கவிதை 13 / 58

காரவேலன் கண்டு நடுங்கிய கட்டுக்குலையாக் கூட்டணி!

The Unbroken Alliance That Made Kharavela Tremble!

X
கற்காலம் பொற்காலமெனக் காலங்கள் வகுத்து – அக்காலங்களில் நாகரிக வளர்ச்சி, பண்பாடு, பழக்கவழக்கம்நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் எவ்வாறு எனவரலாறு வரையப்பட்டதுண்டு – அந்தவரிசையில் வந்ததே மகத்தான வழிகாட்டும் நூலான‘வால்காவிலிருந்து கங்கை வரையில்’!
அந்நூலில் அதன் ஆசிரியர், அக்கால நிலையில் – அந்தந்தப்பகுதிக்கேற்பக் கதாபாத்திரங்களென அறிமுகப்படுத்தி,கதை சொல்லும் பாணியினைக் கடைப்பிடித்துள்ளார் – நான்எழுதும்காலப்பேழையின் நோக்கமும் அதுதான் எனினும் ;
இலக்கியத்தில், சரித்திரத்தில், பழம்புராணத்தில்இடம்பெற்று அறிமுகமானவர்களை அறவே ஒதுக்கிடாமல்,படிப்படியாக பல துறைகளிலும் முன்னேறிடும்இந்திய வரலாற்றில் திராவிட இனத் தமிழர்க்குரியபங்கினைப் விட்டுப் போகாமலிருப்பதற்காகஅடையாளம் காட்டும் வகையில்அவர் அனைவரையும் இணைத்திட இயலாவிடினும்சிலரையாவது சேர்த்து வழங்குகின்றேன் ;சீரான வரலாறு எனும் சிறப்புசிதைந்து விடாமல் இருப்பதற்காக!
இதோ ;தமிழர்க்கு வாய்த்திருந்த தொல் பழங்காலம் ;தங்கக் காலமாய்த் திகழ்ந்தது என்பதற்குஇங்கு சில கவிதை வரிகளைஎடுத்தியம்புகின்றேன் –
இவற்றுக்கு ஆதாரமாகப் பன்மொழிப் புலவர்அப்பாதுரையார் எழுதியுள்ள குறிப்புகளையும்கூறிட விரும்புகின்றேன் –
“தமிழ் மூவேந்தரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுஇமயத்தில் வில், கயல், புலிக்கொடிகள் பொறித்தனர் என்றுசங்க நூல்கள் பலகாலும் பகர்கின்றன. இவை வெறும்புனைந்துரைகளென்று பல புலவரும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கொள்கின்றனர். வரலாற்று வான விளிம்பில் உள்ளதெற்கு வடக்குத் தொடர்புகளையும் தமிழகத்திலிருந்து தமிழர்கடற்போர், தொலைவடவர் போர் பற்றியும் ஆரியருடன் போர் செய்துபெற்ற வெற்றிகள் பற்றியும் வரும் மிகப் பலவான குறிப்புக்கள்புனைந்துரைகளாகக் கொள்வதற்கு இடந்தராதவை.”
“நெடுஞ்சேரலாதனே இமயம் முதல் குமரி வரை ஆண்டதாகப்பத்துப்பாட்டுக் கூறுகிறது.
“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்தென்னங் குமரியொடு ஆயிடைமன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே!”
இது நேடியாட்சியாகவோ, எல்லா அரசராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலிமையாகவோ, அல்லது மாநிலமெங்கும்ஆற்றிய வெற்றி உலாவாகவோ நிகழ்ந்திருக்கலாம்.”
“சோழருள் ஒருசன் ஆரியரைத் துஞ்சையடுத்த வல்லம்என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக்கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்.
“மாரியம் பின் மழைத்தோல் சோழர் வென்றேவல்லில்ஆரியர் படையின் உடைக எனநேரிறை முன்கை வீங்கிய வளையே!” (அகம் 336)
காதலி, காதலனிடம் உள்ள கோபத்தைச் சுமலும் வளையல்மீது செலுத்தி, வல்லத்துப் போரில் உடைந்த ஆரியர் படை போல்என் வளைய உடையட்டும் என்கிறாள்!”
“வட ஆரியர் படை கடந்துதென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புனரதீர் கற்பின் தேவி தன்னுடன்அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்நெடுஞ்செழியன்”(சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம் இறுதிக்கட்டுரை)
இந்தச் சான்றுகள் ;இரு பெரும் இனங்கள் ஆரியர் – திராவிடர் எனஇருந்ததை விளக்கும்இந்திய நாட்டு நிலவரமல்லவா?
மேலும் ;
காரவேலனாம் கலிங்கப் பேரரசனை இந்தக்காலப் பேழையில் கவிதைச் சாவி கொண்டுதிறந்து காட்டுவது சிறந்த சரித்திரக் குறிப்பாகஅமையும் என்பதும் ; அசோகனையும்அவன் பெற்றிருந்த வெற்றிகளையும்,இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டுமுதலிடத்துக்குத் தன் பெயரைக் கொண்டு வரவும்,அரச நிலைக்கவும், ஆட்சிப் பரப்பு விரிந்திடவும்,ஆற்ற வேண்டிய அரசியல் சூழ்ச்சிகள் அனைத்தையும்ஆற்றிப் பார்த்தவன் அவன் என்பதும் –
அவன் புகழ் பெற்றிருந்த கால கட்டம்கி.மு. 163க்கும் கி.மு. 153க்கும் இடைப்பட்டதுஅதாவது இப்போதைக்கு 2158 ஆண்டுக்கு முற்பட்டது ; எனினும் ;தான் பெற்றதாக வெற்றிச் சாதனைகளைக் கூடத்தானே பெற்றதாகக் கல்வெட்டுகள் வைப்பதிலேகை தேர்ந்த மன்னாதி மன்னன் என்பதும் –
கைப்புண்ணைக்குக் கண்ணாடி எதற்காக எனக் கேட்டது போல்கல்வெட்டுக்களே சாட்சிகளாக நிற்பதாகக் கூறுகின்றோர் பலர்கூறியிருக்கின்றனர்; கைப்பா எழுதியிருக்கின்றனர்.கதையல்ல ; கற்பனையுமல்ல ;கண்ணுக்கு மெய்யாக காட்டிடும் சான்றாக ;
“113 ஆண்டுகளாக நிலவி வந்துள்ளதமிழரசர்களின் கூட்டணியைச் சிதைத்து விட்டதாகக்காரவேலன் ஒரு கல்வெட்டில் குறித்திரான்”என்கிறார் பன்மொழிப் புலவர்.
புவி மெச்சிட வாழ்ந்த அசோக மன்னன் புத்த சமயத்தைபூமிப் பந்தில் பரப்பிட முனைந்ததைப் போல ; அதற்குப் போட்டியாககாரவேலன் சமண சமயத்தைப் பரப்பிட முன்வந்து,“சமண சமய அசோகன்” என்று பட்டமும் சூட்டப் பெற்றான்.அப்படிக் கூடிவெற்றிகொண்ட அரசனைக் சுற்றிஆயிரம் பேர் இருப்பார்களே!மெளரியர் என்றுமே ; தமிழகத்தின் மீது போர் தொடுத்துமோதிடாத அளவுக்கு ; அவன் மோதிட முன்வந்தான்.(முரசு கொட்டி முன்னேறியது அவன் படை ;மேலும் ; அப்படையின் நுழைவினால் ; தமிழ் நிலம்மோசமாகாமல் தடுத்து நிறுத்திட – அவன்முடுக்கி விடும் போர்களினால் ;தடுக்கி விழாமல் தமிழ் இனத்தைக் காத்திட –மூவேந்தர்களும், வேளிர்குல மன்னர்களும்,நெருப்புப் பொறியென செருப்பாழி கடந்த இளஞ்சேட் சென்னியும்காரவேலனைக் கடுமையாய் எதிர்த்துக்களத்தில் சந்திக்கப் போர்க் கூட்டணி யொன்று கண்டு ;கூர் தீட்டினார் வாளுக்கும் வேலுக்கும்!அந்தக் கூட்டணியைக் குழி தோண்டிப் புதைப்பதாகக் காரவேலன்கண்ட கனவு பலிக்காமல் போயிற்று என்பதைத்தான்“தற்பெருமை கொள்கிறான் கல்வெட்டு வாயிலாக” என்றுதமிழறிஞர் அப்பாதுரையார் “தென்னாட்டுப் போர்கள்” நூலில்எடுத்துக் காட்டுகிறார் – அதை நாம் கூர்மையாகப்படித்துப் பார்த்தால் ஆணவ ஆட்சிக்குக்கூற்றுவனாய் அமைகின்ற கூட்டணி கண்டு – எப்படிக்குதிக்கிறார்கள், குமுறுகிறார்கள் கோவேந்திகள் என்பதுநேற்று இன்று புரிகின்ற உண்மையல்ல ;காற்று வாக்கில் வரும் செய்தியுமல்ல!கலிங்க மன்னன் காரவேலன், தனக்குற்றஎதிர்ப்பு கண்டு ; கொண்ட கோலம் எதுவென ;எச்சரிக்கிறது வரலாறு ;எடுத்துரைப்பதே என் கடமை!
செருப்பாழி = போர்க்களப் பாசறை.

மூலமும் சான்றும்