கவிதை 27 / 58

வழிகாட்டும் வண்ணம்; திறக்கப்படுவது திண்ணம்!

It Will Surely Be Opened, to Show the Way!

X
நடை தளராமல் நமது வரலாற்றுப் பயணம் தொடரும்போதுஇடையில் சற்று இங்கே அமர்ந்து இதுபற்றியே பேசுவோம்.
காலப் பேழையில் நிறைந்துள்ள கருவூலங்களைகவிதைச் சாவி கொண்டு நான் திறந்து காட்டி ;
கனவிற் கண்ட காட்சிகள் நினைவுத் திரைக்கு மீண்டும் வராதாஎனகவலை கலந்த களிப்பில் ஆழ்ந்திருக்கும் நமக்கு ;
நினைவில் வருவது மட்டுமல்ல ; நிகழும் வரலாறாகவேநிலைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு!
அதனால்தான் இதுவரையில் இருபத்தி ஆறு கவிதைகள் தீட்டி ;அந்நாள் மனிதன் தோன்றிய காலம் அதற்கு முந்தைய காலம் -
அனைத்துயிரும் தோன்றிய விதமும் படிம வளர்ச்சியும் பற்றிஅளித்த விளக்கங்களுடன் ; அடுத்தடுத்து கடந்து வந்துள்ள
ஆயிரமாயிரம் ஆண்டுகளில் அனைத்து நாடுகளுடன் நமதுஅருமைத் தமிழகம் பெற்றிருந்த நட்புறவு, நாகரிக தொடர்பு,கலைப்பிணைப்பு
கலாச்சாரக் கைகோப்பு - கடல் வாணிபம் - களம் பல கண்டவாய்ப்பு ; எனக்கருவூலம் தருகின்ற கனிச் சுவைகள், கசப்பு மாத்திரைகள்,அனைத்தையும்
அடியேன் நான் ; அபாரப் படிப்பினாலோ - அஷ்டமாசித்திபெற்றதாலோ -அளிக்கின்றேன் என்று எவரும் அவசர முடிவுக்கு வந்திடாதீர்! -
ஆதாரங்களைத் திரட்டுகின்றேன் ; அம்முயற்சியிலே அடிப்படைப்பணியாக ;அன்பர் மதிவாணன் நூல்களைப் போற்றுகின்றேன் - கண்ணனின்மணியாக!
அவருந்தான் எத்தனை மேற்கோள்கள் காட்டுகின்றார் -ஆய்வாளர், அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் பலவற்றை
எடுத்து நிறைத்துள்ளேன் இப்பேழையில் என்றாலும்கொடுத்திடத் தொடங்கியது முதல் தோன்றாத் துணை நிற்பதுஇவர் கருத்தே!
மணிகள் கோப்பதற்குத் தங்கச் சரடு வேண்டுமன்றோ ; கற்றவராம்மற்றவர் கருத்துக்களையும் அந்தச் சரட்டோடுதான் இணைத்துக்கொண்டேன்.
இதுவரையில் நம் தரணியில் உயிர்கள் முளைத்தது முதல், இங்கே ;இந்தியத் திருநாட்டில் ஆரியர் வருகைக்கு முன்பே திராவிடர்வரலாறும்,
வடக்கே, தக்கணம், சிந்து, கங்கைச் சமவெளிகளில் குடியேற்றநகரங்களைவகையாக அமைத்தனர் கி.மு. ஆயிரம் ஆண்டின் முன்பேஎன்பதையும்,
காடு கொன்று நாடாக்கி நாகரிகம் கொழிக்கும் நகரங்களைஅமைத்தும் ;கட்டமைப்பு கட்டிடக் கலைகளிலே காண்போர் வியக்கும்திறனைப் பெற்றும்
திகழ்ந்தனர் திராவிடத் தமிழர் என்பதையும் கண்டுவெகுண்டவராம் ஆரியர்கள் ;தீய நோக்குடன் திராவிடரைத் ‘தஸ்யூக்கள்’ என அழைத்து ;
“அந்த தஸ்யூக்களின் அரண்மனைகள் பொன்னாலும்மணியாலும்அழகு பெற்று விளங்குகின்றன ; அவர்களின் வலியகோட்டைகளும்
வானைத் தொடும் மதில் அரண்களும் மனதைக் கவருகின்றன.வாழ்க்கைத் துணைவி இருவர் ‘கோவன்’ எனும் குயவருக்கு ;அவர்கள்
பாலில்தான் குளிக்கிறார்கள் என்பதால் ;பாவிகள் ; சிபா நதியில் வீழ்வார்களாக!”
ஆரியர்களின் ‘ரிக் வேதம்’ இவ்வாறு சாபமிடுகிறது - அதனைஆராய்ந்திடும் போது தான் ; ஆரியர் வருகைக்கு முற்பட்ட
இந்திய நாகரிகம், திராவிட மொழியாளர்க்கே உரியது என்றுஇம்மியும் அய்யத்திற்கிடமின்றி இறுதியாக அறுதியிடப்படுகிறது.
இவ்வாறுவளர்ந்த நாகரிகம், வாழ்க்கை முறை, வையத்து நாடுகளுடன்வாணிபத் தொடர்பு - கலையுணர்வு - காதல் உறவு
களம் காணுதல், மானம் காத்தல், மனித நேயம் போற்றுதல்கலாம் விளைக்கும் மத பேதம் அகற்றுதல் எனப் பல்வகைஅணிமணி நிறைந்த அற்புதப் பேழையாக அமைந்த - இந்தக்
காவியப் பேழையைக்கவிதைச் சாவி கொண்டு
திறக்கும் போதெல்லாம் ;திராவிடர் தமிழர் வரலாறுகள் எனும்
அணிமணிகள் காண்பதாலேயே - இதுஅரசியல் பேழை எனக் கருதாமல் ;
அரசியலுக்கு அப்பாற்பட்டவரலாற்றுப் பேழை தான் என்று
வரித்துக் கொள்வீர் இதயத்தில் - உயிர்களின்உதயத்தில் அல்ல ; உதயத்திற்கு முன்பே
உலகு உள்ளிட்ட கோள்களின்உலாவலில் இருந்தே தொடங்கி
எத்தனை இனத்தினர்எத்தகை மனத்தினர்
எத்துணை அரசர்கள்எவ்வகை ஆட்சிகள் -
முடிந்தது ; முடியாதது!விடிந்தது ; விடியாதது!விளைந்தது ; விளையாதது!வளைந்தது ; வளையாதது!
இமயம் முதல்காவிரி வரையில் அல்ல -
காவிரிக் கரையிலிருந்துகங்கைக் கரை வரையில்
நீண்டு கிடக்கும் நிலப் பரப்பில்ஆண்டு முடித்தோர் சரித்திரமும்,
வாழ்ந்து முடித்தோர் வரலாறும் - இனிவாழ்ந்திடவும் ஆண்டிடவும் ;
வழி காட்டும் வண்ணம்தொடர்ந்து காலப் பேழை,
கவிதைச் சாவி கொண்டுதிறக்கப்படுவது திண்ணம்!

மூலமும் சான்றும்