கவிதை 7 / 58

வரலாற்றுக் காலத்தின் கோலம்!

The Form of an Age in History!

X
பண்ணையார் கூலிப்படை திரட்டிப் போர் நடத்திபண்புநிறை ‘மங்கை’யவள் காதலனைத் தீர்த்துக் கட்டி
கடைசி மூச்சினைக் காதலன், காதலியின் மடியில் விட்டப்போது ;களங் காணும் உரிமைப் போர் அற வழியில் நடத்தட்டுமென்றும்,
தொல்லைகள் நீங்கும் வரை தொய்வின்றித் தொடரட்டுமென்றும்சொல்லி விட்டுக் கண் மூடினானே ; அதைச் சொல்லப் போனால் ;
அதற்கு முன்பிருந்தே அநாகரிகத்தின் உறைவிடமாகஅந்த வட்டாரம் விளங்கியதும், விலங்குகளுக்கிருந்த
வீரியமும் வேட்டையாடும் வல்லமையுமின்றி ; அவற்றின்வயிற்றுக்குத் தீனியானார் வரிசையாக என்ற வரலாறும்தான்,
நம் முன்னால் நிற்கும் ; நமது நம்பிக்கையைக் குலைக்கும்.எடுத்துக்காட்டாக சிலவற்றை இயம்பிட வேண்டுமெனில் ;
மரத்தின் அழுத்தமான வேர் என்று நினைத்து ஒருமண்டூகே மனிதன் பாதி வெளிச்சத்தில்
மலைப்பாம்பு ஒன்றின் மீது உட்கார்ந்து விட்டான், அந்தமனிதக் கனம் தாங்காமல் மலைப்பாம்பு நெளிந்தவுடன்
வீராதி வீரன் “வீல்” என்று கத்தித் துடித்திட அப்போதேவெடித்து விட்டது அவனிதயமென்று வீட்டாரும் ஊராரும்
அழுது தொலைத்தார்கள் ; அப்படியொரு “பகாசூரப்பயந்தாங்குளி!”அது போல ஒன்றா இரண்டா ; அன்றாடம் தொடர்கதைதான்!
காளியாத்தாவுக்குப் படையல் போட்டுக் காட்டு வழி ஆட்டுக்குட்டிகாவு கொடுக்க வேண்டுமெனக் கால்நடைப் பயணம் போனவனை ;
மத யானை வழி மறித்துக் காலால் மிதித்து அவர்கள்காவூர் செல்லும் வரை விடவில்லை எனும் சேதி ;
காட்டுக்குள் நுழைய நினைப்போரை கதி கலங்க வைத்த சேதி ;வீட்டுக்குள் கிடக்கும் மனிதரையும் கொட்டிக் கொல்லுகிறகுளவிகளால் பெரும் பீதி!
என் செய்வது? ........கற்காலத்து அடுத்த கட்டமாக
விலங்கினம் / மனித இனத்துக்கிடையேதான்வெங்கொடுமைச் சாக்காட்டை விளைவிக்கின்ற போராட்டங்கள்!
அதற்கும் அடுத்த கட்டங்களாகத்தான் மனிதரிடம்விலங்குகளே விரோதம் பாராட்டாவிடினும் ;
மனிதர்களுக்குள்ளாகவே மாறி மாறிவிலங்கினம் மனித இனப் போராட்டம் என வகுத்துக் கொண்டு
நடைபெறத் தொடங்கிவிட ;விலங்கு யார்? மனிதன் யார்? என்று
வித்தியாசம் காண முடியாத நிலையில் ; அந்தப்போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தானே இருந்தன!
அதன் விளைவாகக்கண்ட விபத்துகளில் ஒரு விபத்தாகக்
கவிதைச் சாவியிட்டுக் காலப் பேழையினைக்கவனமாகத் திறப்போர் ; காண வேண்டிய
காட்சியென ஒன்றைக் காட்டுகின்றேன், அந்தோகற்காலத்து ஓவியங்கள், கண்ணீர்க் காவியங்கள்!
புதிய தம்பதியாய் ஆனவர்க்குமதிய உணவு முதலைக்கறி விருந்து என - நெஞ்சில்
புதிய வைத்த பாசமுடன்மனைவியும் சொன்னாள் மற்றவரும் சொன்னார்கள்.
“ஆற்றுக்குப் போய் அண்ணன் தம்பி நாலு பேரும்அலைந்துதேடி அகப்பட்ட முதலையுடன் வந்துள்ளனர்.
அதையறுத்துத்தான் கறி சமைக்கப் போகின்றேன் -அமிர்தம் போல் ருசிக்கும் தன் கைப்பக்குவம்!” என்று
அத்தானை அழைத்து வர அலமு என்பாள்அனுப்பிவைத்தாள் அண்ணன்மாரை!
அப்படியே இப்பொழுதே அவரோடு வருகின்றேன் என்றுஅண்ணன்களில் ஒருவன் பறந்து சென்றவன்,
அயர்ந்து திரும்பி தங்கை முன் வந்து நின்றான்;அழுதான், புலம்பினான், ‘அய்யோ’ என்று கத்தினான்!
“என்ன அண்ணே? எங்கே அவர்?” கேட்டாள் தங்கை!எங்கு தேடியும் இந்த ஊரில் கிடைக்கவில்லை என்று கலங்கினான்.
“வருந்துவது எதற்காக? வெளியூர் சென்றுள்ளார்; வந்துவிடுவார்இப்போது!வாருங்கள் முதலில் முதலையை வெட்டிக் கறி சமைத்து;
விருந்தைப் பரிமாறி வைக்கலாம் - அவரும்விரைந்து வந்து அருந்துவார், பாருங்கள்” என்றாள்!
“வெட்டுதற்கு முதலையை அரிவாள் கொடு முதலில்”, என்று,பட்டு மேனிப் பாவை அலமுவிடம் அண்ணன் கேட்க;
அவளும் பளபளக்கும் அரிவாள் எடுத்துக் கொடுத்தவாறு;“அண்ணே; பக்குவமாய் வெட்டிக் கொடு” என்று கூற,
அண்ணன் தம்பிகள் ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துஅந்த முதலையை வெட்ட அரிவாளை ஓங்கிப் போட்டவே;
இரு கூறாகப் பிளந்தது முதலை ;இமாலய ஆச்சரியம் எல்லோரும் அதிர்ந்து விட்டார்!
அலமுவோ அலறியடித்து மூர்ச்சித்து வீழ்ந்து விட்டாள்அந்த முதலை வயிற்றுக்குள் இருந்தது அவள் கணவன் உடல்!
ஆம் ; உயிரற்ற உடல்!அய்யகோ ; அதிகாலை நேரம் -
ஆற்றோரம் சென்றவனைமுதலை விழுங்கிற்று!
அப்போதங்கே ; கோடையிடி முழக்கம் போல“ஆ” “ஊ” என்று கத்திக் கொண்டு
பத்துப் பேர் ; காட்டில் வாழ் - காண்டாமிருகத் தோற்றத்தார்மனித உருவில் மலையொத்த மாமிச வடிவத்தார்
மாட்டுக் கொம்புகளைத் தலையில் மாட்டிக் கொண்டுமன்னர் கிரீடம் அவை தான் என எண்ணிக் கொண்டு
எருமை மாட்டுத் தோலால் ஆன ஆடையினைப்பெருமை பொங்க அணிந்து கொண்டு
சூலமும்சுமந்திருக்கும் கைகளை ஓங்கிக் கொண்டு
பற்களைக் கடித்து பல குரல் எழுப்பிகற்களை வீசிக் கொண்டு -
சாவு வீட்டு அழுகுரலை நல்லசங்கீதம் போல் ரசித்துக் கொண்டு
குத்துவோம் கொம்புகளால்கொலை செய்வோம் ; உலை வைப்போம் உங்கள் உயிர்களுக்கு
என்ற பிளிறலுடன்நுழைந்து விட்டார் - அந்த வீட்டுக்குள்
எதிர்க்க முடியாமல்எல்லோரும் ஓடி விட்டார் -
வந்த கூட்டம் -வாய்களைக் குகைகளாக்கி
பச்சையாக முதலை மாமிசத்தைஇச்சையுடன் தின்று முடித்து
முதலை வயிற்றுக்குள் இருந்தமுதிரா வயதுடைய ஆணழகன் - அலமுவின்
அத்தானவன் அங்கங்களையும்உண்டு களித்து
ஊருக்குள்நடனமாடிச் சென்றார்கள் -
நாகரிகப் பண்பாடு ஒரு புறம் ஒளிரவும்நாசகாலத்தின் வெளிப்பாடு மறுபுறம் வளர்வுமான
வரலாற்றுக்காலத்தின் கோலமிது!

மூலமும் சான்றும்