கவிதை 5 / 58
தங்க மனம் வேண்டும்; அது தந்திடும் அன்பு வேண்டும்!
We Need a Heart of Gold; We Need the Love It Gives!
இன்றைக்கு ஏடெடுத்துஎழுதுகோலில் மை நிறைத்து
அன்றைக்கு ஆறாயிரம் ஆண்டின் முன்னேஆதி மனிதன் வாழ்ந்த நிலை
அவன் உண்டது, உறங்கியது, உய்த்தது அத்தனையும்அற்புதமாய்த் தீட்டிக் காட்டுகிறோம்.
ஆயிரம் வசதி வாய்ப்புகளைத் துணையாகஅழைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறோம் ;
அதன் முடிவுகளை எளிதாக அறிவித்து விடுகிறோம்.ஆனால் அய்யன் வள்ளுவர்க்கு மூத்த தொல்காப்பியர்
இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பேஇயற்றியது தொல்காப்பியத்தை எழுத்தாணி கொண்டன்றோ ?
ஓலையில் படைத்திட்ட ஒப்பற்ற அந்த வாழ்க்கை இலக்கணம்ஓரறிவுள்ள உயிர், உடம்பினால் அறியுமெனத் தொடங்கி,
ஆறறிவு என்பது மனத்தால் அறியக் கூடியது என முடித்து -அத்தனை வகை உயிர்களையும் எத்தனை அறிவு படைத்தவைஎன விளக்கும்
மகத்தான காவியத்தை வாழ்விலக்கண ஓவியத்தைமரஞ்செடி கொடி துவங்கி மனித வரலாறு கூறும் பாவியத்தை -இந்த
மண்ணிலோர் மலை ; மலையிலோர் சிகரம் ; எனமாசு மறுவற்ற மரபிலக்கணம் தந்தவரை,
மண்டியிட்டுத் தொழுது வணங்குவது ; மனித வரலாறு வரைதற்குமத்தியிலே ஆற்ற வேண்டிய மாபெருங் கடமை என்பேன்!
ஆறாயிரம் ஆண்டின் முன்னே மனிதன் ஆடையின்றி,அறுசுவை உணவு தயாரிக்கும் ஆற்றலின்றி,
அன்பு காதல் பாசம் கடமை என்ற உணர்வின்றி,என்புதோல் போர்த்த உடம்புகளிடை உறவு முறையின்றி,
பண்பு, ஒழுக்கமிவை பற்றி எண்ணிடும் பழக்கமின்றிகண்டதே காட்சி கொண்டதே கோலமாய்க்
காடுமேடு சுற்றித் திரிந்தான்ஆடு மாடு நட்பும் கொண்டான்.
பசியெடுக்கும் போதெல்லாம் பாதையில் பார்த்ததைப்பறிப்பதும் - பறித்ததைப் புசிப்பதும் - பழகிக் கொண்டது போல்
‘காந்தக் கல்லை’ அவன் கண்டாலும், அந்தக் கல்லேபார்த்தவுடன் அவன் பக்கம் வந்தாலும்
ஆந்தையும் கோட்டானும் போல்ஆனமட்டும் அவரவர் இரையை அவரவர் தேடிக் கொள்வர்.
அதன் பின்னர் இவர் யாரோ ? அவர் யாரோ ? ........அவதரிக்கப் போவதற்கு யார் பாடுவார் ஆராரோ ? ........
அப்படித்தான் இராகுல சாங்கிருத்தியாயன் கதையொன்றில்அழகு மோகினி திவாவும், ஆசைக் காதலன் சூர் என்பானும்
அணைத்து மகிழ்ந்து இதழ் குடித்து தமை மறந்து கிடக்கும்போது ;அன்பனே ; நீ என் அன்னையின் மகன்! அப்படியிருந்தும் உன்னைநான்
இதுவரை நெருங்காமல் இருந்தமைக்கு மன்னித்து விடுஎன்கிறாள்.இனி நீ என்பால் வெட்கப்படாதிரு, போதுமென்கிறான் ; பின்னர்அவர்கள்
வெள்ளத்தினோடொரு வெள்ளமுமாய்வீணையும் நாதமும் ஆகி விட்டார் -
விலகிச் சென்று பிறகு வேறு வேறுவீணை மீட்ட இருவரும் ஓடிவிட்டார் -
வரை முறையின்றி வழுக்கிடும் வாழ்க்கைவாய் மொழியில்லா சைகைக் காலத்து வாடிக்கை -
வேண்டாம் என்பதையும் கூடாது என்பதையும்விரும்பிட முடியாதென்பதையும் முகக்குறியால் காட்டுகின்ற
அபிநயக் கூத்துமொழியே அந்நாள் பேச்சுமொழியாம்அதன் பின்னர் வார்த்தை மொழி ஒலியெழுப்ப ஒரு வரலாறேஉண்டு
அடிபட்டால் “ஆ!” “ஊ!” என்று கத்துவதும் -அதி தொலைவில் இருப்பவரை “வா” என்று அழைப்பதுமே ;
அச்சத்தில் பதறிப் போய் ‘அய்யோ’ என்றலறுவதும் -ஆனந்த மிகுதியால் “ஆவ்” என்று சிரிப்பதுமே -
இரண்டாம் இடத்தைப் பெற்று, இசை ஒலி ஆயிற்றென்றால்இயல், இசை, கூத்துதானே அனைத்துமொழிக்கும் அடிப்படைஇலக்கணமாம்.
அடி நாக்கின் ஆதிக்கம் தான் நாளடைவில்அபிநய மொழியினையும் துறையில்லா அமைச்சராக்கி
‘யாகா வாராயினும் நா காக்க’ எனும் அய்யன் ஆணைக்கேற்பஅதிராம் நாவரசுக்கு அதிரடிப்படை காவல் அமைத்ததாம் -
நாகரிக மேன்மைக்கு வழிவகுத்த நா பேசத் தொடங்கிடவேநாற்பதாயிரம் ஆண்டுக்கு முன் விளைந்த முன்னேற்றந்தான்காரணமாம்.
பச்சையாக இறைச்சியினைப் பசி போக்கத் தின்ற மனிதன் -சுவைத்துண்ணஇச்சை கொண்டு சமைத்துண்ணத் தீ மூட்டக் கற்றுக்கொண்டான்.
வேட்டையாடி விலங்குகளைக் கொன்றால்தானே வயிற்றுப்பாட்டை சமாளிக்க வழி காண முடியும் - அந்த வேட்டையிலும்
போட்டி, பொறாமை, போர் என்று புதுப்புது பிரச்சினைகள் - நம்பாட்டி, முப்பாட்டி காலத்தில் முளைத்த இம்மோதுதல்கள் - இன்று
பேத்தி, பேர் காலத்திலும் நின்றபாடில்லை.....ஆத்தி சூடி கூறும் ‘ஆறுவது சினம்’ என்ற
அறிவுரை எவர் காதிலும் ஏறுவதில்லை ;அது ஏனோ தெரியவில்லை.
பகை வாழ்க்கையைப் பழகி விட்டஇக்கால மனிதர்களை விடவும் ;
குகை வாழ்க்கையில் நாகரிகமற்று நடமாடியஅக்கால மனிதர்கள் எவ்வளவோ மேல் என்று ;
எண்ணுகின்ற நிலைமைஏற்படாதிருப்பதற்கு ;
மண்ணுக்கு இருக்கின்ற தங்கமனம்பெண்ணுக்கும் ஆணுக்கும்
பெரிதாய் வேண்டும் ; அதுஅரிதாய்க் கிடைக்கும்.
அன்பைப் படைக்கும் -அமைதியை விளைக்கும்!
அடுத்தொரு கதை கிளைக்கும் ;அதற்கான விதை நாளை முளைக்கும்!