கவிதை 46 / 77

அவன் பிறந்தநாள் என ஒன்றில்லை!

There Is No One Day Called His Birthday!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: அவன் பிறந்தநாள் ஏன் ஒன்றில்லை!

X
அவன் பிறந்தநாள்என ஒன்றில்லை!
இந்தத் தென்கோடித் தமிழகத்தின்இதயவேந்தன்.இனிக்கின்ற வெல்லத்தையும் இதழ்விரிக்கின்ற மலர்களையும்சொற்சுவையாலும் - எழுத்தின்சுகந்த மணத்தாலும் வென்றிட்டப்பொற்காலப்பூபதி எங்கள் அண்ணன்!சிதையும் கருத்துக்களைவிஷப்பல்லாய்ப் பொருத்திசீறிவரும் நாகங்களையும்எதையும் தாங்கும்இதய மகுடியாய்சுருளச் செய்யும் பெருந்தகையாளன்!நாமம் தொலையா அர்ச்சனைகள்நாளும் நடக்கும் அண்ணனுக்கு!ஆமை போன்றான் அடக்கத்திலேஊமை போலப் பொறுத்திருப்பான்!ஆனால்தீமையொன்று தமிழர்க்கெனில்தீயைப் போலத் தாவி எழுவான்!அடைகாக்கும் கோழி போல
அவனைத்தான் நம்மையெல்லாம்-இன்று நாம்படை நடத்தும் பாங்கெல்லாம்அவன் தந்த பயிற்சிதானே!செம்பவளம் இதழ்களிலே -சிந்துவதே முத்துவார்த்தை!சினம் மேவா விழிகளிலே -ஜொலிப்பது தான் வைர ஒளி!அவன் பிறந்தநாள் என ஒன்றில்லைஅமுதத் தமிழ் பிறக்கின்றஅனைத்து நாளும் அவன் பிறந்த நாளே!

மூலமும் சான்றும்