கவிதை 25 / 58
கலாச்சாரத்தின்மீது கண்ணகி காட்டிய அழுத்தம்
Kannagi's Emphasis on Culture
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: கலாச்சாரத்தின்மீது கண்ணகி காட்டிய அழுத்தம்!
கண்ணகி என்றால் கடுகளவு இன்பமும்கடுகின் தோல் அளவு துன்பமும்
வாழ்வில் காணாத கவலையின் வடிவம் என்றும்வாட்டம், வேதனை, வருத்தம், துன்ப, துயரம்
இவற்றைத் தவிர இல்வாழ்வின் சுகம் என்றால்என்னவென்றே தெரியாமல் இறுதிவரை இருந்தாள் என்றும் ;
இன்ப அருவியில் மாதவியுடன் நீந்திக் களித்துஇதழ்கள் ஒட்டிக் கிடக்கும் முத்த இனிமைதனை
இடைவிடாது அனுபவித்தவன் கோவலன் தானென்றும் ;இடை குழுங்க, நடை குழுங்க, இரு கனி குழுங்க
காம இன்பம் தானும் சுவைத்து, தன் காதலனும்தாபம் தீரச் சுவைப்பதற்குத் தனையீந்த தளிர்க்கொடி
மாதவி தான் அத்தகு மாதவம் செய்தவள் என்றும்மகளிர் ஆடவர் பலரும் எண்ணுகின்றோம் -
இலக்கியத்தைப் புராணமாக ஆக்கியோர் ; அமுதத்தில்கலக்கிய விஷத்தினால் ஏற்பட்ட களங்கமிது -
பிந்தாங்கி முன் எழும் பாவையாக விளங்கிஎந்நேரமும் அழுகமுது விழியிரண்டும் வீங்கி,
கொழுநனைத் தொழுதெழுந்து கோலமிட்டு வீடு கூட்டிகோவலனின் இல்லில் ஒரு கொத்தடிமை என்பதன்றி ;
கொஞ்சிடவோ - குலவிடவோ - கூடிடவோ -எஞ்சியதுண்டோ கணப் பொழுதேனும் கண்ணகிக்கென்று ;
‘சம்பூர்ணக் கோவலன்’ கூத்து கண்ட “ஜைனர்கள்” எல்லாம்சஞ்சலப்படுவதுண்டு அக்காலத்தில் - அதிலும்
பெண் குலத்தார் பெரும்பாலோர்பெருமூச்செறிந்தும் பார்த்துள்ளோம் - அந்தச்
சேதியனைத்தும் அடியோடு தவறானவை என்பதற்குச்சிலப்பதிகாரமே தக்க சான்றாக நம் முன் நிற்கிறது!
கண்ணகி ; தனது மணாளன் கோவலனிடம்கட்டிலறையில் கூடிக் களிக்கவில்லையா ?
காம நோய்க்கு மருந்து தேடும் காரியத்தில் - அந்தஇளம்புறாக்கள் ஈடுபடவே இல்லையா ?
எட்டாண்டுகள் இல்வாழ்க்கை நடத்திய பிறகேவீட்டுப் பிரிந்தான் கோவலன் கண்ணகியை யென்று
கட்டுக்கதையல்ல ; முனைவர் சு.வே. சுப்பிரமணியனார்சுட்டிக் காட்டியுள்ளார் ஓர் உரைநூலில்!
காப்பியம் தந்த பெருமகனாம் இளங்கோவடிகள்கண்ணகி கோவலன் காதல் இன்பத்தை
கரும்பு பிழிந்து சாறெடுத்து, கற்கண்டுப் பொடி தூவி,கனி மூன்றின் சுவை சேர்த்துக் கசிந்துருகி
சிறப்பிக்கின்றார் சிலப்பதிகாரத்தில்! -புறப்பாட்டும் அகப்பாட்டும் ஒன்று கலக்கும்
புதுமை போலக் கவின் புதுமை கண்ணகியும் - காதல்போதையில் கோவலனும் கட்டித் தழுவிக்
களிப்புற்று மெய் மறந்து கிடந்த காட்சியினைக்காட்டுகின்ற வெண்பா காணீர்!
“தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்காமர் மனைவி எனக் கை கலந்து - நாமம்தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார் மண் மேல்நிலையாமை கண்டவர் போல் நின்று”
சினங் கொண்ட பாம்புகள் இறுகச் சேர்ந்துஇணையாகத் தோய்ந்திடுதல் போல -காமமும் ரதியும் எனகோவலனும் கண்ணகியும் கலந்து ;இந்த உலகம் நாளைக்கு இருக்குமா என்றநிலையாமையை எண்ணிக் கொண்டு,அனுபவிக்க வேண்டிய இன்பம் அனைத்தையும்அன்றைக்கே துய்த்து மகிழ்ந்தனர் என்கிறதுஇந்த வெண்பா!
இதற்குப் பிறகும் கண்ணகிஇல்லற சுகமே காணாதவள்என்றுரைத்திடல் இயலுமோ?“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!காசறு விரையே! கரும்பே! தேனே!மலையிடைப் பிறவா மணியே!அலையிடைப் பிறவா அமிழ்தே!”என்றெல்லாம் கண்ணகியைப் புகழ்ந்த கோவலன் ;அவளை வாரியணைத்து மடியிலிட்டுக் கொண்டுதானேமகிழ்ந்து குலாவியிருப்பான்!
வானத்து நிலவை நோக்கி ;வையத்திலிருந்து ஒரு கவிஞன்,வாணியது போலவா தொலைவில் நின்று,வார்த்தைகளைப் பொழிந்திருப்பான் ?நெஞ்சை நெகிழ வைக்கும் அந்தச்செழுஞ் சொற்களை, கண்ணகியும்,கோவலன் தோளில் சாய்ந்து கொண்டுதானேகேட்டுச் சுவைத்திருப்பாள் -
தூமப்பணிகளாக ஒன்றித் தோய்ந்த பிறகு ;சொல்வதற்கு வேறு என்ன செயல் தானிருக்கிறது ?அந்த இணைப்பினைப் பிரிந்து விடுகிறான் கோவலன்தனக்கு வாய்த்த வேறு துணையினால்!வாடிக் கிடக்கிறாள் வடிவழகி கண்ணகி - ஆம் ;மாசறு பொன் ; மண் மீது!வலம்புரி முத்து ; மணப் புண் மீது!கண்ணகி நிலை கேள்வியுற்று ;
அவள் தோழி பொருத்தி ஆரிய மாது -சாத்தன் என்பானின் மனைவி ;தேவந்தி ஆறுதல் கூறிட வருகிறாள்.
“கவலைப்படாதே, கண்ணகி ;காவிரி கடலுடன் கலக்குமிடம் -நெய்தல் நிலச் சோலையில்சோமகுண்டம், சூரிய குண்டம் எனஇரு பொய்கைகள் இருக்கின்றன.அவற்றில் மூழ்கி அங்கிருக்கும்ஆலயத்தில் மன்மதனை வணங்கினால் - உன்ஆளன் உடனே வந்திடுவார்” என்றாள்.
ஆரிய மங்கை - அவருக்கு அருமைத் தோழி தான் எனினும் ;அவ்வழியாடு தமிழ்ப்பண்பாடு, ஏற்காத ஒன்று என்பதால் ;பூம்புகார்ச் செல்வி அதனைப் புறக்கணித்து,“அது பெருமையாகாது!” எனப்பட்டெனப் பதில் சொல்லி விடுகிறாள்.
இச்செய்திகள் நம் செவிகளில்நுழையுமானவுக்குப்புழக்கத்தில் இல்லையெனினும் ;கலாச்சாரத்தின் மீது கண்ணகி கொண்டஅழுத்தத்திற்கும் பற்றுதலுக்கும்அசைக்கவொண்ணா சான்றுகளாம்!
★ ★ ★
“சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடுதாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பார், யாம் ஓர் நாள்ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ் ஆயிழையாள்‘பீடு அன்று’ என இருந்த பின்னரே,.........”(சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை)
குறிப்பு :-‘துறை மூழ்கித் தெய்வந்தொழுதல்எங்கட்கு இயல்பன்றென்று சொல்லி’ -(என்பது அடியார்க்கு நல்லார் உரை)(உ.வே. சாமிநாத அய்யர் வெளியிட்ட நூலில் உள்ளபடி)