கவிதை 6 / 58

கத்தி பகைவுடையது; இரத்தம் நாம் தருவது!

The Knife Belongs to the Enemy; The Blood Is What We Give!

X
கற்காலத்து மனிதன், புதிது புதிதாகப் பலவற்றைக்கற்க விரும்பினானோ இல்லையோ ;
தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டி விடுவது போல்தானே முன்வந்து இயற்கை ; அவனுக்குப் பலவற்றைக் கற்றுத்தந்தது.
உணவுக்காக மிருகத்தைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்றுஉரித்த தோலை ஆடையாக மனிதன் உடுத்திக் கொண்டது ;
உண்மையில் அவன் மூளை விரித்த ஆணையின் விளைவு தானே!வன்மையுடன் அவன் வாழ்வதற்குரிய கருவிகள் செய்துகொள்ள ;
இரும்பையும் கல்லையும் எடுத்துக் கொள் என்றதும் இயற்கையின்கனிவுதானே! ஒருதுரும்பையும் கிள்ளிப் போடாமல், தொந்தியைப் பெருக்க வைத்து,
வரும்படி கொட்டிக் கொண்டு வாழ்கின்ற நில ஆதிக்க சொர்க்கம் -அழும்படி ஆக்குதற்கு ஆர்த்தெழும் ஏழைத் தொழிலாளர் வர்க்கம் ;
அன்றில்லை இன்றுண்டென்றால் அதற்குக் காரணம் ; இங்குஅடிமை நிலை தகர்க்கின்ற அறிவுப் புரட்சி முழக்கம்ஒலிப்பதன்றோ!
என் ? எதற்காக ? எப்படி ? எனக்கேட்ட ஏழைபாழையிடம் ;எல்லாமே கடவுளாணை என்றுரைத்த கயவர் கூட்ட மீதிலே -
கடவுள் என்ற கட்டுறுத்துத் தொழிலாளரை ஏவுக எனக்கவி மன்னாதி மன்னன் பாரதிதாசன் படை முரசு கொட்டியதால் ;
கனிவும் பணிவும் காணுகிறோம் கனதனவான்கள் மாளிகையில்!கருணையும் பண்பாடும் கற்காலத் தொடக்கத்தில் காணமுடியக்காரணத்தால் ;
களம் அமைத்துப் போரிட்டார் ; காடுகளில், மலை மேடுகளில்!பொற்காலம் மேலென்றாலும் பொல்லாத சீமான்கள் பூமான்கள்ஆதரவை,
பூதக் கண்ணாடி கொண்டுதான் பார்க்க வேண்டும் ; அதிலும்வேதக் கண்ணாடி அணிந்தோர் விழிகளுக்குவியர்வைத் துளிகள் மட்டும் தெரியவே தெரியாது.
விழாக்கள், வேடிக்கைகள், விதவிதமான கேளிக்கைகள் என்றுவேற்றுமையில் ஒற்றுமை கண்டிருந்த நிலை மாறி,
வேறுபாடும் மாறுபாடும் வேகமாக வளர்ந்து விட்டபடியால்விரோத உணர்வு வேர் விட்டு விஷத் தருவாய் விழுதும் விட்டு
வெட்டிக் கொண்டும், கற்களால் முட்டிக் கொண்டும்பட்டியல்படி நூற்றுக் கணக்கில் பலியாகி - இரு தரப்பு
உடைமைகள் அனைத்துமே பயன்படுத்த வழியின்றிப் பாழாகிப்போனதங்கே
மடைமை இருளில் இரு தரப்பு வீரர்களில் எஞ்சி நின்றோர் ;மரண விளக்கு ஏற்றி வைத்து மண்டியிட்டு மண்ணைத் தொட்டுமவுன அஞ்சலி செலுத்தலானார் வீர மரணத் தியாகிகளுக்கு!
இதனை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதுபல முறையும் படித்த பண்டித நேருவின்
உலக சரித்திரப் புத்தகத்தின் ஒரு பகுதி ;நெஞ்சில் நிழலாடி பல நினைவுகளைத் தூண்டியது.
இதோ ; நேரு கூறுகிறார் :-
“சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தால்இவ்வுலகம் ;“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்” - வளர்ந்து மாறி வருகிறபரிணாம வளர்ச்சி முறையை அறிவலாம்”
மாணிக்க வாசகரின் திருவாசகத்தையே ஆதாரம் காட்டிஅழைத்திடுகிறார் சாட்சிக்கு ;
ஆசியாவின் ஜோதி - பண்டித நேரு - என்பதுடன்அவரே மனிதனின் பகுத்தறிவு வல்லமையைப்பாராட்டி விட்டு ; அதே நூலில்,
“உலக யுத்தத்தில் கண்டது போல்ஒன்றுபட்ட சகோதரர்கள் ஒருவரையொருவர் அழித்துக் கொள்வதேமுன்னேற்றமென்றால் அந்தமுன்னேற்றத்தில் அடிப்படைத் தவறுஏதோ இருக்கிறது” - என்றுகூறிடும் அவர்போன்றார் கவலை தீர்க்கஎன்னதான் மருந்து?”
மருந்துக் கிண்ணம் எடுத்துக் கொண்டுமங்கை யொருத்தி அங்கே வந்தாள் -
கறாராகச் சொல்ல முடியும் ; அவள் அந்தக்‘காந்தக்கல்’ அழகு மோகினியல்ல!
கண்ணை அகல விரித்துக் கொண்டுகாயமுற்றுக் கிடந்தோர் பக்கம்
இட்டடி நோக எடுத்தடி கொப்பளிக்கமெல்ல நடந்தாள்.....மிக மெல்ல நடந்தாள்.
உடல்கள் ஒன்றிரண்டைப் புரட்டிப் பார்த்தாள்ஒடிப்போன வீரர்கள் உடல் தவிர ;
மற்றவர்கள் மரணத்தை வரவேற்கும்மானமிகு வீரர்களாய்ச் சாய்ந்து கிடந்தார்
மருந்துக் கிண்ணமுடன் மங்கை நடந்தநடை ; நிமிர்ந்த நடை -எனந்தப் பீடு நடை பெருமித நடை என்பரேல் ;
பலருக்கும் பட்டா பதிவாகியிருந்த அந்தப்பகுதி நிலம் அத்தனையும் பாவி அந்தப் பண்ணைக்காரர் ;
பணம் நிரம்பப் பெற்றுக் கொண்டுபகிர்ந்து கொடுத்து ஏப்பம் விட்டு விட்டார்.
செய்த பாவத்தை மறைப்பதற்குச்செய்திடுவேன் யாக யோக மென்றும்,
ஜெயித்திடுவேன் பயமில்லை யென்றும்பயித்தியம் போல் பேசலானார் ;
உரிமையுடையோர்க்கு உடைமையாக்கிட வேண்டியதைநரிக்குணத்தார் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு
நல்லவர் பலரை நடுத்தெருவில் விட்டு விட்டாரேநாசமாய்ப் போக எனச் சபித்தவாறு,
ஊரே கொதித்தெழுந்தது ;உதயசூரியனும் உதித்தெழுந்தான்.
தானொன்று கிடப்பது போலத் துறையிலேதுணி துவைக்கும் கல்லொன்று கிடைத்து,
தொத்திக் கொண்டாள் தோகை ; அதன் மேலே“தோழர்களே ; காது கொடுத்துக் கேளுங்கள் ;
நான் சொல்லும் கருத்துக்களை!நாமோ சிலர் ; நடுக்காட்டில் வசிப்பவர்கள்!
நம்மீது எரிச்சலும் பொறாமையும் கொண்டோர் ;நம்மைப் போலவே சிலர்!
எரிச்சலைக் கண்டு எரிச்சல் அடைந்தால் மேலும்எரிச்சல்தான் மிகுந்து ; நம் சாம்பலே மிஞ்சும்.
தூண்டி விட்டு இரு தரப்பை மோத வைத்துத்துளிக்கூட புத்திசாலித் தனம் தேவையில்லை.
பண்ணையார் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார் - கட்டிலறையில்!பாடுபடும் பாமரர்கள் நாமேதான் பயணம் போகிறோம் கல்லறைக்கு!
கற்கால மனிதர்களாயிருந்துகால மாறுதலால்
படிப்படியாய் பண்பட்டு வருகின்றோம்.பகுத்தறிவும் பெற்றோம் என்பதற்கு
அடையாளமாய் அனைவரும்ஒன்று சேர்வோம் ; முதலில்
ஏற்றத் தாழ்வை நமக்குள்ளேயிருந்துஎடுத்தெறிவோம் குப்பைத் தொட்டியிலே! அதன் பின்னர்
எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்றுதற்குஏற்றிடுவோம் புரட்சிக் கொடி! கிளம்பிடு கிளர்ச்சி நடத்த!”
மளமளவென மடை திறந்தாற் போலமங்கையவள் பேசக் கண்டு -
காயம் பட்டோர் படாதோர் எல்லாம்வாயைப் பிளந்து கொண்டு, வந்து நின்று ;
அடடே அதிசயமாயிருக்கிறதே -அழகாகப் பேசுகிறாயே -
அதெப்படி முடிகிறதுன்னால் என்றுஅத்தனைபேரும் கேட்க ;அவள் பதில் சொன்னாள் -
“நான் எனக்காக மட்டும் பேசவில்லை -எல்லோருக்கும் பேசக் கற்றுக் கொடுக்கவேநான் பேசக் கற்றுக் கொண்டேன்” என்றாள்.
அதுவரையில் இருள் மறைவில்அசையாமல் படுத்திருந்த
விழுப்புண் நெஞ்சினிலே பெற்ற வீரனொருவன்விழித்துக் கொண்டு கேட்டான் ; “என்னைத் தெரிகிறதா மங்கை ?”
“என் தெரியவில்லை ? என்னவனல்லவா நீ!எதிரியின் முகாமில் ஏன் சேர்ந்தாய் ?
துரோகிகளைக் காண்பதே துரோகம்” எனத்தொலைவிற் சென்றாள்!
“மங்கை நீ என்னை மன்னித்தருள்க -எதிரிகளை இனம் புரிந்து கொண்டு ; பிறகுஇங்கேயே வந்து விட்டேன் ; தெரியாதா உனக்கு ?இப்போது நான் இறந்து கொண்டிருப்பதுபகைவனின் கணை என் நெஞ்சிலேபாய்ந்திருப்பதால்தான் ; பாரடி கண்ணே!” என்றான்.
“அய்யோ” என்றலறி அவன் உடலைஅணைத்துக் கொண்டாள்!
சாவு முனையில் அவன் கேட்டான் - “என்சுந்தரச் சிலையே! புரட்சி என்றாலே எப்போது ?கிளர்ச்சி என்றாலே எப்படி ?” என்று!
“கண்ணா ; நான் சொன்னதுகலகம் விளைக்கும் புரட்சியல்ல ;கலாச்சாரப் புரட்சி!சண்டை நடத்தும் கிளர்ச்சியல்ல ;சமூக நீதிக் கிளர்ச்சி!எல்லாமே அறவழியில்தான்!” என்றாள்.
செத்துக் கொண்டிருந்தவன் சிரித்துக் கொண்டே ;“கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் ; அப்படித்தானே ?” என்றான்.
“ஆமாம் ; கத்திப் பகைவன் கொண்டு வருவது ;இரத்தம் நாம் தருவது -அதுதான் அறப்போர்!” என்றாள்.
அவளை அணைத்தவாறேஅணைந்து அவன் உயிர்!

மூலமும் சான்றும்