கவிதை 31 / 77

நடந்திடுவேன் நமது அய்யா, அண்ணா வழியில்!

I Shall Walk on Our Ayya and Anna's Path!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: நடந்திடுவேன் நமது அய்யா, அண்ணா வழியில்

X
நடந்திடுவேன் நமது அய்யா,அண்ணா வழியில்!
உடன் பிறப்பே உனக்கோர்உண்மை தெரியுமா?என்னைச் சுமந்து பெற்றஅன்னையின் மடியிலும்காணாத சுகத்தை; என்னைத்தூக்கி வளர்த்த தந்தையின்தோளிலும் காணாத சுகத்தை;சோதரிகள் இருவர்சுவாசக் கருவிகளாய் இருந்துஇயக்கிடும் போதும்காணாத சுகத்தை;கைபிடித்து என்பால்பாசம் பொழியும் துணைவியர்அன்பிலும் காணாத சுகத்தை;குழலையும் யாழையும் வெல்லும்என்ற குறளையும் வெல்லும்என் குழந்தைகள் மொழியில்காணாத சுகத்தை; வாழ்க எனவாய் மலர்ந்து நீ முழங்கும் போதும்,வருக என்று நான்அழைக்கும் போதெல்லாம்அதனை ஆணையெனச் செயல்படுத்திஎன் முன் நிற்கும்போதும்,களம்புகுக என உதடசைக்கு முன்கடமை முடித்து நீ நிமிரும் போதும்,காணுகிறேன்! மகிழ்ச்சி
பூணுகிறேன். அகமுழுதும்!நாணுகிறேன், உன் அன்புக்குஈடு கொடுக்க என்னால்முடியவில்லையே என்று;முகம் நாணுகிறேன்!எழுபத்தி ஒன்று இன்று -எத்தனை இன்பதுன்பக்கலவைச் சம்பவங்கள்இந்த எளியோன் வாழ்வில்!அறிவார், என் வழி;பெரியார் அண்ணா வழி எனினும்எத்தனை கோடியப்பாஏச்சும் பேச்சும்எதிர்ப்பும் போரும், என்நெஞ்சம் சுமந்து, சுமந்து,நிமிர்ந்து நிற்கிறதுநிலைத்து நிற்கிறது!உளி வீச்சு படுகின்றகல் எல்லாம்உயிராடும் சிற்பமாவதில்லை;சிற்பமாய் என்னைச்செதுக்கியோர்க்கு நன்றி!உலைக்களத்துக் கடும் நெருப்பில்சம்மட்டி அடிபடுகின்றசகலமான இரும்புகளும்வாட்களாய் ஈட்டிகளாய்வடித்தெடுக்கப்படுவதில்லை!வாளாக ஈட்டியாக என்னைவார்த்தோர்க்குக் கை நிறையவாரி இறைக்கின்றேன் நன்றி மலர்!காலணியாம் என்னை நீவாழ்த்துகின்றபோது,
களிக்கின்றேன்; ஆனால்காலனியாய் மீண்டும் நாடாகக்“காட்டு” ஒப்பந்தம் கண்டுமுகம் சுளிக்கின்றேன்.இந்தி வெறியர்களின்பூச்சாண்டி மிரட்டல்களால்எரிமலை பூகம்பம்எழுகிறதே நெஞ்சில்!சமூக நீதியென்றுகண்துடைப்பு வித்தை மட்டும்காட்டுகின்றார், மனம்புண்பட்டுத் துடிக்கின்றேன்.அங்கே அராபத் கண்டஅரசியல் தீர்வொன்றால்பாலஸ்தீனியர்க்குப்பாதி சுதந்திரம்!தென் ஆப்பிரிக்காவில்வெள்ளை இருட்டில்கறுப்பு விடியல்!இங்கே ஈழம் மட்டும்அணையாமல் இன்னும்எரிந்து கொண்டிருக்கிறது!இந்தியா இரண்டாகப் போய்பின்னர் மூன்றாக ஆனது.இருக்கும் மீதியில்எத்தனை சாதிகள்எத்தனை சண்டைகள்!மதச்சார்பற்ற கொள்கைமடிந்து போனால்குலைந்து போகும் தேசம்.மனித நேயத் தேடலில்மனிதனையே தொலைத்துவிட்டு
மயங்கிடும் கட்சிகள்மாறிடும் காட்சிகள்.இத்தனைக்கு மிடையேஇந்தப் பிறந்த நாளில்ஏற்றிடும் சூளூரை;“நானிருக்க பயமேன்”என நவில்கின்றஉயிரினும் மேலான - என்உடன்பிறப்புடன் இணைந்து,நாடு காக்க, மொழிகாக்க,நமதினமக்கள் உரிமைகாக்கஅயர்ந்திடும் நிலையேஅணுப் பொழுதுமின்றிதொடர்ந்திடுவேன் தொண்டு!நடந்திடுவேன்; நமதுஅய்யா, அண்ணா வழியில்!

மூலமும் சான்றும்