கவிதை 22 / 58
“பிறகேன் வினா? என்பதே என் வினா!”
“Why, Then, the Question? — That Is My Question!”
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பிறகேன் வினா? என்பதே என் வினா!
நான், நான், நானேதான்முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்
நான் நான் நானேதான் என்றுநா வளைவதும் நிமிர்வதும்
ஆணவத்தோடு அல்ல -அடக்கத்தோடு - வெகு அடக்கத்தோடு -
இந்த “நான்” எப்படி வந்தேன் ?எங்கிருந்து வந்தேன் ?
இந்தக் கேள்விக்கெல்லாம் மேலாகஅடிப்படையான கேள்வி ஒன்றுண்டு -
அது தான் “ஏன் வந்தேன் ?” என்ற கேள்வி!வந்ததால்தானே ‘ஏன் வந்தேன்’ என்று கேட்க முடிகிறது -
கேட்பதால் தானே விடை கிடைக்கிறது.அதனால் கேள்வி முந்தியதா ?
விடை முந்தியதா ?‘ஏன்’ என்றால் ‘இதனால்’ என்று விடை!
‘எப்படி’ என்றால் ‘இப்படி’ என்று பதில்!முதலில் தோன்றியது முட்டையா ? கோழியா ?
இதற்கு விளக்கம் ஏற்கனவே வழங்கப்பட்டாகி விட்டது ;இப்போது எதிரேயிருப்பது ; வினாவா ? விடை யா ?
வினா இல்லாமல் விடை எழுமா ?இதற்குப் பெயர் என்ன ?
இது வினா ?பிரபஞ்சம் ; இது விடை !
இந்த விடை ஏற்கனவே இருப்பதால்தானே ;அல்லது இருந்தது என்பதால் தானே -
எதையோ ஒன்றைப் பார்த்து இது என்ன என்றுவினவ முடிந்தது!
எதுவுமே இல்லாத போது வினா எழவில்லை.வினா எழாததினால் விடை தோன்றவில்லை. எனவே
வினா - விடை எதுவுமே தேவையற்ற ஒரு நிலை -அந்த நிலையிலேயே நானிருந்ததாகவும்
அந்த நிலையோடு நிழலாக ஒட்டிக் கொண்டுஒன்றல்ல - இரண்டல்ல - ஓராயிரமல்ல -
லட்சமல்ல - கோடி கோடி எனஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
இந்த உலகம் தோன்றியதென்றும் -அதில் எண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு
உயிர் தோன்றியது என்றும் கண்டு பிடித்துக்கூறப்படுகிறதே - அப்படித் தோன்றியதில்
முதல் உயிர் நான்தான் என்று கற்பனை செய்துகொண்டு அந்த எண்பது கோடி ஆண்டுகளாக
நான் காற்றோடு காற்றாக மிதந்து கொண்டும்நீரோடு நீராகக் கலந்து கொண்டும்
வெப்பத்தோடு வெப்பமாகவும் ;குளிரோடு குளிராகவும் ;
இருளோடு இருளாகவும் ;வெளிச்சத்தோடு வெளிச்சமாகவும் ;
விண்ணோடும் மண்ணோடும் விளையாடிக் கொண்டுஊர்ந்தும், நெளிந்தும், மண்டியிட்டுத் தவழ்ந்தும்,
நடந்தும் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.என் முன்னேற்றத்துக்கு முற்றுப் புள்ளி
வைக்கப்பட்டதாக யாரால் சொல்ல முடியும் ?எண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கூட
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி” என்றுஉயிரின் வளர்ச்சியை உருகி உருகிப்
பாடியிருக்கிறாரே ; மாணிக்கவாசகர் -அப்போதே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருந்தால்
உமக்கும் எனக்குமிடையே இந்த உரையாடல் ஏது ?என் பயணத்தில் ; இதனை நடைபயணம் என்பதா ?
நகரும் பயணம் என்பதா ? ஊர்ந்திடும் பயணமா ?பறந்திடும் பயணமா ? பொதுவாகப் பயணம் என்பதே
பொருந்தும் என்பதால் ; பல கோடி ஆண்டுகளாக நடைபெறும்என் பயணம் என்று மட்டும் சொல்கிறேன் - 500 கோடி
ஆண்டுகள் - அதில் முதல் உயிராக நான் ; எண்பது கோடிஆண்டுக்குமுன்பு தோன்றினேன் என்பதை எப்படி யாரிடம் நிரூபிப்பது ?
அப்போதுதான் உம்மில் யார் இருந்தார் ; இனிஇப்போதுதான் யார் இருப்பார் ?
அதனால் பல கோடி ஆண்டு என்பதுஒரு சமரச உடன்பாடு அல்லவா ? -
சரியான கணக்கில்லையே தவிர ; ‘கணக்கற்றஆண்டுக் காலம்’ என்பது ஏற்கக் கூடிய கணக்குத் தானே!
பகவத் கீதையில் பார்த்தாமன்,“எல்லாம் நானே” என்று எடுத்துக்காட்டுகளைஅடுக்கிக் காட்டியது போல இந்த ‘நான்’ என்பதையாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது -
படிமுறை வளர்ச்சியில் பின்னோக்கிச்சென்று பயணத்தைப் பாதுகாப்பாக நடத்திக்கொள்ளத்தான் முதலில் “புழுவாகி” எனப்புறப்பட்டு என்கிறார்போலும் மாணிக்கவாசகர்!
இந்தப் பல கோடி ஆண்டுகளில்என் பயணத்தில் எத்தனை எத்தனை படிம வளர்ச்சிப்பட்டியல்களைப் பார்த்து விட முடிந்திருக்கிறது -
கி.மு. 12,000 ஆண்டு வரையில் இருந்ததாகக்கூறப்படும் வட அமெரிக்காவையும் கிழக்குஆசியாவையும் இணைத்திருந்த ஒரு பால அமைப்பு,பனியுகியினால் மூழ்கிப் போனதையும் ; அந்நாள் வரையில்வட அமெரிக்காவுடன் கொண்டிருந்தகிழக்கு ஆசியத் தொடர்பு காரணமாகஅங்கே மாயா நாகரிகம் பரவியதற்கானஅடையாளங்களையும் என் பயணத்தில் ஒரு கூறாகவேகாண முடிகிறதே!
குரங்கிலிருந்து மனிதன் என்கிற வரையில்படிம வளர்ச்சியின் தாத்பரியத்தை நான் புழுவாக இருந்தகாலந் தொட்டு ; ஊர்ந்து நெளிந்து, உங்களுக்கும்தெரிவிப்பதற்குப் பயணம் நடத்துகிறேன் ; ஊன்றுகோல்கள்ஒன்றிரண்டல்ல ; பலவற்றின் துணைக் கொண்டு!
உலகு உள்ளிட்ட எண்ணற்றகோள்கள் உலவிடும் பிரபஞ்சம் ;குடும்பக் கட்டுப்பாடு கடைப் பிடிக்காமல்இன்னும் எத்தனை கோள்களைக்குழந்தைகளாக உவைத்து உருவாக்கிப்போகிறதோ! பயணம் நிற்காமல்போகப் போகத்தானே தெரியும் -
இதுவரையில் இத்தனை கோடி கோடிஆண்டுகள் நடத்திய பயணத்தில் ;மண்ணில் நெளியும் புழுக்களையும் -விண்ணில் சிறகு விரிக்கும் பறவைகளையும் -வனத்தில் திரியும் விலங்குகளையும் -ஊர்வன - நீந்துவன எனும் உயிரினங்களையும்வயதால் இவற்றுக் கெல்லாம் இளையமுழுமையானது என நம்மளவில் கருதிக்கொள்கிற மனித இனத்தினையும் -அந்த இனத்தின் பாகுபாடுகளையும் -அவற்றில் ஒவ்வொன்றும்போற்றும் பண்பாடுகளையும் ;
கண்டும்களித்தும்கவலைப்பட்டும்கார்முற்றும்கண்ணீர் வடித்தும்
பல்வேறு உணர்வுகளைச் சுமந்து கொண்டுபயணம் நடத்துகிறேன் ; உம்மோடும் கூட!
முன் நோக்கிச் செல்லும் பயணத்தில் சற்றுப்பின் நோக்கித் திரும்பிப் பார்க்கிறேன் -
இதைத்தான் “அரிமா நோக்கு” என்பர் அறிஞர் -அடியேன் நோக்கு அரியா நோக்காகக் கூட இருக்கலாம் ;
இதில் தன்னல நோக்கு இல்லை,தமிழர் வரலாற்று நோக்கும் இருப்பதால்,
குறுகிய நோக்கெனக் கொள்ளாமல் ; என்கொள்கை நோக்கெனக் கொள்வீர்!நோக்கின் காரணம் ; விடையாகவிரிந்து நிற்கிறது -“பிறகேன் வினா?” என்பதே என் வினா!