கவிதை 33 / 77

மாறி வரும் ஊரினிலே

In a Changing Town

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: மாறிவரும் ஊரினிலே

X
மாறி வரும் ஊரினிலே
“மாறி வரும் ஊரினிலே” என்ற தலைப்பில்10.8.80 அன்று புதுவை வானொலி நிலையத்தார்புதுவை கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்தவிடுதலை நாள் கவியரங்கில்கலைஞர் தலைமையில்சமத்துவம், உழைப்பு, சுற்றுப்புறங்கள்,மனைநலம், கல்வி, ஒருமைப்பாடு ஆகியதுணைத் தலைப்புகளில் ஆறு கவிஞர்கள் பாடினர்.கலைஞர் அவர்கள்தலைமையேற்று மொழிந்த கவிதை வருமாறு:
மாண்புமிகு புதுவை முதல்வருக்கும்மற்றுமுள்ள அமைச்சருக்கும்சட்டபேரவைத் தலைவர் - துணைத் தலைவர்க்கும்திட்டமுடன் பணிவகுத்துச் செயலாற்றும்மதிப்புமிகு மாநிலத்து அமைப்பாளர்க்கும்மன்றம் நிறைந்து வழிகின்ற கூட்டமாம்இன்னுயிர் தந்தும் செந்தமிழ் காக்கும்என்னுயிர் உடன்பிறப்புக்கள் அனைவர்க்கும்வணக்கம் கூறுகின்றேன்!வணக்கம்வானொலிக் கவியரங்கம் கேட்க வந்த
வண்டமிழ்ப் பெரியோர்க்கும்-வகை வகையாய்க் கவிபாட வந்துள்ளநகை முகக் கவிகளுக்கும் வணக்கம்
எதுகை மோனை எதையும் பற்றிஎழுதாக் கவிஞனை வருக என்றேபுதுவை வானொலி அழைத்தது புதிரே!அதற்கோர் நன்றி ஏற்றிடு வீரே!
எட்டயபுரத்து எரிமலைக் கவிஞன்பட்டயக் கவிதை படைத்த மண்ணில்
பூகம்பப் புரட்சி புரிந்த புலவன்பாரதி தாசன் பிறந்த மண்ணில்கெடுதலை அடிமைத் தளையை அறுத்தவிடுதலைக் கவிதை அரங்கு கண்டோம்.
சரித்திரத்துப் பொன்னெழுத்தில்சுதந்திரத்தை மின்னவிட்டுதரித்திரத்தை தலைமீது தாங்கிநிற்கும்தாயகத்தை வாழ்த்துகின்றேன்.
நரிக்குணத்தார் அன்னியர்கள்நாட்டைவிட்டுப் போன பின்னும் - நம்துரைத்தனத்தால் உற்றபயன்நலிந்தோர் எல்லார்க்கும் கிட்டவில்லை.
புதுவையிலே குடித்துவிட்டுக்காலி செய்த புட்டிகள் போல்நடுத்தெருவில், வயற்காட்டில், கிணற்றோரம்விதவிதமாய் வயிறு காய்ந்து கிடக்கின்றார்ஏழைமக்கள் நடைப்பிணமாய்!
பொன்னாடு இதுதான் என்றுஎந்நா தான் புகழ்ந்திடுமோ?நன் மானம் காப்பதற்கு ஆடையில்லைஅடங்குதற்கு வீடுமில்லைசன்மானம் ஒரு கேடா;சகதிக்கும்? சேற்றுக்கும்?சாக்கடை வாழ்பூச்சி புழுவுக்கும்?தேவையில்லை!
தன்மானம் போவதற்குத் தானாபோராட்டப் பாற்கடலில்சுதந்திரத்தைக் கடைந்தெடுத்தோம்?
இல்லாத காரணத்தால் திண்டுக் கல்லில்அல்லாவின் நாமம் தொழும் அன்பு மக்கள் - வரிசையில்நில்லாமல் தானம் வாங்கப் பாய்ந்த தாலேபொல்லாத சா வுரலில் பொடியாய்ப் போனார்நெரிசல் எனும் உலக்கை பட்டு;நெடிய தொரு உலகை விட்டு!
வேட்டி சேலை வாங்குதற்கு ஓடிவந்தார்வாட்டுகின்ற வறுமையாலே தேடி வந்தார்வீணைகள் போல் நொறுங்கி விட்டார் - இறப்பின்ஏணைகளில் தூங்கி விட்டார்; தாலாட்டின்றி!மலர்களாம் தாய்க் குலத்தார்மழலைகளாம் அரும்புக் கூட்டம்மயானத் தோட்டத்தில்மரணச் செடிகளாய்ப் பூத்ததம்மா
களர் நிலப் பயிர் போலக்காண்பதுதான் சுதந்திரமா?
பலர் வாடச் சிலர் வாழப்பெற்றது தான் விடுதலையா?இடர் போக்கி இல்லாதார் பிழைப்பதற்குஇனியேனும் விதி செய்வோம்விடை கொடுப்போம் தலை விதிக்குபடை யெடுப்போம் பூர்வ ஜென்மப் பலனின் மேல்தடை விதிக்கும் ஆதிக்கக் கோட்டையினைஅறவழியில் தகர்த் தெறிவோம்.மடை திறந்த வெள்ளம் போல்மகிழ்ச்சியினைப் பெருக்கிடுவோம்.‘மாறி வரும் ஊரினிலே’ என்று - தமிழில்ஊறி வரும் கவிஞர்களைக் கொண்டு - புதுவைவானொலியார் அரங்கொன்று கண்டோர்! - சுவைத்தேனருவிக் கவிக்கனிகள் தெவிட்டாது உண்போம்!
புதுவை எனக்குத் தியாகமுத்திரை குத்தியயாத்திரை பூமிநான் செத்துப் பிழைத்த க்ஷேத்திரம் இதுவே!....பலர், தீர்த்தமாடும் இந்த திவ்ய ஸ்தலத்தில்பயல் தீர்ந்தான் என்று அடித்துப் போட்டார்!சாக்கடையில் தூக்கி எறிந்தார் என்னைச்சாக்காட்டுக் கொசு கடிக்காததாலேபுதுவை என்னை வாழ வைத்து-புதிய சோதனைகளைத் தாங்க வைத்தது!அன்றே என்னை விழுங்கி யிருந்தால்இன்றெனக்குத் தொல்லை துளியும் இல்லை!ஆறி வரும் பூமியிலே அழகழகாய் ஊர்களுண்டுமாறிவரும் ஊரினிலே மகத்தான புதுமை உண்டா?
ஆறிவரும் பூமியிலே அழகழகாய் ஊர்களுண்டுஅருவியுண்டு நதிகள் உண்டு ஆழ்கடல் மிகவுமுண்டு.தாவி வரும் மான்குட்டி - தாயின் மடிப் புலிக்குட்டிகாவினிலே குயிற்பாட்டு - களிப்பினிலே மயிலாட்டம்!
இயற்கையின் செழிப்பு - எழிலின் சிரிப்புஇனிய நற் சிந்தனை - எதிலுமோர் மாற்றம்!செய்திடத் துணிவும் - செயலில் கனிவும்சேர்ந்திட வேண்டும் - பேதம் சிதைத்திட வேண்டும்!
பிறப்பால் உயர்வு தாழ்வெனும் பேச்சு! - அறிவுச்சுரப்பால் அழிந்து அறவே போச்சு! எனினும்மறப்பார் இல்லை பேதம் - என்றும்துறப்பார் இல்லை சமயங்கள் மோதல்!
சமத்துவத்தைச் சதிராட விட்டு - அரங்கில்சதி செய்து காலொடிய வைத்துசாமி செயல் நாமென்ன செய்வ தெனசமாளிக்கும் கூட்டத்தைச் சாட்டை கொண்டு தாக்கு!
உழைக்க வேண்டும் என்ற உபதேசம் யாருக்கு?உழைத்துழைத்து உருக்குலைந்த பல கோடிப் பேருக்கா?உலைக்களத்துச் சுடுநெருப்பில் வேகின்றார்நிலக் களத்துப் பெருஞ்சேற்றில் சாகின்றார்புகை கக்கும் ஆலைகளில் மாய்கின்றார்புயலுக்கும் அஞ்சாமல் அலைகளிலே மாய்கின்றார்.பாலைகளைச் சோலைகளாய் ஆக்குகின்றார்.சாலைகளைச் செப்பனிடப் பாறைகளைத் தாக்குகின்றார்.கன்னலென உபதேசம் புரிகின்றாரே;இன்னுமென்ன உழைத்துக் கிழிக்க வேண்டும்?சக்திக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதிசலியாது உழைத்தலுத்த மக்களுக்கு உடனே வேண்டும்!
அஃதின்றி அறிவுரைகள் பிரசங்கங்கள் ஈர விறகுக் கட்டை!பழுதின்றிச் சமைக்க உதவாது சமதர்மத்தை!நாடு வாழ நாம் தயாரிக்க வேண்டும்நடைமுறையில் அந்த நளபாகத்தை!சுற்றுப்புறம், மனைநலம், கல்வி, ஒருமைப்பாடு - இவைவெற்றுப்புறம் ஆகாமல் இருப்பதற்கும்-வெற்றிகளைக் குவிப்பதற்கும்,உழைப்பின் பெருமை உணர்தல் வேண்டும்.உயர்வு தாழ்வற்ற சமத்துவ நிலையும் வேண்டும்.
மாறி வரும் ஊரினிலே
வெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்உரிக்க உரிக்கத் தோல் சேலை வருவதாலேவெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்.
மாறி வரும் ஊரினிலே
மண்ணாங்கட்டி, தன்னைக் கர்ணன் எனப் புகழ்ந்து கொள்ளும்கரைகின்ற இரக்க உள்ளம் கர்ணனுக்கு - மழையில்கரைகின்ற மண்ணாங்கட்டியும் கர்ணன் தானே!
மாறி வரும் ஊரினிலே
அம்மிக் குழவியும் தன்னை ஆண்டவன் எனஆராதிக்கச் சொல்லும்,ஆலயத்திலும் நான்தானே சிவலிங்கமெனஆர்ப்பாட்டம் புரியும்!அந்தச் சமத்துவம் கேலிக்குரியதுசெக்கெல்லாம் சிவலிங்கமாகாது காண்!
மாறி வரும் ஊரினிலே
நித்தம் ஆறு வேளை தின்பவனும்உழைப்பாளியாம்; காரணம்நெற்றி வியர்வை நிலத்தில் விழத் தின்கின்றானாம்!பித்த மனிதனவன் என்று பேரிகை கொட்டிடுக!
மாறி வரும் ஊரினிலே
போலிகள் அசலாகும்பித்தளை பொன்னாகும் - இந்தப்பொய்மைகளை வீழ்த்திடவேமாறி வரும் ஊரினிலே - தமிழில்ஊறி வரும் கவிஞர்களை அழைக்கின்றேன்.சந்தத் தொடர் கொஞ்சும் கவிதந்தச் சிலை மிஞ்சும் எழில்இன்பத் தமிழ்நெஞ்சம் நிறைஅன்புச் சுடர் ஏந்தி - கவிஅரங்கினிலே வாரீர்!

மூலமும் சான்றும்