கவிதை 29 / 58

தாயே தந்திடு எமக்கு தன்மானச் செல்வங்களை ஈன்று!

Mother, Give Us — Bear Us Treasures of Self-Respect!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: தாயே, தந்திடு எமக்கு தன்மானச் செல்வங்களை ஈன்று!

X
தாயே தந்திடு எமக்குதன்மானச் செல்வங்களை ஈன்று!
‘தலையாலங்கானம்’ எனும் ஊரின் பெயரைக் கேட்கும்போதேதஞ்சைத் தரணியில் ‘தலையாலங்காடு’ நினைவு மட்டுமல்ல ;
சங்க இலக்கிய காலப் போர்களிலேயேதலை சிறந்த போர் நடந்த பூமியென்ற சரித்திர நினைவும் எழுமாம்.
இரு முனைகளிலும் நின்று போரிட்டவர்கள் - இந்தத்திருவிடத்தார் தமிழ் இனத்தார் தான் -
இரண்டாம் நெடுஞ்செழியன் ; வயது வரா இளைஞன்மிரண்டானில்லை போருக்கு ; வந்து விட்டான் களத்திற்கு!
பேரரசர்கள் இருவர் சேரர், சோழர் குல தீரர் ;பெரும்படையுடன் ஐந்து வேளிர், அவர்கள் படைகளில்அளவிலா வீரர்!
இரும்பொறையாம் இணையற்ற வீரன் சேர மன்னனும் -வரும் பகை மோதிட வல்லவனாம் சோழன் கிள்ளிவளவனும் -
வெகுண்டெழுந்த வேளிர் குலத் தலைவர்களாம்வேண்மான், பொருநன், எழினி, எருமையூரன்
திதியன் என்போர் ஐவரின் படையும் கண்டுதிகைத்துப் போவான் நெடுஞ்செழியன் என்றும் ;
சிறுபிள்ளை விளையாட்டுப் போல செருமுனையில்பெரு வெற்றி பெறலா மென்றும்
எண்ணி வந்த திண்ணியர்கள் என்ன ஆனார் ?கண்ணியமாய்த் தோல்விதனை ஏற்றுக் கொண்டு - “நல்ல
புண்ணியம் நாம் செய்ததாலே புனர் ஜென்மம் எடுத்துப்போர்முனையை விட்டுப் போகின்றோம் உயிரோடு” எனக் கூறி ;
நண்ணினார் அவரவர் நாடும் வீடும்! களத்தில்கண்ணினால் பேசிக் கொண்டார் பாண்டியர்கள் ;
“நெடுநாள் தவமிருந்தாலும் ‘காலன்’ என்போன் எங்கள்நெடுஞ்செழியனை வெற்றி கண்டிட முடியாதெ”ன்று!
★ ★ ★
களத்திலும் சரி ; வாழ்வெனும் கடலிலும் சரி ;வீரமெனும் படகில் ஏறி - துணிவு எனும்
துடுப்பு கொண்டு பயணிக்கும் உறுதி கொண்டார் -தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் போல்
தவமிருந்து வரம் பெறாமலே ;தமிழ் உள்ள வரையில் வாழலாம் என்று - அவன்
தளிர் விரல்களைத் தடவிக் கொடுத்து,தடந்தோள்களில் முத்தமீந்து,
தமிழ்ப் புலவர்கள் வாழ்த்தினர்.தமிழ் நிலமே தலை நிமிர்ந்து வாழ்த்தியது!
தலைசிறந்த புலவர் ஏறுகளாம் நக்கீரரும், மாங்குடி மருதனாரும்கலை மணங் கமழும் காப்பியப் பாடல்கள் போல நிலை பெற்றுவாழும்
‘நெடுநல்வாடை’யும் ‘மதுரைக் காஞ்சி’யும் இயற்றியதிருநாளைக் கொண்டாடிட ஒரு நாள் வரும் என ;
இந்தத் தமிழ் நிலமே ;இதயமார வாழ்த்தியதாம்! இப்போதும் வாழ்த்துகிறதாம்!
புறம்பாடிய புலவர் குடபுலவியனார் ; இப்போரினைப்புகழ்ந்துரைக்கும் போது குறிப்பிடுகிறார் -
இருபுறமும் தமிழர்களே அணி வகுத்த போர்க்களத்தில்இடையே எருமையூர்ப் பகைவர் படைகளும் கலந்த போதும் ;
பாண்டிய நெடுஞ்செழியன், பார் புகழும் வெற்றியைப் பெற்றுதூண்டிற் புழுக்களாய்ப் பகையைத் துடிக்க விட்டு
தோல்வியை அவர்தம் தோளில் சுமக்க விட்டுத்துரத்தி விட்டான்! மீனக் கொடியை வானில் உயர்த்திவிட்டான்.
தமிழ் மானக் கொடியைத்தன் கையில் பிடித்து விட்டான்.
போர் முனைக்குப் புறப்பட்ட போது அவன் புலிக்குட்டி -போர்க் களத்தில் பகை ; அவனுக்குப் பூனைக்குட்டி!
இதனை
இடைக்குன்றார் கிழார் எனும் புலவர் ஏறுஎப்படிப் பாடுகிறார் ; எழுச்சியுடன் என்பதுதான் -
இங்கே நாம் காண வேண்டிய காட்சி ;கண்டு மகிழ வேண்டிய மாட்சி!
“கிண்கிணி களைந்தகால், ஒண்கழல் தொட்டு ;குடுமி களைந்த நுதல், வேம்பின் ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து ;குறுந்தொடி கழித்தகை, சாபம் பற்றிநெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் -யார் கொல் ?”
(புறம். 77)
அதாவது ;
கிண்கிணி அணிந்து விளையாடும் மழலைக் குழந்தை ;அதனை அவிழ்த்து விட்டு,
வீரக் கழல் பூட்டிக் கொண்டு -தலையில் சிறு குடுமியைக் களைந்து விட்டு,
வேம்பு மாலை சூடி ; அத்துடன்அமர்க்களத்துக்கான ஆரமும் பூண்டு,
காப்பு இருந்த கையில் கணையும் வில்லும் தாங்கி,தேரின் முகப்பில் நிற்கிறான்
பாலகன் பாண்டியன் நெடுஞ்செழியன்என்கிறார் பாவலர் ஏறு!
அது மட்டுமா ?
வளர்நிலா போன்ற பாண்டியன் - ஒருவஞ்சினமும் கூறுவதாக ; அவனே
இயற்றிய புறப்பாடல்எழுச்சிப் பாடல் ; இதோ கேட்போம்!
“நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்!இளையன் இவன் என உளையக் கூறி....
சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின் - பொருந்தியஎன் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது
‘கொடியன் எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிகுடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!......
புலவர் பாடாது வரைக என் நிலவரை!....இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே!”
(புறம் 72)
அதாவது ;
பகைவர்களைச் சிதற வைத்து அவர்தம்முரசுகளை ஒலிக்காமல் முடக்குவேன்!
இல்லையேல் என்னைக் கொடுங்கோல் பட்டியலில்இவ்வுலகம் இணைக்கட்டும்!
இரவலர்க்கு எதுவும் ஈயாதவன் என்றஇழி சொல் என்னைத் தாக்கட்டும்!
இந்தப் புலவர்கள் எவரும் என்னைஏற்றிப் பாடாதிருக்கட்டும்!
இப்படியொரு மானமிகு இளைஞனை, மறக்குல மைந்தனை,தமிழ்ப் பாண்டியர் குலத்தில் கண்டது போல் -
இந்தத் தமிழகம் எங்கும்கண்டிட வேண்டுவோம் தமிழன்னையை!
தாயே ; தந்திடு எமக்கு அத்தகுதன்மானச் செல்வங்களை ஈன்று!

மூலமும் சான்றும்