கவிதை 24 / 58
ஈராயிரம் ஆண்டின் முன்னே இந்தத் தமிழ் நிலம்!
This Tamil Land, Two Thousand Years Ago!
சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையசரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்
சாவிளக்கு கொளுத்தியது போல சமுத்திரத்தில்சகல நாட்டுக் கப்பல்களும் வரிசையாக நிற்கின்ற
காட்சி தெரிகிறது, கண்ணிரண்டும் ஒளிர்கிறது -கலை, நாகரிகம், பண்பாடு இவற்றில் வெல்லலாம் ;
காதும் குளிர்கின்ற தமிழகத் தகவல்களையும் தருகின்றேன்.கடல் வாணிபம், கடல் கடந்த வெளிநாட்டுறவு, கலை இலக்கியம்,
களம் பல கண்டு வாகை சூடுகின்ற ஆட்சியும் மாட்சியும்,கனிக் குலையாகக் குவிந்துவரை நானும் உம்மோடுரசிக்கின்றேன்!
கண்ணகியின் கற்பும் மாதவியின் மாண்பும் கவிஞர் பெருமான்காரிக் கண்ணர் வாயிலாக பாண்டிய சோழ மன்னரிடை வளர்ந்த
பற்றும், பாசமும், நட்பும், நாட்டுறவும்முற்றும் அறிந்து மகிழ்ந்துள்ளோம்.
காவல் அரண் - கட்டுப்பாடுத் திறன் - இவையெதிலும்காவிரிப்பூம்பட்டினத்தில் இல்லை முரண் ;
கலைச்செல்வமெனிலோ கற்பனைக் கெட்டாப் புகழ் மாதவி ; நாம்மலைத்திடுமளவுக்குப் பூட்டியிருந்த அணிமணிகளின்
பட்டியலைப் பார்த்தாலே மயக்கம் வரும் ; அவற்றில்சிலவற்றையாவது சிலப்பதிகாரத்தில் காண்போமே!இதோ ;
நிலவு, அணிமணி பூட்டித் தன்னை அலங்கரித்துக் கொண்டுநிற்கிறது நிலைக்கண்ணாடி முன்னால் என்று ;
கற்பனை செய்து கொண்டு காணுங்கள் ஒளிந்து கொண்டு!காலுக்குப் பொருத்தமாகப் பரியகம், சிலம்பு, பாடகம்
அரியகம், சதங்கையெனும் அணிகலன்களுடன்அழகிய தொடைகளில் இறுக்கமுறக் ‘குறங்கு செறி’யாம்!
முப்பத்திரண்டு விரிசிகையுடன் முத்துக் கோவை ;முன்னெழிலைக் காட்டி இடையில் ஒளிரும் உடையில் மேகலை
தோளில் தூயமணி சேர் வளையுடன், கண்டிகையாம் ;தோடு ; மாணிக்கத்தில்! சூடகம், வைரம் பதித்து!
மயிரொழுங்கமைந்த முன் கையில் வளைகள் பல வகை -வயிர வளையவுடன், சங்கவளை, தங்கவளை, நவமணி வளை
பவள வளையெனப் பலவித வளைகள் அணிந்தவளின்பொன்னை அனைத்தையும் மிஞ்சும் புன்னகை முகத்தில்!
வாளை மீனின் வாய் பிளந்தன்ன முடக்கு மோதிரம் -வண்ணத்தில் சிறந்த செந்நிறம் மிளிரும் மாணிக்கக் கணையாழி ;
காந்தள் விரல் கவின் நிரம்ப, கதிரொளி வீசும்பாந்தமுள்ள வைரங்கள் சூழ் “மரகத்தாள் செறி”
திண்ணியதும் நுண்ணியதுமான சங்கிலிகள்பூணும் கரமும், பூ வேலை நிறைந்த சவடி, சரப்பணியும் -
முத்தாரக் கழுத்தில் வித்தாரமாய்ப் பின் தொங்கும் கோவை,கொத்தாகத் திரண்டு திகழும் சந்திரபாணி வைரக் குதம்பை,
இந்திர நீலத்துடன் இடையிடையே காணப்படும் எழிலார் சங்கும்மந்திரமோ மாயமோ என மாதவியின் அழகுக்கு அழகான
தொய்யகம், புல்லக மெனத் தொடரும் அணிமணிகள்மெய்யாகத் தமிழக நாகரிகத்தின்
மென்மையை உணர்த்துகின்ற அடையாளச் சின்னங்களன்றோ!மெல்லிய பூங்காற்றை நுகருகின்ற உணர்வன்றோ; நம் நெஞ்சில்!
அது மட்டுமா ?
அந்த அழகாசி மாதவி ஆடியஅரங்கின் அமைப்பு எவ்வாறு இருந்தது ?
சிற்ப நூலோர் கூறும் இயல்புகளிலிருந்துசிறிதும் வேறுபடாத இடமாகத் தேர்வு செய்து
பொதிய மலையில் பிறந்து வளர்ந்த மூங்கிலை ;கணுவுக்கு கணு இடையிடையே
சாண் அளவு விட்டுச் சரியானஅளவாக வெட்டிக் கொண்டாந்து,
கைப் பெருவிரல் இருப்பது நாலு எண்ணிக்கணக்கெடுத்து கச்சிதமாக நறுக்கி ;
அரங்கம் அளக்கும் கோலாகஅதனையே பயன்படுத்தி
ஏழு கோல் அகலம்,எட்டுக் கோல் நீளம்
ஒரு கோல் உயரம் உள்ளதாகநான்கு கோல் நல்ல இடைவெளியுடனே
‘நிலை விளக்கு’, ‘உருவ திரை’ இத்தனையும்கலையழகு குறையாமல்
அமைத்தனர் ஆடலரங்கு என்பதாக,அதிகாரம் அறிவிக்கின்றது ; ஆம்
சிந்தை கவரும்,சிலப்பதிகாரம் ; அறிவிக்கின்றது!
அட்டா ; அரங்கேறுவதற்குத் தான்ஆடல் ஆசான் என்றும், இசை ஆசான் என்றும்,
இயற்றமிழ் ஆசான் என்றும், இன்னும்குழலாசான், யாழ் ஆசான் என்றும்
குறையொன்றுமிலா ஆசான்கள்நிறை கலை வல்லுநர்கள் எத்தனை பேர்!
கலை வளர் தமிழகமாய் இருந்ததற்கும் ; தனதுநிலையில் தளரா நேர்மை கடைப்பிடித்ததற்கும்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும்உயர் தனிக் கொள்கைக்கும் -
ஓர் எடுத்துக்காட்டாக மாதவியாள்விளங்கியது மட்டுமல்ல ;
கலைத்துறை யொன்றும் கற்புக்குப் பகையல்ல எனும்நிலையெடுத்து வென்றதற்கும் -
ஆளன் தனை விடுத்துச் சென்ற பின்னர்துறவு பூண்டு தனியாக நின்றதற்கும்,
மகள் மணிமேகலையைத் தன்னைப் போலவேமனத் தூய்மை கொள் மாதரசாக வளர்த்த மேன்மைக்கும்,
எடுத்துக்காட்டு மட்டுமல்ல இந்த இலக்கிய வரலாறு ;ஈராயிரம் ஆண்டின் முன்னே ;
எத்தனையோ நாடுகள் இருளில் மூழ்கிக் கிடந்த போது ;அத்தனை நாட்டுக் கடலோரங்களிலும் ஒளி காட்டி
கலை இலக்கிய நாகரிகப் பண்பாடு பரப்பும் கலங்கரை விளக்கமாய்நிலை பெற்றிருந்தது தமிழ்நாடு என்ற கருத்தினைஉணர்த்துவதாகும்!
கண் உறங்கும் தமிழனின் முகத்தில்கண்ணீர் தெளித்து எழுப்புவதாகும்!
★ ★ ★
பரியகம் = பாத கிண்கிணிபாடகம் = காலணிஅரியகம் = காற்சரி யெனும் அணிகலன்குறங்கு செறி = தொடை அணிவிரிசிகை = மாதர் இடையணிகண்டிகை = கழுத்து நகை