட்டுமோ?உள்ளமும் கூடத்தான் சவுந்தர்யமானது!உறுதியும் புலிதான் உமது தோற்றம்-
பன்னீர் செல்வத்தைப் போன்ற கம்பீரம்பட்டி வீரன்பட்டி பாண்டியர்க்கு என்று;அண்ணன் அழகிரி அடிக்கடி சொல்வதைஅருகிலிருந்து சுவைத்தோரில் நானும் ஒருவன்.
நானும் அன்பிலும் நாகூர் அனிபாவும்தேனும் பாலும் கலந்த விருந்தோம்பலைபட்டி வீரன் பட்டியில் கண்டு மகிழ்ந்தோம்.பகுத்தறிவுக் கனிகள் உண்டு மகிழ்ந்தோம்.
மறுநாள் காலையில் மலையோரத் தோட்டத்துநறுமண ஏலம், காய்கள், மலர்கள்அனைத்தையும் எமக்குக் காட்டி விளக்கிடஅமைத்துச் சென்றீர்; அது இன்னும் நினைவில்!
அய்யப்பனை மீண்டும் படைத்திட்ட பி.டி.ராஜனும்"பொய்யப்பா கடவுள்" எனும் சவுந்தரபாண்டியனும்நெய்யைப் போல் வெண்ணெய்க்குள் ஒன்றிருக்கும்நெஞ்சத்தால் நண்பர்களாய் வாழ்ந்திட்ட பண்புதான் என்னே!
ஆரூரில் ஓர் நாள் யாம் இளந்திராவிடர் நடத்திய கூட்டம்;அதில் கலந்து நீவிர் ஆற்றிய உரைதான் ஆயிரம் பொன்னாம்!
சுயமரியாதை இயக்கத்தின் பெயரால்; பெரியார்சொல்வது எதுவாயினும் அதனை ஆணையாய் ஏற்பேன்பவள விழா மாநாட்டை மதுரை மூதூரில்என்றீர்!பாண்டியன் நகர் என்று பெயர் வைத்துதி.மு.க. நடத்திய நிகழ்ச்சியொன்றே - வரலாற்றைத்திரும்பிப் பார்க்க மறவாத இயக்கமென நிரூபிக்கும் சான்றாகும்!பேரவைத் தலைவராயிருந்த பாண்டியன் தொகுதியாம்சேரன்மாதேவியிலே சிறப்புறு பாலமொன்றுஎண்பது லட்சம் செலவில் எழிலாக அமைந்தபோதுவண்டமிழ்ச் சவுந்தரபாண்டியன் பெயர்தான் வைத்தேன்.ஆட்சிக்கு வருவோர் பக்கம் கொள்கை வைத்துக்கட்சிக்கு அடிமைகளாய்த் தொழுது நிற்கும்பல் இளித்தான் கூட்டத்திற்குச் சவுக்கடிபல்லாயிரம் தந்திடுவீர்; பாண்டியரே உம் சொல்லால்!அரிநாம மந்திரத்தை ஜெபிக்கின்ற மகாமகங்கள்பரிணாம வளர்ச்சி எனப் பசப்பிக் கொண்டுஅரிமாவாய் வாழ்ந்திட்ட அறிவியக்க தளபதியின்அழகு திருமேனியினைத் திறக்கின்ற "பொருத்தம்" தான்என்னே!ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தி ஒன்பதாம் ஆண்டில்அய்யாநின்று நடத்திய செங்கை சுயமரியாதை மாநாட்டில்பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டுமென்றகண்ணனைய தீர்மானம் உமது தலைமையில்நிறைவேறியதைத்தான் நினைவில் வைத்து,முறையாகத் தி.மு.க. ஆட்சியிலே சட்டம் செய்தோம்நாடார்கள் மட்டுமின்றி உமைநாட்டோரே புகழ்கின்றார்; போற்றுகின்றார்.
சாதி ஒழிந்தால்தான் சமுதாயம் முன்னேறுமெனஆதி மகன் வள்ளுவனின் திருக்குறளைஅணுப்போதும் மறவாது வாழ்ந்திருந்தகணுக்கரும்பே! கலங்காத சிங்க ஏறே! நீவிர் வாழ்க என்றும்!