கவிதை 30 / 77

அண்ணா வழியில்

On Anna's Path

X
அண்ணா வழியில்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 15.9.1975அன்று மாலை நடைபெற்ற அண்ணா கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
தமிழே! தேனே! தங்கக் கனியே!அமிழ்தே! அன்பே! அழகுக் கலையே!எழிலே! அறிவே! எண்ணச் சுடரே!பொழிலே! புகழே! பொன்னின் மணியே!திருவே! உருவே! திங்கட் குளிரே!தருவே! நிழலே! நிழல்தரு சுகமே!தாயே உன்றன் தாளினைப் பற்றிதலைமைக் கவிதை பாடிட வந்தேன்அண்ணா வழியில் அயரா துழைக்கப்பண்ணால் முழங்கிப் பயணம் தொடரக்கண்போல் கழகம் காக்கும் சூளுரைவிண்போய் முட்டிட உரக்கக் கூவுக!இன்றைக்கு நடந்தது போல் இருக்குதய்யோ கழகத்கன்றை விட்டுப் பசு பிரிந்த அந்தக் காட்சி!குன்றைத் துளைக்குமொரு வேலெடுத்துக்குறிபார்த்து நெஞ்சைக் கிழித்ததுபோல்
என்றைக்கும் நமைவிட்டுப் பிரியாத அண்ணன்அன்றைக்கு மறைந்துவிட்டான்; அய்யகோ!ஆயிற்று ஏழெட்டாண்டு!‘கொன்றைவேந்தன்’ என அவ்வையின் பாடுண்டு... நம்கொள்கை வேந்தனுக்கோ அழியாத பாடுண்டு!பொங்கு கடல் நடையும் பூவையரின் மென் நடையும் - தன்புதுத்தமிழ் நடையில் காட்டியவன்பொல்லாங்கு உரைப்போரை வார்த்தையில் மாட்டியவன்பொடி எடுத்துப் போடும் நேரம்புன்னகையால் எதிரிகளைப்பொடியாக்கி வாட்டியவன்பழுதிக் குணம் படைத்தோரை ஓட்டியவன்பொன்மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன்எழுதுகோல் வைத்திருந்தான் அண்ணன் - அதுஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்றத்தாளில் உழுதுகோல் - நம்நாளில் அழுதவரைச் சிரிக்கவைக்கஅவன் தந்த ஆட்சிக்கோல்.குதிரைகள் பறக்கும் மேடைப் பேச்சரங்கில்கொய்யாத் தமிழ் எடுத்துக் கொடுத்திட்டார்,கதிரார், ராய்க்கின்றார் தமிழ்மொழியை என்றபோதுஅவர்,மொழிப் போரின் மூலபலம்! களம் கண்டுவிழிப்போரை கண்டுகொண்டு - தன்னைப்பழித்தோரைப் பாராட்டும் பண்பாளர்,அழித்தாராம் ஆதிக்க மொழி வெறியை!பல்தாரம் பட்சணம் - பாணிக் கிரகணம் -வதுவர கிரகப் பிரவேசம் பந்துமித்திர் -நமஸ்காரம் - உபய குசலோபரிநாமாவளி துவஜாரோகணம் என
நாக்குக்கு நுழையாத வடமொழிப் படையெடுப்பால்வாக்குக்குச் சுவை சேர்க்கும் வண்ணத் தமிழ் வாடுவதோ?பாக்குக்கும் வெற்றிலை சுண்ணாம்புக்கும் அவர் வாய்சிவக்கும்தாக்குதற்குத் தமிழைப் பிறமொழி பெருகி வந்தால்அவர் கண் சிவக்கும்அக்கிராசனாதிபதியை அவைத் தலைவராய் உலவவிட்டார்அந்த நாள் பிரசங்கம், சொற்பொழிவாய் மாறிற்றின்று!நமஸ்காரம் கிமஸ்காரம், எல்லாம்நலமான தமிழிலே நல் வணக்கமாய் மலர்ந்தது காண்!தூய்மையாய்த் தமிழில் கொடியேற்று விழாவந்த பின்னர்துவஜாரோகணத்துக்கு அங்கென்ன வேலை?வாய்மையே வெல்லுமென்றால்‘சத்யமேவ ஜெயதே’ கேட்டுத்தா கொள்கும்?அண்ணனை ஒரு சீமான் என்பேன்அவர் நண்பர்களையே செல்வமாய்ப் பெற்றிருந்தார்!அண்ணனை ஒரு துறவி என்பேன்;அவர் வாழ்வெல்லாம் காவி தரித்திருந்தார்!அண்ணனை ஒரு தெய்வம் என்பேன்;அவருக்கு துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றார்!அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்;அவரைப் பூதகியும் தூக்கிப் பால் கொடுக்கின்றாள்!அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் கொண்டார்அரியா சனங்கள் அவரை ஆரம்பத்தில்புரியாமல் எதிர்த்ததுண்டுசரியானச் சமதர்மம் போதிக்க வந்ததென்னாட்டு மார்க்ஸ் என்றுபின்னால்தான் தெளிவடைந்தார்
நரியும் பரியாய்ப் போன கதைநாரதர் பெண்ணாய் ஆன கதைஉரியைக் கண்ணன் உடைத்த கதைஊரார் போற்றிய பழைய கதைஎரியில் துரும்பாய் ஆகியவர்பெரியார் தந்த பேரறிஞர்இரக்க மெனும் ஒரு பொருளிலா அரக்கனெனஇராவணனைக் கம்பன் இழந்தது செல்லாதெனஉருக்கமிகு ஓவியத்தை எழுத்தால் தீட்டிச்சுருக்கென்று தைக்கின்ற கேள்விகளால்தேவலோகப் பிறவிகளைத் தெருவுக்கு இழுத்து வந்தார்மேனிப் பசிமுழுதும் தீர்ந்தபின்னர்மேனகையைக் கைவிட்ட மாமுனியும்தந்திரத்தால் அகலிகையைச் சுவை பார்த்தஇந்திரனாம் இணையற்ற பெருவேந்தும்,கருணையின் வடிவங்கள் தாமோ?கம்பரே! இராவணன்தான் கடு நெஞ்சக் காவலனோ?அண்ணன் எழுப்பிய வினாக்களுக்கு - இந்தமண்ணில் எவர்தான் விடையளிப்பார்?அண்ணன் எழுதிய நூல் கொண்டுசின்னக் கதை யொன்று நெய்கின்றேன்
“ஓர் இரவு சந்திரோதயத்தில்நல்லதம்பி வீட்டு வேலைக்காரிஓடுகிறாள் சந்திர மோகனிடம்காதல் ஜோதியிலேசொர்க்க வாசல் கண்டுகம்பரசம் பருகுகிறார் மொண்டு!கண்டிருந்த பெற்றோரும் கடுங்கோபம் கொண்டுநியாயத்தை நிலை நாட்ட நீதிமன்றம் சென்றார்.
வேலி போட்டுக் காதலைத்தான்தடுத்திடவா வேண்டும்? இந்தத்தாலிபோட்ட அத்தானை நான்மறந்திடவா வேண்டும்?தாய் மகளுக்குக் கட்டுவதா தாலி?எனக்கேட்டு வாதிட்டாள் குமரிக் கோட்டம்-என்னாகும் அவள் முன்னே பணத்தின் தோட்டம்?நீதிதேவன் மயக்கத்தைப் போக்கி நின்றுநீவீர் வாழ்க நன்று என வாழ்த்திச் சென்றான்!உண்டென்பார் சிலர் இல்லை யென்பார் சிலர்எனக்கில்லை கடவுள் கவலை!ஒன்றே குலம் ஒருவனே தேவன் - இதைஒப்புவதே உண்மை ஆத்திகமாம்!ஒருவனை ஒருவன் ஏமாற்றாதிருப்பதே நாத்திகமாம்!நன்றே சொல்வேன் நமக்குக் கடவுள்நலிந்தோர் சிரிப்பில்தான்! இதனைக்கொள்கையாய் நாட்டுக என்றார் - அறிவுக்கொடியை ஏற்றுக என்றார்.கழகம்தான் மெய்யான கம்யூனிஸ்ட்டென்றுபழகு தமிழ் உவமையெல்லாம் காட்டியது அண்ணனன்றோ?வறுமையை ஒழித்திட அவர் காட்டியதே நல்வழியன்றோ?உரிமைகள் பெருகிட உண்மைகள் நிலைத்திடஅவர் உரைத்ததுதான்புது நெறியன்றோ?நாடு தழைத்திட நற்றமிழ் வளர்ந்திடஅவர் நாவசைவே முரசன்றோ?நாளும் அவர் நமையாளும் அரசன்றோ?வாரத்து நாட்களிலே புதனைத்தான்தேர்ந்தெடுப்பீர் வைத்தார் அண்ணா,
வாழ்ந்திட்ட நாட்களிலே எதனை நான்தேர்ந்தெடுத்து நினைத்துப் பார்க்க?தம்பிவா, தலைமை ஏற்க வா என்றுஅழைத்தாரே நாவலரைத் திருச்சியிலே, அதனையா?தீராத பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சிந்திக்கப்பேராசிரியர் வீட்டுக்குச் செல்வாரே; அதனையா?பிரிய மனமின்றிப் பிரிந்திருந்தபதினெட்டு ஆண்டின் பின்னேபெரியாரின் முகம் காணச் சென்றோமே அவரோடுஅதனையா?கணைகள் பல தாக்கினாலும் உன்னை இந்தகணையாழி காக்குமென்று கடற்கரையில்அணிவித்தாரே; அதனையா?எதனை நினைத்தாலும் எங்கண்ணாஉனதுருவம் ஏற்றமிகு திருவுருவம்அதனை நினைத்தே யாம் ஆறுதலைக் கொள்கின்றோம்.தம்பி படையான் படைக்கஞ்சான்என முழங்கிவிட்டுத்தனிமரம் தோப்பாகாது என சொல்வாய் இங்கோர்தனிமரம் தானேதான் தோப்பென்றுபோன கதை நீ அறிவாய்சனிப்பெயர்ச்சி சிலருக்கு நல்லதென்பர் புராணிகள்!இது மெய்யோ? பொய்யோ?நம் கழகத்தில் சனிப்பெயர்ச்சிநற்பலனைத் தந்ததண்ணா!உன் வழியில் உழைக்கின்றோம் அதனாலேஒதிய மிலார் - முருங்கைக் கொப்புஒடிபட்டுச் சிதறுதல் போல் - பகைமுறிபட்டுப் பஞ்சாய்ப் போகும்!நீ தந்த விளக்கெடுத்து நடக்கின்றோம்
நெய்யிட்டுத் திரியிட்டு உதவுகின்றார் தமிழ் மக்கள்கடுமழையில் அணையாமல் காற்றுக்கு நடுங்காமல்கரம் பொத்திக் கைவிளக்கைக் காக்கின்றோம் -வரம் ஒன்று தந்திடண்ணா! நான்தவம் இருந்து கேட்கின்றேன்அடித்தளத்து மக்களுக்குஅடுக்கடுக்காய்ச் சாதனைகள்அண்ணா! உன் வழியில் அயராமல் நடப்பதெல்லாம்கண்ணால் ஒரு முறை நீ பார்த்து விட்டால்எம் கவலையெல்லாம் பறந்துபோகும்!தண்ணார் முழு நிலவேதட்டாமல் நீ வந்துவிடுஇந்த வரம் நீ தந்தால்இறவா வரம் பெற்றதுபோல்இன்பத் தமிழகமே கூத்தாடும் - எங்கள்துன்பமெல்லாம் தொலைந்துவிடும்
கலைஞரின் முடிவுரை:
முடிவுரை எதற்காக இன்று?‘அண்ணா வாழ்க’ என்பதே நமக்குமுத்துரையும்முடிவுரையும்!அதனாலே அனைவரும் சொல்வோம்,அண்ணா வாழ்க!அண்ணா வாழ்க!அண்ணா வாழ்க!வணக்கம்!

மூலமும் சான்றும்