கவிதை 11 / 58

ஆங்காங்கு அடையாள முத்திரைகள்!

Marks of Identity Here and There!

X
நடுக்கடலில் தத்தளித்துத் துடித்தும்நடுக்கம் ஏதும் கொள்ளாமல்கடும்புயல் சூறாவளியில் கவலை சிறிதுமின்றிகட்டை யொன்றின் துணைக் கொண்டுகாளையொருவன் கரை சேர்ந்த பின்னர்நாக நாட்டு மன்னன் தந்த பரிசுப் பொருளும்நல் உள்ளப் பாராட்டும் பெற்றுச் சென்றான் எனப்பழங்கால வரலாற்றுச் செய்தியொன்றை ;காலப் பேழையிலே சுட்டிக்காட்டியிருந்தேன்.
நாக நாடு என நினைத்ததுமேபீவளை எனும் பெண்மணியின் பெயர்சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளிப் பெயரோடுவரலாற்றுப் பெரு வீதியிலேவலம் வந்த காரணத்தால்சாத்தனார் தீட்டிய மணிமேகலைக் காப்பியத்தில்சான்று ஏதேனும் உண்டா என்றுசல்லடையிட்டுத் தேடிப் பார்த்தேன்சங்கமின்றிச் சுருதியில் கிடைத்தது சாட்சியம்.
“நாக நாடு நடுக்கின்ற றாள்பவன்வாகை வேலோன் வளவணன் தேவிவாச மயிலை வயிற்றுள் தோன்றியபீவளை யென்போள் பிறந்த அந்நாள்இரவிகுலத் தொருவ நிணைமுலை தோயக்கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனள்”
‘ஆபுத்திரன் நாட டைந்த காதை’ அமைந்தஅக்காப்பியத்துச் சான்றாக ; நாக நிலத்துஅரசன் வளைவணன் தேவிக்குப் பிறக்கும்அழகுமயில் பீவளை என்பாள் ;சோழர் குல இளவலுடன் காதல் சொர்க்கம் புகுந்துசுமந்து வருவாள் கருவினையெனச் சோதிட முறைத்தனார்.
கணவன் மனைவி ஆன பின்னர்
கருவுறுவதற்குச் சோதிடமா கணித்தல் வேண்டும் ?இந்நாளில் நம் நாட்டுக்குக்குழந்தைக் கட்டுப்பாடுதானே குடும்பத்தில் வேண்டும்!இல்லையேல்,கடலைத் தூர்த்தன்றோ ; நிலமாக மாற்ற வேண்டும்!
பாணர் மகள் சீத்தி என்பாளை மணந்தபாசமிகு கணவன் கீர்த்தி பெற்ற சோழன்நெடுமுடிக் கிள்ளி என்பான் ;வெகு நாள் ஆசை பூம்புகார் விழாக் காண வேண்டுமென!
திரு நாள் அது காணத் தந்தை நாகனுடன் ;ஒரு நாள் வருகை தந்துவிட்டாள் பீவளையும்!மறு நாளே விழாவில் ஒருவரையொருவர் கண்டுவிட்டார் -இருவரும் அவரவர் இதயம் கொள்ளை கொண்டுவிட்டார்.
பூம்புகார் விழாக் காண வந்த பீவளை ;வீண்புகார் எழுவது பற்றிக் கவலையின்றி,வீழ்ந்து விட்டாள் சோழன்மடிதனிலே மயக்கம் கொண்டு!ஆழ்ந்து விட்டாள் அவன் காதல்பிடியினிலே சிக்கிக் கொண்டு!
கடுகளவு ஆதாரம்தான் கிடைத்தது எனக்கு ; ஆனால்கதைத் தொடர் எழுத இந்த ஆதாரம் போதுமென்று,கவிஞர் கோவி. மணிசேகரன், என் நண்பர்கவர்ச்சிமிகு ஓவியமொன்றை உரைநடையில் தீட்டியுள்ளார்.
நானதில் பழைய வரலாறும் படித்துநமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டுநாலாயிரம் ஆண்டின் முன்னே பூம்புகார்த் தமிழகமும்,நாக நாட்டுடனே பூண்டிருந்த உறவுதனை -
வியப்பு மேலிட எண்ணிப் பார்க்கின்றேன்.விழா காண வந்த விழியழகிப் பீவளையின்விழியோடு விழி கலந்து விழி மூடும் காதல் வெறியால்வேந்தர் குல விளக்கிரண்டும் இணைந்ததாலே
நட்ட விதைக்குப் பலனாக நாகன் மகளுக்கு உடனடியாக,சோழர் குலக் கொடியாக இளந்திரையன் கருவில் வந்தான்.கருவுற்ற பிறகோர் கட்டழகு கூடிய பீவளை ; நாகன்கட்டளையேற்று நாடு திரும்புகிறாள் ; கவலையுடன் -கண்ணீருடன்!
மகன் பிறந்து மழலையாய்த் தாயின்மடி தவழ்ந்த போது ; அவனைத்தனது கணவனிடம் சேர்க்குமாறு கப்பலொன்றில் ; பீவளைகாவிரிப்பூம்பட்டினம் அனுப்பி வைத்தாள் ; பெருங்காவலுடன்!நல்லவேளையாக ; கடற்கோளில் சிக்குண்ட அக்குழந்தை ;
கப்பலோடு அனைவரும் கவிழ்ந்ததும்கூடதப்பி விட்டதாம் தான் மட்டும் உயிர் பிழைத்து, ஆம் ;தொண்டைக் கொடி சுற்றியபடி கரையொன்றில்கண்டெடுத்த காரணத்தால் தொண்டைமான் ஆனான் என்பர்!
தொண்டை மண்டலத் தலைநகராம் காஞ்சிக்கும் அதிபனாகி ;தொல் பழங்கால வரலாற்றுத் தொடர் புகழையேந்தி -தொண்டைமான் இளந்திரையனும் அவனே ஆனான் ; இந்தப்பண்டை நாள் வரலாறு விளக்குவதுதான் என்ன ?
கடற்கோளுக்கிரையான குமரிக் கண்ட முதல்காவிரியாற்றுத் தீரமாம் சோழப் பெருமண்டலமும் ;இயற்கையின் சீற்றத்துக்குப் பலியாகி மறைந்து போனஇனவழி நாகர்க்கு உரிமையான பெரும் பரப்பும்,நாகரிகப் பண்பாட்டின் உறைவிடமாய்
இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டாகத் தான்இன்றைக்கும் “நாகர்கோயில்” வட்டாரம் காண்கிறோம்.“நாகப்பட்டினம்”, “திருநாகேசுவரம்” எனவும்,“நாகவூர்” எனவும், அடையாள முத்திரைகள்ஆங்காங்கு காணுகின்றோம்.
வருடக் கணக்கு கி.மு. நாலாயிரத்துக்கு முன்பே யென்றுவரையறுத்துக் கூறப்படும்பொழுது - இன்னமும் கி.பி.இரண்டாயிரத்தையும் கூட்டிப் பார்த்தால்
ஆறாயிரம் ஆண்டின் முன்னிருந்த ஆதிகாலத்து நாகரிகம் -அயல் நாடுகளுடன் தொடர்பு - கடல் வாணிப உறவு -காதங்கள் பல கடந்து கடல் கடந்தும் வாழ்ந்த காதல் -அத்தனையும் தொடங்கிய தொல் பழங்காலத்திற்கு‘அகர’ மெனும் முதல் எழுத்தாய் இருப்பதுஅருமை மிகு தென்னகம்தான் என்பதையும் ;
அதனாலே வரலாறு எழுதத் தொடங்கிடுவோர்அங்கு இங்கு என அலைந்து திரியாமல் - பனநுங்கு போல் பல ஆதாரங்கள் அகழ்ந்து தருவதற்கு -சங்க இலக்கியங்களும் உண்டு ; எனவே அதற்குப்பங்களிக்கும் பெரும் பொறுப்பும் நமக்கு உண்டு!

மூலமும் சான்றும்