கவிதை 27 / 77
அகத்துறைப் படைப்புகள்
Akam Creations
அகத்துறைப் படைப்புகள்
13.7.74 அன்று சென்னை மாநகர மருத்துவக்கல்லூரிகளின் மாணவர்கள் நடத்தியமுத்தமிழ் விழாவில் ‘அகத்துறைப் படைப்புகள்’ என்றதலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்,கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை.★
வணக்கம்.வளர்பிறைத் தமிழ் வளர்க்க வந்தவர்க்கும்தளர்விலாத் தன்மான வேங்கைகட்கும்கவியரசு கண்ணதாசருக்கும் வணக்கம்.(நாடு இதனை) நாடிதனை அறிந்து மாத்திரையால் மக்கள்கேடுகளைந்து காப்பவர்க்கும் வணக்கம்.அகத்து உறையும் ஆயிரம் பிரச்சினைகள் இடையேஅகத்துறைப் படைப்பு எனும் கவியரங்கத் தலைமை தாங்க-நகத்துறையும் அழுக்கு கூட உடல் நலத்தைக் கெடுக்குமென்றுபகுத்துரைக்கும் பயிற்சி பெற்றமருத்துவத்துறை மாணவர்கள்வருத்துகின்றார்; ஒப்புக்கொண்டே...மாணவர்கள் தமிழுக்கு விழா எடுத்தல்மாபெரிய அதிசயமாய்ப் போன நாளில்
மருந்தாளும் வித்தை கற்போர்விருந்தொன்றைப் படைக்கின்றார் தமிழுக்கென்றால்.சிரந் தாழ்த்தி வணங்க வேண்டும்கரங் கூப்பித் தொழுதல் வேண்டும்.வேலைநிறுத்தமென்ற விழலுக்கு நீர் பாய்ச்சிப்பாலை நிகர்த்த கல்வி பருகாமல் பாழ்படுதல்சேலை நிகர்த்த விழிப் பெண்கள் -சேலை இழுத்தல் ஒரு தொழிலாய்ச் சீரழிதல்ஒருந்தில் சென்று பேருந்து கொளுத்தல்இவை விடுத்துச்சீருந்தும் தமிழ் வளர்க்கச்சேர்ந்தவரே! வாழ்க, வாழ்க!நானும் ஒரு நாள் மாணவனாய் இருந்ததுண்டு -என் பெற்றோர்நாணும் ஒரு நிலை வராமல்நான் என்றும் நடந்ததுண்டு!படித்திடும் போழ்தோதுடித்திடும் காதல்...எனக்குத்தமிழ்மீது!கடித்திடும் கரும்பெனஇனித்திடும் தமிழ்ப்பணி-அன்றொரு நாள் ஆரூரில் நான் கண்டஅரிதான தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்அரிமா நடை பாரதிதாசனின்அருவி நிகர் தமிழ் வாழ்த்தைப் பெற்றது காண்!அன்றந்த விழா சிறக்க - அன்பாலேஅவர் அளித்த வாழ்த்து இதோ-“தண்பொழிலில் குயில்பாடும் திருவா ரூரில்தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங் காண்
வண்மையொடும் உண்மையொடும் வாழ்ந்தி டுங்காண்மக்களிடை எழுச்சிக்கு மருந்தா குங்காண்புண் வாய்ந்தோர் அல்லர்காண் திருவா ரூரின்புலி இளைஞர்கள் தோள்கள் பூரித் தார்காண்கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தைவளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார்வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடும் காண்!”இந்தப்புரட்சிக் கவிஞரது போர் முழக்கம்புறம் அகம் நூல்கள் தரும்கவி முழக்கம்புதுமைத் தமிழின் பெரு முழக்கம்!பொங்கிடும் இளமையின் தனி முழக்கம்!அந்நாளை எண்ணுகின்றேன் - இன்பத்தைநினைவாலே உண்ணுகின்றேன்இந்நாளும் அதுபோல வாராதோ?கண்ணான மாணவர்கள் கண்விழித்துப் பாராரோ?பொன்னான தமிழ்காக்க ஓரணியில் சேராரோ?எண எண்ணி வலிக்கின்ற நெஞ்சுக்குஏற்ற மருந்தாக இந்த விழா அமைந்தென்பேன்!அகத்துறைப் படைப்பென்றும்புறத்துறைப் படைப்பென்றும்வகுத்திட்டார் இலக்கியத்தைப் பழந்தமிழர்இகம்பரம் என்பது தமிழுமல்ல;தமிழர்க்குரிய்துமல்ல!அகம் புறம் என்பதே தமிழாம்தமிழர்க்கக்கே உரியதாய்த்திணை பிரித்து எழுதிய தமிழன் திறனுக்குஇணை கொடுத்து நிற்க இலக்கியமேது?
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்முற்படக் கிளந்த எழுதிணை என்ப”ஒல்காப்புகழ் வாய்ந்திட்டதொல்காப்பியம் சாற்றும் இதனை!“அகம் பெரிதா? புறம் பெரிதா?” எனஅன்றொரு நாள் அன்பழகருடன் வாதிட்டேன்அறிஞர் அண்ணா இடைமறித்து விளக்கம் தந்தார்!“பகிர்ந்து கொள்ளக்கூடியது புறம் தம்பி-பகிர்ந்து கொள்ள முடியாதது அகம் தம்பி!”அந்தஅண்ணாவின் விளக்கம் தான்அகத்துறைக்கே விளக்காகும்-பண்பாடுடைய அகத்திணையின் பெருமைதனைப்பாண்டவரும் பாஞ்சாலியும் உணராததால்பகிர்ந்து கொண்டனர் அகத்துறையை ஐவருக்கும்!அது அவர்தம் மரபின் குற்றம்:பண்பாடு அதுவெனப் பாராட்டி மகிழ்தல்-பகுத்தறிவு அற்றோர் குற்றம்!அகத்திணை புறத்திணை இரண்டே ஆயினும்தினைத்துணையும் அகலாது திகழ்தல் காண்பீர்-வேல்பாய்ந்த புண்ணோடு வீரன் வருவான் - காதலிவேல் பாய்ச்சும் விழியாலே மருந்து தருவாள்!குளத்துக்குள் மீன்போலக் கூடிக்கிடந்தாலும் - போர்க்களத்துக்கு அழைப்பென்றால் கரை ஏறிடுவார்கண்ணுக்குள் கண்வைத்துக் கலவிக்கலை துய்த்தாலும்மண்ணுக்குத் தீமையெனில் மறவர் குலம் எழுந்து விடும்அக்குலத்தின் மாண்பதனைச் சித்தரித்துப்பொற்புடைய கவிமாரி பொழிவதற்குச்சொற்குலத்தின் சொந்தக்காரரெலாம் வந்துள்ளார்-நற்குலத்தைப் பழிப்பவர்க்கும்
நாக்குத் தழும்பேறியோர்க்கும்தாய்க்குலத்தின் அறைகூவல்தமிழ்க்குலத்தின் போர்ப்பரணிகேட்கட்டும்! கேளாச் செவிப்பறையைக்கிழிக்கட்டும்!அகத்துறையில்,தலைவன் என்றும் தலைவி என்றும்செவிலி என்றும் தோழன் என்றும்தாய் என்றும் ஊர் என்றும்நிலவு என்றும் தென்றல் என்றும்தோழி என்றும் துணை நின்றுதோகை விரித்தாடுந் தமிழில்பாகை வெல்லும் கவி தந்துவாகைசூடக் கவிஞர் உள்ளார் -தலைவன் எனத்தலையற்றோர் சிலர்சொல்லிக் கொள்ளும் இற்றை நாளில்நிலையான அகத்திணையின் தலைவர் பற்றிப்பாடக் கேட்போம் -தலைவி என்பாள் தலைவிதியைஎண்ணிக் கொண்டு கிடப்பவளோ?இல்லை! இல்லை!தலைவிதியை மாற்றுதற்குத்தோழியினை தூதாக்கிச்செவிலியையும் தோதாக்கித்தென்றல் சுமந்து வரும்காதலனைநின்று சுடும் நிலவினிலே வரவேற்கக்காத்திருப்பாள்-தோழன் என்றும் துரோகியானதில்லை அகப்பாட்டில்!புறப்பாட்டில் துரோகி உண்டு - அவனது ஆரம்பப்புறப்பாட்டிலேயே அது வெளிச்சமாகும்!
ஊரார் பழிப்புக்குக் காதல் ஒளிந்து மறைவதில்லை-ஆனால் இன்றுஊரார் எதிரிலேயே, கடற்கரையில்-காருக்குள் - கலையரங்கில்-காதல் சேட்டை என்ன நியாயம்?ஊரார் எல்லாம் ஊனமுற்ற விழி படைத்தோர்எனும் நினைப்போ?அன்றிக்காதலர்கள் கண்மூடிக் கொள்வதாலேகாசினியே கண்மூடிக் கொண்டதாகத்துணிதல் நன்றோ?
காதலுக்கும் வழி வைத்துக்கடமைக்கும் இடம் வைத்துக்கண்ணியத்தை நிலை நிறுத்திக்கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதான்அகத்துறைப் படைப்பாகும் - குடும்பக்கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதான் - இன்றையஅகத்துறைப் படைப்பாகும்!அகத்துறையில் படைப்பென்று நினைத்துஆறு, ஏழு, எட்டென்று படைத்து விட்டால்-பின் அந்தப்படைப்பினால் மிகுவதுபதைப்பே யாகும்!அறிந்து சொன்னேன்... நன்றாய்ப்புரிந்து சொன்னேன் - அனுபவத்தில்தெரிந்து சொன்னேன்-உணர்வீர் நன்கு!
❀