கவிதை 26 / 77
தந்தை பெரியார்
Father Periyar
தந்தை பெரியார்
சேலம் நேரு கலையரங்கில் தமிழ்ச் சங்கத்தின்சார்பில் 11.1.74 அன்று நடைபெற்ற“தந்தை பெரியார்” கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை முன்னுரை.★
மாண்புமிகு அமைச்சர்களே, மாவட்டத் தோழர்களேவணக்கம்.வளமார் தமிழகத்துக் கவிஞர்க்கும்வாஞ்சைமிகு சேலத்துப் பெரியோர்க்கும்உளமார்ந்த என் வணக்கம்ஏற்றிடுவீர்.ஓய்வில்லை எனக்கென்று தெரிந்திருந்தும்உரிமையுடன் கவியரங்கு நிகழ்த்த வரவேண்டுமென்றுஉத்திரவை வேண்டுகோளாய் விடுத்துவந்தார்உழுவலன்பர், உழைக்கின்ற மெய் அன்பர்,நம்மைப்படகுபோல் கவிழ்த்திடுவோம் என்கின்றார்; இந்தப்படகேறிப் பதவியிலே தொற்றிக் கொண்டோர் -தூளாக ஆக்கிடுவோம் என்கின்ற துரோகிகளும்என்முதுகில்பாயும்
வாளாக மாறிடுவோம் என்கின்ற பாவிகளும்சூழ்ந்தெதிர்க்கும் சூழ்ச்சியினை முறியடிக்க, நான் சிந்தனையில்ஆழ்ந்திருக்கும் போதன்றோ ஆணையிட்டார் கவி எழுதநேற்று, காலை முதல் நள்ளிரவு முடியும்வரைஏற்றமிகு நிகழ்ச்சிகள் எட்டுக்குமேல் கோவையிலே! கற்பனைஊற்றுக்கண் திறக்குமா அதற்கு மேலே? இருந்தாலும்காற்றுக்கு அசைகின்ற கொடிபோல - நண்பர்களின்கட்டளைக்கு அசைகின்றேன்கவிபாட!கவி எழுதும் ஆற்றல் எனக்குண்டென்ற காரணத்தால்கவியரங்கத் தலைமைக்குத் தூண்டுகோலாய்த் துணைநின்றகணபதியை நினைக்கின்றேன், கவியரங்கம் தொடர்கின்றேன்.ஆர். வி. கணபதியை நினைக்கின்றேன்அழகு தமிழ்க் கவியரங்கம் தொடர்கின்றேன்.பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்தசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் - ராம்சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம், பெரியார்ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.கவியரங்கம் பாடவந்த, காணவந்த பெருமக்காள்!திருவரங்கப் பெருமாள் போல் படுத்திருந்த தமிழ் உணர்வைத்திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்துதீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம், திரையரங்கம்,எல்லாமே ‘அம்மாமி அத்திம்பேர்?’ஜலதரங்கம்! அதுமாற்றித்தமிழ் அரங்கம், தனி அரங்கம் கண்டவர்க்குக்கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ? அதனால்தான்“பயிர் போன்றார் உழவருக்குப் பால்போன்றார்குழந்தைகட்குப் பசும்பால் கட்டித்தயிர் போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார்
ஏழையர்க்குத் தகுந்தவர்க்குச்செயிர் தீர்ந்த தவம்போன்றார் செந்தமிழ்நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம்உயிர் போன்றார்” என்றுபாரதிதாசப் பாவேந்தன் பாடிச்சென்றான் அவரை!வீடு கட்டி அதற்குள்ளே வைக்கோலைத் திணிப்பதுவோ?வீடுகட்டாமலே வைக்கோற்போர் போடலாமேஎனச்சொன்ன ஈ.வே.ரா. நாத்திகரா?இல்லை இல்லை!அவர்,இயற்கையின் புதல்வர் - இந்த மண்ணை மணந்த மணாளர் -எதிர்காலத் தமிழகத்துப் பெருமைக்குத் தூதர்” என்றுஅக்ரகாரத்து அதிசய மாமனிதர் வ.ரா. முன்புஅழகாக வரைந்தார் ஒரு கட்டுரைதான்!தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போலசெங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோடப்பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக்காளைகள் கோடிஉறுதியாய்க் கூறி நின்றார் குருதிதான் பணயமென்று!அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம்,உயிர்பிழைக்கப்பங்கமுறு சாதிமத பேதங்களால் அல்லலுறும் - மனிதசங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம்அந்தச்சரிதானா? எனக்கேட்டார்சிங்கத்தின் குரல்கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்டகதைதானே நடந்ததிங்கே!வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டுபொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டுசெங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும்வரை ஒளி உண்டு!பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் - இவரோபடுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;ஏரிமலையாய்ச் சுடுதழலாய்இயற்கைக் கூத்தாய்எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்எப்போதும் பேசுகின்ற ஏதென்சுநகர் சாக்ரடீசாய்ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார். இன்றைக்கோஇறப்பின் மடியினிலே வீழந்திட்டார்.மதுவிலக்கு தேவை என்று மகாத்மா காந்தி சொன்னவுடன்மதுக்கலயம் கட்டாமல் இருப்பதற்குத் தோட்டத்தில்மண்டி நின்ற தென்னைகளை வெட்டிச் சாய்த்தார்-வைக்கத்து வீரர் என்று யாரைச் சொன்னோம்?“வை கத்தி! தீண்டாமை கழுத்தில்” என்றுவரிப்புலியாய்க் களம் சென்று வாகைசூடிவையத்து மக்கள் தந்த பட்டமன்றோ வைக்கம்வீரர்காங்கிரசுக் கட்சிக்கு மீகாமனாய்க்கதர் இயக்க வெற்றிக்குத் தளபதியாய்க்காந்தி வழி நின்றிட்ட கர்மவீரன்கட்சிக்குள் போராடக் காலம் வந்துகாஞ்சிபுரம் மாநாட்டில் வெளிநடந்தார்வ.வே.சு. அய்யர் என்பார் வடிகட்டிய தேசபக்தர்வகுப்புவாத உணர்வாலே வம்புக்கு அழைப்புத் தந்தார்.சேரன்மாதேவி ஊரில் சிறந்ததொரு குருகுலத்தில்ஒரு குலத்துக்கொரு நீதி கடைப்பிடித்தால்சகிக்குமா பெரியார் மனம்? சமருக்கு வில்வளைத்தார்.
சரித்திரம் படைக்கலுற்றார். அதன் விளைவாய்த்தன்மான இயக்கத்தின் தந்தையாகத்தமிழர் இனப்பாதுகாப்புத் தலைவராகப்பெரியார் ஆனார் - புதுநெறியார் ஆனார்!பிற்பட்டோர் நலனுக்கென்று நீதிக்கட்சிபெரும்பணிகள் இயற்றிடவே முனைந்தபோதும் - அதுபித்தாபுரம் பனகல் என்று பிரபுக்கள் காலடியில்வற்றாத செல்வந்தர் கைத்தடியில் இருந்ததாலேஅதை மாற்றிமாளிகையில் இருந்தகட்சி மக்களிடை வருவதற்குமாமேதை அண்ணாவின் துணையுடனே வெற்றி கண்டார்மந்தி கை மாலையெனஇந்தி கைத் தமிழர், ஆகவஞ்சகச் சூழ்ச்சிகள் வலையாக விரிந்தபோதுஅஞ்சிடா நெஞ்சுகொண்டு அறுத்தவர் பெரியார்தானே?அவர்,பாதம் படாத பட்டி தொட்டி உண்டோ- அவர் பேர் கேட்டுக்காதம் ஓடுகின்ற ஆத்திகரும் (அவர்) பேசக்கேட்டால், தமிழ்க்கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப்போவார்,அறிவு மழை பொழியும் எழில்வழியும் - இருள் கழியும்தெளிவுமிகு உரைகள் பலஒளிரும் திறன் மிளிரும்கடலின் மடை அலையின் ஒலி - மலையின் முடி-தழுவும் முகில் வழியும்!அறிவு மழை பொழியும்!ஆணவங்கள் அழியும்!அடிமை முறை ஒழியும்!
அய்யாவின் பேச்சென்றால்அதிரசம் தின்பதுபோல் கழகத்தவர்க்கு,அணுகுண்டு வெடித்தது போல்கயவர்கட்கு!அவர் தலைமை ஏற்று நானும் அவருடனேஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில்ஆரூரில் மாணவனாய் இருந்தபோதே இணைந்துவிட்டேன்அதன் பிறகு புதுவையில் நான் தாக்குண்டபோதுஅய்யாவின் கையாலே மருந்திட்டார், என்காயத்திற்கு!குடியரசு அலுவலகக் குருகுலத்தில்கொள்கை வழிப்பாடங்கள் பயின்றகாலை - நான்தமிழரசுத் தலைவனாக வருவேன் என்றும், எனைவளர்த்ததந்தைக்கு அரசுமரியாதையுடன்இறுதி வணக்கம் செய்வேன் என்றும்எண்ணியும் பார்த்ததில்லை;“பாராட்டிப் போற்றிவந்த பழமை லோகம்ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்அடிபீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் - அவர்வெண்தாடி அசைந்தால் போதும்.கண்ஜாடை தெரிந்தால் போதும்-கறுப்புடை தரித்தோர் உண்டு - கொடுமையைநறுக்கியே திரும்பும் வாட்கள்”ஈரோட்டு குருகுலத்தில் நான் இயற்றியது இப்பாடல்!இன்றைக்கும் நினைக்கின்றேன் - பெரியார்இளவயதில் மறையவில்லைநிறைவயது வாழ்ந்துவிட்டே ஓய்வு கொண்டார் எனினும்,தாஜ்மகால் திடுமெனத் தரைக்குள்ளே போய்விட்டால்அதைக் கட்டி; ஆண்டு பல ஆயிற்றே என்றுஆறுதல்தான் பெறுவோமா?
தஞ்சைக் கோபுரம் சாய்ந்து விட்டால் அதற்குவயது அதிகமென்று சொல்லித்தாங்குதல்தான் எளிதாமோ? இவரோ,தஞ்சைக் கோபுரம்போல் உயர்ந்தவர்-தாஜ்மகால்போல் சரிதம் படைத்தவர்-அவர் வாழ்வார் வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்,வாழ்கின்ற பெரியார் பற்றிப் பாடுதற்கு வண்டமிழ்க்கவிஞர்களைவரிசையாக அழைக்கின்றேன்!