கவிதை 20 / 58
வீழினும் அவன் வெற்றித் திருமகனே!
Even in Falling, He Is Victory's Favoured Son!
வீரம், மானம் இரண்டுக்கும்எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்ற
வெண்ணிப் போர் பற்றிஎண்ணிப் பார்த்திடில் - மீட்டிய
வீணையின் நரம்புகள் போலவீரரின் நரம்புகளும் அதிரும் -
இதயம் விம்மும் -இருவிழி, அருவிகள் ஆகும் -
பெருவீரன் கரிகால் சோழனுக்கும்சேரலாதன் எனும் மன்னனுக்கும்
தஞ்சைக்கடுத்த தமிழூராம் - கோயில்வெண்ணியில் நடைபெற்ற போர்
எண்ணிலடங்காப் பிணங்கள் வீழ்ந்து;திண்ணியராம் சேரர் சோழர் நேருக்கு நேர் நின்று
இருவருமே வேலும் வாளுமேந்திபொருதினார் அந்தக் குருதிக் களத்தில்!
கரிகாலன் எறிந்த வேல், பாய்ந்து சென்றுகண் மூடித் திறப்பதற்குள்
சேரனின் மார்பைத் துளைத்துசெங்குருதிச் சேற்றில் குளித்து - அவன்
முதுகுப் புறம் எட்டிப் பார்த்துமுடித்தது வீரவேந்தன் வாழ்வை!
மரணமடைந்தான் சேர மன்னன் என்றுமனமாரக் கூற மாட்டேன் - மானம்
உடைந்தது என்று பதைத்துப் போய் - தமிழர்வழக்கிற்கு விதிவிலக்கு கோராமல்
‘வடக்கிருந்து’ உயிர் விடுவதற்குச் சேரன்முடிவெடுத்ததால் மொழிந்தேன் அவ்வாறு!
வேல் கம்பும் வாளும் எடுத்துக் கொண்டுவிரைந்து செல்வேன் ‘வடக்கிருக்க’ என்றான் -
போரில் புறமுதுகிட்டு வந்த காயமல்ல - முதுகுப்புறத்தே வேல் முனை வெளிப்பட்ட காயம் கூட
போரில் தனக்குற்ற அவமானமெனக் கற்பித்துக் கொண்டுவிழுப்புண்தான் என்று ஆறுதலோ, அகமகிழ்வோ கொள்ளாமல்;
வீழ்ந்து விட்டான் சேரன் சாவில்; வடக்கிருந்து - புகழ்பூண்டு விட்டான் என்று புலவர் கழாத்தலையார் பாடினார்.
என்ன பாடல் அது?
“முரசு ஒலிக்க மறந்தது -யாழ் இசைக்க மறந்தது -வடித்தகள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன -தேனைத் தீண்டுவாரில்லை -உழவர் யாரும் கழனிக்குச் செல்லவில்லை -ஊர்ப்புற வெளிகள் அனைத்தும்வெறிச்சோடி விட்டன -எங்கள் சேர மன்னன், மானம் காக்கவடக்கிருந்து உயிர் விடச் சென்றதாலே!”
★
“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழாவும்அகலுள் ஆங்கண் சீறார் மறப்ப,புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்வாள்வடக் கிருந்தனன்”
(புறம் 65) (கழாத்தலையார்)
கழாத்தலையார் இரங்கற் கவிதை இப்படிப் பாடகளம் அமைந்த வெண்ணியில் பிறந்த பெண்பாற்புலவர்
வெண்ணிக் குயத்தியார் என்பார்;கரிகாலன் வெற்றியைப் போற்றிப் பாடும்போது கூட;
“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டிவளி தொழில் ஆண்ட உரவோன் மருக!களி இயல் யானைக் கரிகால் வளவ!சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்றவென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலைமிகப் புகழ் உலக மெய்திப்புறப்புண் நாணி வடக்கிருந்தோனே!”
(புறம் 66) (வெண்ணிக்குயத்தியார்)
எனக் குறிப்பிடும் குயத்தியார்;கரிகாலன் வெற்றி பெற்றுப் புகழ் பெற்றான்
சேரலாதனோ வடக்கிருந்து மானங்காத்தான் - என்றுகவிதை முத்தாரம் இருவருக்கும் அணிவிக்கின்றார்.
தீப் போல் இந்தச் செய்திதிருநாடு முழுதும் பரவிடவே
திக்கெட்டுமிருந்துதிரண்டனர் சான்றோர்.
சிங்கமெனப் போரிட்டு வீழ்ந்தசேரமானுடன் சேர்ந்து மாந்து
வடக்கிருந்து வாழ்வு துறக்கும்விருப்புடன் விரைந்தனர் அவர்கள் -
“கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்பொருதுபுண் நாணிய சேர லாதன்அழிகள் மருங்கின் வாள்வடக் கிருந்தெனஇன்னா இன்னுரை கேட்ட சான்றோர்அரும் பெறலுலகத் தவனொடு செலீஇயர்பெரும்பிறி தாகி யாங்கு!”
(அகம் 55) (மாமூலனார்)
கரிகாலன் வெற்றிக்கான மகிழ்ச்சியொரு புறம்சேரமான் வடக்கிருக்க முடிவு செய்தமான உணர்வு கண்டு மனத்துயர் ஒரு புறம் -
போரில் வீழ்ந்தவரும் - வெற்றி கண்டவரும்போற்றுதற்குரியவர்களே என்று
புகழ் மாலை சூட்டியபுலவர்களின் பரந்த உள்ளத்திற்கு
ஈடு இணையெனஎதைத்தான் காட்டிட இயலும்!