கவிதை 30 / 58

ஆற்றலின் அளவுகோல்; அவன் செங்கோல்!

The Measure of His Power: His Just Sceptre!

X
ஆற்றலின் அளவுகோல்;அவன் செங்கோல்!
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும்கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும்
இடைப்பட்ட காலம் எண்ணூறு ஆண்டுகளும்இங்கே தமிழகத்தின் சங்க காலம் என்போம்.
மூவேந்தராம் முடியுடை வேந்தர் - தமிழில்பாவேந்தர்களின் பாமாலை சூட்டப் பெற்று
படிம வளர்ச்சியின் பல படிகளைத் தாண்டியபல்வேறு நாடுகளின் நாகரிக மேம்பாட்டுக்குத்
தாயகமாக விளங்கிய இந்தத் தமிழகம் - கடல்நாயகமாகவும் வாணிபத்தில் திகழ்ந்து
சேரர், சோழர், பாண்டியர் எனவீர நிறைந்த பூமியாகவும் நிமிர்ந்து
கற்புடைய மகளிர் பொற்புடைய மறவர்வெற்புடைத்து வெற்றி கொள்ளும் மரபினர்;
என உலகம் போற்ற உயர்ந்து நின்றபோதுஎழுஞாயிறாக ஒளிர்ந்தது முதலில் சோழ நாடாம்!
முதலிரண்டு கரிகாலன்கள், கிள்ளி வளவன் - இந்தமூவரையொத்த செங்கணான், நலங்கிள்ளி எனும்
அய்வரும் தான் ஆதிகாலச் சோழ அரசர்களாம்அவர்களிலே இரண்டாம் கரிகாலன்தான் திருமாவளவன்
அழுந்தார் வேளிர் மகளுக்கும், இளஞ்சேட் சென்னிக்கும்,அன்பு மகனாய்ப் பிறந்து உறையூரில் இருந்து ஆண்டவனாம்!
அருளாளர், ஒளியர் என்பார் ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டிஅவனாட்சியினை இறுதியில் ஏற்றுப் பணிந்தனராம்.
ஆக்கப் பணிகள் பல புரிந்தான் என்றும்,அமைதி தவழ நாடை நடத்தினான் என்றும்
வளநாடு தமிழகம் என்று வையம் வாழ்த்திடஉளமகிழ்ந்து கவிஞர்கள் பாடிட ஆட்சி நடத்திப் பின்னர் ;
ஆழ்கடல் தாண்டி அயல்நாடு உறவுகள் கொண்டிடஅடுத்தொரு தலைநகராய் பூம்புகாரை ஆக்கிக் கொண்டான்
அனைத்துலகச் சிறப்புடைய வண்ணம்அவன் செங்கோல் ; சோழர் ஆற்றலின் அளவு கோலாயிற்று!
அந்த மாமன்னன் புகழ் அனைவரும் பாடுதல் கண்டுவெந்து நொந்து போன வடநாட்டார் சில மன்னர் ;
வாளாட்டிப் பார்த்ததினால் - வளவன் ;வாளெடுத்துக் கிளம்பினான் ; பகை வீழ்த்திச் சாய்த்திட!
வணங்கி பேற்றிட வந்து விட்டோம் என்றுவச்சிரம், அவந்தி, மகதம் முதலிய நாடுகளில்
வணங்கா முடியாய் இருந்தோர் அனைவரும் ;வளைந்து குனிந்து பல பரிசுகள் வழங்கினர்.
மகத நாட்டான், பட்டி மண்டபமும்,வச்சிர நாட்டான், கொற்றப் பந்தரும்,அவந்தி நாட்டரசன் தோரண வாயிலும்,பரிசாக அளித்து அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.
மணிமுடி மாமன்னன் கரிகாலன்மதிப்பைக் குலைத்திடத் - தன்
மண்டையில் உதித்த யோசனை யொன்றை,மந்திரம் போட்டான் “முகரி”யெனும் வட நாட்டான்.
“காவலனே ; கரிகால் மன்னவனேகாவிரிக்குக் கரை உயர்த்திக் கட்ட
இலங்கைக்குப் படையெடுத்து வென்றுஏராளமான கைதிகளைக் கொண்டு வரலாமே ?” என்றான்.
படையெடுத்தான் கரிகாலன் - இலங்கை வீரர்பன்னீராயிரவரைச் சிறை பிடித்து வந்து ;
பாசனத்துக்குப் பயன்படும் வண்ணம் ; காவிரிபாய்ந்தோடும் வகையில் கரை அமைத்தான் மன்னன்!
சூழ்ச்சி மிகு தன் ஆலோசனையினால் - மேலும்மாட்சியன்றோ வந்தது கரிகாலனுக்கென்று ; முகரி
அடுத்தொரு சதி நடத்த ஆயத்தமானபோது ;எடுத்தனன் கரிகாலன் ஈட்டியினை ;
அழுத்தினன் அதன் முனையால் ;கொழுத்த ‘முகரி’யாம் கொடியவன் நெற்றியிலே!
அதுவரை ‘முகரி’ முகத்திலிருந்தஅவலட்சணமாம் மூன்றாம் கண்ணொன்று ;
முரசமொன்று போல் முனையில் கிழிந்ததுபோல்முற்றாகக் கிழிந்து புண்ணாகிப் போன கதையை
வற்றாத தமிழ்க் கவிஞர் ஒட்டக் கூத்தரும் -எக்காள முழக்கமிட்டு ஜெயங்கொண்டாரும் ;
கவிதைகளாக்கித் திருமாவளவன் கரிகாலனைப்போற்றிப் பாடியுள்ள நேர்த்தி ;
சாகாப் புகழ் பெற்றத் தமிழர்சரித்திரத்தின் கீர்த்தியாம்!
இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுஇவற்றையே நாம் வரலாற்றுக்
குறிப்பாகக் கொள்ள வேண்டியதால்குழப்பம் சற்று விளையத்தான் செய்கிறது ;
இரு கரிகாலர்களில் இவர்எவராயினும் - வரும் புகழ்
தமிழர்க்குத் தானே என்று கருதிதணித்துக் கொள்வோம், தாகம்!
துடைத்துக் கொள்வோம் ;முழுமை வரலாறில்லா சோகம்!

மூலமும் சான்றும்