கவிதை 31 / 58

மாண்பு நிறை தாயும் மாசற்ற மகனும்!

The Mother Full of Dignity and the Stainless Son!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: மாண்பு நிறை தாயும், மாசற்ற மகனும்!

X
மாண்பு நிறை தாயும்மாசற்ற மகனும்!
இயற்கையின் எழில் அனைத்தும்இருளும் ஒளியுமாய் ;
வானும் முகிலுமாய் ;கதிரும் நிலவுமாய் ;
கடலும் நிலமுமாய் ;இவ்விதம் இணையா -
இரண்டிரண்டாய்த் தோன்றி ; அவைஇரண்டறக் கலந்து என -
பேருரு எடுக்காமல்சீருரு எடுத்துச் சிரிப்பது போல ;
அலையாடும் அழகு கொண்டுஅருவியென நீண்ட கூந்தலும்,
மொட்டிரண்டு உடல் முகப்பிலும்பட்டுப் போல் மேனியும்,
பவளச் செவ்வாயும்,பற்கள் முத்தாரமும்,
அவள் அழகுக்கு அழகு செய்யஇன்னும் என்னென்ன அழகுண்டோ ;
அத்தனை அழகுகளும் அணி வகுத்துப்படைத்த பெண்ணுருவே தான் ;
பைங்கிளி மாதவி என்கிற போது ; உயிரில்பாதியாய் அவளைப் பகிர்ந்து கொண்ட
பல்கலை வித்தகன் கோவலனுடன் கூடிபாவை அவள் பெற்ற பெண்ணாம்,
மணிமேகலையின் அழகுதனை சிறப்பிக்க,அணி அணியாய்ப் புலவர்களை அழைத்தாலும் -
அவர் மட்டுமல்ல ; அவர் கற்ற தமிழும் திகைக்கும்அத்துணைப் பேரழகை வாணிக்க வார்த்தை ஏதென்று!
★ ★ ★
நீர்வீழ்ச்சியென ஆனந்தம் பொழிந்த - அந்தசீர்மிகு இல்லத்தில் ;
மாதவி கோவலனிடை இந்திர விழாவில் எழுந்த ஊடல் ;மறுபடியும் அவர்கள் வாழ்வில் மனைவி கணவனாய்க் கூடுதற்கு -
இடமின்றி இற்றுப் போன நிலையால் - மாதவிஇரவில்லா உலகமாகி,
துறவியானாள் உளமுடைந்து!இல்லறம் இனி இல்லையென முடிவெடுத்த பிறகும்,
முள்ளொன்று அவள் நெஞ்சில் குத்தியது போல்கள்ளொத்த காதல் வயப்பட்ட காளையொருவன் ;
மாதவி மகள் மணிமேகலை வாழ்வில் குறுக்கிட்டான்எது செய்வதெனப் புரியாது வாடினாள் மாதவியாள்!
இதயமா மணிமேகலையைக் காதலிப்பதாக,உதயகுமாரனாம் சோழ இளவரசன் ; “நான்,
வந்திக்கும் வண்ணச் சிலையே! வானமுதே! உனைச்சந்திக்க மாலை வருகின்றேன் என்றும்,
வேரிலே பழுத்த பலாவே ; உனக்குநேரிலே கோரிக்கை வைக்கத்தான்” என்றும்,
மேகலைக்கு மடல் தீட்டி அனுப்பினான் -மேகலையோ உடல் நடுங்கினாள்!
அவன் வருவதற்குள் ; தன் வடிவழகைஅறவே மாற்றிக் கொள்ளத் துடித்து ; அவ்வாறே
காய சண்டிகை பெயரும் காளி நிகர்த் தோழி போலமாயத் தோற்ற ஒப்பனையுடன் உதயன் முன் வந்து நின்றாள் ;
ஓர் இருட்டு மண்டபத்தின் உட்புறத்தில் -உணவு பரிமாறும் தாழ்வாரத்தில்!
ஆய கலைகள் கற்றிருந்தும் அரசர் மைந்தன்அவசரத்தில் காய சண்டிகைக்கும் மேகலைக்கும் -
அடையாள வேறுபாடுகளை அறியாமலே ;அங்கு ஆதரவற்ற மக்களுக்கு
அன்னம் அளித்துக் கொண்டிருந்த மேகலையின்அருகில் நெருங்கி ; அன்பே என்றான், அழுதே என்றான்.
அலங்கோலமாய் ஏன் ஆனாய் என்றான் -அப்போது காய சண்டிகையின் உண்மைக் கணவன்
அங்கே வந்து விடவே; எதிர்பாரா விபரீதமாகஅவள் கணவன் வித்தியாதரன், தன் மனைவிதான்
தவறான பழக்கம் இளவரசனுடன் கொண்டதாய் எண்ணிதாதரவென இழுத்துப் போட்டான் மணிமேகலையை ;
தயாராய் இடுப்பில் கட்டியிருந்த வாளை எடுத்து ; இளவரசன்தலையை வெட்டி எறிந்தான் - எவரும்
தடுப்பதற்குள் தப்பித்து ஓடி விட்டான் ;தன் மனைவி காய சண்டிகை கற்போடு விளையாடிய
கயவனாம் உதய குமாரனின் கதையை முடித்தேன் எனக்கர்ச்சித்தான் ; பாவம் ; மணிமேகலை மூர்ச்சித்தாள்!
செய்தி கேள்வியுற்ற செம்பியன் நெடுமுடிக்கிள்ளிஒரே மகன் உயிர் இப்படிப் பிரிந்ததே யென்று, உளம்துடித்தானில்லை
“நானே தந்திருக்கு வேண்டிய தண்டனையைநாடே தந்தது போல யாரோ தந்து விட்டார்” என்று ஆறுதல்கொண்டான்.
அத்துடன் நில்லாமல் ;இத்தனைக்கும் காரணம்
மணிமேகலை தானே யென்றமனத் தடுமாற்றத்தில் ;
அவளையும் அடைத்தான் சிறையில்! அதற்குமனைவியின் சொல்லும் காரணமாம் ஒரு வகையில்!
அப்போது அறவண அடிகள் என்பார்அறிவு நிறை ஆன்றோர் சான்றோர்
அனைவருமே போற்றித் தொழும் சீலர் ;அவர் அறிவுரை கேட்டு மன்னன் ;
மணிமேகலையை விடுவித்து மட்டுமின்றிமறுபடியும் மக்கள் பசி தீர்க்கும்
மனித நேயப் பணியைத் தொடரச் செய்தான்.கருணைத் தாயென மாறிய மேகலையை
காஞ்சியரசன் இளங்கிள்ளி வரவேற்று - அவள்கனவாக இருந்த புத்த பீடிகையும் அமைத்துத் தந்தான்.
மாதவி, மேகலை யெனும்மாண்பு நிறை தாய் மகள் வரலாறு
மானமிகு தமிழ் நிலத்தின் பெருமை கூறும்மாசற்ற புகழ் மிக்க வரலாறன்றோ ?

மூலமும் சான்றும்