கவிதை 28 / 77

பொங்கல் விழா

Pongal Festival

X
பொங்கல் விழா
சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 14.1.75அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றபொங்கல்விழாக் கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை.
வணக்கம்,பேரன்பு கொண்டோரே, பெரியோரே,பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்ஒன்றெனக் கருதும் நல் இளம் செல்வங்காள்!ஒரு வயிற்றில் பிறப்பதற்கு அவ்வயிற்றில் இடமில்லைஅதனாலேஒரு கோடித் தாய் வயிற்றில் பிறந்திட்ட உடன் பிறப்புத்தமிழர்களே!அனைவர்க்கும் வழங்குகிறேன்பொங்கற் புதுநாள் வாழ்த்துக்கள் ஏற்றிடுவீர்!வண்ணத் தமிழ் எடுத்துக் கவிதைஎண்ணச் சித்திரங்கள் தீட்டுதற்குவந்துள்ள புலவர்களே வணக்கம்!பொங்கல் எனும் தலைப்பினிலே கவிபாட நீவிர்பொங்கித் தான் வந்திருப்பீர் நானறிவேன்,
உணவு பொங்கித்தான் வந்திருப்பீர் என்றேனா?உணர்வு பொங்கித்தான் வந்திருப்பீர் என்கின்றேன்உண்மைதானே!
ஞாயிறு போற்றுதும்ஞாயிறு போற்றுதும்சிலம்பொலி கேட்குதுசிந்தையில் இனிக்குதுஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்ஆயிரம் கதிரவர் ஆயிரம் ஆடவர்ஞாயிறு போற்றினர்ஞாயிறு போற்றினர்ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்மாவிலை தோரணம் மஞ்சள் வாழைகோயிலின் முரசம் கோலம் கண்டனர்பெங்கலோ, பொங்கல்பொங்கலோ பொங்கல்குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்புரிந்து வாழ்ந்தனர்.கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துமுன்தோன்றி மூத்தகுடி எனினும்காடு கொன்று நாடாக்கக்குளம் தொட்டு வளம் பெருக்கக் கற்றனர் அன்னார்.வில் தோன்றும், தோள்களிலே - அதுவீரம் காட்டும்.நெல் தோன்றும், வயல்களிலேவேளாண் திறத்தைக் காட்டும்.
சொல்தோன்றும் புதிது புதிதாக -மொழியின் வளத்தைக் காட்டும்.எழுத்து, சொல். இரண்டேயன்றிப்பழுத்த நெல் தொல்காப்பியன் - தமிழர்தம்செழிப்பு மிகு வாழ்வுக்கும்தொகுத்தளித்தான் இலக்கணநூல்கொய்யாக்கனித் தமிழால் - குறள்நெய்தான் உலகுக்கு வள்ளுவனும்.பெய்யாமழை பெய்ததுபோல் மகிழ்ச்சி கொள்வோம்பொய்யாமொழிக் கவி கேட்டு!சிலம்பு வளையும் சீர் மேகலையும்சிந்தாமணியுடை குண்டலகேசியும்அன்னைத் தமிழின் அணிகளாய் ஆயினஅந்நாள் புலவர் ஆற்றிய பணிகளால்!எத்துணை நூல்கள் எத்துணைப் புலவர்கற்றுணர் மக்கள் உற்றுணர் பெட்டகம்பெற்றுநம் தமிழர் வாழ்ந்தனர் அந்நாள்!பழந்தமிழர் பெரு நூல்கள் நினைத்தவாறுபடுக்கையிலே சாய்ந்திருந்தேன் ஒரு நாள்....பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டுவெட்கமது ஒரு சிறிதும் இல்லாமல்ஒருத்தி தழுவிக் கொண்டாள்.அவளை..அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும்தள்ளிவிட மனமில்லை. தழுவட்டும் என்றிருந்தேன்அதன்பின்னர் மற்றொருத்தி வந்தாள் - அவள்வானவில் சதிராட்டக்காரிவானம்பாடியென இசை கூட்டும் மாயக்காரிஎன்ன இது? இருமங்கை - ஒரு படுக்கை -
எனக் கேட்பீர்! பொறுத்திடுகமுதலில் வந்தவள் பேர் தூக்கம்:மற்றொருத்தி கனவுமங்கை.அந்தக் கனவினிலே நான் கண்ட காட்சியெலாம்தமிழ்க்காட்சி! தமிழர் மாட்சி!மன்றமொன்றில் இசைவாணன் கீத மழை பொழிகின்றான்மக்கள் எல்லாம் மது குடித்த வண்டுபோல மயங்குகின்றார்.மங்கலமாய் இசை நிகழ்ச்சி முடியும் போழ்துமக்கள் சிலர் ஆர்வமுடன் மேலும் ‘பத்துப்பாட்டு’பாடு என்றார்.மலைத்துவிட்ட இசைவாணன், கனைத்துக்கொண்டு“பாடுகின்றேன்; மேற்கொண்டுஎன்ன தொகை தருவீர்” என்றான்.வெடுக்கென ஓர் புலவன் எழுந்து நின்று விடையிறுத்தான்“எட்டுத் தொகை” தருவதாக!இசைவாணன் புரிந்து கொண்டு, இஃதென்ன நியாயம்?எந்தன் பத்துப்பாட்டுக்கு எட்டுத்தொகையா?அஃதெனக்குக் “குறுந்தொகை” என்று சொன்னான்.ஓகோ! “ஜங்குறுநூறு” வேண்டுமோ எனக் கடிந்தார் புலவர்நூறு வேண்டேன் - அதனைத் தீண்டேன் தீண்டேன்.நானூறு தருவீரோ புலவரேறே! அதுவும்அகத்தில் நானூறு - புறத்தில் நானூறுஎன்று வளைத்தனன் இசையில் வல்லவன்,புறத்தில் நானூறு அகத்தில் நானூறு
அதனாலேபாட்டுக்குத் தொகை கேட்கும் பேச்சுதனை விட்டொழிப்பீர்பசும்பால் தருவோம் தொண்டைக்கு, தேவையெனில்முப்பாலே தருவோம் பாடிடுக என்று சொன்னார்.முப்பால் தருவதாக மொழிந்திட்ட புலவரய்யா!பொருட்பால் ஒன்றுக்கே இனி என் தொண்டை பேசும்என்று இசைவாணன் எழுந்துவிட்டான்நீண்ட துயில் கலைந்தெழுந்தேன்;“நெடுநல்வாடை” பட்டதாலே!கனவின் நினைப்பெல்லாம் நெஞ்சில்கரும்பாக இனித்ததம்மா!தமிழ் நினைத்து, இதயத்தைத்தமிழால் நனைத்துஇமிழ் கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம் தமிழர்உமிழ் நீரை வாயில் தேக்கிஊத்தைப் பல் துலக்கிவிட்டு மீண்டும்உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல் போல்அமிழ்தான இனப்பண்பு, கலை மாண்பு, இலக்கியங்கள்மாய்ப்பதற்குத்தமிழர்களே ஒப்பிவிட்டார் - கெட்டஉமிழ் நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்.அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திட வேண்டும்.அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத் தொழிலாளி வேண்டும்முழுக்குப் போடுவதால் உடல் புறந்தூய்மை ஆகும்.உள் தூய்மை ஒளடதத்தால்-உளத் தூய்மை வாய்மையாலே ஆகும்.இந்த வாய்மைக்கு வழி வைத்துவைதீகக் கோட்டைக்கு வெடி வைத்து
அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார் நம்அண்ணாவின் தலைவர் பெரியார்!அவர் போட்ட அடுப்பிலே தான்இன்றுபொங்கல் பொங்குதுபோலிகள் மங்குதுபொய்மைகள் எரியுதுபத்து தலையுடையாள் இருபது கையுடையாள்கத்து கடல் வாயுடையாள் கண்கள் பல நூறுடையாள்மாட்டு முகமுடையாள் மனித உடலுடையாள்மகர சங்கராந்தியெனும் பேருடையாள்மலைபோல் மூக்குடையாள்என எழுதி ஏமாற்றப் புனைந்த கதைஇடிமுன்னே பாம்பு போல் மறைந்தொழிந்துஈரோட்டு முழக்கத்தால் மாய்ந்ததன்றோ!அதைத் தொடர்ந்து நம் அண்ணாஇன உணர்வுத் திருநாளாய்ப் பொங்கல் கண்டார்ஏர் உழவர் பெருநாளாய்ப் பொங்கல் கண்டார்!

மூலமும் சான்றும்