கவிதை 12 / 58

வரலாற்றுப் பூங்காவில் வள்ளித் திருமணம்!

Valli's Marriage in the Garden of History!

X
ஆவுடையார் வடிவம்தான் அம்மையென்றும்இலிங்க வடிவமே அப்பன் என்றும் ;
அந்தக் கடவுள் வடிவம் அசுரர் கலாச்சாரமெனஆரியர் இருவர் கதைத்திடும் நிகழ்ச்சியை
அறிஞர் சாங்கிருத்தியாயன் எடுத்துக் காட்டுவதைஅன்னார் நூலிலேயே நான் குறித்துக்காட்டி,
அன்றைக்கு நான் எழுதியிருந்ததைஅறிவீர் நன்கு!
அப்படிப் பிரிவினை செய்து ; ஆரியக் கலாச்சாரம் வேறு ;அசுரராம் திராவிடர்கள் கலாச்சாரம் வேறு எனப்
பிரித்துக் காட்டிப் பேதம் விளைக்க முயன்று ; அந்நாளில்சிரித்துக் காட்டியே நம் பண்பாடு சீரழிக்கத் திட்டமிட்டோர் ;
செல்லாக் காசாகிவிடும் அந்தச் சித்தாந்தம் எனக் கண்டவுடன்,சிவனும் அரியும் ஒன்றுதான் எனச் சிந்து பாடி ;
அசுரர்க்கும் ஆரியர்க்கும் அக்கடவுள் வடிவே பொதுவென -அணுகுமுறை மாற்றிக் கொண்ட அப்பேதவாதிகளன்றோஅவ்வினத்தோர் ?
அன்று முதல் அந்த லிங்க வடிவங்களுக்கு,ஆலய பூஜைகளும் அரிய திருவிழாக்களும் கூட
ஆரிய முறைப்படிதான் அக்காரியவாதிகள் ஆற்றுகின்றார்!அவ்வடிவ லிங்கம் அநாகரிகமெனக் கேலி புரிந்தோர் -
அடி முட்டாள்தனமென ஆத்திரமுற்றோர்அதையே பின்னர் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.
‘அது தான் ஆரியம்’என்பார் அறிஞர் அண்ணா.
அய்யன் வள்ளுவரை அறிவுலக மேதையென்றும்,பொய்யாமொழி யுரைத்தப் பெருளான் வள்ளல் என்றும் –
அனைத்துலகும் புகழத் தொடங்கிய பின்னர்,அவரும் ஆரிய “பகவன்” புதல்வர்தான் என்று
அந்த முத்திரையைக் குத்திய கூட்டமாயிற்றே!அறிவாளி என்றெவரை அடையாளம் காட்டினாலும்,
அதிதீர வீரர் என்று அவனி பாராட்ட முற்பட்டாலும் –அவர்க்கெல்லாம் ‘ஆரிய வருணம்’ பூசி, அவர் ஆராய்ஆக்கிடுவர் –
இப்படி எத்தனையோ ஆடாத ஆட்டமெல்லாம்தப்படி போட்டு ஆடியுள்ளார் தாசர்களாக நமை ஆக்கி!
இன்னுமோர் உதாரணம் இதோ உரைக்கின்றேன் ;இறைவனாகக் காட்டப்படும்
இடைவிடாது போற்றிப் பாடுகின்றார் –இங்கிருந்து வேல் தூக்கி ஓடுகின்றார் –
இடையிலோர் குரல் அடிக்கடி முழங்கியதே ;இந்த முருகன்தான் தமிழ்க் கடவுள் என்று
தவத்திரு அடிகளார் முதல், தமிழ்த் திரு வாரியார் வரையில்தடம் பிறழா கொள்கை யெழுப்பத் தவறவில்லை!
அந்த முருகனையும் மெல்ல இடம் பெயர்த்து,‘அம்மை பார்வதிக்கு அருகில் உட்கார்’ என்று ;
அழகிய தமிழ்ப் பெயர் முருகன் என்பதைஆரிய சுப்பிரமணியன் ஸ்கந்தன் எனப்
பழகிட வடமொழியில் பக்தி ரசப்பயிற்சியளித்து விட்டார்.
ஆய மகன் கண்ணனை ‘அரே கிருஷ்ணா’ என்றார்.அந்தத் திருமாலையே ‘மகாவிஷ்ணு’ எனத்தரித்துஅழைத்திட்டார் வடமொழியில்!மொழிவழியில் நம் கலாச்சாரத்துக்குமுழுக்குப் போட்டால்தானே ; நம்மைமொட்டையடித்துச் சிறுகுடுமையினத்தார் வாழ முடியும்?
வேல் தாங்கி வில் தாங்கிவேட்டையாடி விலங்கு கொன்றுகாடகத்தே குடில் அமைத்துகாலம் ஓட்டுகின்ற வேட்டுவர்கள்மேற்படி வள்ளிமலைச் சிற்றாரில்ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்நம்பிராஜன் என்பவரைத்தலைவராகத் தேர்ந்தெடுத்து ; இனிதம் மன்னர் அவரே என அறிவித்தார்.
தொண்டை நன்னாட்டில் நம்பிராஜன்தொண்டைப் பாராட்டாதார் இல்லை.....அந்த‘நம்பிராஜன்’ பெற்றெடுத்த நங்கை வள்ளி ;நற்றாய் ‘கொடிச்சி’ என்பாளின்பாலருந்தி வளர்ந்த பருவப் பாவை,வேர் குலத் தருவின் விழுது போன்றாள் ;தேடக் கிடைக்காத தேனில் பிசைந்த தினைமா –அவளைத் தான் நம்பியும் கொடிச்சியும்அங்குள்ள தினைப்புனத்துக் காவலுக்கு நியமித்துஉழைக்கும் குல மக்களின் வியர்வையிலே விளைந்த பயிர்ஒருக்கணமும் உறங்காமல் காத்திட வேண்டுமெனக்கண்டிப்புக் கட்டளையிட்டார்!
வள்ளியோ தன்னை வட்டமிடும் தோழியருடன்வகுத்துக்கொண்டாள் தினைப்புனம் காத்திடும் திட்டம்!
பரண் ஒன்றை உயரமாக அமைத்துக் கொண்டுஉரம் வாய்ந்த நெஞ்சுடன் தடை, குளிர், தழல் ஆகியகருவிகளை ஏந்தி, காடை, கிளி,கவுதாரியாம் பறவைகளை ஓட்டியும் ;மான், மரை, இரலை, யானை, பன்றி முதலிய விலங்குகளைகவண் கல் வீசித் துரத்தியும்,
“பூவைகாள்! புறவங்காள்!மயில்காள்! மணிக்கிளிகாள்!குயில்காள்! குருகுகள்!”‘ஆலோலம்! ஆலோலம்!’ எனப் பாடிஅவற்றையெல்லாம்விரட்டியடித்தாள் வள்ளியென்று ; பனியில்புரட்டியெடுத்த குளிர்த் தமிழால் கூறுகின்ற வாரியாரின்கூற்றினைக் கூர்ந்து நோக்கின் –காற்றிலே போய் விடாத காலப்பேழையின் கருத்துக்களைக்கூட்டிப் பார்த்தால் – அன்று நம்காட்டிடை கிடைத்த பறவையினம், விலங்கினம்பட்டியல் மட்டுமல்ல ;பசியாறப் பயன்படும் உணவின் பட்டியலும்தரப்பட்டுத் தமிழ் நிலத்தின்வனவளமன்றோ, அவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளபாங்கினைக் காணுகின்றோம் ;பரவசம் அடைகின்றோம்!
பரண் மீது நின்று பாதுகாப்பு செய்தவளின் – மனஅரண் மீது தாக்குதல் நடத்த வருவான்ஒருவன் எனத் தெரியாது – வந்து விட்டான் முருகன்,தந்துவிட்டான் தனது நெஞ்சத்தைத்தன்னை அறியாது வள்ளி!அப்படி என்ன நடந்தது அங்கே?
வகுத்தளித்த வேலையை வள்ளி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோதுவனவேடன் ஒருவன் கன வேகமாய் ஓடிவந்து ;
“யாரடி கள்ளி? என் மீது கல் எறிந்து காயப்படுத்தியது?யாரடி பச்சை ரத்தம் பாய்ந்தோடும் காட்டியினை” என்று ;தலையில் பட்டிருந்த கல் விளைத்த காயத்தைக் காட்டி நின்றான்.வலையில் பறவை போன்றுவீழ்வது போல்வள்ளி அவன் வடிவழகில் வீழ்ந்து விட்டாள்.பின்னர் “யாயும் ஞாயும் யாராகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும் –செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே” எனும்சங்கப் பாடல் ஆதிக்கம் செலுத்தியது அங்கே –தங்கத் தலைவன் நம்பிராஜன் ; பொங்கி எழுந்துபொன் மகள் வள்ளியைக் கடிந்து கொண்டு ; நீஎன் மகளாயின் முருகனை மறந்து விடு என்றான்.
சுற்றுமுற்றும் சுழன்று பார்த்து விட்டுசொன்னாள் வள்ளி தந்தையிடம் –அப்பா ; அந்த முருகன் என்னைக் கேட்டார் ;அஞ்சுவது எதைப் பார்த்து என்று!
ஆனையைக் கண்டால்தான் பயம் என்றேன் ;அதற்கவர் ; “அது பரவாயில்லை – ஆனையைக்கண்டு நீ அஞ்சிடுவாய் – இயற்கை அது! சில பேர்பூனை குறுக்கிட்டாலே பயந்து நடுங்குகின்றார்”எனக் கேலி செய்தார் என்றாள் –
“அதற்கென்ன இப்போது?ஆனையிடுகிறேன் என்கிறேன் நான் ; நீயோஆனையையும் பூனையையும் பற்றிஅளக்கின்றாய் இங்கே!”
நம்பிராஜனுக்கு நங்கை வள்ளிவிளக்கம் சொன்னாள் –“ஆனை பூனை எனும்அடுக்குச் சொற்களல்லஅவர் கூறி, எனைக் கவர்ந்த சொற்கள்!
ஆனைக்குக் கூட அஞ்சாமல் ; குறுக்கே போகும்பூனைக்கு அஞ்சுகிற மனிதர்களின்அறியாமையைக் கேலி செய்யும்அறிவுச் சுடரொளியாய் அவர் திகழுகின்றார்.அந்தப் பகுத்தறிவுப் பேரொளிக்கு என்னையேபரிசாகத் தருவதில் என்னப்பா தவறு?” என்றாள் வள்ளி!
“தவறேதுமில்லை” என்றுரைத்த தாயும், தந்தையும்“ஒன்று கேள் ; வள்ளி!உன்னையே முருகனுக்குப் பரிசாகத் தந்து விட்டதாகஉரைத்திட்டாய் ; அது பெருந் தவறு!பண்டமாற்று செய்து கொள்க, இதயங்களை!அப்போதுதான் ; ஆண் பெண் சமத்துவமெனும்,சம உரிமைச் சங்கொலி முழங்கும்!”தம்பதியர் சம்மதமென்றனர் ;தாயும் தந்தையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்!
தடை = மூங்கில்குளிர் = கவண் கல்தழல் = கோல்மரை = மானில் ஒரு வகைகுருகு = நாரை
“யாயும் ஞாயும் யாராகியரோ ?” – குறுந்தொகை (சங்க இலக்கியம்)

மூலமும் சான்றும்