கவிதை 18 / 58
தேய்ந்தது போக மிச்சத்தைத் தேடுகின்றோம்!
We Seek What Remains After the Rubbing Away!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: தேய்ந்ததுபோக மிச்சத்தைத் தேடுகின்றோம்!
வகைப்படுத்தி வரலாறு தொகுத்துவழங்குதற்கு வல்லுநர் யாரும்; தமிழர்க்குவாய்க்காத காரணத்தால்;கல் வெட்டுக்களும், காவிய காப்பியங்களும்காலமாகாத இலக்கியச் சான்றுகளுமே,அந்நாள் தொட்டு இந்நாள் வரையிலானஅருந்தமிழர் வரலாறாய் அமைந்த தன்றோ!எல்லார்க்கும் முற்பட்டஎழுச்சி மிகு பாண்டிய மன்னன்நெடியோன் என்போனும்,மேருமலை உச்சி வரையில்ஏறு நடை போட்ட சோழன்கரிகால் பெருவளத்தானும்,கண்ணகி சிலைக்குக்கல் எடுக்க இமயம் சென்று,கனக விஜய மன்னர்களை வென்றசேரனாம் செங்குட்டுவனும்,மூவாயிரம் ஆண்டின் முன்னே - நம்மூதாதையர் எனும் சரித்திரமுத்திரை பெற்றவர்களாம்.கங்கை, வங்கம், கலிங்கமெனக்களம் பல கண்டு பகை வென்றவர்களாம் - நம்கண் மூடினும் - அவர் பெயரைமண் மூடாதெனும்வரலாற்று நாயகர்கள்! அவர்தம்வழித் தோன்றல்கள்; எத்தனையோசேர, சோழ, பாண்டியர்களாம்!
“விண்ணை இடிக்கும் தலை இமயம் - எனும்வெற்பை அடக்கும் திறனுடையார் - சமர்பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்பார்த்திபர் நின்ற தமிழ்நாடு” என்றும்,
“சிங்களம், புட்பகம், சாவகம் - ஆகியதீவு பலவினும் சென்றேறி - அங்கேதங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்றுசால்புறக் கண்ட தமிழ்நாடு” என்றும்,
“சீனம், மிசிரம், யவனரகம் - இன்னும்தேசம் பலவும் புகழ் வீசிக் - கலைஞானம், படைத்தொழில், வாணிகமும் மிகநன்று வளர்த்த தமிழ்நாடு” என்றும்,பாரதி பாடியுள்ளவை கவிதைகள் மட்டுமல்ல; தமிழர்வீரம், விவேகம், வாணிபம், கலையுணர்வும் - இவைஆழ்கடல் தாண்டியும் ஆதிக்கம் செலுத்தியவை என்பதற்குஅசைக்க வொண்ணா ஆதார விதைகளுமாம்!
இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின்,இன்னும் அமெரிக்கப் பகுதிகளிலும்ஏலம், சுமோர், எகிப்தியர்களுடனும்நாகரிகத் தொடர்பு நம் திராவிடர்க்கு உண்டு - எனஎவர்தான் மறுத்து வென்றுள்ளார் ?
கருப்பு வைரம் என்று நாம் இங்கேவிருப்புடன் இரும்பினைப் புகழ்வது போல்மெக்சிகோ வாழ்ந்த மக்கள் இனம்;‘மாயன்’ நாகரிகத்தைப் போற்றித்திராவிட நாகரிகம் அதுவென ஏற்றி - அவர்தம்திடமான கருப்பே அழகு திகழ் நிறமென்கிறார்.
“நிக்கிதோ சிந்தோ” என்றால் அவர் மொழியில்‘கருப்புதான் கவின் மிகு நிறம்’ எனப் பொருளாம்.
எழுத்தும் நாகரிகமும் எகிப்தியர் கற்றுகுமரிக் கண்டத் தமிழர் வழங்கிய கொடையாகும்.மெசபொடோமியா நாகரிகம் மேன்மையுற்றதும்எலாமியர் என்போர் ஏற்றம் பெற்றதும்அழிந்த குமரிக் கண்டம் அழிவதற்கு முன்புபொழிந்த நாகரிக நறுமலர்ப் பெருமழையே,காரணம் என்பார் வரலாற்றாய்வு கற்றறிந்தகள்ளமிலா நல்லறிவாளராம் நடுநிலையாளர்!
“மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்து வெளி,எகிப்து, சுமேரியா, எங்கணும் பரவியது;தமிழர் நாகரிகமே” என்று, தக்க சான்று பகருகின்றார்.தகுதி மிகு இராமச்சந்திர தீட்சிதர் என்பார்;“தமிழர் தோற்றமும் பரவியதும்” என்ற நூலில்!
திராவிட இனத் தமிழர் நாகரிகம் பண்பாடுதிக்கெட்டும் பரவியிருந்ததற்கும் - அவர்திறப்பாடு ஓங்கி வளர்ந்துள்ளதற்கும்தெளிவுமிக்க சான்றுகள் இருந்த போதும் -
தேய்த்தரைத்த சந்தனத்தை யாரோ எவரோதேகமெல்லாம் பூசிக் கொண்டு; திருவிழா கொண்டாடவும்தேய்ப்பதற்குப் பயன்பட்ட சந்தனக் கட்டையில்தேய்ந்தது போக மிச்சத்தையாவது - நம்தமிழர்க்குப் பயன்படுத்ததேடுகின்றோம்; தேடியலைகின்றோம்!அதுதான் இந்தக் காலப் பேழை!