கவிதை 15 / 58
பருகிடலாம் இந்த “ஆரிய” தேநீரை!
Let Us Drink This “Aryan” Tea!
கண்ணகி சிலை வடிக்கக் கல் எடுத்திடகங்கைக் கரையில் சேரன் களம் காண்பதற்கு முன்பே
அந்த நதியில் அவன் அன்னை நீராடச் செல்வதற்கு ;அருந்துணையாக பெரும்படையுடன் அவனும் சென்றான்.
முதல் தடவையாக சென்ற போதே – அவனைமுற்றுகையிட்ட ஆரிய மன்னர்களை
முறியடித்து வெற்றி கொண்டான்முழுமதியாய் அன்னை முகம் மலர வைத்தான்!
“கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம்எம் கோ மகளை ஆட்டிய அந்நாள்ஆரிய மன்னர்ஒரு நீயாகிய செரு வெங்கோலம்கண் விழித்துக் கண்டது கருங்கட் கூற்றம்!”(சிலப்பதிகாரம்)
காலப் பேழையினைத் திறந்து வைத்துகதைகள், கவிதைகள் வாயிலாக
கடந்த கால வரலாறு இவ்வாறு கூறும் பொழுது ;கண்ணுக்குத் தெரியாமல் இதுவரையில்
திறம்பட உண்மைகளை மறைத்திருந்த பெருந்திரைகளை விலக்கிக் காட்டி ;
‘திராவிடர்’ என்போர் இனம் இத்திருநாட்டில்இராவிடம் இல்லையென்பதை எடுத்துச் சொல்லுவது ;
மறந்து போன இனப்பகை யுணர்வை மீண்டும் எழுப்பிடத்தொடர்ந்து நடத்தும் ‘துவேஷச் செயல்’ எனத் தூற்றிச் சிலர்
எழுதுகின்றார் கடிதம் – ஏசுகின்றார் மறைவில்எதையும் தாங்கும் இதயம் உண்டு எனினும் ;
எதிர்ப்புக் குரலுக்கோர் மறுப்புக் குரல் அல்ல ;இதமான விளக்கக் குரல் கொடுக்க எண்ணுகின்றேன் ;
எனவேதான் இதனை எழுதுகின்றேன்காலை நடைப் பயிற்சியின் போதோ ;
கடும் வேக ஓட்டப் பந்தயத்திலோ ;காலில் சிறு கல்லோ, முள்ளோ
தட்டுப்பட்டு விட்டால் ; அது நம்மை அறவேதடுத்து விடாதென்றாலும் – தயங்கி நின்று ;
தடை நீக்கிக் கொண்டுதானே மேலும் செல்வோம் –எதிர்க் கருத்துக்களையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு
என் பயணம் தொடரும் நிலையில் –இங்கே சற்று நிற்கின்றேன் ; அடுத்து
மிடுக்குடன் பயணம் மீண்டும் தொடரும்.தடுத்திட முனைவோர்க்குத் தரும் விளக்கம் இதுதான்!
“ஆரியம், திராவிடம் என்று ஆறிப் போன தேநீரைகாரியம் இப்போதென்ன சாதிப்பதற்கென்று ;
அடுப்பில் வைத்து சூடேற்றப் பார்க்கின்றீர்?” எனதுடுக்குமிகு கேள்வி யொன்றால் துளைக்கின்றார் சில பேர் ;
என் செய்வது ; ஏழை வீட்டில் அதுதான் “தேவாமிர்தம்!”நன்செய் புன்செய் நாலாயிரம் ஏக்கர் நிலக்கிழார் எனில் ;
இனம், மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நாடு பற்றிக்கவலையின்றி –
பணமேடு, செல்வக் குன்று, பொன்மலை, வைர வைடூர்யபார்வதங்கள் காண்பதிலே
காலத்தைச் செலவிடுவர்! காபியோ, தேநீரோ, வேறெந்தபானமோ – அதுகாலங் கடந்திடாத சரக்காக இருக்கும் அவர் மாளிகையில் சூடுமாறாமல்!
ஆரியர், திராவிடர் என்றதும் ஆத்திரப்பட்டு அடியேன்மீதுஅர்ச்சனை நடத்துகின்றார் – இல்லாததை நான் சொன்னது போல்
பொல்லாத கோபம் வருகின்றதே ஏன்?புதைந்து கிடக்கும் மண்டையோடு எலும்பெடுத்து
வாழ்ந்த இன வரலாறுகளை வகைப்படுத்தி முறைப்படுத்திஆழ்ந்து செய்யும் அகழ்வாராய்ச்சி சாட்சி கொண்டு
அய்யர், அய்யங்கார்கள், சாமா, சாஸ்திரிகள் எனஅறிஞர்களாம் வரலாற்று வல்லுநர்கள் வெளியிட்டுள்ள
கருத்துக்கள் கூட கண்ணிருந்தும் காண மறுப்போர்க்குகாதிருந்தும் கேட்க விரும்பாதோர்க்கு –
உணர்விருந்தும் உணர மாட்டோம் என்போர்க்குஉரிய இடம் எதுவோ ; அதுதானே கிடைக்கும்!
இந்த மேதைகள் எல்லாம் ; என்ன பதில் அளிப்பார் ;இதோ – இவர்களின் கூற்றுக்கு? எனக் கேட்கின்றேன்.
“தமிழர், தமிழகத்தின் பழங்குடியினர் மட்டுமல்ல ;உலகத்தின் ஆதி மக்களும் அவர்களாகவே இருந்திருக்கலாம்”
இதனைக் கூறியவர் “தமிழர் சரித்திரம்” எனும் நூலில்திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் எனத் தெரிவிக்கின்றேன்.
“ஆரியர் நாகரிகத்தை விடத் தமிழர் நாகரிகம் மிகப்பழமையானது” எனப் பகருகின்றார் ;
“திராவிட இந்தியா” எனும் நூலில்திருவாளர் சேஷ அய்யங்கார் –
“ஆரியர் தமிழகம் வந்துதமிழர் நன்மைக்கோ தீமைக்கோ
என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொள்க”என “தமிழ் மொழி வரலாறு”
எனும் நூலில் பரிதிமாற் கலைஞராம் –சூரிய நாராயண சாஸ்திரிகள் சொல்லியுள்ளார் –
காரண காரிய விளக்கமுடன்கடந்த கால முதல் இந்நாள் வரை
உலக வரலாறு நான் உரைக்கின்ற போதுஉண்மை வரலாறு மறைக்காத நிலையில்
காலப் பேழையைத் திறப்பதினாலே ; புதியகளம் ஒன்றும் விளையாது ;
பிறப்பினால் உயர்வு தாழ்வு எனும் –பழைய நினைவு பட்டுப் போனாலே போதுமானது – அதனால்
குறுகிய எண்ணம் கொள்ளாமல்பருகிடலாம் இந்த “ஆரிய” தேநீரை!