கவிதை 4 / 58
அன்றிருந்த கற்காலம் - இனி அமையாவிடின் நற்காலம்!
The Stone Age That Was — A Better Age If It Does Not Return!
“மாந்தக் குரங்குகுரங்கு மாந்தன் என
மாறி வரும் பரிணாம வளர்ச்சி வழியில்மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மாறுதலாய்
நிமிர்ந்து நடந்த குரங்கு மனிதன்நியாண்டர்தால் மாந்தன் என
நீண்ட வரலாற்றில் நெடிய தொலைவுதாண்டி வந்தவனைத் தரம் பிரித்துக்
கற்கால மனிதன், பொற்கால மனிதன்,செம்புக்கால, வெண்கலக் கால மனிதன் - என
இனம் வகுத்துச் சீர்படுத்திஇரும்புக் கால மனிதன் வரை
இட்டுக் கட்டி எழுதலாம் பல கதைகள்!இருப்பதை வைத்துத் தான்,
மறைப்பதை முடிந்த வரை மறைத்து நான் -மன்றத்தில் ஆட வந்துள்ளேன் ; பேனா நாத்தனம்”
பேசிக் கொண்டே இவ்வாறு பீடு நடைபோட்டுப்பெருமிதம் பொங்கிடப் பேனாவின் மூடி திறந்தார்.
சொக்க வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்சொன்மழை பொழிகின்றார் நனையுங்கள்!
காலம் கி.மு. ஆறாயிரம் என்று கணக்கிட்டுக் கொண்டு - அன்று,ஞாலம் பெற்றிருந்த நாகரிக ஞானம் கருதிப் பார்ப்போம்!
“வால்கா” எனும் வரலாற்றுப் பின்னணியின் முதல் கதையில்வாய் திறந்து பேசுகின்ற பாத்திரங்கள் ; என் கதையினில்பேசமாட்டார் -
காரணம் ; கற்காலத்து மனிதர்கள் பேச்சாற்றல் பெறவில்லைஎன்பதுதான்!காலம் பல கடந்தால்தான் கடுகளவுப் பேச்சுப் பின்னர் கடல்அளவுமுழங்கிடுவர்!
இதயங் கவர் எழுத்தாளர் இராகுலர் கண்டஉதய சூரியனைத்தான் நானும் கண்டேன்
நான் பெறும் இன்பம் என் நண்பனும் பெற்றிடநடந்திடுக நண்பா என்னோ டென்றேன்.
இருவருமே இணைந்து சென்றோம் ;எதிர்வரும் ஒரு பெண்ணைக் கண்டோம்.
புதிர் ஒன்றும் நான் போடவில்லை ;புடவையேதும் அவள் உடலில் இல்லை.
புலித் தோலோ, நரித்தோலோ கூட - அவள்பொன் மேனி மறைக்கவில்லை.
கிளி மூக்கு அவளுக்கு ;கிளி நோக்கு எங்களுக்கு!
உடையேதும் அணியாத தேன் ?தடையேதும் விதித்ததோ இடை ?
நடை வேகம் காட்டுகின்ற பெண்ணேவிடை யென்ன சொல்லுவாய் கண்ணே - என
வினவிடத்தான் விரைந்து சென்றேன் ; அவள்சினமுற்று சிலையொன்று செல்வதுபோல் சென்று விட்டாள்.
சென்றவளைப் பின்தொடர்ந்துசெங்குத்தாய் நின்ற பாறை யொன்றில்
ஒளிந்திருந்து உற்றுப் பார்த்தோம்ஒரு வேயாத் திறந்த வீடு
ஒரு மறைவு மில்லாமல் வாழும் கூடுதிரை மறைவு கட்டக் கூடத் தெரியாத குப்பைக்காடு!
வளைந்து செல்லும் வீதியிலே குமரி ; அவ்வீடு நுழைந்துகுனிந்து நிமிர்ந்தாள் கூர் மார்பு குலுங்கி நிற்க!
விளைந்து வந்த கரும்புக்குத் துதிக்கை நீட்டி, மிகவிரைவாகப் பசி தீர்த்துக் கொள்ள பதற்றம் காட்டி,
ஆணைகள் மூன்று வாய் பிளந்து நிற்கின்ற விதமாக,ஆடவர் மூவர் அவளைச் சுற்றிக் சூழ்ந்து கொண்டார்.
பாவையின் பரட்டைத் தலையைப்பாசமுடன் தடவிக் கொடுத்தான் ஒருவன்! தடவிக்
கொடுத்தவனைத் தடுத்து நிறுத்திக்கெடுத்து விடாதே கிடைத்த வாய்ப்பை யெனக் -
கோபத்தைச் சைகையால் உணர்த்தி ; இப்போதென்தாபத்தைத் தீரடி யென்று அவளிடம் வலியுறுத்தி ;
இஞ்சி இடுப்பழகை இறுகப் பற்றி அணைத்துக் கொண்டான்வஞ்சி அவளும் துவண்டு கொடுத்தாள் அல்லித் தண்டாக!
வாழைப் பூ மொட்டுதனை வலியக் கொடுத்துவிட்டு ; அதனைக்கோழையின் கையில் கொடுத்தகூர்வாளென ஆக்கிவிட்டாள்
வகை தெரியா மண்டூகமென அவனை கையினால் எறி விட்டு ;வகையறிந்த மூன்றாமவன் ; அவனை விரட்டி விட்டு,
அவளையும் வேட்டையாடி விளையாடித் தீர்த்து விட்டான்.....அத்தனையும் நண்பர் இருவரும் வேடிக்கை பார்த்திருந்தோம்...
காட்டுமிராண்டித்தனமான காட்சிதான் எனினும் ;கற்புக்குப் புனித இலக்கணம் சொல்கின்ற இந்தக் காலத்திலும்
கற்கால நாகரிகத்தைக் கடைப்பிடிப்போர் உண்டு ; அவரெல்லாம்கடைவாய்ப் பற்களைப் போல ஒளிந்திருந்து காரியம் சாதிப்போர்.
பச்சையாக எதுவும் பேசுவோராயினும் ;பதுங்கிப் பாய்ந்து பலனடையும் பேர்வழிகளாயினும் ;
மிச்சம் சிறிது மனச்சாட்சி வைத்திருந்தால்அச்சமின்றி அவை நடுவே ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார் -
ஆறாயிரம் ஆண்டின் முன்னே அமைந்திருந்த கற்காலம்அடுத்து வரும் ஆண்டிலேயும் அமையாதிருப்பதே நற்காலம்!
முத்தனைய பெண்மணியுடன் மூவருலாஎத்தனை முறை நடந்ததெனக் கணக்கில்லை
சத்ததெல்லாம் இழந்து மங்கை சவமாக ஆவதற்கும் வழக்கில்லைசமுதாயத்தில் அதற்கும் ஒப்புதல் சான்றிதழ் தருவதாகவே ;கண்ணியம் கெடுவதற்குக் கணக்கு வழக்கே இல்லை!புண்ணியம் உண்டு உமக்கு ; புழு புழுத்தப் “புரட்சிப்”பேச்செல்லாம் இங்கு வேண்டாமே!
கற்பு நிலை இருபாலார்க்கும் பொதுவில் வைக்கும் புத்திபெறுவோமே ;அற்பமென்று மக்கள் நினைத்திட யாரும் கத்தி தீட்ட வேண்டாமே!
பெரியாரும் அண்ணாவும் பாரதியும்பெண்ணுக்குப் பேசப்படும் கற்பு
ஆணுக்கும் பேசப்பட வேண்டுமெனப்பெரும் புயலாய் வீசினரே தவிர ;
கற்பைப் பற்றி இரு பாலாரும்கவலைப்படக் கூடாதென்றா கட்டளை பிறப்பித்தார்கள் ?
இப்படிக்கருத்தாய்வு நடத்திய இரு நண்பர்களும் ;கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்
ஆண் பெண் சமத்துவமென்றால்ஆலகால விஷத்தில் இருவர்க்கும் சம பங்கு அளிப்பதல்ல ;
அமுதத்தைத்தான் அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும்அமரர்க்கு அமுதமும் ; அசுரர்க்கு விஷமும் எனும் தீர்ப்பு ;
புராண காலத்துப் பொருந்தாத் தீர்ப்பு ; அந்தத்தீர்ப்பை அறவே ஏற்காது புரட்சியில் பூத்த புதிய வார்ப்பு!
விவாதமெல்லாம் முடிந்து திரும்புகையில்இரு நண்பரில் ஒரு நண்பன் கேட்டான் ;
“ஆமாம் ; அந்தப் பெண்ணின் பெயரென்ன ?”
“அவள்தான் பேசாதவளாயிற்றேநடந்த தெல்லாம் நாடக மொழிதானே நண்பா - நம்
ஆசைக்காக ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம்கற்காலத்து நாடகம் நாம் கண்டதாலே ; ஆண்களைக்
கவர்ந்து அவள் இழுத்துக் கொண்டதாலேஇரும்புக் காலம்தான் இனி வரப் போகிறதென்பதாலே - இரும்பை
இழுத்துக் கொள்ளும் “காந்தக்கல்” என்று இவளுக்குப்பெயரிடுவோம் ; முதலில் இந்த இடம் விட்டுப்பெயர்ந்திடுவோம்” என்றான் அந்த நண்பன்!
( நியாண்டர்தால் பள்ளத்தாக்கில் வாழ்ந்தவன் நியாண்டர்தால்மாந்தன் என்று அழைக்கப்பட்டான் )