கவிதை 9 / 58
உரையாடல் உணர்த்திடும் உண்மை என்ன?
What Truth Does the Conversation Reveal?
கடந்த நாள் காலப் பேழைசற்று நெடி அதிகமோ என்றசந்தேகம் எனக்கே எழுந்ததுண்டுசரித்திரத்தைச் சொல்லும்பொழுதுசரியான வழியில் தானே செல்ல வேண்டும்.அய்ந்தும் மூன்றும் எட்டு என்பதைமூன்றும் அய்ந்தும் எனக் கூட்டினாலும்கூட்டிய முறையில் வேறுபாடே தவிர ;கூட்டுத் தொகைக் கணக்கில்முரண்பாடொன்றும் வருவதில்லையே!
சான்றாக சாங்கிருத்தியாயனின்சரித்திரப் பின்னணிக் கதைகளில்கி.மு. 2000 எனும் காலக் கணக்கைத்திரையாய்க் கொண்டு தீட்டப்பட்ட‘புருதானன்’ ஓவியத்தைக் காண வாரீர் எனக்கை கூப்பி அழைக்கின்றேன்கருணை புரிந்திடுக ; கண்ட பிறகும் நும்கருத்தைப் பொழிந்திடுக!
உயர்ந்த நூல்களின் வரிசையில் உள்ள“வால்காவிலிருந்து கங்கை வரையில்”வரையப்பட்டுள்ள உரையாடல் ஒன்றைக்காட்டுகிறேன் உமக்கு ; அக்கடமை எனக்கு!ஆரியர்கள் இருவருக்கிடையேஅமைந்த உரையாடல் ; அதனைஅப்படியே தருகிறேன்
கூட்டவோ, குறைக்கவோ இன்றி, அவர்தீட்டியதைத் திருத்தவும் செய்யாமல்காட்டும் என் பணி மதித்திடுவீர்!
அந்த நூலில் உள்ள ஆரியர் இருவரின் உரையாடல்.( புத்தகம் - பக்கங்கள் 101, 118, 119, 120 )
“இந்திர பதவியை நாங்கள் எடுத்து விட்டோம்”
“எடுத்து விட்டீர்களா?”
“ஆம் ; தென் பிரதேச ஆரியர்களாகிய எங்களுக்குஇந்தப் பதவி பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது”
“பயப்படுவானேன்?”
“சேனைக்கு நாயகனையே நாம் இந்திரன் என்றுஅழைக்கிறோமல்லவா?”
“ஆம்”
“ஆம் ; சேனாதிபதியைத் தங்களுடைய சகல காரியங்-களுக்கும் நாயகனாக ஆரியர்கள் மதிப்பதில்லை.யுத்த காலத்தில் அவனுடைய உத்திரவை நாம்அப்படியே ஏற்று நடக்கிறோம் என்பது உண்மையே.ஆனால் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம்விட்டுச் சொல்வதற்கு அதிகாரமுள்ள சமூகச்சபையைத்தான் ஆரியர்களாகிய நாம் சகலத்துக்கும்மேலானதாகக் கருதுவோம்”
“ஆம், ஆம்.”
“ஆனால், இதற்கு நேர்மாறான கொள்கை அசுரர்களுடையது.அசுரர்களின் இந்திரன் அல்லது ராஜாவே சகல அதிகாரங்-களும் உடையவன். அவனுக்கு மேலாக எந்த ஒரு சமூகச்சபையையும் அவன் அங்கீகரிப்பது கிடையாது. அசுர ராஜாவின்வாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகள் எல்லாம்சட்டம். அதை ஒவ்வொரு அசுரனும் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும். மீறுபவர்களுக்கு தண்டனை மரணம்தான்”
“ஆம், நானும் பார்த்திருக்கிறேன். அவர்களுடையபுரோகிதர்கள் அசுரர்களைக் கழுதைகளாக ஆக்கிவைத்திருக்கிறார்கள்”
“ஆம், கழுதைகளுக்கும் இழிவாக, அசுரர்கள் லிங்க பூஜைசெய்கிறார்கள். ஆண் குறி, பெண் குறியில் சேர்ந்திருப்பதுபோன்று அந்த லிங்க வடிவம். ஆண், பெண் உறவின்இன்பத்திற்கு அவைகள் சாதனமென்பதையும், அந்தஉறவின் மூலம் நமது எதிர்கால சந்ததி வளர்கிறதுஎன்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால்மண்ணிலோ அல்லது கல்லிலோ அந்த வடிவத்தைச்செய்து வைத்துக் கொண்டு வணங்குவது பெரியமுட்டாள் தனமாக இருக்கிறது அல்லவா?”
“ஆம் ; அதிலென்ன சந்தேகம்?”
“அந்த அசுர அரசன், இந்த லிங்க தெய்வத்தின் பெரியபக்தன். ஆனால் இதுவும் ஒரு வேஷம் என்றே நான்நினைக்கிறேன். அந்த அசுர அரசனும், அவனுடையபுரோகிதர்களும் முட்டாள்களல்ல. ஆரியர்களாகியநம்மைப் பார்க்கிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்.அவர்களுடைய நகரங்களைப் போல நகரங்கள்அமைப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள நீண்ட நாட்கள்பிடிக்கும். அவர்களுடைய கடை வீதி, தாமரை மலர்நிறைந்திருக்கும் தடாகங்கள், அதன் உயர்ந்த படிக்கட்டுகள், அகன்ற ராஜவீதிகள் போன்ற அமைப்புகளைநம் ஆரிய பூமியில் காணவே முடியாது”
ஏறத்தாழ இன்றைக்கு நாலாயிரம் ஆண்டின் முன்னே ;கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் காலப்பேழைதான் நீவீர் காண்பது!அந்நாளில் அசுரர்கள் வழிபட்ட லிங்க வடிவத்தின் தத்துவத்தைஅநாகரிகத்தின் உச்சமென்றும் அடி முட்டாள்தன மென்றும்ஆரியர்கள் கருதியதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறதுஅன்பர் இராகுலனாரின் வால்காவிலிருந்து கங்கை வரையில்!
நாலாயிரம் ஆண்டுக்கு முன்னே நாம் கண்ட கடவுள் வடிவம் ;அசுரர் எனும் திராவிடரின் கலாச்சார உருவாயிருந்து இன்றைக்குஆலயங்கள்தோறும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதென்றால் ;அசுரர் கண்டுபிடித்த கடவுள் வடிவத் தத்துவத்தைஆரியக் கலாச்சாரம் ஆமோதித்து விட்டதாக அர்த்தமா ?ஆவுடையார் லிங்க இணைப்பு இப்போது மட்டும் பொருத்தமா ?தினந்தோறும் வண்தண்ணும் திரண்டிருக்கும் பெரு மீசைகளும்திடுக்கிட வைத்திடும் கொடும் உருவம் கொண்ட தேவதைகள்,திராவிட அசுரர்களுக்கென கொண்டாடும் தெய்வங்களாக ;தீவட்டிராயன் என்றும், தீரன் மதுரை வீரன், காத்தவராயன்,முனீஸ்வரன், சனீஸ்வரன், காடன், மாடன், கருமையிரு இடும்பன்எனத்துஷ்ட தேவதைகளையே குல தெய்வங்களாகக் கொண்டாடும்குலம், அசுர குலம் என்பதற்கு அடையாளமாகத்தான்கோயில் குளங்கள் அவர்கள் பெயரால் அமைந்துள்ளநிலமையதைஅங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காண்கின்றோம் -பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் பார்த்துக் களிக்கின்றோம்.பலாயிர முறை தரிசித்தாலும் ஒரு முறையேனும் நாம்படித்த கதை நினைத்து அதைப் பார்த்து முகத்தைச்சளித்தோமா ?
கடவுள்களைக் கேலி செய்யும் நோக்கமல்ல ; காசினியில்கலாச்சாரம்கூட கடவுள் பிரச்சினையிலும் தனித் தனிதான்என்பதையே மெய்ப்பிக்கும் எடுத்துக்காட்டன்றோ ; இது ?இறைவனை வழிபடதில் கூட இரு வேறு கலாச்சாரம் ;இலிங்க உருவம் அசுரர்களுடைய தென்றும் -இதனை ஆரியர்கள் ஏற்கவில்லை யென்றும் ;நாலாயிரம் ஆண்டின் முன்னே நாகரிகமல்ல வென்றுரைத்தவர்கள்நாடு முழுதும் இன்றைக்கு அவ்வடிவுக்கு நாமாவளி பாடுவதேன் ?
கலாச்சாரங்கள் வேறு வேறு - கடவுளை ரசிப்பதிலும் மாறுபாடுஆரியர்க்கும் அசுரராம் திராவிடர்க்கும் அதில் இல்லை உடன்பாடு
என்றிருந்த நிலமை இன்று மாறி விட்டதா ? இல்லையேல்‘சாங்கிருத்தியாயன்’ தான் கலாச்சார வேறுபாட்டைசரிவரக் கவனிக்கத் தவறி விட்டாரா ?ஆரியர்கள் கேலி செய்த அந்த லிங்கம் இல்லாஆலயங்கள் இன்று எங்கேனும் உண்டா ?ஆழித் தேர்களிலே - ஆலயக் கோபுரங்களிலேஅந்தக் கடவுள் சின்னங்களை அமைத்திடஆத்திகப் பெரியோர்கள் யார் மறந்தார் ?துஷ்ட தெய்வ வழிபாட்டுக் கோயில்களில்துணிந்து லிங்க வடிவில் சிலை எவர் வைக்க முன்வந்தார் ?
கடவுளர் சிலை அமைப்பதிலேயேகலாச்சார வேறுபாடு -ஆரியர்க்கும் அசுரர் எனும் திராவிடர்க்கும்அதுவும் வட பகுதி தேசத்திலே ஒரு விதம்தென் பகுதி தேசத்திலே வேறு விதம் -ஆங்கு ஆண் பெண் அடையாளம் காட்டும் லிங்கம் ;ஆரியர் அகாரதியில்.....அறிவீனம், முட்டாள்தனம்!
இங்கு ஆலயங்கள் ஒவ்வொன்றிலும்அதுவேதான் அம்மையப்பன் வடிவமாகும்.வணங்குதற்குரிய உருவமாகும்வழிபட வேண்டிய தெய்வமாகும்.வாரிச் சுருட்டி எழுந்து என்பால்வம்புக்கு வருதல் வேண்டாம்.தாவிக் குதித்துத் தாண்டி ; எனைப்பாவி என ஏசவும் கூடாது -
ஆரியர் இருவரிடை நிகழ்ந்தஆண்டவன் வடிவு பற்றிய உரையாடல் ;அசுரர் எனும் திராவிடர் கலாச்சாரத்தை -அதனைக் கடவுள் வடிவிலே கூடஆரியர் ஏற்கவில்லை ; என்பதைஅப்பட்டமாகவே அறிவித்து -
அவர்கள் வடக்கில் ஒரு விதம்தெற்கில் ஒரு விதமாகஅன்றைக்கே பிரிந்து நின்றதையும்ஆராய்ந்து பார்க்கும்போது ;சந்தர்ப்பத்துக் கேற்றவாறுதங்களை மாற்றிக் கொள்வதில்ஆரியர்கள் அசகாய சூரர்கள் என்பதைஅறிஞர் சாங்கிருத்தியாயன்அவருக்கேயுரிய முறையில்அறிவுறுத்தி விட்டார் என்பதும்“வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டுமல்ல ;வரலாறு என ஒன்று இந்த வையத்தில் இருக்கும்வரைவாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை என்பதும் ;உறுதி! உறுதி! உறுதி!