கவிதை 26 / 58
விழித்தெழுக; இதோ செம்மொழி விடியல்!
Awake; Here Is the Dawn of a Classical Language!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: விழித்தெழுக; இதோ, செம்மொழி விடியல்!
தமிழக வரலாறு எழுதி முழுமையாகத்தந்து விட்டுப் போனவர் யாருமில்லை.
உலகில் எந்த நாட்டிலும் நடக்காதஒரு கூத்தாக ஓலைச்சுவடி இலக்கியத்தில் ;
எவரோ மன்னர் செதுக்கிய கல்வெட்டில்எவனோ வழிப்போக்கன் சொன்ன கதையில்,
எலும்புகளைப் பொறுக்கி எடுத்து நடத்திய ஆய்வில்,என்றோ தாழியில் வைத்த உடலின் மண்டையோட்டில்....
கண்டு பிடிக்கும் ரேகைக் கோட்டில் மாத்திரமேபண்டைக்கால சரித்திரம் படித்திட முடிந்தது.
கலை, நாகரிகம், வாழ்க்கையென்று கனிக்க முடிந்தது.காலத்தின் கோலமும் அறிய முடிந்தது - அல்லால்
கற்காலம் முதல் கனிந்து வந்துள்ளதற்காலம் வரையில் ; காரிருள் ஆதிக்கம்தானே!
★ ★ ★
எக்காலத்தில் எப்படி வாழ்ந்தனர்எம் மூதாதையர் என்ற நிலை தெரியாமல்,
திக்குமுக்காடியிருப்போம் ; இந்தத்திருநாட்டின் பெருமையினை உலக ஏட்டில்,
தீட்டுதற்கு இயலாமல் வரலாற்றுத்தீப ஒளி ஏற்றுதற்குப் பயன்படாத
தீக்குச்சியாக நனைந்து போய்க் கிடந்திருப்போம்.ஈக்களுக்குப் பல் இல்லை ; பண்டத்தில் மொய்ப்பதில்லையா ?
நாக்கில்லை முதலைகளுக்கு ; அவை பசியாறுவதே இல்லையா ?நண்டுக்குத் தலையில்லை - தவளைக்குக் கழுத்தே இல்லை.
நாட்டு வளப்பம் அறியாத கிணற்றுத் தவளைகளும்நண்டு போல் தலையில்லா முண்டங்களும் வாழும்போது,
நாம் மட்டும் “வரலாறு” இல்லாமல் வாழ்ந்தால் ;நாட்டுக்கும் நமக்கும் என்னதான் கேடு வந்து விடும் ?
தலையில்லாமல் கழுத்தில்லாமல் பல்லில்லாமல் நாவில்லாமல்வாழ்வது சரிதான் என்று வாதிட்டால் ;
தமிழனும் ‘வரலாறு’ இல்லாமல் வாழ்வது பொருத்தம்தானே!தாரமும் தகுதியும் நமக்கு நாமே வகுத்துக் கொள்வதுதானே!
தன்மான மின்றி சில தமிழர்கள் வாழ்வதற்குத் தம்மைதயார்படுத்திக் கொண்டார் எனினும் தமிழ்ச்சியர் எவரும்
தாளம் போட்டதில்லை ; தமிழை அழிப்பதற்கு! அதற்குத்தக்கச் சான்றாக விளங்கியோர் பட்டியல் தருகின்றேன் ;காண்பதற்கு!
தந்தையையும் தன் தனவனையும்தமையனையும் போரில் இழந்த தாயொருத்தி
பள்ளிக்குச் சென்றிருந்த பிள்ளையையும் அழைத்துதுள்ளியெழும் வேலொன்றைக் கையில் கொடுத்து
சென்று வா மகனே செருமுனை நோக்கி எனவும்வென்று வா பகையை எனவும் விடை கொடுத்து
அனுப்பி வைத்தாள் எனப் பாடியது மாசாத்தியார் எனும்பெண்டானே ;அப்படிப் பாடப்பட்டவரும் மானமரபு வந்த ஒரு பெண் தானே!
“என்மா ; மகன் எங்கே?” என்று கேட்டவனிடம் ;“புதல்வன் போர் முனைக்குச் சென்றுளான்” என்பதை
“புலி போன இடம் குறிப்பாகத் தெரியாது ; ஆனால்புலியிருந்த குகை இதோ இருக்கிறது” என
அவனைச் சுமந்திருந்த வயிற்றைக் காட்டினாள் ;அன்னையொருத்தி யென்று பாடியதும் பெண்டானே!
★
தன்னோரன்ன இளையர் இருப்பத் தன் மகனிடமேதனியாத அன்பு வைத்தான் தலைவன் ; அந்த மகன்
களம் புகுந்து நடத்தும் கடும்போரில் மாளாமல்கால்கழிக் கட்டிலிலேறிக் கல்லறைக்குச் செல்லாமல்
காலங்கடத்துவதேனென்று கவலையுறுகின்றஅன்னை யொருத்தியை அவ்வை காட்டுகிறாரே ;
அவளும் பெண் தானே - அவர்களிருவரையும் பெற்றதும்இந்த மண் தானே!
புதைக்கவில்லை எங்கள் பிள்ளைகளை ;விதைத்திருக்கிறோம் அந்த வீரர்களை யென்று
வாளொலி வார்த்தைகளால்சூளுரை மொழிந்தோரும் பெண்கள்தானே!
முரசு கொண்டு புலி விரட்டிய தமிழச்சி ;“புறங்காட்டி வீழ்ந்தான் புதல்வன் போரில்” எனும்
பொய்யுரை கேட்டுப் புலம்பித் தவித்துமகன் ; பால் குடித்த மார்பை அறுத்தெறிவேன் என்று
களம் சென்று மீண்டானே உண்மை உணர்ந்து ; - அதைக்கவிதையாக்கித் தந்தவர் யார் ? காக்கைப்பாடினியன்றோ ?
இதற்கு பெண்பாற்புலவர் இத்தரை மீதுபத்தரை மாற்றுப் பொன்னெனத் திகழ்ந்து - தமிழ்
மூவேந்தர் வியப்புறும் வண்ணம் முன்னாளில்முப்பதுக்கு மேற்பட்டோர் வாழ்ந்தார்களாம் -
பாவையர் திலகங்களாம் அவர்கள் எழுதியபாடல்களும் தமிழக வரலாற்றுப் பக்கங்களாம்.
பட்டியலைத் தருகின்றேன் பெயர்களை ;பாட்டென்பார் பாட்டுமார் பெருமிதங் கொள்வதற்கல்ல ;
வருங்காலப் பேரன் பேத்திமார் வைர நெஞ்சுவீரர்களாய், வீராங்கனைகளாய் விளங்குவதற்காக!
★ ★ ★
இதோ :-அவ்வையார், அள்ளூர் நன்முல்லையார்காக்கைப்பாடினியார், காவற்பெண்டு,நக்கண்ணையார், வெண்ணிக்குயத்தியார்,குறமகள் இளவெயினி, குறியெயினி,தாயங்கண்ணி, பூங்கணுத்திரையார்,பொன்முடியார், போந்தைப் பசலையார்,பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டுபெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்,பாரி மகளிர், பேய்மகள் இளவெயினி,ஒக்கூர் மாசாத்தியார், நல் வெள்ளியார்,ஆதிமந்தியார், நெட்டிமையார்,நப்பசலையார், வெள்ளி வீதியார்,காமக்கணிப் பசலையார்,கழார்க்கீரன் எயிற்றியார்,கச்சிப் பேட்டு நன்னாகையார்,ஊண்பித்தையார், மாற்பித்தியார்,பூங்கண் உத்திரையார்,வெறிபாடிய காமக் கண்ணியார்,அஞ்சி அத்தைமகள் நாகையார்
★ ★ ★
அரிவையர் ஆடவர் அருங்கவிஞர்களாகிஅருவித் தமிழால் ஆக்கிய இலக்கியங்களே - தமிழர்
ஆதி வரலாறு போதிக்கின்ற ஆதாரங்களாம் -அற்றை நாள் கல்வில் செதுக்கிய எழுத்துக்களே - நமது
அறிவு, ஆற்றல், காதல், வீரம், பண்பாடு அனைத்துக்கும்அழிக்க வொண்ணாச் சான்றுகளாம் -
விரிவாக்குவோம், அப்பணியை வாரீர் ;விழித்தெழுவதற்கு ; இதோ ‘செம்மொழி’ விடியல்!