கவிதை 35 / 77

கலைவாணர் அரங்கக் கவியரங்கம்

Kalaivanar Arangam Poetry Assembly

X
கலைவாணர் அரங்கக் கவியரங்கம்
பல்வேறு தலைப்புகளில் அண்ணா பற்றிபலாச்சுளைச் சொல் எடுத்துப் பாவலர்கள்;கல்மீது எழுத்தாகக் காலத்தால் அழியாதகவிதை தீட்ட வந்துள்ளார்!
கலைவாணர் அரங்கத்தில்;கவிவாணர் அரங்கம் இன்று!
காதில் விழுகிறது சிலபேரின் கேலிச்சிரிப்பு!"கவியரங்கம் ஒரு கேடா கழகத்துக்கு?விழா நடத்தச் சிறிதேனும் வெட்கமிலையோ இவர்கட்கு?வெற்றி பெற்ற நாமிங்கே வீரவாள் சுழற்றிநிற்க;வீணர்கட்கென்ன முப்பெரும்விழா வேண்டிக்கிடக்கு" தென;ஆணவக்குரல் ஒன்று கேட்குதங்கே!
விளக்கமொன்று அவர்கட்கும் உங்களுக்கும்சொல்வேன் நான்!விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்த— திருடன்;அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு அகப்படாமல்— ஓடியதைப் போல்அருப்புக்கோட்டை, நெல்லைத் தொகுதிகளைவென்று விட்டார்!
இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்;
இந்த 'இடிஅமீன்' ஆட்சியிலே நமக்கு;இடைத்தேர்தல் எண்ணம் எள்முனையும்வேண்டாமென்று!இருந்தாலும் போர்க்களத்தில் விழுப்புண்பெறுவதே பெருமை என்று;இனிய உடன்பிறப்புக்கள் எல்லோரும்இரு கருத்துக்கிடமின்றி எடுத்துரைத்தகாரணத்தால்பணநாயகப்படை எதிர்த்து --- நமதுஜனநாயகப்படை மோதிற்று!
மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்தியமாண்புமிகு இராமச்சந்திரனை; மாவீரன்என்று போற்ற,மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்மாண்டாலும் வெற்றி வாலிக்குத் தானே!
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே!
எனவே;வீழ்ந்தாலும் விழுப்புண் பெற்றோர்தான்வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவர்!
தாழ்ந்தாலும் தமிழன்; தன்மான மிழந்து; தன்தலையை என்றும் தாழ்த்த மாட்டான்!
தாய் தந்தையரை நன்றியுடன் போற்றும்தனிப் பண்பாட்டை மறக்க மாட்டான்!
தாயாகத் தமிழர்க்கு அண்ணாவும்தந்தையாகப் பெரியாரும வாய்த்ததாலேஅவர்க்குச்சேயாக விளங்குகின்ற தி.மு.கழகம்;செய்நன்றி சிறிதளவும் மறவாமல் இன்று;
செருமுனையில் பட்டபுண்ணை சிரிப்பாலே ஆற்றிவருங்கால வெற்றிக்கு வழி வகுக்கக் காண்பீர்!
தமிழ்நினைத்து, இதயத்தைத்தமிழால் நனைத்து
இமிழ்கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம்தமிழர்உமிழ்நீரை வாயில் தேக்கிஊத்தைப்பல் துலக்கிவிட்டு மீண்டும்உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல் போல்அமிழ்தான இனப்பண்பு, கலைமாண்பு,இலக்கியங்கள் மாய்ப்பதற்குத்தமிழர்களே ஒப்பிவிட்டார் — கெட்டஉமிழ்நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்.
அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திட வேண்டும்அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத் தொழிலாளிவேண்டும்
உடல் தூய்மை ஒளடதத்தால் அமையும்,உளத்தூய்மை வாய்மையாலே ஆகும்!
அந்த வாய்மைக்கு வழிவைத்துவஞ்சகக் கோட்டைக்கு வெடிவைத்து
அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார் — நம்அண்ணாவின் தலைவர் பெரியார்!
அய்யா பெரியாரின் தலைமையினை ஏற்றுக்கொண்டுஅடிமைத்தளை நொறுக்க அண்ணாவும் புறப்பட்டார்
பட்டிமன்ற நடுவர் பதவிக்கென்றே பிறந்திட்டபகுத்தறிவுப்பண்பாளர் மா.நன்னன் தலைமையிலே
நேற்றிங்கே நடைபெற்ற பட்டிமன்றத்தில்தோற்றுப்போனது தம்பி துரைமுருகன் அணி
அது ஒரு வகையில் நியாயம் தான்!அரசியல்தான் அண்ணாவின் நிலைத்த புகழுக்குப்பெரிதும் காரணமென வாதிட்டார் ஓரணியில்!பிறிதோர் அணியினரோ சமுதாயப் பணியே.எனச் சாதித்தார்!
இளவல் செல்வேந்திரன் அணி எடுத்துரைத்தஇக்கருத்தை இங்கமைந்த மன்றம் ஏற்றதாலே
இங்கிதம் தெரிந்த நடுவர் திரு.நன்னனுமேஇதுதான் தீர்ப்பென்று சமுதாயப்பக்கம்சாய்ந்தார்!
அறுவடைக்குப்பின் வீட்டுக்கு வந்த நெல்லைஅரிசியாக்கி உலையிலிட்டுச் சோறு படைத்தல்அரசியல் என்றால்;
அந்நெல் விளையும், கழனிக்கு நீர் பாய்ச்சிப்பண்படுத்தி, உரமிட்டுஅருகில் வளர் களைகளையும் அகற்றுவதேசமுதாயப்பணி என்பேன்!
அதையுணர்ந்தே அண்ணா சமுதாயப்பணியாற்றிஅரசியலைச் சமுதாய முன்னேற்றப் படைக்கலனாய்க்கையில் எடுத்தார்!

மூலமும் சான்றும்