கவிதை 28 / 58
பார் முழுதும் பரவிய பழம்பெரும் நாகரிகம்!
The Ancient Civilisation That Spread Across the Whole World!
பார் முழுதும் பரவியபழம்பெரும் நாகரிகம்!
தேய்க்கத் தேய்க்கச் சந்தனம் மணப்பது போல் - பட்டைதீட்டத் தீட்ட வைரம் ஒளி விடுவது போல் ;
திரும்பத் திரும்ப திராவிட இனத் தொன்மை பற்றிச்சொன்னால்தான்தென்னங் கன்றுகள் தேக்கு மரங்களாக உயரும்!
வாழைக் கன்றுகள் வாகை மரங்களாக வளரும்!முருங்கை அரும்பு முல்லையாகி ; முள்ளில் ரோஜாவாக மலரும்!
தாழை மடலை எதிர்த்துத் தடவ முடிகிறதா ?தமிழனை மட்டும் மிதித்துத் தள்ள முடிகிறதே!
வங்கக் கவிஞர் தாகூர் தேசிய கீதம் வழங்கியவர் ;சிங்கத் ‘திராவிடர் தந்த செழிப்பும் வலிவும் தான்ஆரிய நாகரிகத்தின் நலிவு போக்கி அதன்அடிப்படையை அலுங்காமல் காத்தது’ என்கிறார்.
சோவியத் நாட்டு மொழி அறிஞர் ‘சாகிரப்’ என்பார் ;வட இந்திய திராவிட மொழிகள், தென்னக திராவிட மொழிகளைவரிசைப்படுத்தி ஒப்பிட்டுப் பேசுபவர் ;வடக்கு நோக்கித் தமிழர் தெற்கிலிருந்து பரவினர் எனவன்மையாக வாதிட்டு அதனை நிலைநாட்டுகின்றார் ;வட புலம் தமிழர் வென்றதை அறிவோம் ; தமிழ் சென்றதைஅறிவோமா ?
“On the contrary linguistic data indicate that theDravidian Languages spread from South to Northrather than from North to South”
G. ZografSoviet Indologist in aSurvey of Languages ofIndia, Pakistan, Ceylon and Nepal.
காஷ்மீரில் இன்றும் சில மலை வாழ்வோர் பேசும் மொழிகன்னட வரலாற்றாசிரியர் ஒருவர் கூற்றுப்படி
திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளில் ஒன்றெனத்தெளிவுபடுத்தியுள்ளது ; வெறுங் கற்பனையல்ல!
பீகார் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் குருக்கர் என்போர்பெரிதும் பயன்படுத்தும் நாட்டுப் பாடல், பழங்கதைகளில் - அவர்கள்
தென் முனைப் பகுதி வாழ்ந்த திராவிட மக்களே எனத்தெரிவிப்பதைத் திரையிட்டு மறைத்தார் இலர்!
இந்திய நாகரிக அடையாளமான புடவையும் வேட்டியும்இனிய திராவிட நாகரிகத்தின் கொடையே யாகுமெனப்
பேராசிரியர் எஸ்.கே. சாட்டர்ஜி பேசுகிறார் ;“இந்தோ ஆரியன் - இந்து” என அவர் எழுதிய நூலில் (பக். 134)
“ஆரப்பா” புதை பொருள் ஆராய்ச்சியில் தாய்த் தெய்வ வழிபாடும்,அமெரிக்கா கொலராடோ ஆற்றின் கரையில் சிவனுக்குக் கோயிலும்,
ஆதிச்ச நல்லூரின் “மண்டையோடு” சிந்து வெளியுடன்ஒத்திருப்பதும் ;ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வின் வெளிப்பாடுகளும் ;
அன்றைக்கே திராவிட நாகரிகம் அனைத்து நாடுகளிலும் “ஆதி”உரிமை பெற்று,அகன்று படர்ந்தமைக்கு ஆணித்தரமான ஆதாரங்கள் என்போம்.
ஆரியரால் கேலி செய்யப்பட்ட சிவலிங்க வழிபாடும் ;‘அசுரா’ என அழைக்கப்பட்ட திராவிடர் பண்பாடே !
உலகின் பழைமைமிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் ; மூன்றில்ஒரு பங்கினைப் பிற இனத்தவர்க்கும் ; இரு பங்கினைத்திராவிடர்க்கும்
உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து,உரைக்கின்றார் ; சோவியத் நாட்டுப் பேராசிரியர் ‘காந்திரதோவ்’ -
ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும்அந்நாளில் குமரிக் கண்டத்துடன் இணைந்திருந்த
வரலாற்றையொட்டி ஆண்டவன் வழிபாடும் - பகைவளைப்பதற்கு ஆயுதங்கள் அறிமுகமும்
அய்யாயிரம் ஆண்டின் முன்னே திராவிடர்க்கும்ஆரம்பமான பொது நாகரிகமெனப் புகல்வதும் உண்டு.
எழுத்து முறையில் எகிப்தியரின் தனித் தன்மை போற்றிஎப்படி அந்தச் சிறப்பினை அவர்கள் திடுமெனப் பெற்றார் எனக்கேட்டு ;
வாணிபத் தொடர்பால் தமிழர், அவர்க்கு ;வழங்கிய கொடை யென்பர் வரலாற்று அறிஞர்கள்!
பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதியதாம்பழங்கதை யொன்றில் ; மெசபதோமியர்க்கு,
நாகரிகம் கற்பித்த நல்லவராம் “ஒனசு” என்பார்,நன்கு பயிற்சி பெற்ற குழுவினர் சூழ்ந்திட ;
‘எரிது’ எனும் நகருக்கு வந்து நாகரிகம் பயிற்றுவிக்க -ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார் என்றும்,
அறிவியல் கலை, கட்டிடக் கலை, ஆண்டவன் வழிபாடுஅனைத்தும் கற்பித்தார் என்றும், கூறப்படுவதால் ;
அந்த நாகரிகம் படிப்படியாகப் பரவிடாமல்அடித்தவுடன் எழும்பிடும் பந்து போல -
எப்படிப் பரவியதென்பதற்கு ஏற்ற விடையாகத் தான்கூறப்படுகிறது ; அது குமரிக் கண்டத் தமிழர் உறவினால் என்று!
அக்கண்டமும் ஆழ்கடலின் அகன்ற வாய்க்குஅப்போதே இரையாகிப் போனது -
அதன் பின்னரும் அங்கிருந்த திராவிடப் பண்பாட்டு இனம் ;அனைத்து இந்தியப் பெரு நிலத்தின் பேரினம் ஆனது!
அப்பேரின மெனும் பெருந்தருவின்பெருமை சேர் கிளைகளாகத் தமிழ் இனம் போன்ற
தகைமையுறு இனங்கள் பலவும்,தகுதி மிகு மொழிகள் பலவும் ;
தழைத்துச் செழித்து, தக்காராம் தமிழ்ப் புலவர்களும் - அப்புலவர்கள் வாழ்த்திய புரவலராம் புவியாண்ட மன்னர்களும் - அந்த
மன்னர்களாண்ட இந்த மண்ணின் வளமும், அந்த வளம் பெருக்கிடவலிமை பெருக்கி ; வையம் போற்றிட வாழ்வாங்கு வாழ்ந்த
வரிப்புலியனைய வீரர்களும், அவர்கள் வழி வழி வந்த சூரர்களாம்தமிழ்க் குலத் தீரர்களும், பகை நாடுகளை எப்படிப் பந்தாடினர் -
வெற்றி சிந்து பாடிட எங்ஙனம் வீரம் விளைத்தனர் -இவற்றுக்கான சான்றுகளை எல்லாம் எங்கிருந்து தேடிக்கொணர்வது ?
‘அதற்கேற்ற காலம் சங்க காலம் தான்’ என்று ;ஆன்றோர்கள் கூறிடுவர் ; அறிவேன் யான்!
இந்தக் காலக் கணிப்பிலே கூட கருத்து வேறுபாடுகள் இருப்பினும்இராகவ அய்யங்காராம் தமிழ் அறிஞர் காட்டிடும் சான்றுக்கேற்ப ;
கி.மு. நான்காம் நூற்றாண்டுதான் தொடக்கக் காலம், எனக்கொண்டால் ;கிழக்கிலிருந்து திசைகளை மேற்கு தெற்கு வடக்கு எனத்துவங்குவது போல் ;
சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தரை வைத்தேதுவங்கியுள்ளோம் ;தொடர்ந்திடுவோம் இடையில் துவளாமல் அவ்வாறே!