கவிதை 10 / 58

பழந்தமிழர் பன்னாட்டுத் தொடர்பு!

The Ancient Tamils' International Connections!

X
ஆதாரம் எதுமில்லாமலோ ;அறிஞர்கள் கருத்தின்அருந்துணை தவிர்த்தோ ;அடியேன் எதனையும்பிடிவாதமாக வலியுறுத்தித்திமிர்வாதம் நடத்திப் பழக்கமில்லை.
அதிலும் ;தமிழ் மொழி, தமிழர்கள்தமிழக வரலாறு எனும்போதுதான்தோன்றித்தனமாகத்தத்துபித்தென்றுதக்கோர் முன்னிலையில்தருக்குடன் நடந்திடும்வழக்கமுமில்லை.
அதனால் தான் ;தக்க சான்றுகள் திரட்டிஅந்நாள் தமிழர்கள்அருங்கலம் செலுத்திதிறன்பல விளைத்துதிரை கடலோடித்திரவியம் திரட்டியதித்திக்கும் சரிதம் ;தீட்டிட முனைந்துளேன்.
உலக நாகரிக வளர்ச்சிக்கும்உறவு நாடுகள் தொடர்புக்கும்உறுதி நல்கும் பெரு முயற்சி
பெருங்கடல் கலம் விடுத்து ; அதுதரும் புகழ் முதலில் பெற்றவன்தமிழன் என்பது நமதுதகுதிக்குற்ற தனிச் சிறப்பாகும்.
நாணயங்கள் பொற்காசுகள்நன்முத்துப் பவள அணி மணிகள்நான்கு திசையிலிருந்தும்நன்கு குவிவதற்கு மட்டுமல்ல ;நாகரிகமென நாம் கடைப்பிடித்தநற்பண்புப் பண்டமாற்றுக்கும்நல்லவிதமாய்ப் பயன்படுமேநாவாய்கள் மூலம் நடத்துகின்றநானிலம் புகழ்வாணிபப் பயணம்!
வட அமெரிக்காவில் வாஞ்சையுடன்வரவேற்கும் மெக்சிகோவின்அன்புநிறை ‘அசடெக்’ மக்களும்,அவர் போலவே ‘மாயா’வின் பிரஜைகளும்மற்றும் ஆங்குவாழ் பெரு நாட்டவரும்மனத்தால் நம் மீது பிரியங்கொண்டு ;வெள்ளையர் காலத்துக்கும்வெகு காலத்திற்கு முன்பே -நாகரிகம் பெற்றுநல்வாழ்வு நடத்துவோரன்றோ! அந்தமாயா மெக்சிகோ நாகரிகத்தின்தாயாய் விளங்குவது திராவிடர் நாகரிகமன்றோ ?
திறம் பெற்ற வரலாற்று ஆய்வாளர்திடமாக உரைக்கின்றார் - அவற்றைத்தெளிவாகத் தொகுத்துள்ளார் ; தமிழ்த்திருவாளர் மதிவாணர் - என்பதைத்தெரிவித்து மகிழ்கின்றேன்.
மற்றொரு செய்தியும் உண்டு ; நாம்மலைத்து, மகிழ்ந்திடுமளவுக்கு!என்ன அது ?
எகிப்தில் கிடைத்ததாம் பழங்காலப் ‘பாபிரஸ்’ சுருள் ஓலையொன்று ;எதற்காக இதுவென்று வீசி எறிந்து விடாமல்,எழுத்தறிந்து ருஷ்ய அறிஞர்களால் படிக்கப்பட்டுஎல்லோர்க்கும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மாக்கலத்தில் மனத்துணிவுடைய இளைஞன் ஒருவன்,தாங்கொணாப் புயற் காற்றில் கடலில் தனியாக சிக்கிக்கொண்டான்.
கடல் நடுவே கலம் கவிழ்ந்துஅலைக் காத்தால் அள்ளி எறியப்பட்டவே ;அப்போதும் அவன் அச்சமின்றி -அருகில் மிதந்த அனாதைக் கட்டையொன்றைஅழுத்தமாகப் பிடித்தணைத்துக் கொண்டு,அலைகடலின் கரையை அடைந்தான்.
அங்குற்ற காய்கனிகள் பறித்துண்டுஅரும்பசியாற்றிக் கொண்டுஅந்த அயல் நாட்டை ஆளுகின்றஅரசனைக் காணச் சென்றான்.
பண்டுடனே அவ்வேந்தன் அன்பு காட்டி,பரிவுடனே இளைஞனையும் பாராட்டி ; விலை உயர்ந்தபல பொருள்கள் பரிசாய் வழங்கி,விடை கொடுத்து வேறு கலத்தில் அனுப்பிவைத்தான்.
அந்தப் ‘பாபிரஸ்’ ஓலைச் சுருளில் குறிப்பிட்-பரந்த இந்து மாக்கடலின் தென் பகுதியில்இருக்கின்ற நாடுதான் “நாக நாடு” என்றும் ; அதுதமிழ்நாட்டுக்குத் தொடர்புடைய நாடென்றுகடைச் சங்கத் தமிழ் இலக்கியங்கள்
கண்டறிந்து நவில்கின்றன என்றும் ; அந்தநாக நாட்டு இளவரசி ‘பீவளை’ என்பாளைநமது சோழ நாட்டு இளவரசன் மணந்தான் என்றும்பழைய கதையல்ல ;வரலாறே உண்டு என அறியும்போது,களிப்புக்கோர் எல்லை தான் உண்டோ ?
பாபிரசுச் சுருள் ஓலை என்பது ; எகிப்தியரின்பழம் பெரும் நாகரிகச் சான்று என்பதால் ;கி.மு. 4000க்கு முன்பிருந்தே சுமேரியாவுடனும் ;கி.மு. 3000க்கு முன்பிருந்தே எகிப்துடனும் ;கி.மு. 1200க்கு முன்பிருந்தே சீனத்துடனும் ;வாணிபத் தொடர்பு, தமிழர்க்கு வாய்த்திருந்ததை ;வரலாறு விளக்கிக் காட்டுகின்றதாம்!
“நாவாய்கள்” என்பதே ‘நாய்கள்’ எனத் திரிந்த சொல் என்றும்நவில்வர் நமது நாவலந்தீவின் வரலாறுணர்ந்த நற்றமிழறிஞர்!அரேபிய, எகிப்து, கிரேக்க, உரோம நாடுகள் மற்றும்அதற்கப்பாலும் உள்ள ஆழ்கடலில் கப்பல் ஓட்டியவர் நம்மவர்என்பதும்
அதுவும் அய்யாயிரம் ஆண்டுக்கு முன்பே என்பதும்அன்றைக்கே நாடுகள் பல அறிந்துள்ள நமது நாகரிகப்பெருமையன்றோ ?
பாபிரசு = பாபிரசு என்ற நீர்த்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும்காகிதத்திலான சுவடி.

மூலமும் சான்றும்