கவிதை 4 / 77

இரணியன்

Hiranyan

X
இரணியன்
புவிப் பெண்ணாள் கழுத்தினிலே,புரளுகின்ற முத்துவடம் தென்னாடு;எடுத்து மீட்டுகின்ற எழில் வீணை!கவிக்கூட்டம் பாமாலை கட்டுகின்ற கலைச்சோலைகாசினியோர் காணிக்கைக் கப்பங் கட்டிக்குவிக்கின்ற கரம்போல இலங்கைத் தீவு!செவிக்கினிய தேமதுரத் தமிழோசைசெகமெங்கும் தமிழ் வீரம் பரப்புகின்ற பழைய நாளில்....
இருமலையைத் தோளாகப் பெற்ற வீரன்திருமலியும் தேகங்கொண்டோன்திராவிடர்க்குத் தேனாய் - நிலவாய்த்-தீந்தமிழ்க்கோர் படைக்கலனாய்த் திகழ்ந்த பெரியோன்!போர் வாட்கள் உறங்குகின்ற உறைபோல மீசையுண்டு!புவிமெச்ச வாழவேண்டும் தமிழ் நிலம் என்பதிலும்தணியாத ஆசை உண்டுபுல்லேந்திப் படையெடுத்த ஆரியரைக் கண்டு விட்டால்குரலில் சிங்கத்தின் ஓசை உண்டு!இந்தத் தரங்குன்றாத் தமிழனுக்குப்பெற்றோர்கள் இட்ட பெயர் பெருந்தகை வேந்து!இழிகுணத்தார் ஆரியர்கள் இட்ட பெயர் இரணியனாம்!திருக்குறளின் முப்பாலும் உணர்ந்த வேந்தன்;
பொருட்பாலும் அறத்துப்பாலும் ஆட்சிக்கப்பால்விலகாவண்ணம் காத்து வந்தான்!இறுதிப்பால் இன்பப்பாலை இனியவளாம்அரசியின்பால் கண்டு வந்தான்!அதன் விளைவாய்க்...குழல்மிஞ்சி, யாழ்மீறி, மழலைச் சொல் அவிழ்ப்பதற்குமாதரசின் வயிற்றினிலே மாணிக்கப் பேழை தோன்ற-மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்தார் நாட்டு மக்கள்!
கண்ணழகும் கவிதை சொல்லும் முகத்தழகும் கொண்ட காளைபெண்ணழகை மிஞ்சுகின்ற பிறை நெற்றி கொண்டதாலேபிறைநுதலான் எனச் சொல்லி அழைத்தார் பெற்றோர்;பிற்போக்கு ஆரியரோ, பிரகலாதன் என்றார்!மன்னவனை அழிப்பதற்கு மார்க்கமில்லா இச்சமயம்மறவேந்தன் பரம்பரையில் குலக்கொடியும் முளைத்துவிட்டால்மறையோதும் குலத்துக்கே நாசந்தான் எனச் சொல்லிக்கொழுந்துவிடும் ஓமகுண்டத் தீ போலக் கொதித்தெழுந்தார்சதி வகுக்க ஆரியர்கள்!நரித்திட்டம் வகுத்துப் பின் கலைந்து சென்றார்.நாட்டைக் காடாக்க வந்த புல்லோர்!
நாளொரு மேனிப் பொழுதொரு வண்ணம்வளர்கின்ற மன்னவனின் செல்வனுக்கு...வாள்வித்தை, வில் வித்தை, கலைஞானம் கற்பிக்கநானொருவன் திறனுடையேன் எனச் சொல்லிநரியொன்று குறுக்கிடவே...வெகுண்ட வேந்தன்,"தாழை மடலை எதிர்ப் புறமாய்த் தடவுதற்கும் அஞ்சுகின்றகோழை நீவாழைமரம் வெட்டுதற்கும் வாள்பிடிக்கத் தெரியாமோழை! வந்தவழி போ" என்றான்..."நொந்தமனங் கொண்டு அவன் போவது நன்றல்ல;
கல்வி கற்பிக்கக் குலவேற்றுமை காட்டாதீர் மன்னா!"என ஊடி நின்றாள்; கொற்றவனின் 'குறுநோக்' கைக் குறைகூறிபரந்த மனப்பான்மைக்குத் தவறான இலக்கணத்தைப்படித்துவிட்ட பட்டத்தரசி அவள்..பாம்புக்குப் பால், முட்டை படைக்கச் சொன்னாள்!குறுகிய நோக்கிற்கோர் அடையாளம் பூணுால் - மார்பில்!குள்ளநரிச் செயல் உதிக்கும் கூனல் உள்ளம்-ஆரியக் கொள்கை கூறும் சுவடி கையில்!ஆனாலும் பெரு நோக்கால் ஏற்கச் சொன்னாள்அடுத்துக் கெடுக்கவந்த ஆரியத்தின் தூதுவனை!வட்டமுகப் பெருந்தேவி வார்த்தைக்குப் பதில் வார்த்தைவழக்கத்தில் இல்லாத காரணத்தால்பொட்டென்று சம்மதித்துப் போய்விட்டான்,போர்முகத்தில் புலிவேகம் புயல்வேகம் காட்டுகின்ற பெருவீரன்!
'வாள்' என்றால் வானரத்தின் வால் என்றும்,'வேல்' எனிலோ கருவேல மரமென்றும்,'களம்' என்றால் நெல் குவிக்கும் இடமென்றும்கருதி வாழும் உறுதியற்ற கூட்டத்தின்உறுதுணைவன் - ஓதியமிலார்-ஓணான் குஞ்சு-ஒப்பற்ற ஆசான்போல் உட்கார்ந்து பாடஞ்சொல்ல,ஒடுக்கமுடன் எதிர் அமர்ந்து இளவரசு கல்வி கற்றான்.ஆசானின் மூத்த மகள் ஆஷாதேவிஅருகிருந்து அவனோடு நட்புக் கொண்டாள்!ஆரியத்தின் கருவுக்கும் சூழ்ச்சியுண்டு - அதன்சுழற்சியிலே சிக்காதார் அவனியிலே யார்தான் உண்டு?அரி நமோத்து சிந்தமென ஆரம்பித்தான்!நரிபரியான கதை நயமாய்ச் சொன்னான்!நங்கையும் பழமானாள்; இளவரசு கிளியானான்!திங்களணி செஞ்சடையான், திருத்தொண்டர் மனைவிதனைத்திருவிளையாடல் புரிந்த காதை....
திருலோகம் படைக்கின்ற பிரம்மதேவன் - மகள்திலோத்தமையைப் புணர்ந்த காதை.....கடலோரம் நதியோரம் காட்டோரம் வீட்டோரம்ஆயக் கன்னியரின் குடம் கவிழ்த்த கண்ணன் காதை...தாபமிகும் காமக் கதையெல்லாம் கற்பித்தான்!தந்தை ஆடுகின்ற சூதுக்குக் காயானாள் தத்தை!தளராது கற்பித்தாள் இளவலுக்கு இன்ப வித்தை!
விவேகபுரி வீரனாக வந்திருப்பான் செல்வன் என்று"வில்வித்தை, ஆனையேற்றம் முடிந்ததா?" எனக் கேட்டஇடித்துரைத்து மைந்தன் சொல்வான்"ஏனப்பா அந்த இழவெல்லாம்?எழிலெல்லாம் கூட்டியுள்ள இன்பவல்லி தந்தசுகம் கண்டேன்....இறைவனது பாதாரவிந்தம் காண வழி கண்டேன்!"இரணியனைஎன உரைத்த மகன் மீது சீறிப் பாய்ந்தான்,"தினவெடுத்த தோளாலே திசையை உலுக்கும்பனைமரத்து வைரம்போல் உறுதி கொண்டேன்!இயற்கையை வழிபடுகின்ற இனத்தின் மீதுஇறைவனென்ற பெயராலே சிலையை நுழைக்கும்இழிகுணத்தார் வாய்கிழிக்க வாள்பிடித்தேன்!காட்டடா யாரென்று உந்தன் தெய்வம்... இல்லையேல்காட்டாற்றில்.....நடுக் கடலில்.... எரி தழலில்...போட்டமுக்கிப் பொடி செய்து மண்ணில் இறைப்பேன்..."வேட்டு முழக்கம்போல் வெட்டொன்று துண்டிரண்டாய்வீசிய வார்த்தைகளால்ஆட்டுமூளை பெற்றுவந்த அரச மைந்தன் அஞ்சி நின்றான்!அரசி அங்கு குறுக்கிடாதிருந்திருந்தால்.....தமிழரின் மானம் தங்கும்;இரணியனின் மகன்தான் சாவான்...
"நாளை இரவுக்குள் கடவுளை நீ காட்டாவிட்டால்பாரமாய் உன்னைச் சுமந்து பெற்ற தாயாரும்...பாஷாணமாய் வாய்த்துவிட்ட காதலியும்...பதறி அழப் பாடையிலே ஏறிடுவாய்!மகனில்லை- மறவனில்லை-என் மரபுக்குஇனிப் புகழ்ச்சியில்லை - போ போ மறைந்து விடு"எனப் புலம்பி நின்றான்...
மலைமோதும் விதம் போலப் படை மோதும் போதும்மாற்றார்கள் வெட்டுக்கிளி போலச் சூழ்ந்து வந்தபோதும்...மனங்குலையா மாவீரன்;மறத் தமிழர் சரித்திரத்தின் பொன்னேடு:மகன் ஆரியர்க்குத் துணைபோனான் எனக் கேட்டுஒளிந்து சென்று இளவரசன் ஒடிந்துபோனான்!
ஓமகுண்டத்தின் பால் அமர்ந்திருந்த வேதியன்முன்,"உயிர் போகும் நிலை பெற்றேன்.... உமதுகடவுள்களை வரச்சொல்லும்!" என உரைத்தான் நடந்தவற்றை!"பயம் வேண்டாம் வா!" என்றுபைங்கிளியாம் ஆஷாதேவிமடிதனிலே போட்டுக் கொண்டுமாறி மாறி முத்தம் தந்தாள்!....அவன் மனம் மாற்றிப் போடுதற்குத்தனம் போர்த்தி அணைத்து நின்றாள்!விதவிதமாய்க் காம இன்பம் - கற்பாடமெல்லாம்முடித்துவிட்டுப் புதிதாகக் கை வரிசை ஆரம்பித்தாள்;கலவி இன்பப் புதிய அகராதி யாத்தாள்!குலவி மகிழ்ந்தாள்.. புழுவைப் புலன் மாற்றும் குளவியானாள்!கொட்டினாள்.... கொவ்வை இதழால்!அவ்வைத் தமிழ் பாடும் பெரும் நாட்டைஆளவந்த இளவரசன் அடங்கினான் அவள் பிடியில்!
அதுதான் சமயமென அரியதோர் சதித்திட்டம்....ஆரியம் நிலைக்கும் திட்டம்...ஓமகுண்டத் திருச்சபையில் உடனடி நிறைவேற்றம்!அதை அறியாப் பிரகலாதன், அப்பாவின் முன் சென்று"ஆண்டவனைக் காட்டுகின்றேன்!" எனச் சொன்னான்!"எங்கே?" என உறுமிற்று இரண்ய சிங்கம்!"இந்தத் தூணிலே!" எனச் சொன்னான்;அது, ஆஷாவின் தூண்டுதலால் சொன்ன சொல்லாம்;"தூணிலோ இருக்கின்றான்: தூ, தூ! மிக வெட்கம்!தூயவரின் மனத்திலே இருக்கின்றான் எனச் சொன்னால்அறிவுலகம் மறுக்காது!அறிவற்றோய் இந்தத் தூணிலா?தூணிலா....?" எனக்கேட்டு இடி முழக்கம் செய்தவாறுஇரும்புக் காலணியால் தூணைத் தூளாக்க ஓங்கிவிட்டான்!துரோகிகள் ஏற்பாட்டால் தூண் முழுதும் காந்தம் பரவியிருக்கின்ற சேதிபாதுகாப்பாளரும் அறியார்!பகுத்தறிவை இழந்துவிட்ட மகனுந்தான் நின்றான்;பாதகரின் ஏற்பாடு - பாவை தந்த சுகத்தாலே மறந்தான்!ஓங்கிய இரும்புக் காலணி ஒட்டியது காந்தத் தூணோடு|வீங்கிய புயத்தோன் வியப்பினில் ஆழ்ந்தான்!ஆங்கு மறைந்த சூதனொருவன்அரிமாக் கோலம் பூண்ட படியால்ஆரியன் என்று யார்க்கும் தெரியாமல் - தெற்குச்சூரியன் மார்பில் ஈட்டி நுழைத்தான்!குபு குபுவெனப் பெருகிற்று உதிரம்!குடலை அறுத்தனர்; நாவை அறுத்தனர்;உடலை வெட்டினர், உருவை அழித்தனர் ...நமதாண்டவன் நரசிங்க வடிவில் வந்தான் எனநம்புதற்குக் கதையும் விற்றனர்மூடிற்று மூடுபனி ஆரியத்தை எதிர்ப்பதற்குமுழக்கமிட்ட வாயென்று;
ஆடற்று ஆரியம் திருக்கூத்திது!-தெய்வந்தான் தந்தை உயிர் கொண்டதெனத்தெரிவுற்ற மைந்தனுமே மறையப் போனான்!அவனறியான் ஆரியத்தின் முழு உருவை-ஆடுதற்கு ஆவலுடன் நிற்கிட்டான் அரியணையில்!அந்த துரோக மகன் இன்றில்லை;ஆயின் என்ன? அவன் வழியில்ஆரியத்தின் காலடிக்கும் எண்ணற்றபிரகலாதர் இருக்கின்றாரே; இந்த நாட்டில்!

மூலமும் சான்றும்