கவிதை 8 / 58
நெற்றி வியர்வை உதிர; நெஞ்செலும்பு ஒடிய!
Sweat Falling from the Brow; the Ribcage Breaking!
சாங்கிருத்தியாயன் தீட்டியசரித்திரப் பின்னணிச் சிறுகதைத்
தொகுப்பில் - “வால்காவிலிருந்துகங்கை வரையில்” ; ‘அமிர்தாஸ்வன்’ எனும்
தலைப்பில் அந்தக் கால வாழ்க்கைத்துணைவியார்க் கென்றே வகுத்துள்ள
தனி இலக்கணத்தை அந்நாவலில்அண்மையில் நான் 54 ஆம் பக்கத்தில்
வாசித்தறிந்த நினைவுடன் எழுதுகிறேன் ;வரலாற்றறிஞர் ‘இராகுலன்’ வரைந்துள்ளார் :
“அதிதிகள், நண்பர்கள் வீட்டுக்கு வந்தால்அவர்க்கு விருந்தளித்து மகிழ்விப்பதுடன்,
தற்காலிகமாகத் தங்கள் மனைவியரையும்தந்து கெளரவிப்பது ஆச்சாரமாக இருந்தது” என்கிறார்.
கணவாய் வழி இப்படிக் காலடி வைத்து வந்தகலாச்சாரம்தான் கடவுள் அவதாரம் என்று
காட்டிக் கொண்டு வந்த அதிதி ஒருவருக்குஇயற்பகை நாயனார் தனது இல்லத்தரசியை
கட்டிலறைக்கு அனுப்பி வைத்த கதை போன்றஇழிவரு எடுத்தது போலும்.
இருப்பதைத் தான் எடுத்தியம்புகின்றேன், இதனைப்பொறுப்பதும், பொறுத்திடாது என்னை வெறுப்பதும்
புத்தகம் இரண்டையும் படித்த பிறகு - நீவீர்தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டியதாகும்.
ஆரியர்கள் வருகை என்றும் ஆதி முதல் வாழுகின்றதிராவிடருடன் மோதல் என்றும் ‘அசுரர்’ எனும்
திராவிடருக்கும் - அமரர் எனும் ‘தேவர்’ கட்கும்ஆண்டு பதினெட்டு அயராமல் யுத்தம் நடந்ததென்றும் ;
அறிஞர் பெருமக்களாம் அய்யர், அய்யங்கார்கள்,சாமா, சாஸ்திரியார்கள் அன்றே எழுதினர் சரித்திரங்கள்!
இராமாயண யுத்தமே ஆரிய, திராவிடப் போராட்டம் தானென்றுஇந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்பே எழுதியவர் நேருபிரான்.
இத்தினையையும் உள் வாங்கிக் கொண்டுவடிவெடுத்ததுதான்
வால்காவிலிருந்து எனும்வரலாற்றுப் பனுவல்!
வளைக்கவில்லை அதனை என் போக்கிற்கு ;வானத்தைப் பூமியெனச் சொல்ல எனக்கென்ன பைத்தியமா?
வற்றாத ஜீவ நதி கங்கையைப் போல்வளம் பெருக்க வேண்டும் காவிரியும்
தமிழகத்துக்கென்று ; வரம் கேட்டுத்தவம் இருப்பேனே தவிர,
வறண்ட பேராறு கங்கையெனக் கூறும்வடிகட்டிய பொய்யனாக வேடம் கட்டி வருவேனா?
அப்படித்தான் அடித்துச் சொல்லுகிறேன்எப்பொழுதும் ஆதார பூர்வமாக
ஆரியக் கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரத்தைவிழுங்கிடவும் வீழ்த்திடவும் வந்த கதை!
மூவாயிரம் ஆண்டுக்கு முன்பேமுற்றுகை யிட்ட கலாச்சாரத்தினால்
மூண்டு விட்ட தீயின் கொடுமையைத்தான்ஆண்டு பலவாக அனுபவித்து வருகின்றோம்.
ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம்ஆலயத்துக்கு என்றும் ஆதீனத்துக்கென்றும்
அந்த நிலங்களிலே நித்தமுழைத்துநெற்றி வியர்வை முத்து முத்தாக உதிர உதிர
நெஞ்செலும்பு ஒடிய ஒடிய - வயிறுபற்றியெரியும் பசியுடனே பயிர் வளர்த்துப்
பாடுபடும் பாட்டாளியாம் ஏழை விவசாயிக்கு - ஒருபருக்கை சோறு ஆக்குதற்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.
வினா எழுப்பி ‘ஏன்?’ என்று கேட்டால்விடையளிக்க யாருமில்லை!
கனாக் கண்டும் பயனில்லை ;கடவுளும் அரசும் நம்மைக்
கவனிக்கப் போவதுமில்லை.கவலை மேற் கவலையாக இக்கவலை
கவண் கற்களாக நமைக் குறி பார்த்துத்தாக்கினாலும் - தாங்கிக் கொண்டு
கடவுளையே எழுப்பிப் பார்ப்போம் -காலை, மாலை, இரவு மூன்று வேளை
உனக்கும் உன் குடும்பத்துக்குமாகஉணவுக்கு ஆகும் செலவு போக
நாள்தோறும் மிச்சமாகும் பணத்தையெல்லாம்நல்ல நல்ல வங்கிகளில் சேமித்து வட்டி சேர்த்து
ஆண்டவனே உன் பிள்ளைகள் ஆரோக்கியம் பெறுவதற்கும்அறிவார்ந்த கல்வியிலே அடுக்கடுக்காய் உயர்வதற்கும்
அன்றாடம் செலவு செய்தால் நன்றாக முன்னேறும் நமது நாடுஎன்போம்.இன்றோடு குறுகிய நோக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு - புகழ்
குன்றேறி நாம் நிற்பதற்குப் புதுப் புது சிந்தனைகள் வேண்டும்.குறிக்கோள் நிறைவேறுதற்குச் செயலாற்றும் திறனும் வேண்டும்.
திறன் பெற்றுச் செயலாற்றத் திக்கெட்டும் பார்வை செலுத்தவேண்டும்.உரமாக அதற்கமைய நம் பழம் பெரும் வரலாற்றை உணரவேண்டும் -
வாளும் கேடயமுமாய் வரலாறு கையில் இருந்தால்தான்வந்து மோதும் பகைப்புலத்தைச் சந்திக்க இயலும் என்பதால்
வையத்துப் பெருவிளக்காய் - திருவிளக்காய் - நம் சரிதம்ஒளிர்வதற்கு ;அய்யத்துக்கிடமின்றி அனைத்திலுமே தெளிவாகத் திகழ்தல்வேண்டும்.
காலப்பேழை அதற்குத் துணை நிற்கும் என்பதால் இன்னும் சிலகவிதை வடிவக் கதைகள் தொடர்ந்து சொல்லுகிறேன், என்கற்பனையில்!பழங்கதைப் பேசுவதால் பலனில்லை என்றறிவேன் - நம்பாட்டன் பூட்டன் கதை பழைய வரலாற்றுக் கதை பேசுவதால் ;
கேட்டை விலக்கலாம் சமுதாயத்தில் -கடந்த காலச் சரித்திர நிகழ்வுகளில்
கழிக்க வேண்டியது என்ன ?அந்த நினைவுகளில் மறக்க வேண்டியது என்ன ?
அவற்றில் எதையும் அழிக்க வேண்டியது இல்லை -வரலாற்றுச் சின்னங்களை ; வாழ விட்டால் தான்
நல்லவைக்கும் தீயவைக்கும்நமக்கு வழி காட்டப் பயன்படும் -
நல்லவை உணர்ந்து மேலும் நடக்கலாம் -தீயவை எனிலோ ; உடனே திரும்பலாம்!திருந்தவும் செய்யலாம்!