கவிதை 19 / 58

வருந்தத்தக்க வரலாற்று நிகழ்ச்சி!

A Historical Event to Grieve Over!

X
சோழன் பெற்றெடுத்த செல்வன்செங்குட்டுவன் என்பதும் - அவன் தாய்
கரிகால் சோழன் மகள் நற்சோணை என்பதும்சிலப்பதிகாரம் செப்புகின்ற செய்தியாகும்.
பதிற்றுப் பத்துப் பதிகம் பகருவது என்னவெனில்; அந்தப்பாவையின் பெயர் சோழ மகள் மணக்கிள்ளி என்பதாம்!
இரு பெயர் ஒருவர்க்கிருப்பது இயல்பே ஆனதால்,இதனைப் பெரிதுபடுத்திக் குழப்பமுறத் தேவையில்லை.
இதைவிடப் பெரிய குழப்பங்கள் தமிழக வரலாற்றில் தலை காட்டும்.முதலாம், இரண்டாம், மூன்றாம் கரிகாலர்கள் என மூவர் உண்டு;
அந்த மூவர் பெற்ற வெற்றிகளும் ஒன்றோடொன்று மோதிஎதிலே யார் பெற்ற வெற்றி என்றறிய முடியாமல் திணறுவதும்உண்டு!வேறொரு குட்டுவன் போல ‘வேல்கெழுகுட்டுவன்’ என்பார்; அவன்வேறு யாருமல்ல; சேரன் செங்குட்டுவனுக்கே மாறு பெயர்என்றுரைப்பார்!
இங்கிலாந்தில் முதலாம் ஹென்றி தொடங்கி, எட்டாம் ஹென்றிவரை;எத்தனை ஹென்றிகள் வரினும்; காலமும் வரலாறும்கச்சிதமாயிருக்கும்.
இங்கு நமக்கு இலக்கியமும் கல்வெட்டுந்தான் வரலாறாகவாய்த்ததினால்;இயன்ற அளவே ஆய்வு செய்து, காலத்தை அறுதியிட்டுக் கூறமுடிந்ததென்பேன்!
இமயம் சென்று வென்ற இணையற்ற வீரன்;சமயம் வாய்த்த போதெல்லாம் தமிழர்க்குப் புகழ்சேர்க்கும் சேரன்;
மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்ட மாமன்னன்மாமலையென நின்றே தன் இனம் காக்கும் மறத்தமிழன்
இவனை வெல்வார் யாருமில்லை; என்ற பேச்சும் - எதிர்த்துஎவர் வரினும் வீழ்வார் என்ற சொல் வீச்சும்
எங்கும் நிறை நாதமாகி செங்குட்டுவன் புகழ் பரவக் கண்டு;பொங்குற்றார் பொறாமையினால் புவியாளும் மன்னர் சிலர்!
தணல் அணையப் பொறாமையும், தாங்க முடியா எரிச்சலும்;தமிழன் பெருமை கண்டு, தமிழனுக்குத்தானே ஏற்படும்;
அந்த மன்னரில் ஒருவனாய் முளைத்தவனே மோகூர் பழையன்.பழையன், பகை முடித்துச் சேரனைப் புதைகுழிக்கு அனுப்பிட;
புதிய திட்டங்கள் வகுத்தான் - பொல்லாச் சதிகள் புரிந்தான்போருக்கும் ஆயத்தமானான்; போர் முரசம் கொட்டிவிட்டான்.
அவன் நாட்டு எல்லையிலே ஒரு தலைவன் அருகன் என்போன்அதுவே நேரமென்று சேரனுக்குத் துணையாகப் பழையன் மீதுபாய்ந்தான்.
சேரன் மீது கொண்ட சினம் போல் ஆயிரம் மடங்கு மிகையாகஅருகன் மேல் சினம் கொண்ட பழையன், அவனை அழித்திடஎழுந்தான் முதலில் -
அந்தத் தாக்குதலுக்குத் தப்பிய தலைவன் அருகன்;பழையனை வீழ்த்தவும்; மறக்க முடியாத பாடமாக
அவன் மானத்திற்கு அறைகூவல் விடுக்கவும் துணிந்துசேரன் படையில் சேர்ந்து கொண்டு உடைத்தான் பழையன்கோட்டையை!
செருமுனையில் சிங்க ஏறாகக் காட்சி தந்தசெங்குட்டுவன்; மோகூரைச் சிதைத்துச் சீறித்து
எங்குற்ற போதிலும் உனை விட மாட்டேன் என்றுபொங்குற்றெழுந்து பழையனையும் சிறை பிடித்து
மோகூரான் காவல் மரமாம் வேம்பினைமுற்றாக வெட்டிச் சாய்த்து;
வெட்டுண்ட மரத்தை இழுத்து வர தன் ஆட்சிக்குக்கட்டுண்ட மோகூரின் யானைகளை ஏவி விட்டு அந்தத்
தன்னேரிலாத் தமிழ் மன்னன் தனதுதலைநகர் திரும்பிச் சென்றான்.
அவன் திரும்பியவுடனே அருகன்; தான் விரும்பியதைநிறைவேற்றிக் கொள்ள - பழையனை பழி தீர்க்கக்
காவல் மரத்தைக் கட்டி இழுப்பதற்குத் தோதாக வடமாகத் தன்ஏவல் கேட்கும் வீரரை அழைத்து;
பழையன் அரண்மனைப் பெண்டிரின் கூந்தலை அறுத்துவடக் கயிறாகத் திரிக்கச் செய்தான் - அக்
கயிறுகள் கொண்டு காவல் மரத்தைக்கட்டி இழுக்கச் சொன்னான் -
அது கேட்டுச் சேரன்; தான் பெற்ற வெற்றியில்கறை படிந்ததே எனக் கணல் கக்கினான் - அருகன் மீது!
“என் துணையைப் பயன்படுத்தி - அருகனேஉன் பகையைத் தீர்த்துக் கொண்டாய்;
பழையன் மீது உனக்கிருந்த ஆத்திரத்தைக் காட்டுதற்கு -படையனுப்பிப்பழி தீர்த்துக் கொண்டாய் எனினும்; நம்
பகை நாட்டுக் காவல் மரத்தைக் கட்டியிழுக்கப்பண்பாட்டுக் கெதிராக;
பழையன் குடும்பப் பெண்கள் கூந்தலை அறுக்கச் சொன்னதுபழி வாங்கும் செயல் என்பாய்;
இல்லை! இல்லை!இழி செயல்!இழி செயல் என்பேன் நான்!”என்றான் சேரன்.
கவலை மிகக் கொண்டான் -காவல் மரத்தை மட்டுமல்ல;
காவலிலிருந்து பழையனையும்விடுவித்துக் கவலை தீர்த்துக் கொண்டான்.
திராவிட இனத் தமிழரிடம் வீரம் இருந்தது, விவேகம் இருந்தது,திக்கெட்டும் புகழ் மணக்கும் திறன் இருந்தது -
போரில் புலி என்கிற புய வலிமை இருந்தது; பகைவனிடம்புறமுதுகிடா மான உணர்வு மண்டிக் கிடந்தது!
நெஞ்சில் வேல்தாங்கி களச்சாவை சந்திக்கும்அஞ்சாமை அணுப்பொழுதும் அகலாமல் இருந்தது
கலை ஆர்வத்தின் சிகரம் என்ற நிலை; அலைகடல் தாண்டிஇருந்தது -நிலை குலையாக்க கொள்கை உரம் இருந்தது -
ஆனால்ஆனால்அந்தோ; தமிழரிடையேஇன ஒற்றுமை என்றஅந்த ஒன்றுதான் இல்லை என்பதற்குஇந்த வரலாற்று நிகழ்ச்சி நம்மைமிக வருந்தச் செய்யும் நிகழ்ச்சியன்றோ!

மூலமும் சான்றும்