கவிதை 32 / 58
கோவூரார் கேள்வியுறும் - குனிந்திடும் தலையுறும்
Kovoorar Questions — Heads Bow Down
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: கோவூரார் கேள்வியும் குனிந்திடும் தலையும்!
கோவூரார் கேள்வியுறும் -குனிந்திடும் தலையுறும்
தமிழ் மொழியின் இலக்கண நெறியும் ;தன்னேரில்லா இலக்கியச் செறிவும்,
தமிழர்களின் நல்லொழுக்கத்தையும்தகுதிமிகு நாகரிகப் பண்பாட்டையும்
விளக்கி நிற்கும் விளக்குகளாம் என்றுவித்தகராம் ஒளவை. துரைசாமி ; விளக்கியுள்ளார்.
அது வெறும் கருத்தல்ல ; விழுமிய கருத்து -அறிவார்ந்த நறுங் கருத்து என்பதற்கு
ஒன்றிரண்டு சான்றுகள் மட்டும் உரைக்கின்றேன்நன்று நன்றென்பீர் ; நமது பீடும் பெருமையும் கண்டு!
★ ★ ★
கவிஞர்கள் புலவர்கள் என்றால்கவி புனைவதில் பண் இயற்றுவதில் வல்லவர்கள் -
பொதுவில் எல்லார்க்கும் நல்லவர்கள்புறமா ? அகமா ? போர்க்களப் பாணியா ?
குருதியிற் கலந்த குளிர் தமிழ் எடுத்துக் குயிலெனவும்கூவிடுவர் ; சிலவேளை புலியெனவும் பாய்ந்திடுவர்!
உறுதி பூண்டு, தம் உதிரப் புனலில் நீந்திச் சென்று ;இறுதி வெற்றி தமிழர்க்கே வாய்த்திடத் துடுவார்!
அத்தகு கவிஞர்கள் இந்நாள் - எண்ணிக்கையில்மெத்தவும் குறைவு எனினும் ; அந்நாள் அவர்கள்,
எண்ணிக்கை ; எண்ணம் இரண்டிலுமே ஏற்றம் பெற்றிருந்தனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் பண்ணமைத்துத் தரும் பாவலர்கள் ;
வண்ணமிகு தமிழில் வடித்தளித்த பாடல்கள் ; நம்எண்ணமெல்லாம் எரிதழலாக்கி எதிரிகளை ஓடவிடும்.
தலையாலங்கானத்துப் போருக்குத் தலைமையேற்றஇளையோன் நெடுஞ்செழியன் ; இயல்பாகவே கவிஞன்என்பதால் -
எத்தகைய வஞ்சினம் கூறினான் ; அவன்இளமைப் புகழ் என்றும் மறவாதிருப்பதற்கு!
“எதிரிகளை இப்போரில் வீழ்த்தி - நம்இனமான மேன்மைக்கு வெற்றி மகுடம்
சூட்டாவிடில் ; என் குடையின் கீழுள்ள மக்கள் ;கொடியவன் எம் கொற்றவன் எனக் கூறித்தூற்றுவாராக!
அறிஞர் பெருமக்களாம்புலவர் பெருமக்கள் ; நான்
ஆளும் நிலப் பரப்பை வியந்துஅதனைப் பாடாது விட்டு விடுவாராக!
‘இல்லை’ என்று வந்தார்க்குஇல்லை என்று சொன்ன
ஈயாக் குணத்தினன் எனஇந்நாடு எனை இழித்துரைத்திடுமாக!”
புழுவையும் புலியாக்கும் இந்தப்புறப்பாடல் முழங்குதற்குப்
புவியாண்ட நெடுஞ்செழியன் - தன்னைக்கவியாகவும் ஆக்கிக் கொண்டான்.
★ ★ ★
போர் மூண்ட போது மட்டுமல்லபொதுவில் அரசர் குல அண்ணன் தம்பிகளே ;
பொருதுகின்றார் களத்தில் என்றால்,புலவர் கோவூர் கிழார் அங்கிருப்பார்!
உடன்பிறப்பாம் நலங்கிள்ளியும்,நெடுங்கிள்ளியும் ஒருவரோடொருவர்,
மோதுவதை முதலில் தடுத்திட்ட பெரும் புலவர் ; அந்தமுத்தமிழ் வித்தகர் தானே!
இளந்தத்தன் எனும் கவிஞனை ;இனம் புரியாமல் நெடுங்கிள்ளி
ஒற்றன் எனக் கருதி - அவனைஒழித்துக் கட்ட அவசர ஆணை பிறப்பித்தபோது ;
நெடுங்கிள்ளி ஆட்சியின் நீதியையும் ;நெடுங்கிள்ளியையும் தலை சாயாமல் - தற்காலிகமாக
நிலை பெறச் செய்த பெருமை - அரசியல்கலையும் கற்றுணர்ந்த அறிஞர் கோவூர் கிழாருக்கே உரியதாம்!
★ ★ ★
மலையமான் திருமுடிக் காரியை வென்று - அவன்மக்கள் செல்வங்களை மதயானை காலிலிட்டுக் கொல்வதற்கு ;
மன்னன் கிள்ளிவளவன் ஆணையிட்ட போதுமின்னலாய் விரைந்து குறுக்கிட்ட கோவூரார் தான்
கன்னலாம் தமிழர்க் கென்றும்இன்னமும் வரலாற்றில் வாழும் கவிஞரென்றும்
ஏற்றப்படுகின்றார் ; எம் போன்றோரால்!போற்றப்படுகின்றார் ; என்றென்றும் வாழ்க என்று!
★ ★ ★
அடுத்தடுத்து நடந்த போர் ஒன்றில் எதிர்த்திட அஞ்சி நடுங்கிஆவூர்த் தலைநகரிலிருந்து, ஓடினான் நெடுங்கிள்ளிஉறையூருக்கு!
அடித்து விட்ட பாம்பாக வஞ்சகத்தை விட்டு விடல் ஆபத்தென்றுஅனுபவ அறிவு கூற ; அதனையேற்று நலங்கிள்ளி அவனைத்தொடர்ந்தான்.
முற்றுகையிட்டான் கோட்டையை ஒரு சோழன் ;முத்திரையிட்டான் கோட்டைக்கு இன்னொரு சோழன்!
இரு படைகளுக்குமிடையேதிருமலியும் தமிழ்ப் புலவர் கோவூர் கிழார் ;
கோட்டைக்கு வெளியிலேயும் பேசினார்உள்ளேயும் தூய உளம் திறந்தார்!
என்ன பேசினார்என்ன வாதம் வைத்திட்டார், என்பதுதான் ;
இதோ இந்தப் பாடலாக ஒலிக்கிறது!இதமாக ஒலித்து
இருவர் பகையையும்ஒழிக்க முனைகிறது!
“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடுபொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றேஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியேஇருவீர் வேறல் இயற்கையு மன்றே, அதனால்குடிப் பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித் தேர்நும்போ ரன்ன வேந்தர்க்குமெய்ம்மலி யுவகை, செய்யுமிவ் விகலே”
இதன் பொருள் :
“எதிர் எதிரே போர் முனையில்இருவர் நிற்கின்றீர் -
இருவரில் ஒருவர் பனம்பூ மாலை அணிந்தஅரசன் சேரனல்ல!
வேப்பம் பூ மாலையணிந்தவேந்தனாம் பாண்டியனுமல்ல ;
இருவருமே ஆத்தி மாலை தான்ஒருவரைப் போல் ஒருவர்
அணிந்து வந்துள்ளீர் -அணி வகுத்துப் போகின்றீர் -
இருவரில் ஒருவர் தோற்பினும்தோற்பது சோழர் குடி தானே!
இருவருமே போரில் வெல்வதுஇயலுமா ; சொல்லீர் ?”
கோவூரார் கேள்வியால் குனிந்தன இரு மன்னர் தலைகளும் -குனிந்தன எனினும் ; தணிந்ததா அவர்களின் போர்வெறி என்றால் ;
நனைந்தது மீண்டும் தமிழர் பூமி ; அவர்தம் குருதிப் புனலால்!அமைந்தது குறுகிய காலமே ; அமைதிக் காலமாக!
“ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே” எனும்கோவூர் கிழாரின் குரலுக்கு ; அந்த
“மனித நேய உணர்வு”க்குமதிப்பளிக்க மறுக்கும் வரையில் ;
மக்கள் சமுதாயத்தில்போர் நிறுத்தப் பேச்சுக்குப் பொருளே இல்லை என்போம்!