கவிதை 32 / 77

முப்பெரும் விழாக் கவியரங்கம் தலைமைக் கவிதை

Presiding Poem at the Three Great Celebrations Poetry Assembly

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: முப்பெரும் விழாக் கவியரங்கத் தலைமைக் கவிதை

X
முப்பெரும் விழாக் கவியரங்கம்தலைமைக் கவிதை
எங்களுக்கு உயிராக வாய்த்த தமிழே!திங்களுக்கும் மாசுண்டு-தீந்தமிழே நீ களங்கமிலாக் கதிர் ஒளிதான்!பொங்கலுக்குச் சுவை கூட்ட வெல்லம் வேண்டும்-பொதிகைமலைத் தமிழே உனைவளர்க்கசங்கொலிக்கும் போர்க்களத்தில்நல்ல உள்ளம் வேண்டும்-வீரமாய்த் தழைக்கும் தமிழே!வெற்றியாய் விளையும் தமிழே!அங்கொலிக்கும் தோல்விப்பேச்சு இனி எதிரிக்கேயன்றிநமக்கல்ல என நாடதிர நகைப்பாய் தமிழே!பங்கு வைத்து தமிழர் வாழ்வைக் கூறுபோடஎங்குதித்த ஆட்கள் எலாம் வந்துவிட்டார்கங்குகரை இல்லாமல் தமிழர்படை திரள வேண்டும்கண்மூடி ஊமைகளை விழிக்க வைத்துப் பேசவைத்துகளம் நோக்கி நடை போடச் செய்யவேண்டும்...அந்தக்கனல் கிளம்ப எங்கள் சொல்லில் செயலில்கலந்திருந்து உறவாடும் புறப்பாட்டே!கலிங்கத்துப் போர்ப்பாட்டே! கடற்கோளுக்கும்அழியாமல்கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்த குடியின் பழம்பாட்டே! இன்றுநான் பாடும் புதுப்பாட்டுக்குச் சுவை வழங்கும்மா, பலா, வாழைத் தமிழே! நீ வாழ்க நன்று!
முப்பெருங் கடலும் கண்டோம்முத்தமிழ் மொழியும் கண்டோம்முப்பெரும் மன்னர் கண்டோம்முக்கொடி பறக்கக் கண்டோம்முச்சங்கப் பெருமை கண்டோம்முக்கனிச் சுவையும் கண்டோம்முப்பெரு விழாவைக் காண்போம்.
அண்ணா, பெரியார், கழகத்தை - நாம்எண்ணாதிருக்கும் நாள் உண்டா?கண்ணாம் கொள்கை காப்பதற்குஇந்நாள் சூளுரை மேற்கொள்வோம்.பொன்னோ பொருளோ எதற்காக?போலிகள் அலைவார் அதற்காக!ஈரோடு பேன் நிறைந்த தலையாகஇருந்த நிலை மாற்றி எழிலாக்கஈரோட்டு சீப்பொன்று இல்லாவிட்டால்இன்றுஇதற்குள்ளே தமிழ்நாடு மொட்டையாகப் போயிருக்கும்!அவர் பிறந்த நாள்தான் தெரியும்நட்சத்திரம் தெரியாது!நட்சத்திரங்களைப் பற்றி அவர் கவலைப்பட்டதும்கிடையாது!ஆனால் லக்கினம் என்னவோ சிம்மம்தான்!அந்தச் சிம்மத்தின் முன்னேசிறுநரிகள் வாலாட்டம் செல்லுபடியானதில்லை.பொங்கும் எரிமலை அவர் - அதன்நெருப்புக்குழம்பு வைதீகபுரியைநோக்கிப்பாய்ந்து பெருகிற்று!அவர்ஒரு காட்டுத்தீ! அதில் சனாதன
மலைப்பாம்புகள் கருகிப் போயின!கரைகளை உடைத்துப் படையெடுக்கும்காட்டாற்று வெள்ளம் அவர் - அந்தவெள்ளத்தில் பழம்பஞ்சாங்க மண் வீடுகள்இருந்த இடம் தெரியவில்லை!
அவர் ஒரு போர்வாள்! அதன்ஒரு வீச்சிலேயே புரோகிதம்மூச்சற்றுப் போயிற்று!
சிந்துபாடும் சிற்றாறுகள் சீறிப்பாய்ந்தாலேசீரழிவைத் தடுக்க முடியவில்லையேஅவரோபெரியாறு!... அது சினந்து கிளம்பினால்இதிகாச புராணங்களின் ஆணிவேரேஅறுந்து போகாதா!தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர்ஒளியைப்போலசெங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடபொங்கியே எழுந்தார் பெரியார்புதுமைக் காளைகள் கோடிஉறுதியாய்க் கூறுகின்றார்குருதிதான் பணயமென்றுஇந்நாட்டான் இங்குவாழ்வான்எந்நாட்டையும் புறங்காணும் புகழுடையான்தமிழ்நாட்டான் தலைகுனிந்தான், இதோ நிமிர்ந்தான்கொழித்து விட்ட உமிகள் தான்இனிக் குள்ளநரிக் கூட்டத்தார் -பழித்துவிட்டான் பகுத்தறிவால்பக்தி, மதம், புராணமெல்லாம்பாழ்! பாழ்! பாழ்! எனஉதித்துவிட்ட புதுக் கருத்து - புரட்சிக் கருத்துமிதித்துவிட்டால் புழுக்கூட புலியாகுமென்றால்புலியென்ன ஆகும்? புரியாதார் இன்னும் கூடஇருக்கின்றாரே!
அதைஆனால்அழுக்குருவப் பன்றி முதல் - சொறிநாய் -கழுதைக் கூட்டம் -அனைத்துக்கும்உரிமையுண்டு உயர்ஜாதிக்காரர்உலவுகின்ற தெருக்களில் ஓடி விளையாடகடவுளரின் கால் மூலம் பிரசவித்தகடைக் கோடிச் சூத்திரனும் பஞ்சமனும்அந்தத் தெருப்பக்கம் நடந்தாலே தீட்டு என்றுஅநியாய நீதி உண்டு - அதன்பேர்தான் மனுநீதி -மறுப்பதற்கு ஆளில்லை; ஈரோட்டில் பெரியார்பிறப்பதற்கு முன்னே! அதனால்தான்பாம்பைக் கண்டால் பிறகு அடி என்று சொன்னார்வேம்புக் கொள்கையின் மண்டைபிளந்ததுஅந்த அடியாலே!வள்ளிக்கும் பார்வதிக்கும் பாமா, ராதாவகையறாவுக்கும்வருடந்தோறும் திருமணத் திருவிழாநடத்துகின்றீர் —போன ஆண்டு நடந்த திருமணத்திற்குஆனகதி என்ன அய்யா என்றுஅய்யாதான் கேட்டார் - அறிவின் கேள்விக்குஇன்று வரை யார் அளித்தார் விடை?ஒருநாள் கைலாசத்தில்குளிக்கச் சென்ற பார்வதிஅழுக்கைத் திரட்டி அதற்கு உயிரூட்டிஆண்கள் வராமல் பார்த்துக் கொள் என்றுஆடையின்றிக் குளிக்கின்ற அறையின் பக்கம்அவ்வுருவைக் காவலுக்கு வைத்திருந்தாள்....அப்போது அவசரமாய் உள் நுழைந்தஆலகாலம் உண்ட சிவனை ஆண் என்றுஅவ்வுருவம் தடுத்து நிறுத்தியதால்சினம் கொண்ட சிவனாரும்அழுக்குருவின் சிரத்தை அறுத்தெறிந்தார்
அது கண்ட பார்வதி கொதித் தெழுந்துஅவள் பெற்ற அழுக்குப் பிள்ளைக்கு உயிர் கொடுக்கஆணையிட்டாள் அவள் கணவன் சிவபெருமானிடம்!ஆனையொன்று தெருவில் போயிற்றுஅதன் தலையை வெட்டி அழுக்குருவில்பொருத்திவைத்தார்அதுதானே ஆனைமுகப் பிள்ளையார்என்று கதையுண்டுஅறிவீர் அன்றோ?...அத்தனை பெரிய பிள்ளையைச் செய்யுமளவுக்குஅன்னைபார்வதி உடலில் அழுக்கிருந்தால் அவள்எத்தனை நாள் குளிக்காமல் இருந்திருக்க வேண்டும்?இந்தக் கேள்விக்கு வித்திட்டுபுராணத்தைக் கேலிப்பொருளாக்கியவர்ஈரோட்டுக் கிழவர் அன்றோ?களையெடுத்த சமுதாயக் கழனியில்தான்பொதுவுடைமைப் பயிர் வளருமென்று கருத்துச்களையெடுத்துத் தந்தவரும் பெரியார்தானே!“ஆத்மா” உண்டென அளக்கின்றவனே! பின்னர்அடுத்த ஜென்மக் கதை எங்கே வந்தது?ஆர்த்தது கேள்வி முரசொலியாய்அடங்கினார் ஆமையாய் சனாதனிகள்!இருட்டில் அசையும் செடி கொடி கண்டுஇருளன் காட்டேரி, பிசாசுகள் என்றுகுருட்டுமதியினர் கூவிச் செத்தனர்பேயுமில்லை பிசாசுமில்லை; பித்தர்களே!சுருட்டும் ஆட்கள் சொல்வதை நம்பாதீர் என்றுசுயமரியாதைச்சுடர் கொளுத்தியது யார்?அவர்தான் பெரியார்!
பச்சைத் தமிழன் என்று காமராசரை அவர்இச்சையுடன் அழைத்தது எதற்காக?பிற்பட்டோர் வாழ வேண்டும் அதற்காக!
காலமெல்லாம் நீடிக்க வேண்டும்கழக ஆட்சியென அவர்விரும்பியதும் எதற்காக? அவர்கண்ட கனவெல்லாம் படிப்படியாய்நிறைவேறும் என்பதற்காக!திருவரங்கப்பெருமாள்போல் படுத்திருந்ததமிழ் உணர்வைத்திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்துதீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம்,திரையரங்கம்எல்லாமே “அம்மாமி அத்திம்பேர்” என்ற“ஜலதரங்கம்”! அது மாற்றித்தமிழரங்கம் தனியரங்கம் கண்டவர்க்குக்கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ?வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டுபொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டுசெங்குன்றத் தோற்றம் உடலில் உண்டுவெண்கருவண்டு - அதில்சங்கொத்த கண்களிலே விழியிரண்டும்சாகும் வரை ஒளியுண்டு!பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின்! - இவரோபடுகிழமாய்ப் போன பின்னும்பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.எரிமலையாய்ச் சுடுதழலாய்இயற்கைக் கூத்தாய்எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் நிறைந்திட்டார்!
அறிவுமழை பொழியும் — எழில்வழியும்! இருள் கழியும்!தெளிவு மிகு உரைகள் பலஒளிரும்! திறன் மிளிரும்!கடலின் மடை —மலையின் முடி —அலையின் ஒலி —தழுவும் முகில் வழியும்அறிவுமழை பொழியும்ஆணவங்கள் அழியும்அடிமை முறை ஒழியும்
அய்யாவின் பேச்சென்றால்அதிரசம் தின்பது போல் கழகத்தவர்க்குஅணுகுண்டு வெடித்தது போல் கயவர்கட்கு!அவர்இளம் வயதில் மறையவில்லை —நிறை வயது வாழ்ந்து விட்டேஓய்வு கொண்டார் எனினும்தாஜ்மகால் திடுமென தரைக்குள்ளேபோய்விட்டால்அதைக்கட்டி ஆண்டுபல ஆயிற்றேஎன்று ஆறுதல்தான்பெறுவோமா?தஞ்சைக் கோபுரம் சாய்ந்துவிட்டால்; அதற்குவயது அதிகமென்று சொல்லித்தாங்குதல் எளிதாமோ? இவரோதஞ்சைக் கோபுரம் போல் உயர்ந்தவர்தாஜ்மகால் போல் சரிதம் படைத்தவர்எழுச்சி ஞாயிறுக்கு நூறாண்டு!எங்கள் அண்ணனுக்கு!....அவர் கண்ட நம் கழகத்திற்கோ
இன்று முப்பதாம் ஆண்டு!புயற்காற்று ஒரு பூந்தென்றலைப் பிள்ளையாய்ப் பெறுவதுண்டோ?அப்படிப் பிறந்த பிள்ளைதான்நம் அண்ணன் எனும் மந்தமாருதம்!சண்டமாருதங்களையும் தன்புன்னகையால் விரட்டுகின்ற மந்தமாருதம்!
“தாழ்ந்த தமிழகமே!” என அழைத்து, நாம்வாழ்ந்த பெருமையெலாம் வகைப்படுத்திஆழ்ந்த கருத்துப் பேழையொன்றைத் தந்திட்டார்கருத்துப்பேழையது! கறுப்புப் பணக்காரன்;கழகத்தைக் கவிழ்ப்பதற்குக் கற்பனையில் தயாரித்தகாதறுந்த பேழையல்ல —காஞ்சி அண்ணன்தந்த கற்பூரப் பேழையது!பெரியாரின் வலக் கரமாய் - அறிவில்வறியோரைக் கரையேற்றும் விசைப்படகாய்சிறியோரின் பிழை பொறுக்கும் செங்கதிராய்வெறியோரைப் பணியவைக்கும் வித்தகராய்நெறியோடு முறையோடு, அரசியல் நடத்திச் சென்று‘திருவோடு’ ஒழிவதற்குத் திட்டம் சொன்னார் - இங்கே‘திரு’வோடு இருந்திட்ட சிலபேர் இன்றுதெருவோடு போகின்றார் நம்மைத் திட்டிபருவோடு சண்டை போட்டால் நம் முகம்தான் கெடும்பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்.ஈ.வெ.ரா. பெரியாருடன் கருத்துமாறிஇன்னொரு கழகம் காண்பேன் என்றுகண்ணீர் பெருக்கிப் பிரிந்த போதும்இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இருப்போமென்றுஎதிரிகட்கு இடித்துரைத்தார் எங்களண்ணன்! இன்றோஉதிரிகளைச் சேர்த்துக் கொண்டுஉடைவாளால் தாய்வயிற்றைக் கிழிப்பதற்குஇழிகுணத்தார் ஓடுகின்றார்; விரைவில் முடமாவார்!
இன்றைக்கு நடந்தது போல் இருக்குதய்யோ கழகக்கன்றை விட்டுப் பசுபிரிந்த அந்தக் காட்சிகுன்றைத் துளைக்குமொரு வேல் எடுத்துக்குறிபார்த்து நெஞ்சைக் கிழித்தது போல்என்றைக்கும் நமைவிட்டுப் பிரியாத அண்ணன்அன்றைக்கு மறைந்துவிட்டான்; அய்யகோஆயிற்று எட்டொன்பதாண்டு!‘கொன்றை வேந்தன்’ என அவ்வையின் பாட்டுண்டு — நம்கொள்கை வேந்தனுக்கோ அழியாத பாட்டுண்டு!பொங்கு கடல்நடையும் பூவையரின் மென்நடையும் தன்புதுத் தமிழ் நடையில் காட்டியவன்பொல்லாங்கு உரைப்போரை வாதத்தில் மாட்டியவன்பொடியெடுத்துப் போடும் நேரம்புன்னகையால் எதிரிகளைப்பொடியாக்கி வாட்டியவன்.புழுதிக் குணம் படைத்தோரை ஓட்டியவன்.பொன் மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன்.எழுதுகோல் வைத்திருந்தான் அண்ணன்ஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்றத்தாளில் உழுத கோல்!அதுபாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும் அவர் வாய் சிவக்கும்தாக்குதற்கு தமிழர்களை இந்திமொழி வந்தால்அவர் கண் சிவக்கும்.‘அக்ராசனாதிபதி’யை அவைத்தலைவராய் உலவ விட்டார்அந்தநாள் “பிரசங்கம்” சொற்பொழிவாய் மாறிற்றின்று!‘நமஸ்காரம் கிமஸ்காரம்’ எல்லாம்நலமான தமிழிலே நல்வணக்கமாய் மலர்ந்தது காண்!தூய்மையாய்த் தமிழில்கொடியேற்றுவிழா வந்த பின்னர்துவஜா ரோகணத்துக்கு அங்கென்ன வேலை?‘வாய்மையே வெல்லும்’ என்றதும்‘சத்யமேவஜயதே’ கோபித்தா கொண்டது?
சங்கம் வளர்த்த தமிழில் அர்ச்சனை கூடாதென்றுசங்கராச்சாரியாரும் கூறுகின்றார்! இன்றுகாஞ்சி பீடத்து போர் முறையைச் சந்திக்ககாஞ்சித் தலைவன் நமக்குக் கற்றுக்கொடுக்காமல் போகவில்லை...ஆண்டவர்க்கு ஆலயத்தில் அன்னைமொழியில்அர்ச்சனை வேண்டாமெனில் அந்தஆண்டவரும் நமக்கு வேண்டாமென முரசறைவோம்!அண்ணன் என்ற இளந்தென்றலுக்கு நாம் தம்பிகள்!அதே நேரத்தில் பெரியார் என்றபெரும் புயலுக்கு நாம் பேரப்பிள்ளைகள்!வடமொழித் திணிப்பாளர் நம்வரலாற்றை மறக்க வேண்டாம்!அடலேறுத் தமிழ் இனத்தின் கால் மிதித்தால்நம் கால்கள் மொழிப் பகையின்தலை மிதிக்கும் எச்சரிக்கை!
நாற்பதாண்டு கால மொழிப்போரின் சிப்பாய்கள் நாம்நமக்கென்ன வந்த தென்று விதிவிலக்குப் பெற்ற வீரரல்ல!நமது குலக்கொழுந்துகள் எல்லாம் துப்பாக்கி வேட்டுக்குப்பலியாகிநடுத்தெருவில் பிணங்களாகப் பூத்தபோதும்தீக்குளித்து அணையா விளக்குகளாய் ஆனபோதும்நாடு தழுவிய மொழிப் புரட்சிப் பூகம்பத்தில்நல்லவேளை சிக்கிடாமல்ஓடி ஒளிந்த மனிதர் சிலர் இன்று ஒழிக்கின்றேன் இந்தியை என்றுஒப்புக்குப் பேசி வீரத்தை விலைக்கு வாங்குகின்றார்அவசர காலச் சட்டத்தின்போது இந்திக்கே ஆதரவு என்றுஅபசுரத்தில் பாடிய கட்சிக்காரர்கூடஆகாது இந்தியெனக் கூறுகின்றார்கள்...பூனைகளே சிறுத்தையைப் போல் உறுமும்போதுசிறுத்தைகள் நாம் சினந்தெழுந்தால்புவி நடுங்கப் போர் நடக்காதா?
சிறைச்சாலை, சித்ரவதை இவையெல்லாம்கழகத்துக் காரனுக்குப் பழைய கதை!ஆட்சிக்கு இந்தி மொழியாம்-ஆண்டவன் பூஜைக்கு வடமொழியாம்ஒரு தமிழன் மிச்சமாக உயிரோடிருக்கும் வரைஒப்பமாட்டான்! ஓதிய மிலார்முருங்கைக்கொம்புகள்தப்பமாட்டா இரும்புத் தூண்களை மோத வந்தால்!
பெரியாரும் அண்ணாவும்இல்லாததாலே - நம்பிரியம் போல் நாட்டைநடத்தலாம் என்றெண்ணிவிடாதீர்!அவர்கள் இருந்திருந்தால் எங்கள் உணர்வெனும்நெருப்பாற்றுக்கு அணைகளாய் அமைந்திருப்பார்! மெழுகுமரங்களே! நீங்கள் உருகி வழியாமல் தப்பியிருப்பீர்!மூக்கணாங் கயிறில்லா காளையின் முன்னேமுண்டா தட்டுவதும் முட்டாள்கள் வேலை!பொறுமைக்கும் எல்லையுண்டுஅகழ்வாரைத் தாங்கும் நிலம் போலஅமைதியாய் இருக்கச் சொன்ன அண்ணன்கூடமறையாமல் இருந்திருந்தால்“பொங்கி எழுக தம்பீ” என்றே முழங்கிடுவார் வேறென்ன?நாட்டாட்சியா நடக்கின்றது இப்போது —காட்டாட்சி யன்றோ தொடர்கின்றதுஎதிர்க்கட்சியைஎப்படி டைக்கலாம்என்பதே சிந்தனை.எந்த இடமானாலும்நமைப் பற்றியே நிந்தனை,கொடும் வழக்கு, கொலை வழக்கு என்றுகடும் வழக்குப் போடுவதால் கழகம் மிரளுமாம்!கோழி குத்திக் கோபுரம் சாயுமாம்-
கங்கை யமுனை பெருக்கெடுத்துவட புலத்தில் நுழைந்தது போல்கள்ளமது பெருக்கெடுத்துத்தமிழ் நிலத்தில் பாயுதய்யா!மது அரக்கனை விரட்டுவேன் என மார்தட்டுகின்றார்அவன் என்ன அரக்கன் வடிவிலாவிரட்டுவதற்கு!இருக்கின்றான்ஆளுங்கட்சி அமைப்பாளனாகவன்றே சிரிக்கின்றான்.
கற்பழிப்பு, கொலை, களவு,கண்ணீர்ப்புகை, துப்பாக்கிப்பிரயோகம் - லஞ்ச ஊழல்நிர்வாகக் குறுக்கீடு - நீதியிலும்தலையீடு அடுக்கடுக்காய்ஆயிரம் சான்றுண்டு - அதற்கெனத்தனியாக ஒரு கவியரங்கம் நடத்தவேண்டும்.அத்தனையும் மறைத்து விட்டுப்புத்தனைப் போல் ஏசுவைப் போல்நடிக்கின்றார் நம்பச் சொல்லி!மாடுகளை ஏலம் போடுவேன் என்றுமந்திரிகள் இதுவரையில் பேசக் கேட்டதுண்டா?இதோ மாட்டுக்கார வேலன் பேசுகின்றார்கட்டை வண்டி ஊர்வலங்கள் நடைபெற்றால்கண்டிப்பாய் வண்டி நொறுங்குமாம்!காளை மாடுகளும் ஏலம் போகுமாம்!கண்ணீர் விடும் விவசாயி கனற்பிழம்பாய் மாறி விட்டால்மாடுகளை ஏலமிடும் போக்கெதிர்த்துமந்திரிகளை ஏலமிடத் துணிவானே -நெல்லிக்காய் மூட்டையென்று தமிழர்களைநினைத்து விட்ட காரணத்தால்நெஞ்சழுத்தம் வளர்கிறது; நறுக்க வேண்டும்!எல்லாத் தமிழர்களும் எப்போது கூடுவது?பொல்லாதார் ஆதிக்கம் எப்போது புறங்காணச் செய்வது?
எழுந்திடும் கேள்வி, எனக்குத் தெரியும்.கரிசல் உண்டு மண்ணிலேகளைகள் உண்டு கழனியில்பதர்கள் உண்டு நெல்லிலேதுரோகி உண்டு தமிழரில்தொலைவில் இல்லை அருகிலே!பதவிகள் வேண்டும்; தினம்பல்லக்குச் சவாரி வேண்டும்அதற்காகப்பகைவரின் பாதத்தைக் கழுவிடவேண்டும் - எனில்பாய்ந்தோடி முந்திக்கொள்ளும் வீடணர்கள் காணும் சுகம்பரத்தையர்கள் ஆடவரின் பிணத்தைத் தழுவிக்காசுபெறும் சுகம் போல்தானே!அதனால் -
தமிழ்த் துரோகிகளைக் கண்டுஅஞ்சவேண்டாம் - அவர்கள்துருப்பிடித்த ஆணிகள்!அண்ணா பெரியார் படங்களைக்கூடஅந்த ஆணிகள் தாங்கமாட்டா!அவர்கள் கொள்கைகளை எங்ஙனம் தாங்கிடுவார்!கோழைகள் விலகட்டும்வீரர்கள் தொடரட்டும்கொட்டுக முரசென்றுஇனமுழக்கம் செய்திடுவோம்;இழிவுகளை அகற்றிடுவோம்.
அய்யா ஏற்றியது அறிவு விளக்கு —அதனைக் காற்றில் அணையாமல்காத்த கரம் அண்ணன் கரம்மீண்டும் பெருங்காற்றுஇன்றுஅண்ணன் கரமில்லை - அதற்குப்பதிலாகஆயிரம் லட்சம் கோடியென்றுகரங்கள் நீளட்டும் - அந்தக் கரமனைத்தும்
அண்ணனுக்குச் சொந்தமான கரங்களே தான்! தூய்தம்பிகளின் கரம் —தொண்டர்களின் கரம்!....அவையனைத்தும் அண்ணாவின் கரம்!
அகரம் தமிழுக்கு முதல் எழுத்துஅண்ணாவின் பெயரோ தமிழர்க்கு முதல் எழுத்துஅந்த முதல் எழுத்துத் தலைவர் தந்ததுமுன்னேற்றக் கழகம்!முன்னேற்றம் தமிழர்க்கு வாய்ப்பதெனில்முப்பெரும் விழா மட்டும் போதாது..இப்பெரும் நாடு காக்க நமது மொழி காக்கஇன்றைக்கே சூளுரை ஏற்க வேண்டும்.பெரியாரின் துணிவுதனைப் பெறுதல் வேண்டும்பேரறிஞர் அண்ணாவின் தெளிவுதனை உணரவேண்டும்பேரெதிர்ப்புக்கு அஞ்சாத உறுதி வேண்டும் —ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்ஆனது ஆகட்டும் என்றுஉயிர்த்தித்திப்பை எண்ணாத தியாக உள்ளம் வேண்டும் —ஊடுருவும் துப்பாக்கி ரவைகளுக்குத் தீரநெஞ்சைத்திறந்து காட்டல் வேண்டும் —“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைஎமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”என்ற புரட்சிக்கவியின் திண்மை வேண்டும்....புரட்டுக்களை உருட்ட வேண்டும்!புதுமைகளை வளர்க்க வேண்டும்!போலிகளைப் பொசுக்க வேண்டும் —போர்க்குண மறவராய் உலவ வேண்டும்என்றுமே பெரியார் அண்ணா — நம்இதயத்தில் வாழ வேண்டும்.

மூலமும் சான்றும்