கவிதை 2 / 58
படிமுறை வளர்ச்சி
Stagewise Development
வாழும் இந்த உலகின் வயதுஅய்நூறு கோடி ஆண்டுகளாம்
நாகரிக வளர்ச்சி அடிப்படையிலும்நானில உயிர் இனப் படிமுறைக் கணக்கிலும்
அய்ந்து லட்சம் ஆண்டு முதல்அதனையொட்டிப் பத்தாயிரம் ஆண்டு வரை
கி.மு. காலம் எனப் பிரித்துப் பார்த்து ;கிழப் புலிகள் நம் முன்னோர்கள்
இதனைத் தான் இலெமூரியா காலமென்றார்...எஞ்சிய காலந்தான் குமரிக் கண்டம்,
தோற்றுவித்த நாகரிகத்துடன்சிந்துப் பெருவெளியில் மக்கள்
ஏற்றிருந்த சிறப்புமிகு நாகரிகக் காலமாகும்.மாற்றுக் கருத்தேதும் இல்லாத காரணத்தால் - பத்தரை
மாற்றுக் கருத்து இதுதான் எனமனத்தில் பதித்துக் கொண்டால் ;
எண்பது கோடி ஆண்டுக்கு முன்புஇவ்வுலகில் உயிர் தோன்றியதையும்
நாற்பது லட்சம் ஆண்டின் முன்னேநடந்தான் தரையில் நம் குரங்கு மனிதன் என்பதையும்
வரைந்து காட்டும் வரலாற்றுப் பேரறிஞர் குறிப்புகளைவரிக்கு வரி ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
அய்ந்து லட்சம் ஆண்டின் முன்னேஅவதரித்த காலமே முதற் கற்காலம்!
அய்ம்பதினாயிரம் ஆண்டுக்கு முன்பேஅழகிய ; குமரி கண்ட நாகரிகம் ;
அதுதான் குமரிக் கண்ட நாகரிகம்!அரும்பியது அங்கே - எனினும்
ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பு வரை அது ;சிரித்துச் செழித்திருந்து சிந்து வெளியில்!
இலெமூரியா கண்டமெனஇனிய நம் குமரிக் கண்டத்துக்கு ;
இன்னொரு பெயர் வாய்த்த காரணம் என்னே ?இரவில் இரை தேடக் கிளம்பும் இலெமூர் குரங்கினம் ;
இக்கண்டத்தில் எங்கும் நிறைந்திருந்த காட்சி கண்டுஇரவில் திரியும் பேய் என்பதற்கு இலத்தின் மொழியில்
‘இலெமூர்’ என்றும் பெயர் இருந்ததாலேஇப்பெயராலே ‘கிளேட்டர்’ என்பவர் கண்டலாய் அழைத்தார்.
ஒருவேளை உருமாறிச் சீறியும் அளவுக்குப்பெருங்குமரிக் கண்டத்தைப் பேயாட்டம் நடத்திக் குறுக்கி
நிலம் புடை பெயர்த்ததாலே நீலியே இனி உனக்குஇலெமூரியா எனும் பெயரே ஏகப் பொருத்தமென
இட்டன்றோ வரலாற்றுப் பேராசிரியப் பெருமக்கள் ;எனவோர் ஐயப்பாடும் எனக்கு உண்டு என்பேன்!
இவற்றையெல்லாம் இன உணர்வுப் பாவாணர்தேவநேயர் தெளிந்துரைத்த வரலாற்று வழி நின்று
இனிய நண்பர் பன்மொழி அறிஞர் இரா. மதிவாணர்எழுபத்தி ஐந்தாம் ஆண்டு எனக்கென வழங்கிய
“இலெமூரியா முதல் அரப்பா வரை” என்றஏற்றமிகு புத்தகத்தின் துணைக் கொண்டும் - இராகுல
சாங்கிருத்தியாயன் எழுத்துக்களின் பின்னணியுடனும் ;சரித்திரப் புதையல்கள் பலவற்றை ஆய்ந்தறிந்தும் -
சாறு பிழிந்து தருகின்றேன் கவிதை நடைத் தொடர் காவியம்மாறுபடும் கருத்துடையோர் மடல் மூலம் தெரிவித்திடின்மகிழ்வேன் ; புகழ்வேன்!
மாற்றம் எதுவும் மறுநாள் விழித்ததும் வந்திடவில்லைமாந்தக் குரங்கினம் எழுந்து நிற்கவே ;
மாமங்க காலம் ஒன்றிரண்டு பல கோடி வரவேண்டியிருந்தது.மனிதனாய்க் குரங்கு மாறிட மாநாடு போட்டுத் தீர்மானம்நிறைவேற்றினால் போதுமா ?
பரிணாம வளர்ச்சி என்பது பல்லாயிரம் ஆண்டுகள்பட்டறையில் வைத்து உளியொன்றை உடை வளர்க்குவதன்றோ ?
இலெமூர் குரங்குகளுக்கு பற்கள் முப்பத்தி ஆறுஇதற்கடுத்துத் தோன்றிய குரங்கிற்கு முப்பத்தி நாலு -
மனிதக் கணக்கில் மாறி விட்ட பல் எண்ணிக்கையல்ல - அந்தஎண்ணிக்கை மாற்றத்துக்கே இடையில் எத்தனையோநூற்றாண்டு!
கற்கால மனிதர்க்கு பற்கள் முப்பத்தி இரண்டென முளைத்துளதும் ;பிற்காலத்தில் இருபத்தி எட்டேதான் என மாறிவிடும் என்கிறார்.
வாலூன்றி நின்ற வானரப் பிராணிகாலூன்றி நிற்பதற்கும் நடப்பதற்கும்
ஒலிம்பிக் தட களத்தில் ஓடுகின்றமனிதப் பிராணி ஆவதற்கும்
இடையில் ஓடியது ; எத்தனை ஆயிரம் நூற்றாண்டு -இதற்குப் பெயர்தானே படிமுறை வளர்ச்சி என்றும்,பரிணாம வளர்ச்சி என்றும் பகிர்ந்திடுவர்.
( படிமுறை வளர்ச்சி = Evolution )