கவிதை 47 / 77
அருமருந்தே! அன்பழக உடன்பிறப்பே!
Precious Remedy! Anbazhaga, Beloved Sibling!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: அருமருந்தே! அன்புறவு உடன்பிறப்பே!
உடன் பிறப்பே,உனக்கு மணிவிழா!நமது குடும்பத்தின் திருவிழா - உன்நாக்குத் தமிழ் மணத்தால்கழக நந்தவனம் சிறக்கும் - உன்வாக்குத் திறத்தாலேவஞ்சினப் பகையனைத்தும் பறக்கும் - உன்ஆக்கப்பணியணி கழகத்தைக்காத்து - நெடுந்தூக்கத் தமிழரை எழுப்பும்!நீயோர் ஒளிமணி;ஓயாமல் ஒலிக்கின்ற தமிழ்மணி!
பள்ளந்தான் தமிழர் வாழ்வில்விழலாமோ என்று,உள்ளந்தான் கொதித் தெழுந்தாய் - புதுவெள்ளந்தான் உந்தன் பேச்சு!வீரம் செய்கின்ற இனத்தின் மூச்சு!வெற்றி விளைக்கின்ற வாளின் வீச்சு!அகமென்றும் புறமென்றும் அடுக்கிடும்அருந்தமிழ் இலக்கியங்கள் தேன் வடித்திடும்!புலவர் கூட்டமோ,அதனை உன்பால் பருகத் துடித்திடும்!யாரோ சிறியார் நரியார்
ஏதோ வாதோ செய்திடத் துணிவேரேல்பேராசிரியக் கூர்வேல் பிளக்கும்!தீராப் பிணியும் தீர்ந்து தமிழ் இனம் பிழைக்கும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம்பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும்பிரியாத இருவண்ணக் கொடியே நாம் - இந்தப்பெருங்குடும்பம் பெருமகிழ்வுக் கடலில் துள்ளஅருமருந்தே! அன்பழக உடன்பிறப்பே!அறுபது நிறை மணிவிழா போல் - இன்னும்அடுக்கடுக்காய் பலவிழா காண நீபல்லாண்டு வாழியவே!