கவிதை 33 / 58

“செருப்பாழி எறிந்த” என்பது சிறப்புப் பட்டமா?

Is “Seruppaazhi-Erindha” an Honorific Title?

X
“செருப்பாழி எறிந்த”என்பது சிறப்புப் பட்டமா?
சோழர் வரலாறு தமிழக வரலாற்றில்முதன்மை பெற்றதாகவும் - மிகச்
சுவை நிறைந்ததாகவும் - அதற்கொப்பசோகம் மிகுந்ததாகவும் - தமிழ்
மொழியைப் புகழ்ந்து போற்றியதாகவும் - பின்னர்தமிழ்மொழியைத் தள்ளி வைத்துப்
பிற மொழியை ஏற்றியதாகவும் -கலை, நாகரிகம், காத்ததாகவும்,
நீதி நிர்வாகம் சிறப்பு வழங்கி வழிகாட்டியதாகவும்வடபுலத்து மன்னர்கள் வாரித் தந்த பரிசுகளை
வெற்றிக் களிப்புடன் ஏற்றுக் கொண்டதாகவும்கடல் கடந்தும் களங்கள் கண்டதாகவும் - அந்தக்
களங்களில் எல்லாம் வெற்றிக்கனி உண்டதாகவும் ;ஆண்டுகள் பல கொண்ட ஆட்சிகள் ; புகழுடன்
அமைந்து சிறந்ததாகவும் ;அறிஞர் பெருமக்கள் வியந்து மகிழ்கின்றனர் ;
தமிழக வரலாற்றில் நிமிர்ந்து நின்றதகைசால் சோழப் பேரரசுகளை!
★ ★ ★
நாவலர் சோம சுந்தர பாரதியார், வரலாற்றுவல்லுநர் நீலகண்ட சாஸ்திரியார் -
வழங்கியுள்ள சிறப்புரைகளுடனேவரைந்துள்ள முனைவர் மா. இராசமாணிக்கனாரின்
சோழ வரலாறு படித்திடும் வாய்ப்பு பெற்றேன்.ஆதிகாலச் சோழ மன்னர்கள் ஆண்டிருந்த காலம்
தொல்காப்பியர் காலத்துக்குத் தொடர்புடையகி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பார்.
முதல் வரிசையினராக கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குமுற்பட்ட சோழர்கள் சிபி, முசுகுந்தன், கந்தன், செம்பியனும்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் “செருப்பாழி எறிந்தஇளஞ்சேட் சென்னி” என்பானும் ஆண்டனராம்!
கி.மு. இரண்டாம் நூற்றாண்டைமனுநீதிச் சோழனுக்கும், முதல் கரிகாலனுக்கும்
ஒதுக்கியதை ஒப்புக் கொண்டு ;முதல் நூற்றாண்டுச் சோழன் இரண்டாம் கரிகாலன் என்றும் ;
மூன்றாம் நூற்றாண்டுச் சோழன் முடியுடை வேந்தன் ;செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும்,
அவனைச் சேர்த்திணைத்து வரும் கி.பி. 1 முதல் கி.பி. 150 வரைநலங்கிள்ளி, நெடுங்கிள்ளி போன்ற சோழர்க்கு
உரியவை என்றும் அவர் உரைத்திடுவது கண்டு ;ஓர் அய்யப்பாடு மட்டும் எனக்கெழுந்ததுண்டு!
அஃதென்ன அய்யப்பாடு என்றீரேல் ;அப்படியொன்றும் பெரிதில்லை ; ஆனால்
அடியேனுக்கு வந்த நினைப்பு ; அடுத்து யாருக்கும்வரக் கூடாதென்பதற்காக அதனை விளக்குகின்றேன்.
அடைமொழிகளுடன் அனைத்து மன்னர்களும் பெருமை பொங்கஅழைக்கப்படுகிறார்கள் என்கிற போது ;
அதென்ன ; இளஞ்சேட் சென்னி சோழனுக்கு மட்டும்அருமை சற்று குறைந்ததாக “செருப்பாழி எறிந்த”
எனும் பட்டப் பெயரைத் திட்டமிட்டு இணைத்துள்ளனரே ;இது சற்று இறக்கம் போல் “சரிவாக”த் தெரிகிறதே -
இளஞ்சேட்சென்னியை “இழித்தல்” போல் பொருள்படுகிறதேஎன்றெல்லாம் மனக் குழப்பம் ஏற்பட்டதெனக்கு -
பின்னர் அகநானூறு பார்த்து என் குழப்பம் தீர்த்துக் கொண்டு - அதற்குமுன்னர் உம் குழப்பம் தீர்ப்பதற்கு ஓடோடி வந்தேன்.
“செருப்பாழி எறிந்த” என்பதால் சிறு குழப்பமும் தேவையில்லை.“செருப்பு + ஆழி” என அச்சொல்லைச் சிந்திக்கக் கூடாது; மாறாக
“செரு” என்றால் “போர்” என்று பொருள்படும் அல்லவா ;அதனையும்
“பாழி” என்பதற்குப் ‘பாசறை’ என்று அகராதி கூறும்அர்த்தத்தையும் ;
“எறிந்த” என்பதற்கு “வென்ற” என்று தமிழில் வழங்கும்விளக்கத்தையும்
இணைத்துப் பார்த்திடில் செரு + பாழி + எறிந்த,இளஞ்சேட்சென்னி என வரும் ;
இதனை உணர்ந்து நான் கொண்ட இன்பம் ;இன்னுயிராம் நம் தமிழில் கண்ட இன்பமன்றோ!
இந்தியத் திருநாட்டுச் சரித்திரம் - அதிலும் குறிப்பாகஇடையிலே தொடங்கிய காரணத்தால் ; இன்னும் குறிப்பாக
தமிழகத்தில் தொடங்காது தவறி விட்ட காரணத்தால் ;தண்டிலும் வேரிலும் படாமல் ; மரத்தின் கிளை நுனியில்
தண்ணீர் ஊற்றி வளர்த்திடக் கருதிய கதையாகப் போயிற்று!அல்லதுவெந்நீர் விட்டு வேரினை வேக வைத்த நிகழ்வாகவும் ஆயிற்று!
இளஞ்சேட் சென்னி காலத்திலேதான் ; சோழர் படைகளம் காண வேண்டியிருந்தது மோரியரை எதிர்த்து!
சந்திரகுப்தன் வீரத்தையும், சாணக்கியன் சாதுர்யத்தையும்சாதகப் பின்னணியாய்க் கொண்டு சாய்த்து விடலாம்,
தமிழகத்தையென்று, தமக்குள்ளே கனவு கண்ட மோரியர்கள்,அதற்குத்தடையாய் நின்ற மலைகளைக் கூடத் தகர்த்து முன்னேறினர் ;மோகூரை நோக்கி!
தென்னாற்காடு மாவட்ட ஆத்தூர் கணவாய்க்கு அண்மையில்அமைந்ததேதிறன்மிகு சோழர் படையின் பாசறை இருந்த மோகூராம்!
‘பாழி’ யென அமைந்த அந்த ஊரை ‘எறிந்து’ வென்றால்பகைவராம் மோரியர் பணிந்து ஓடுவர் எனக் கண்ட சோழன்,
படையுடன் வந்த எதிரிகள் கூட்டத்தைப்பள்ளம் போய் விழுகின்ற வெள்ளம் போல்
பாய்ந்து சென்று ; பல முனைகளில் தாக்கிடவே -பணிந்தனர் மோரியர் ; பதுங்கினர் படையுடன்!
ஒதுங்கினர் மோகூர் பாசறை விட்டு ;ஓடினர் பிடரியில் பாதம் பட!
இளஞ்சேட் சென்னி ஈட்டிய அந்த வெற்றி கண்டு தான்எழுச்சி மிகு விருதாக “செருப்பாழி எறிந்த சென்னி” எனும்
சிறப்பு மிகு பட்டத்தை செந்தமிழ்ப் புலவர்கள் சூடி ; அந்தச்சிங்கத் தமிழனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் ; ஆனந்தப் பள்ளுப்பாடி!

மூலமும் சான்றும்