கவிதை 17 / 58
உலக வரலாறு எங்கிருந்து வருவது?
From Where Is World History to Come?
கோடி - கோடி - கோடி -எத்தனை கோடி ஆண்டுகளுக்குமுன்போ; ஓராண்டு - ஒரு திங்கள் -ஒருநாள், ஒரு நாழிகை, ஒரு நொடி -எதிரே இருப்பது எதுவென்றோ;எவரென்றோ எதுவும் தெரியாதஇருள் - இருள் - இருள் -அந்த இருளின் நிறம்;இப்போது தெரிகிறது,கறுப்பு என்று! ஆனால்அப்போது தெரியாது - காரணம்;கண்டதில்லை; எந்த வண்ணத்தையும்!கறுப்பு, சிகப்பு, பச்சை, மஞ்சள்,நீலம். வெள்ளை இப்படியெல்லாம்ஒவ்வொரு நிறமாகப் பெயர் சூட்டஅந்த நிறமும் எம்முன்னால்தனித்து வந்ததில்லை.அன்று நாம் கண்டதெல்லாம்;கறுப்பு நிறம் ஒன்றுதான் எனஇன்று உணருகிறோம்அதற்கு அப்போதுவெள்ளை என்று பெயர் வைத்திருந்தால்;இப்போது இருட்டின் நிறம்;வெள்ளை - வெள்ளையேய்தான்!
யாரோ உரசிக் கொண்டுசென்றது போலவோர்; அருகில்நின்றது போலவோர்; உணர்வு!
யார் அது? ஆதாம் - ஏவாளா?அல்லது நாமேதானா?
விடை காண்பதின் முன்பேவெடித்தது எதுவோ?சிதறியது என்னவோ?பதறியது இதயம்!
அத்தனை பெரிய ஒலியைபிரமாண்டங்கள் ஆயிரத்தைஅடுக்கி வைத்து; அந்தப்பிரமாண்டத்திற்கெல்லாம்பெரிய பிரமாண்டம் வீழ்ந்த ஒலியை;காது செவிடுபடுவதற்கு முன்னால்கேட்டிருக்கலாம் அல்லவா?ஆனால் கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை.
அந்த ஒலி பதிவானதற்குஅடையாளம் மட்டுமேகோடு கிழித்தாற் போலஆரம்பத்தில் சொன்னபடிகோடி - கோடி - கோடிஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்தது!கோடிக் குஞ்சுகளை அடைத்து வைத்துள்ளகூடைக்குள்ளிருந்து கிளம்பிடும் சப்தம்;இப்போது கேட்கிறது -இதே சப்தம்தான்பக்கத்திலிருந்தும் கேட்டது -நமக்கு மேலும் கீழும்நன்றாகவே கேட்டது!அந்தக் கூடைகள் அன்றும் இன்றும்;ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன!நாமிருக்கும் கூடையும் கூடத்தான்!அதோ ஒரு கூடை; அது ஏன்நம்மைச் சுற்றுகிறது?இல்லை - இல்லை - நாம்தான் அதைச்சுற்றுகிறோம் - சுற்றிக் கொண்டிருக்கிறோம்!
அடடே; நமக்கு நாமேசுற்றிக் கொண்டிருக்கிறோமே;நமக்குத் தொலைவில் தோன்றிதொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பன வெல்லாம்;நம்மைப் போல் கோடிக் குஞ்சுக் கூடைகளா?எல்லாக் கூடைகளும் சுற்றுகின்றனவா?நமக்கு எப்படித் தெரியும்?நாம்தான் இருட்டுக்குள்இருட்டின் நிறமே எதுவென்றுதெரியாமல்,குருட்டு நிலையில் கிடக்கிறோமே -நம்மை நாமே சுற்றிக் கொள்கிறோம் -அது நமக்குத் தெரியாத அசைவு!அதற்கு யாரும் நம்மிடம் பெற்றதில்லை இசைவு!நம்மைப் போல் வெடித்துபிளவுபட்டதுகள் - நம்மைப் போலவேபிரபஞ்சம் என்ற பெயரில்சுழல்கின்றனவா? வேறு எதனையும்அல்லது யாரையும் சுற்றி வருகின்றனவா?நாம் மட்டும்தான் பிரபஞ்சமா? எல்லாமேசேர்ந்து பிரபஞ்சமா?எதுவோ இருந்து தொலைக்கட்டும்;இப்போது நமது பணி என்ன?நமக்கிடப்பட்ட கட்டளை என்ன?பணியோ; கட்டளையோ - நாம்நிறைவேற்ற முன்வராவிடினும்நிறைவேற்றத் தொடங்காமல்கிடப்பிலேயே போடப்பட்டு விடாமல்இயங்குகிறது! இயங்குகிறது!இயங்கிக் கொண்டே இருக்கின்றது.எத்தனை கோடியோ; அத்தனை கோடிஆண்டுகளாக; அந்த “இயங்குதல்”தொடர்கிறது - இடை இடையேஏதோ அதிர்வுகளால் என்னவோ; என்னென்னவோ
மாறி மாறி நடைபெறுகின்றன -அதை நாம் பிறகுதான்அறிந்து கொள்ள முடிகிறது-முன்னாலே அறிந்து கொண்டாலும்அதனைத் தடுத்திடும் வலிமை நமக்குவழங்கப்படவில்லை -வழங்குவதற்கென்று யாரும்இல்லாதபோது; எப்படி வழங்கப்படும்?யார் வழங்குவார்கள்?நான், நீ உட்பட - அதாவது நாம்,கோடானுகோடிஆண்டுக்கு முன் வெடித்துச் சிதறியஒரு கூடைக்குள் குஞ்சுகளாய் இருந்தோம், இருக்கிறோம்;நமது கூடையைப் போல!இதோ உவமையேசொல்லுகிறேன் -சில்லென்று மென் காற்று வீசும் கடற்கரையில்காற்றுக் கொப்புளங்களைச் சிறுவர்கள்ஊதி ஊதிப் பறக்க விடுகிறார்களே; அவைகளும்வெடிக்கும் வரையில் பறக்கின்றனவே;பலூன்களைப் போல!அவற்றில் ஒன்றுதான் நாம் ஏறியிருக்கும் -ஏறப் பட்டிருக்கும் - ஆகாயக் கூடை -அந்தக் கூடையைக் காற்று அலைக்கழித்து;கடல் நீர் மோதிக் குலைத்து, கடற்கோள் -புயல், சூறாவளி என இயற்கையின் சண்ட மாருதஎதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து நிலைத்துபோக எஞ்சிய துண்டு துணுக்குகளைஎட்டிப் பிடித்துக் கொண்டு தான்தொங்குகிறோம் -அந்தத் தொங்கலில் நம்மைத்தற்காலிகமாகத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பதும்;தாக்கித் தகர்த்துத்
கொண்டிருப்பதும்;நம்மால் அறியப்பட்டுள்ளஇயற்கையேய்தான் -அதன் படைப்பில்தான்அன்றும் - இன்றும் - நாம்உருவானோம் - நமது கூடுகள்; ஆம் -கோடிக் குஞ்சுக் கூடுகள்;குக்! குக்! குக்! என்றகோரஸ் ஒலியோடு கூடிய கூடுகள்!அவற்றில் முதல் கூடு; குமரிக் கண்டமா?ஆப்பிரிக்க நிலமா? வேறு ஏதாவது?கண்டு பிடித்த காலம் எது? -கற்காலமா? பொற்காலமா?மனிதனே; அதாவது நானும் நீயுமேதோன்றாத - நாம் தோன்றாதகாலத்தில் கற்காலமாவது பொற்காலமாவது?நாம் தோன்றியதுதான் எப்படி? -குஞ்சு, கோழியாயிற்று!கோழி; முட்டையிட்டது!முட்டையிலிருந்து குஞ்சு, வந்தது!எது முதலில்? முட்டையா? கோழியா?இதற்கான விளக்கம்;பரிணாம வளர்ச்சி என்பதுதான் விரித்துரைக்க வல்லது!தாவர வித்துக்களும் ஒரு வகையில் முட்டைகள் தானே!முட்டையென ஒன்று உருவாகிறது முதலில் -முட்டைக்குள் கோழி மட்டுமல்ல;மனிதன் கூட முட்டைக்குள்ளேதான் உருவாகிறான் -முட்டையென்பது கோழி முட்டை மட்டுமல்ல;அது போலப் பறவைகளிடும் முட்டையுமல்ல;விந்தின் ஒவ்வொரு துளியிலும் எத்தனையோஇலட்சக் கணக்கான முட்டைகள் -அவற்றில் தேவையான முட்டைகளை மட்டுமேபயன்படுத்திக் கொண்டுதான்,
எந்தவொரு கருவும் உருவாகிறது -உருவான இடத்துக்குத் தக்க;பரிணாம வளர்ச்சி அடிப்படையில்பறவையாகவோ, விலங்கினமாகவோ,ஊர்வனவாகவோ, மனிதனாகவோ உருவுப்பெறுகிறது!குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால்;படிமுறை வளர்ச்சியென்பதும்பரிணாம வளர்ச்சியில் வந்தான் என்றுகொள்ள வேண்டுமே யல்லாது;இப்போது காணப்படும் குரங்குகள் ஏன்மனிதராக மாறவில்லை என்று கேட்க முடியுமா?நான் முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல -சுவர் எழுப்பிய சேறு குழைக்கிறோம் -குழைக்கப்பட்ட சேறு கொண்டுசுவர் எழுப்பியது போக; எஞ்சியுள்ள சேறு;சேறாகத் தானே இருக்க முடியும் -அந்தச் சேறு சுவரெனஅமைக்கப்பட்ட முடியாதல்லவா? -சரி;முட்டை கோழியாகிறது என்றால்முட்டை எப்படி உருவாகிறது? இதற்குப் பதில்;சேறு எப்படி உருவாகிறதோ; அப்படித்தான்முட்டையும் உருவாகிறது என்பதாகும்.களி மண் - அல்லது சுவர் மண் - தண்ணீர்இவை கலந்தால் சேறு உருவாவது போல -முட்டை உருவாவதற்கும்சில கலப்புகள் தேவைப்படுகின்றன.முட்டையிலிருந்து முட்டைக்குத் தேவைப்படுகிற;முட்டையை உருவாக்கக் கூடியசத்துக்கள் உதவி புரிகின்றன -அந்த முட்டையிலிருந்துதான் கோழி -அது போலத்தான் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில்மனிதனாக வளர்ந்தவனுமாவான்!அவன் தோன்றியது குமரிக் கண்டமா?
ஆப்பிரிக்காவா? - இதுமனித வரலாற்றுக்குத் தேவையானகேள்வி மட்டுமல்ல;உலக வரலாற்றுக்கும் தேவையான கேள்வி!
“இந்தியா தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய பெருங்கண்டமாம்இலெமூரியாவில் தோன்றிய மனிதன்தான் முதலில் நாகரிகம்பெற்ற மனிதன்” என்று 1974 ஆம் ஆண்டு கோந்த்ரா ராவ் எனும்சோவியத் அறிஞர் “மூன்று கடல் புதிர்” (The Riddles of threeoceans) என்ற நூலில் கூறியுள்ளார் எனினும்; “இலெமூரியா”க்கண்டம் உடைந்து இன்றைய கண்டங்கள் ஏறத்தாழ இன்றுள்ளநிலையில் ஒரு கோடி ஆண்டுக்கு முன்னரேஉருவாகிவிட்டமையால், இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்குமுன்னர் (பனியூழியில்) கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுதுகுமரிக்குத் தெற்கே நிலப்பகுதியாக இருந்த கடல் கொண்டதென்னாடே (குமரி கண்டமே) மாந்தன் பிறந்தகம் அல்லதுமாந்தன் மொழி, நாகரிகம் பிறந்தகம் என்பது பொருத்தமானமுடிவாகும் என்பதே ஆய்வின் முடிவாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,நதிகளின் உற்பத்தி இடத்தையும்அவை ஓடுகின்ற தடத்தையும் -கடலையும் - நகரையும்மாற்றி அமைத்திடும் மகத்தான வலிமையை;பூகம்பக் கரத்தினாலும், புயல் வேகத்தினாலும்;கடற்கோளினாலும் காட்டுகின்றஇயற்கையை எதிர்த்து நின்றுதான்இத்தனை காலமாக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.மனித இன நாகரிக வளர்ச்சி உலகில் ஒரே சமயத்தில் எல்லாஇடங்களிலும் - சீராக அமைந்திட முடியாது - அதையொட்டித்தான் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்,‘தொழில் திறனும், திருத்தமான மொழி பேசும் ஆற்றலும், குமரிநாட்டு மாந்தரிடையே வளர்ந்த போது; முறையே வேளாண்மைப்
பெருக்கமும், வாணிபப் பெருக்கமும், நகரமைப்புக் கலைகளும்மேன்மையுற்றன” என்றும்,‘மொழி செம்மையாகப் பேசப்பட்ட நாகரிக வளர்ச்சிக் காலமானஇக்கால எல்லையில் சித்தியரின் முன்னோரும், சுமேரியரின்முன்னோரும், குமரி நாட்டிலிருந்து பிரிந்து போயிருக்கக் கூடும்”என்றும் குறிப்பிடுகிறார்.குமரிக் கண்டம்; மனிதன் முதலில் தோன்றிய இடம் மட்டுமல்ல;மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும் விளங்கியது என்பதையும்- படம் பிடித்துக் காட்டுகிறது.இந்த அடிப்படையில்தான் வின்சென்ட் ஸ்மித், பேராசிரியர்சுந்தரனார் போன்ற அறிஞர் பெருமக்கள் இந்திய வரலாறுவடக்கேயிருந்தல்ல; தெற்கே தமிழகத்திலிருந்து எழுதப்படவேண்டுமென்று கூறினார்கள்.இப்போது அதையும் சுற்றி மாற்றிக் கொண்டு இந்திய வரலாறுமட்டுமல்ல “மனிதன் தோன்றி இந்நாள் வரை” யிலான உலகவரலாறே - மனித குல வரலாறே தெற்கேயிருந்துதான் எழுதப்படவேண்டுமென்ற கருத்து உறுதிப்படுகிறது என்றுதான் கூறவேண்டியுள்ளது. இதற்கேற்பவே“காலப் பேழை”யை “கவிதைச் சாவி”கொண்டு திறந்து காட்டி வருகிறேன்.