கவிதை 29 / 77
சிலப்பதிகார விருந்து
A Silappathikaram Feast
சிலப்பதிகார விருந்து
பூம்புகார் கொற்றப்பந்தரில் 25.4.1975 அன்றுமாலை நடைபெற்ற “சிலப்பதிகார விருந்து”என்னும் தலைப்புள்ள கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை★
வணக்கம்வண்ணத் தமிழ் வடிவம் எங்கள் நாவலர்க்கும்எண்ணக் கருவூலம் இனிய பேராசிரியர்க்கும்கண்ணொத்த மன்னை, சாதிக் அமைச்சருக்கும்அண்ணன் வழிவந்த அனைவர்க்கும் வணக்கம்.சிலம்பொலிக்கும் சிவஞானச் செல்வர்க்கும்செந்தமிழ்ப் பழஞானக் கணேச நல்லார்க்கும்சிரம் தாழ்ந்த வணக்கம்.சீரழிந்த பூம்புகாரைச்செம்மையுறச் செய்யும் பணிஆர்வமுடன் நடப்பதற்குஅழைப்பேற்று வந்துள்ளஅன்புள்ளம் அத்தனைக்கும் அடியேனின் வணக்கம்.சிலப்பதிகார விருந்தொன்றைத் தருவதற்குச்சீலமிகு தமிழெடுத்து வந்துள்ள
கவிநெஞ்சங்கட்கு - என்கனிவான வணக்கம்.அருந்தமிழே! அமுதே!நறுமலர் மணமே! தேனேஅன்னையாய் வந்தென்னை ஆட்கொண்டவளே!அண்ணனாய் வந்தென்னை ஆளாக்கியவளே!காஞ்சி அண்ணன் கால்மலர் தொழுதுகவியரங்கம் தொடங்குகின்றேன்வாழ்த்திடம்மாதமிழர்கள் வாழதமிழ் நிலம் வாழ!குடகுமலை உச்சியிலே கோலங்காட்டிஅழகுமகள் காவிரியும் ஆடவந்தாள்ஆடவந்த ஆரணங்கை அடைவதற்குஓடிவந்த கர்நாடகத்தான் “அணை” என்றான் - அவன்கையணையைத் தாண்டிக் கல்லணைக்குள் நுழைந்து- தன்கற்புநெறி காப்பதற்குத் தஞ்சைக்குத் தாவி வந்தாள்பூம்பாவை காவிரியின் புகார் கேட்டுச் சோழ மன்னன்பூம்புகாரின் கடல் அலையைக் கணவனாய் ஆக்கிக் காத்தான்பிறந்த வீட்டை மறந்திடாமல் - என்றும்புகுந்த வீட்டு வளம் பெருக வாழ்வதுதான்பெண்மணிக்குப் பெருமையென்றால் - நம்கண்மணியாம் காவிரிக்கும் அது பொருத்தம்தானே?இவ்வாறுகாவிரி புகுந்த பட்டினம் தான்காவிரி புகும் பட்டினமாய்த் திரிந்து நின்றுகாவிரிப் பூம்பட்டினமாய் மாறிற்றென்பேன்.கரிகாலன் பெருவளத்தான் திருமாவளவன்
கனிவுமிகு நடபுக்கு அவன் உறையும் வாளும்கயமைமிகு பகைமைக்கோ உறை விட்டெழுந்த வாளாம்உறையூரைத் தலைநகராய்க் கொண்டு - பின்னும்ஒரு ஊரை மணந்து கொண்டான் தலைநகராய் - அந்தஇரு தார மணத்தானுக்கு வாய்த்த இளையவளேஇனியவளாய் இங்குநமை வரவேற்கும் பூம்புகாராம்.“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்” எனபட்டினப்பாலை முழங்குகின்ற துறைமுகப்பட்டினமாய் விளங்கிற்றந்நாள்!மருவூர்ப்பாக்கமுண்டு ஆங்கு மறங்கெழுவீரருண்டுமருவு பெண்ணாசையால் மயங்குகிறமாநகர நம்பியர்கள் நடமாடும் பகுதியுண்டுநாளங்காடி உண்டு - அங்கு பிறநாட்டார்கள் நாள்தோறும் வருதல் உண்டுஅரச வீதி ஆடும் கொடித் தேர் வீதிவணிகர் வீதி வாய்மை நிறை வேளாளர் வாழும் வீதிமருத்துவர், சோதிடர், மாகதர், கூத்தர்மண்டிக்கிடக்கும் யானை குதிரை சூழும் வீதிசித்திரப் பாக்கமெனச் செப்பும் சீர்மலிபட்டினப் பாக்கமாய்த் திகழ்ந்ததந்நாள்வடநாட்டுப் படையெடுப்பில் சோழன் பெற்றபுகழ்நாட்டும் பட்டிமன்றம், முத்துப்பந்தர்,தோரணவாயில், தொல்புவியில் தமிழன் வெற்றிநிலைநாட்டும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம்கலைநாட்டம் கொண்டோரைக் கவர்ந்திழுக்கும் பாவை மன்றம்,முருகன் கோட்டம், அதனருகே திருமால் கோட்டம்,அருகன் கோட்டம், அதனருகே புத்தர் கோட்டம்,முத்தமிழ் ஒலிக்கும் கோட்டம் நாள்தோறும்சித்திரைத் திருநாள் கூட்டம்
இதையெல்லாம் சித்தரிக்கும்இளங்கோவின் குணவாயிற் கோட்டம்எல்லாமே அழிந்ததம்மா கடலாலும் காலத்தாலும்என்றாலும்சேரன் தந்த சிலம்புச் செல்வம்அழியாத கருவூலம் அணையாத திருவிளக்குஅந்த,விளக்கொளியில் விழிப்புற்றுமறக்கவொண்ணா மொழிப்பற்றால்விளைந்தது தான் புதிய புகார் - வெறும்வீணர்கள் தினம் எழுப்புகின்ற புகாரல்ல!வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் மூச்சால்பொங்கிப் படைத்த புதிய புகார் - பூம்புகார்.மனை விளக்குக் கண்ணகிக்கும் மாதரசு மாதவிக்கும்புனைவைர மார்பன் கரிகாற் சோழனுக்கும்பாவரசு இளங்கோவின் பண்பார்த்த சிலம்புக்கும்எழிலார்ந்த புத்துருவம் கொடுக்கச் செய்யஎனைப் பெற்ற தமிழகமும் என் தாய் தந்தைஇருவர்க்கும் எவ்வாறு நன்றி சொல்வேன்?நமக்குச்சிறப்பதிகாரம் பலவற்றை உரிமையாக்கத் - தன்னாட்சி கோரிஇறப்புவரினும் அதனை உவந்தேற்போம் என்றும் - பதவிதுறப்புவரினும் பொறுத்தடுத்தோம் என்றும் - இந்தச்சிலப்பதிகாரமன்றோ உணர்வூட்டல் கண்டோம்!வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்வாழ்வினில் உயர்ந்தார் நம் வரலாற்றை அழித்தார்இன்றுகொஞ்சுகின்ற சிலம்பன்றோ நம் சரித்திரத்தைக்கொஞ்சமேனும் காட்டுகின்ற கோபுரத்துத் தீபம்.
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுளெனமுடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதைஅடிகள் நீரே அருளுக என்றிடஎழுந்த காப்பியம் எழுச்சிக் காப்பியம் - அந்தஇலக்கியத்தில் விருந்தொன்றை அளிப்பதற்குஇணையற்ற கவிஞர் எண்மர் இங்குள்ளார்.“நகையே அழுகை இளிவரல் மருட்கைஅச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்றுஅப்பால் எட்டே மெய்ப்பாடென்ப”இலக்கணக் கிழவர் இயம்பிய வழியில்எட்டுச் சுவையை இங்கே படைப்பார்நகை அழுகை இழிவு வியப்புஅச்சம் வீரம் வெகுளி உவகை எனப்பகை நோக்கமின்றிப் பாடுகின்ற போட்டி.அழுகையினால் நகை கேட்டு அடையக் கூடும்அச்சத்தால் அடங்குகிற அத்தானை மணந்துவிட்டால்...!இழிவு வந்தும் வெகுளாதார் நிலை கண்டுவீரர்க்கு நெஞ்சில் வியப்புத் தோன்றும்!உவகையும் அழுகையும் ஒரு தாய் மக்கள்ஒருவரை ஒருவர் நிழல்போல் தொடர்வர்!இந்தஎட்டுச்சுவைபிட்டுத் தமிழ்கட்டித் தயிர்வட்டில் நிறைகொட்டித் தரபட்டுக் கொடிகொற்றக் குடைமுத்துச் சரசோழனூர் வருவீரே!
சுவை விளக்கம் தருவீரே!என அழைத்தோம்; எண்மர் இதோ வந்துள்ளார்!எட்டெடுத்துச் “சிலப்பதிகாரம்” இயற்றியவர் - சுவைஎட்டெடுத்துச் சேர்க்காமல் விடுவாரோ?“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும்பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேற்போக்கிய பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன்னோடுஅணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கிவிடுதலரிய விருப்பின னாகிய கோவலன்”.கெடுதலரியாக் கண்ணகியுடன் பகிர்ந்த இன்பம் கணக்கிலதே!தும்மை பலாக் கண்ணகியும் கோவலனும்“தாமப் பணிக்கிளொன்றித் தோய்ந்தாளென வொருவார்தாமர் மனைவியெனக் கை கலந்து - நாமந்தொலையாத இன்பமெல்லாம் துன்னினார்.... மண்மேல்நிலையாமை கண்டவர் போல் நின்று”உவகையில் மட்டுமல்ல;அழுகையிலும், ஆள் தாள் பற்றித்தொழுகையிலும் மாதவி, கண்ணகி பாத்திரங்கள்போட்டி போடும்“காவா நாவிற் கனகனும் விசயனும்விருந்தின் மன்னர் தம்முடன் கூடிஅருந்தமிழாற்றல் அறிந்திலராகிச்செப்பிய மொழிகளைச் சேரன் கேட்டுக்கொட்டுக முரசெனக் கூறிய சொல்லும்கொடியவர் முடித்தலை எறிய கல்லும்வீரச்சுவை விளக்குகிற காட்சி - தமிழன்வெற்றிக் கொடி பறக்கவிட்ட மாட்சி!தித்திக்கும் தேன்பாகைத் தெவிட்டாத தெள்ளமுதக்கோவலனை
எத்திக்கும் புகழ் பாண்டியனே திருடன்னெனக் கொன்றுவிட,தீச்சுழலாய்ப் பெருகிவந்த கண்ணகியோதீர்ப்பளித்த மன்னவனைத் தலைகுனிய வைப்பதற்குச்சிலம்பெடுத்து உடைத்தபோது - தன்எலும்பெடுத்து உடைத்ததுபோல்வியப்புற்றான் மதுரை வேந்தன்உடன் வீழ்ந்திறந்தான்“நீதி வழுவா நெறிமுறைப் பாண்டியன் நான் - அந்தநெடுஞ்செழிய மன்னவனா நீதி தவறிவிட்டேன்?என்ற கேள்வியில்தான் எத்துணை வியப்பு?எத்துணைப் பதைப்பு?
வியப்புறுதல், நகைத்தல், அழுதல், வெகுளல்,வீரம், இழிவு, அச்சம், உவகை என்னும்எட்டுவகைச் சுவையினிலே எதிலும்ஒட்டுறவு இல்லாத பிறவிகளும் உலகிலுண்டு!இடி முழக்கம் கேட்டது போல் அரங்கில்வெடிச் சிரிப்பு நகைச் சுவையைக் கலைவாணர்படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழங்கும்போதுஇடித்து வைத்த புளிபோல் சிலர்பேர்இளித்திடவும் விருப்பாமல் இருப்பதுண்டு!அடுக்கடுக்காய்ச் சிறைவாசம்அடக்குமுறை வனவாசம் என்றேஅருமைமிகு கொள்கைக்குத் தியாகம் ஏற்றபெருமைமிகு தலைவர்களும் மறைந்து விட்டால்அழுகை நிறை அகத்தினராய்ஆயிரம் பதினாயிரம் நூறாயிரமென மக்கள் கூட்டம்இடுகாட்டுப் பொட்டலிலே ஏங்கி நிற்கும்இறந்தவர்க்கு இறுதி வணக்கம் செய்வதற்கு; அப்போதுகோமாளிக் கூத்தாடும் ஓர் மனிதன் அங்குவந்தால்
ஏமாளிக் கூட்டமொன்று கூச்சல் போடும்!கைதட்டு - ஆரவாரம் - களிப்புக்கூத்து - நம்காதுகளும் கண்களும் தாமாக மூடிக்கொள்ளும்!அழுகைக்கும் உவகைக்கும் இடம் பொருள் தெரியாதோர்;கழுதைக்கும் கீழானோர் எனச் சொல்வேன்!நூற்றிரண்டு மெய்ப்பாடாம் சுவை பிரித்துப் - பழிநூற்புலவர் தொல்காப்பியர் கருத்து நெய்தார்.அவற்றில் தலையான எண்சுவையும் கிளையான பல்சுவையும்கவிநயத்தில் காட்டுதற்கு இங்கே கவிஞருண்டுஅவிநயத்தில் காட்டுதற்கும் அணங்கு உண்டு.ஆனாலும் சில பெண்கள் ஆட்டம் கண்டால் - நம்வாணாளில் பெரும்பாவம் செய்தோர் ஆவோம்!தீப்போலத் தகிக்கின்ற காமத்துக்கும்தேன்போலக் கொட்டுகின்ற கோபத்துக்கும்சினங்கொண்ட நாகமெனச் சீறுகின்ற “பாவ”த்துக்கும்செம்மாதுளைக் கன்னங்கள் குவிக்கின்ற நாணத்துக்கும்சிறிதளவு வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் இருப்பதில்லை.அரிதாரப் பூச்சு முகக் கலையிலோர் அசைவுமில்லை.அங்கங்களின் சேட்டையன்றித் தங்க மகள் சிலை முகத்தில்அணுவளவு மாற்றமேனும் அவிநயத்தால் கண்டதுண்டோ?‘திமி திமி’ என ஆடுகின்றார் - அவை அதிர‘மிதி மிதி’ எனச் சேறு மிதிக்கின்றார்அவரெல்லாம் தொடர்ந்து ஆடிவந்தால் - குட்டிச்சுவராகும் நடனமேடை! கொலையாகும்- கலை என்பேன்இறுதியிலே ‘உவகை’ வைத்து எட்டுவகை மெய்ப்பாட்டைஅறுதிமிட்டு மாலை செய்தார் காப்பியனார் - இன்றோஉவகையுடன் தொடங்கிடுவோம் கவியரங்கம்உறுதிமிகு வீரத்தைக் கடையில் கேட்போம்கடைச் சரக்கா வீரமெனக்
கண்மணியே கேட்காதே - சிலகட்சித் தலைவர்க்கு விலை கேட்கும்.பொருளாய்த் தான் போயிற்று வீரம்!போர் என்றால் நான் முந்தி நீ முந்திஎனும் கூட்டம் நம் கூட்டம் - அக்கப்போர் பேர்வழிகள் கூட்டமல்ல! வைக்கம்போர் வீரர் வழி வந்தவர் நாம்! வைக்கோல்போர் இந்தத் தீயுடனே விளையாடலாமா?எதற்காக நல்லரங்கில் பிறர் நினைவு!உவகையிலே தொடங்கி நம் கவியரங்குஉலகு புகழ் வீரமுடன் முடியட்டும்.கடையில் வீரம் கேட்கலாம் என நாளிங்குகழறியதின் விளக்கம் புரிகிறதா நன்கு?இடையழகு மணிமேகலையில் காட்டிச், சிலம்பில்நடையழகு காட்டுகின்ற தமிழணங்கே! இதோ, கவிஞர்படை வரிசை கிளம்பிற்றம்மா உனக்குப்பா வரிசை வைப்பதற்கு! நடக்கட்டும்கை வரிசை! நானழைக்கின்றேன் கவிஞர்களை!
கவிஞர்களை அறிமுகம் செய்து தலைவர்:
முதலில்,வைரமுத்துக் கவிஞர் சிலம்புப்பரலில் உவகை பற்றிப் பாடுவோர்
(கவிஞர் வைரமுத்து ‘உவகை’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்து,உவகையைத் தொடர்ந்து அழுகை வரல் காண்பீர்!உருவிலே பெருந்தேவன் வயதிலே இளந்தேவன்
சிலம்பிலே ‘அழுகை’ எனும் அழுகைச்செந்தமிழில் அள்ளி அள்ளித் தருவார்.
(கவிஞர் இளந்தேவன் ‘அழுகை’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்து,அழுகை கண்டு நகைப்பவரும் உண்டுஅந்தக் கல்நெஞ்சக் கவி கண்ணப்பன்நகையோடு வருகிறார்... கோவலன்போல் வரவில்லைசிலம்பென்னும் நகையோடும் மதுரைக்கு வரவில்லை.சிலம்பினிலே செழிக்கின்றநகை காட்டப் பூம்புகார்க் கவியரங்கிற்கு வருகிறார்:
(கவிஞர் கண்ணப்பன் ‘நகை’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்துவீணாக நகைப்பவர் மேல் வெகுளியால்பாய்ந்திடுவோர் உண்டுசீராகக் கால்தூக்கி ஆடுகின்ற நடராசன் தில்லையிலேஇங்கு,நேராகக் கவிதூக்கி வருகின்றார் தி.கு.நடராசன்தமிழ்க் கொல்லையிலே...வெகுளி பற்றி வெகுளாமல் பாடுமய்யா!
(கவிஞர் தி.கு. நடராசன் ‘வெகுளி’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்து,வெகுண்டவரைக் கண்டாலே அச்சம் வரும்தகுந்தவரைக் கொண்டதனைப் போக்கிடவேதமிழன்புக் கவிஞரை நாம் அழைத்துள்ளோம்.
அவை அச்சமின்றிச் சொல்லாடும் அருந்தமிழா;சுவை சொட்டும் மொழியாலே கவிதை பொழி!
(கவிஞர் தமிழன்பன் ‘அச்சம்’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்து,அஞ்சால் துஞ்சல் அறிவார் தொழில் எனினும்வெஞ்சமர் முடுக்கிக் கொள்கையில் வென்றிடஅஞ்சுதல் தீதே! ஆண்மையும் இலதே;அச்சம் வரின் ‘இழிவு’ வருமென்று ஆண்ட தமிழ்இனத்துக்குஅறிவுறுத்த வருகிறார் அப்துர் ரகுமான்அவர் பாடுகின்ற சுவை ‘இழிவு’ஆனால் அது தமிழ்ப் பொழிவு!
(கவிஞர் அப்துர் ரகுமான் ‘இழிவு’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்து,இழிவு வரின் இறப்பதுதான் தமிழர் மாண்புஇது வந்தும் பலபேர் உயிரோடு இருப்பது பற்றிவியக்கின்றார் குருவிக்கரம்பையார்குத்தூசி குருசாமியைப் பெற்றெடுத்த சிற்றூர்முத்தான சண்முகத்தை நமக்களித்துத்தமிழகத்தை வியப்பினிலே ஆழ்த்துதம்மா!
(கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் ‘வியப்பு’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
அடுத்துவீரம் பற்றிப் பாடுதற்குச் செயலில்வீரம் காட்டும் கவிஞருண்டு - நெஞ்சில்ஈரம் என்றும் எனக்குண்டு இந்தப்பொன்னிப் பயிரை வளர்ப்பதற்கே!வளவன் வாழ்ந்த மாதநில் - பொன்னிவளவன் பாடும் கவி கேட்போம்.
(கவியரசு பொன்னிவளவன் ‘வீரம்’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
காலை முதல் இந்தக் கவியரங்குவரைகண்ணல் நிகர் தமிழோசை கேட்டுமகிழ்ந்தம் உண்டு மகிழ வேண்டாக் கிடக்கின்றேன்மனமகிழ்ந்து ஓர்பொழுது நிம்மதியாய் கழிக்கின்றேன்முடிமன்னர் முதுபுலவர் வளர்த்த தமிழ்த் தேனைப்படியபடியாய்க் குடித்த பின்னர்முடிவுரையும் கூறுதற்கு முடியுமோ என்னால்?பூம்புகார் வந்தோரே!புத்துணர்ச்சி பெற்றோரே!சென்று வருக என வாழ்த்துதற்கு முன்...சித்திரை முழுநிலா இன்று கண்டிடுகமுத்திரைப் பொன்னாம் குழந்தைகட்குமுத்தம் ஈந்திடுக கடற்கரையில்குழந்தைகட்கு மட்டும் தானா எனக் கேட்காதீர்.... அதுமடந்தைக்கும் காளைக்கும் இடையிலுள்ள விவகாரம்!
பூம்புகார் நிலா பார்த்திடுவீர் - தமிழ்ப்புவியாண்ட சோழ மன்னன் கொற்றக்குடை அதுபோல
இருப்பதையும் எண்ணிடுவீர்! நம்இலட்சியத்தை எய்திடவே சிலம்புஇலக்கியத்தைச் சிந்தையிலே பதித்திடுவீர்!அலையாயும் கடலோரும் நிற்கும்போதுஅண்ணாவழி நடக்கின்ற அரசுக்கும் வாழ்த்துச் சொல்வீர்
வணக்கம்!