கவிதை 14 / 58
கனக விஜயர் கல் சுமந்த வரலாறு!
The History of Kanaka and Vijaya Carrying the Stone!
பழங்காலத் தமிழக வரலாறுபட்டுத் துணி எனினும் நமக்குஒட்டுத் துணியாகத்தான்படிக்கவும் நடிக்கவும்கிடைத்துள்ளது என்பதை – இன்றுமறைப்பதில் பயனில்லை ; எஞ்சிஇருப்பதை மட்டும்எடுத்துச் சொன்னாலே – நமதுஎழிலார் தோற்றம் தெரியும் – உலகில்எல்லோர்க்கும் நாம் மூத்தவர்கள் ;இலக்கியத்தில், இலக்கணத்தில்இயலிசை நாடகமென இனித்திடும்மொழிவளத்தில் நம்முழு வடிவம் புரியும்!
திட்டவட்டமாகவும் தெளிவாகவும் –தீட்டி வைக்கவில்லை யாரும் ;தென்னக வரலாற்றுக் குறிப்புகளை!எனவே தான் இலக்கியங்கள் துணையுடனும் –இங்கங்கு காணுகின்ற கல்வெட்டுகள் ; உதவியுடனும்வடிகட்டி வழங்கிய உண்மைகளை ;வரலாறு எனத் தொகுத்தளித்து வருகின்றோம்.
நெடியோன் எனும் பாண்டிய மன்னன்நிலந்தரு திருவிற் பாண்டியன் என்றும்தொல்காப்பியர் காலத்துடன்தொடர்புடைய காலத்தினன் என்றும்,மூவாயிரம் ஆண்டுக்கு முன்னிருந்தவன் என்றும்,ஏறத்தாழவென ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டும் நம் வரலாறு!
கரிகாலன் எனும் சோழ மன்னன் – வீரம்சரியாமல் ஆண்டவன் என –சரித்திரம் புகழ் சாற்றும் எனினும் ;இமயம் வரை படையெடுத்துச் சென்ற கரிகாலன் ;இரண்டாம் கரிகாலனே என்பார் ஆய்வாளர் –
இருமுறை வடதிசை சென்றவன்இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன்இணையற்ற வீரன் செங்குட்டுவன் –இவன் தம்பி இளங்கோவே அரசாள்வான் என
ஆரூடம் சொன்ன நிமித்திகன் வாக்கைப் பொய்யாக்கிஅத்தம்பி அறநெறித் துறவியாக மாறிக் கொண்டு ; அருந்தமிழ்க்கண்ணகியின் காவியம் தந்தான் ; அந்தக்கற்பரசி சிலையெடுக்க அண்ணன் சென்றவன் ;கனக விஜயன் முடி நொறுங்கக்கல்தூக்கி வரச் செய்த கதை ; காணீர் ;ஓரங்க நாடகமாக!
காட்சி 1
கங்கைக் கரை கனக விஜயர் மாளிகை.
தீராதி தீர தீன தயாபர தெய்வீக புருஷ வேதாந்த சாகரவேந்தர் குல திலக உத்திரதேசத்து மன்னாதி மன்னர்கள் கடவுள்அவதார கனக விஜயர் பாரக்! பாரக்!
மன்னர்கள் : நமஸ்கார்!கனகர் : நமஸ்கார்!விஜயர் : நமஸ்கார்!கனகர் : சுயம்வரத்துச்சுந்தரிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்போலும் ஹி! ஹி!...மன்னர்கள் : ஆமாம், நீங்கள் இருவருமேவந்து விட்டீர்களே! சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர்
ஜெயித்து விட்டால், அந்தப்பெண்ணை நீங்கள் இருவரும்எப்படிப் பங்கு போட்டுக்கொள்வது?
தமிழ்நாட்டுப் புலவர் : பிறகு பாரத்தான்....விஜயர் : யாரப்பா நீ ? என்ன பேசுகிறாய் ?புலவர் : தமிழ்! செந்தமிழ்! உலகத்தோடு பிறந்த தமிழ்!கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மூத்ததமிழ்!
விஜயர் : சுயம்வர மண்டபத்தில்உனக்கென்ன வேலை ?
புலவர் : உம் ; விசித்திரமான கேள்வி வேந்தரே!சுயம்வர மண்டபத்தில் வயதானஉங்களுக்குத்தான் வேலை ;வாலிபர்களாகிய என்போன்றவர்களுக்கு வேலைஇல்லை என்பது....
விஜயர் : குறும்பு தேவையில்லை. நீ யார்என்று கூறு!
புலவர் : நானோர் தமிழ்ப் புலவன் –வட நாட்டுப் பயணம் வந்தேன்....
கனகர் : புலவனா? கவிதை புனையத்தெரியுமா உனக்கு ?
புலவர் : கவிதை புனையத் தெரியாத புலவன் –கத்தி தூக்கத் தெரியாத வீரன் –இவர்களைத் தமிழகம் இதுவரைகண்டதே இல்லை.....
கனகர் : அதையும் பார்த்து விடுவோம்.எங்கே, உடனே, ஒரு கவிதை சொல்லு!
புலவர் : கங்கை நதி தீரத்திலேபோராடினான்-தமிழன்காவிரியின் ஓரத்திலே புகழ்காலத்திலே வந்து போராடினால்காலை ஒடித்திடுவோம் ஜாக்கிரதை.....
மன்னர்கள் : ஹா! ஹா! ஹா!
விஜயர் : கனகர் சொன்னது அட்சரம்லட்சம் பெறும் ; புலவனே!இமயத்தின் நெற்றியிலே உம்மன்னர் புலி – வில் – கயல்சின்னங்களைப் பொறித்த போதுஎப்போதும் மன்னர் ஈங்கில்லைபோலும்!
புலவர் : ஏன் ? காலில் விழுந்துகாணிக்கை செலுத்தவா?பித்து மனம் கொண்டவரே ;கேளீர்! இன்றேதென்னாடு திரும்புகிறேன்.காவா நாவிற் கனகனும் விஜயனும்விருந்தின் மன்னர் தம்முடன் கூடிஅருந்தமிழாற்றல் அறிந்திலராகிச்செப்பியமொழிகளைச் சேரனுக்குணர்த்ததுவேன். மதோன்மத்தர்களே!மாண்டுவிடவில்லை தமிழர் வீரம்!ஆரிய மன்னர்கள்! மீண்டும்சந்திப்போம். ஆண்டு கொண்டிருப்பவன்சேரன் செங்குட்டுவன்!சேரன் செங்குட்டுவன்!!
காட்சி 2.
சேரன் கொலுமண்டபம்
சேரன் : வாளேந்தி தமிழகத்தில் புகழேந்திவாழும் வேங்கைப் புலிகளே!வந்து விட்டது உங்களுக்குஎல்லாம் அழைப்பு!வட நாட்டிலே மீண்டும் ஓர் முறைநம் வீரத்தை நிலைநாட்டநல்லதோர் வாய்ப்பு! இமயத்திலேபொறித்திருக்கும் நம் சின்னங்களைபழித்தார்களாம், சிறுமதி கொண்டடோர் சிலர் – புலியைக் கேலிசெய்தான் போர்முனை காணாப்புல்லன். வில்லை இகழ்ந்தான்வீரத்தை விலை கேட்கும் வீணன் –கயலைப் பழித்தான் களம் புகுகதைகளைக் கேட்டறியாக் கசடன்.உத்திரனாம் – விசித்திரனாம் –சித்திரனாம் – சிவேதனாம் –பைரவனாம்! விழிக்காதீர்கள்!மனிதர்களின் பெயர்கள்தான்இவைகள்! இந்த மண்டூகே மன்னர்களுக்குத் தலைவர்களாம்கனகனாம் விஜயனாம் கங்கைக்கரை வாழ் காவலர்கள் காவிரிக்கரைக்கு அறைகூவல் விடுத்தார்களாம்! புரட்சி புகட்டுவோம்அவர்களுக்கு – புறப்படுங்கள்!
ஓர் அமைச்சர் : சோழனுக்கும் பாண்டியனுக்கும்இல்லாத ஆத்திரம் தங்களுக்குமட்டும் ஏன் மன்னவா?
சேரன் : தமிழன் என்பதால் – தன்மானஉணர்ச்சி குன்றாததால்!சோழனோ பாண்டியனோஎன்னுடைய பகைவனாக இருக்கலாம், அதற்காக வடநாட்டு ஆரியமன்னர்கள் வாலாட்ட விடமாட்டேன் என் உயிருள்ள வரையில்!என் தமிழை அல்லவா இகழ்ந்தார்கள் ;தருக்கார்கள்! ஆ.....குறள்தந்த கோமானே, வள்ளுவனே!உன்னை இகழ்ந்தார்கள்....அத்தாணி மண்டபத்தில் சத்தானகருத்துரைக்கும் சாத்தனாரே!அரங்கின் அண்ணலே!உம்மை இகழ்ந்தார்கள்!முத்துக்கடலே, முல்லைக்கொல்லையே, உன்னைஇகழ்ந்தார்கள்! எட்டுத் திக்கும்முரசு கொட்டி வாழும் சிங்கத்திருவிடமே, உன்னை இகழ்ந்தார்கள்.அன்னை நற்சோணையே,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின்மகன் செங்குட்டுவனின் வெற்றியைஇகழ்ந்தார்கள்.இளங்கோ! ஆசைத் தம்பி!உன்னை இகழ்ந்தார்கள்!நீதிக்கு உயிர் தந்த பாண்டியனே!ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள்!செந்தமிழ் வளங் குறையா சிங்கஏறுகளே! அறிஞரே! கவிஞரே!கலைவாணரே! உம்மையெல்லாம்இகழ்ந்தார்கள்!இகழ்ந்தார்கள்,
இகழ்ந்தவர்கள், இன்னும்உயிரோடு இருக்கிறார்கள்,வட நாட்டில் மன்னர்களாய்!பொருணை நதியும், பொழிவும்சூழ்ந்த எழில்மிகு வஞ்சித்தலைநகரே, உன்னைஇகழ்ந்தார்கள்! இகழ்ந்தார்கள்!இழிகுணம் படைத்தோர்இகழ்ந்தார்கள் ; அமைச்சர்அழும்பில் வேள் இருக்கவீரன் வில்லவன் கோதைதளபதியாயிருக்க – உங்கள்திரண்ட தோள்களில் எல்லாம்வலிமை வளர் பிறையாயிருக்க –ஆற்றோரத்தில் மந்திரம்ஜெபித்துக் கொண்டிருக்கவேண்டிய சிலதுகள்,ஆவேசக் கூச்சலிட்டதாம் –வீரர்களே! பார்ப்போம் ஒரு கை!அந்த நா காக்கத் தெரியாதநாடோடிகளை! தும்பி வாடி,தோரணங்கற்பட்டு, வேட்டமங்கலம் கோட்டைகளிலுள்ளவீரரெல்லாம் கிளம்பட்டும்!காளையரே, காதலியருக்குகடைசி முத்தம் இதுவாகஇருக்கலாம் என்று கூறி விட்டுப்புறப்படுங்கள்! நாளென்னசாகப் பயப்படும் சமூகமாயா?சமருக்கஞ்சும் இனத்தவரா,அந்தச் சாமரமேந்திகளிடம்சரணடைய! இல்லை! இல்லை!களத்திலே நமது தலைகள்பறி போகலாம்! ஆனால் கனல்
கக்கும் கண்களோடு அவைகொய்யப்படும். தசைகள்கிழித்தெறியப்படலாம்!ஆனால் சுயமரியாதைஇரத்தத்தின் சூடு தனியாமல்அவை கிழிக்கப்படும்,முரசு தட்டுங்கள்! இமயத்தைமுட்டுங்கள்! தமிழன் தோற்றதில்லை! தோற்றதில்லை!புறப்படுங்கள்!”
காட்சி 3
குயிலாலுவம்.
( சேரன் செங்குட்டுவனுக்கும், கனக விஜயருக்கும் நடைபெற்றபோரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்)
சேரன் : வில்லவா! வெற்றி முழங்கும் இந்தஇடத்திற்கு பெயர் என்ன?
வில்லவன் : குயிலாலுவம்.
சேரன் : குயிலாலுவம், குறித்துக் கொள்!இந்தப் பாறைகள் அனைத்தும்பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள்!வெற்றி மட்டும் போதாது வில்லவா,அந்த வீணர்களை விடக் கூடாது.
வில்லவன் : காஷாய உடையிலே ரிஷிகளைப்போல் எங்கோ ஒடிவிட்டார்களாம்கனக விஜயர்கள்....
சேரன் : புதுமையல்ல....அவர்களுக்கு உரியதான ஒரேபழக்கம் அதுதான்!(கனக விஜயர்கள் சாமியார்உடையில் கொண்டு வரப்படுகிறார்கள்)
சேரன் : யார் இவர்கள் ?வில்லவன் : கனக விஜயர்.சேரன் : கனக விஜயர். கனக விஜயர்....வீராதி வீரர்களே! நன்றாகஇருக்கிறது போர்த் திறமை!முதுகு காட்டுவது – முக்காடுபோடுவது – மறைந்திருந்துதாக்குவது – மகானாய் மாறுவது,முனிவர்வேடத்தில் இருக்கிறீர்களே,இதற்குப் பதில் சொல்லுங்கள்...புராணத்திலே தேவாசுர யுத்தம்எவ்வளவு நாள் நடந்தது ?
கனகர் : பதினெட்டு ஆண்டுகள்!
சேரன் : ராம ராவணப் போர் ?.....
கனகர் : பதினெட்டு மாதங்கள்!
சேரன் : பாரதப் போர் ?
கனகர் : பதினெட்டு நாட்கள்!
சேரன் : வீரர்களே, நினைவிருக்கட்டும்.சேரன் செங்குட்டுவன்கனக விஜயருடன்நடத்திய போர், பதினெட்டேநாழிகையில் முடிந்து விட்டது.
கனகர் : மன்னவா, மன்னியிடுகிறோம்....மன்னித்து விடுங்கள்!
சேரன் : மன்னிப்பதா ? நான் மன்னிப்பதா ?தமிழ்நாட்டு மண்ணில் வந்துமண்டியிடுங்கள். அது உங்களைமன்னிக்கட்டும்.....
வில்லவன் : மன்னவா, தமிழகம் திரும்பவேண்டாமா ? புறப்பட்டுமுப்பத்திநான்கு திங்கள்ஆகின்றனவே.....
சேரன் : புறப்படுவோம் – வில்லவா.அதற்குள் கண்ணகிக்குச் சிலைநாட்ட இங்கு கல் எடுக்க வேண்டும்மல்லவா ?
வில்லவன் : ஆமாம்....
சேரன் : அந்தக் கல்லைச் சுமப்பதற்குச்சரியான எருதுகள் கிடைத்துவிட்டன.கனக – விஜயா, தமிழரின்வீரத்தின் மீது வீசினாய் ஒருசொல் – இப்போது தூக்கு கல்!
தமிழறிஞர்களும், தகுதி மிக்க ஆய்வாளர்களும்,தன்மானப் புலவர்களும், உண்மை வரலாறு ;உணர்ந்திடத் துடிக்கும் ஆர்வலர்களுமன்றோ ;அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அலைந்து தேடி ;மறைக்கப்பட்ட மணிக் குலத்தைக் கொண்டு வந்துமகுடத்தில் பொருத்த வேண்டியுள்ளது.