கவிதை 1 / 58

பொது உலகம்

The Common World

X
வெளி! வெளி! வெளி!யாரும் பார்க்காமல் -
பார்க்க முடியாமல் ;பார்த்திட யாருமே இல்லாமல்பரவிக் கிடக்கும் வெளி!ஒளி வந்தது முதலில் -
எந்தத் திசையில் ?தெரியாது ; தெரியவே தெரியாது.
வந்த திசைக்குத்தான் வழங்கினோம் பெயரை!வணங்குகிறோம் திசையை!
வெளியையும் கண்டதில்லைஒளியையும் பார்த்ததில்லை
நாமே இல்லாத போதுநமக்கேது பார்க்கும் சக்தி ?
பாழ் வெளியில் பற்பல ஒலிகள் !பற்பல நேரங்களில்!
யாரும் கேட்காமல் ;கேட்க முடியாமல்
கேட்க யாருமே இல்லாமல்!
பல கோடி இடிகள்ஒரு கோடியில் இடித்திட
சிவப்புக் கோள்நெருப்புப் பந்துகள்
சீறிப் பாய்ந்துசிதறிப் பறந்தன.
ஒன்பது பத்து கோள் இருக்குமென்பார்ஒன்றிரண்டு கூடவும் இருக்கலாம்
உலகம், அவற்றில் ஒன்றென உறுதியானது ;கலகமும் பிறகே ஆரம்பமானது!
இது எதுவுமே அப்போது தெரியாது ;எத்தனையோ கோடி ஆண்டு கழித்தே ;
தண்ணீர் கேட்டது தாகமெடுத்த உலகம்!கண்ணீர் கொட்டியது ‘இல்லை’ என இயற்கை
மழை அதுவென பெயர் மாற்றிச் சொல்லிமன ஆறுதல் பெற்றது பூமி!
உடற் கொதிப்பை ஆற்றிக் கொண்டுகடற் பரப்பாய் மழை நீரும் தேக்கியது.
நீர், நிலம், காற்று, விண்வெளிநெருப்பு - ஐம்பெரும் பூதங்களிடையே ;
நித்தமும் பகையாம் ; நிலையான உறவாம்.முத்தமிடாமலே உயிரினம் புதுப் புது வரவாம்
அதிலும் மாறுதல் அவற்றுள் மாறுதல்புதிதாய்க் கண்டு புணர்வும் கொண்டு
புழு, பூச்சி, புள்ளினப் பெருக்கம்பொல்லா விலங்குக் கூட்டம் -
பொறுமை நிறை வீட்டுப் பிராணிகள் கூட்டம்பொலிவு மிகும் பரிணாம வளர்ச்சியில் நாட்டம்.
குரங்கிலிருந்து மெதுவா மெதுவா குதித்த மனிதர் நாம் -அரங்கில் நின்று கொள்கைக் குரல் கொடுத்திடுவோம் ;“உடைமை பொது - உரிமை பொது ;உலகம் தனியார் சொத்து எனல் தீது!”

மூலமும் சான்றும்