கவிதை 3 / 58

‘காந்தக்கல்’ கதையொன்று!

A Story of the ‘Magnet Stone’!

X
பழம் பெரும் நாகரிகத்தின்தொடக்கம்தான் என சுட்டிக் காட்டப்படும்
எகிப்து, மாயா, மொசபடோமியாஅவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு
எடுத்த எடுப்பிலேயேசிந்துவெளி நாகரிகம்
கண் சிமிட்டிக் கவருவதால்கருநிலை அதற்கெங்கே யென்று
கடும் ஆய்வு நடத்தியவர்கள்கடலுள் மூழ்கிய குமரிக் கண்டப் பகுதியைக்
கண்டு பிடித்துக் ‘கருவூர்’ அதுதான் எனக்கழறுகின்றார் ; நாமும் காணுகின்றோம்.
மலைப்பு விளைக்கும் கேள்வியொன்றைமதிவாணர் எழுப்பி விடையும் கூறுகின்றார்.
குரங்கிலிருந்து மாந்தன் தோன்றியதாய்ப்பரிணாம வளர்ச்சி பகர்கிறதே ;
இன்றுள்ள குரங்குகள் ஏன்அன்று போல் மாந்தராய் மாறவில்லை ?
சிறிய செடி பெருமரமாய் வளரும்போதுஉச்சக் கிளை மட்டுமே உயர்ந்து கொண்டே போகும்
பக்கக் கிளைகள் நாம் பார்த்த இடத்திலேயேநிற்கும் நிலை போலவே
படி முறை யெனும்பரிணாம வளர்ச்சியும்
பாடமாய் அமைகிறதுபகுத்தறிந்து பதில் தருகிறது.
மிதித்துக் குழைத்த சேறு ; நாம்மதித்துக் காத்திடும் சுவராய் மாறுது!
குழைத்த இடத்தில் கிடக்கும் சேறு ;குட்டிச் சுவரொன்றுகூடப் பெறுவதில்லை வேறு -
குரங்கினமும் அப்படித்தான்கொலுவேறிக் குந்துகின்ற
மனித இனமாக ஒரு பக்கம் உயர்ந்தாலும்மண்ணிலே குழைத்த சேறு மிச்சமாக
மண் மீதே கிடப்பது போலமனிதரிடை மாந்தக் குரங்கும் இருக்கும்.
மாளிகை யொன்றை எழுப்புவதற்கு முன்புமண் குடைந்து அடித்தளம் அமைத்திடல் வேண்டுமன்றோ!
அறிஞர் இராகுல சாங்கிருத்தியாயன்அப்படித் திட்டமிட்டு ஆதிகாலத்து வரலாற்றை
அரிச்சுவடியில் துவங்காமல் ; ஆறாயிரம்ஆண்டுக்கு முன்பிருந்து துவங்கியதே
வால்காவிலிருந்து கங்கை வரை எனும்இருபது கதைகளடங்கிய எண்ணக் கருவூலமாம்.
இப்படிப் பலரும் எழுதிய கருத்துகள், கதைகள்,ஒப்பிலாக் கற்பனைகள் ஒன்றாகத் தொகுத்தளிக்கும்
முயற்சியிலே முனைந்து நின்று முந்தை நாள் தொட்டு ; சிலமுத்தாரக் கதைகள் சொல்லி ;
அயர்ச்சியிலே உமை ஆழ்த்தாமல்அமைத்துச் செல்கின்றேன் என்னோடு பயணம் வாரீர்!
காலடி பெயர்ந்தவுடன் அடுத்த நொடியில்காலப் பேழை கண்ணுக்குத் தெரியுமென்றும்
கவிதைச் சாவியிட்டுத் திறந்து பார்க்கலாமென்றும்கனவில் மிதந்து கொண்டு என்னோடு வாராதீர் -
அள்ளிப் பருகி ஆட்டம் போடலாம் கங்கை காவிரி நீரையென்றுதுள்ளிக் குதிக்காதீர் - பின்னர் துவண்டு போகாதீர்!
நாகரிகம் நடை பயிலத் தொடங்கிய தாழ்வாரம்நமது குமரிக் கண்டமென்பதற்கு உண்டு பல ஆதாரம்!
அதனால்தான் இந்திய நாட்டு வரலாற்றைக் கூடகங்கைக் கரையிலிருந்து எழுதாமல் ;
காவிரிக் கரையில் தொடங்குவதே பொருத்தமெனவின்சென்ட் ஸ்மித் சொன்னதை விளக்கிக் காட்டிய அண்ணா
“ஆற்றோரம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின்அழகை மட்டும் சுவைத்தால் போதுமா ? அந்தச்
சூடும் சொரணையும் அகலாதிருக்கத் தமிழனுக்குச்சுயமரியாதை உணர்வு தலை தூக்கிட வேண்டாமா ?
காட்டுமிராண்டியாக மனிதன் வாழ்ந்தது உண்டு -காட்டுவது தவறென்று தெரியாமல் முழு உடலைக் காட்டியே
ஆண் பெண் இருபாலார் வாழ்ந்த கற்காலம் இருந்ததும் உண்டு -அபிநய மூலமே அவரவர் எண்ணம் அறிவித்ததும் கண்டு -
ஆதி மனிதனின் ஆரம்ப மொழி நாடக மொழி யென்றும்அடுத்த கட்டம் அவன் இசை மொழி பேசத்தொடங்கினானென்றும்
இயல் என்பது இவற்றுக்கு அடுத்ததே யென்றும்இன்றைக்கு இயல் இசை நாடகமெனப் பட்டியலிட்டாலும் ;
அன்றைக்கு நாடகமே முதலிடம் பெற்று எண்ணத்தை வெளியிட்டுஎன்றைக்கும் இசைக்கு இரண்டாம் இடமேயென வரிசை பெற்று
இயல் என்பது முந்திக் கொண்டு முதலிடம் பெற்றதே மொழிவரலாறாகும்!இதில் கூத்து மொழி மட்டுமே இருந்த காலமாம் -
இருண்டகாலமாய்த் திகழ்ந்த ;கடந்த காலமாம் கற்காலத்து
மாந்தர் நிலை மறைக்காமல் தொடர்ந்து‘காந்தக் கல்’ கதையொன்று சொல்லுகின்றேன்.

மூலமும் சான்றும்