கவிதை 34 / 58

மறையவில்லை; மறுமலர்ச்சி பெற்றது!

It Did Not Vanish; It Was Reborn!

X
மறையவில்லை;மறுமலர்ச்சி பெற்றது!
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குமுற்பட்ட சோழர்களின் பொற்காலம் ;
ஆதிகாலச் சோழர்களாம் ‘சிபி’ மன்னரில் தொடங்கி ;கி.பி. 350 முதல் முடியிறந்து முடங்கி,
வருந்த வேண்டிய நிலமைக்குவந்து சேர்ந்தது.
முடிசூடி அவர்கள் அரசமைத்து வாழ்ந்தஒளி மிக்க காலத்திலே தான்;
முதல் இரண்டு கரிகாலர்களும்கிள்ளி வளவன் கோப்பெருஞ்சோழன் - எனப்
பேரரசர்கள் பலரும் ஆண்டு முடித்து - புகழ்ஆரவாரப் பேரொலியை அவனி முழுதும் பரப்பினர்.
அதன் பிறகோர் இருண்ட காலத்தைச் சோழர்சந்திக்க நேர்ந்தது எனினும் - அவர்கள் காலம்
ஒளியுமிழ் காலமாக மீண்டும் உறையூரிலிருந்துகி.பி. 850 ஆம் ஆண்டு முதல் தொடங்கியதாம்.
இடையிடையே ஒளிக் கீற்றுக்களாக மின்னல்கள் தோன்றினாலும்இருண்ட காலமாக அய்ந்து நூற்றாண்டு கழிந்தது என்பதேவரலாறு!
ஆனால் அதற்கு முன்பு கரிகாலன் காலத்து சோழப் பெருநாடு,ஆரம்ப எல்லை வட பெண்ணையாறு
அடுத்த எல்லை கன்னி முனையென்பார்.அத்துடன் காஞ்சி மண்டிலமும் இணைந்ததுவாம்.
ஆட்சியின் பரப்பும், அதற்கேற்ற வண்ணம்அநேகக் கோட்டங்கள் பிரிப்பும் -
அவை ஒவ்வொன்றும் ஏற்ற பொறுப்பும்நிர்வாகத்தில் வலிமையும் செழுமையும் வழங்கின.
ஆணை படுக்கும் அளவுள்ள இடத்தில் விளையும் பயிர்அமுதூட்டி ஏழு பேர் பசியாற்றும் வள நாடு சோழநாடு என
ஆழூர் மூலங்கிழார் எனும் புலவர்,அகமகிழ்ந்து பாடியுள்ளார் - தமிழ்ப்
பாவுராயத் தமிழகம் திகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டுத்தான்பண்புடைப் புலவர்கள் எழுநூறு பேர் சங்க காலத்தில் என்பதும் -
பெண்பாற் புலவர் அவர்களில் சுமார் ஐம்பது பேரும்கண் போல் தமிழைக் காத்ததினால்தான்
இமயம் வரை சென்று வென்ற நம் வரலாற்றைஇமைகள் விழியைக் காப்பது போல் காத்தளித்துள்ளார்.
திருமலியும் வளமைமிகு சோழப் பொன்னாட்டில்திருவள்ளுவர் குறளுக்கேற்ப அரசு நடத்திட அவரவிருப்பினும்
இருளில் ஒளிர்ந்து கரும் பூனையாக வடமொழியாளர் நுழைந்ததருணம் அதுவாக அமைந்து தமிழகத்தார்க்கு - எனவே
அரசின் சார்பில் அமைந்த “அய்யம் பெருங்குழு”வில் ;அமைச்சர், தளபதி, புரோகிதர், தூதுவர், சாரணர் இடம் பெறவும் -
காரணத்தியவர், கருமவிதி, கனகச் சுற்றம், கடைகாப்பாளர்,நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் ஆகிய
எண்மர் கொண்ட “எண் பேராயம்” அமைந்திடவும் -அனைத்தையும்இணைத்ததாக “ஊரவை” கூடி அரசின் ஆக்கப் பணிஆற்றிடவும் -
சீர் மன்றமாய்ச் செயல்படத் திட்டமிட்டு நீதி வழங்கிட ;“ஊர் மன்றங்கள்” உருவாக்கிடவும் ;
விதிகள் இயற்றி வினையாற்றினர் அரசினர் என்றுவிளக்கிடும் விதம் காணும் நிலையில் ;
முறை செய்து இறையெனும் அரசு இயங்கியது என்பதைமுடிமன்னன் கோப்பெருஞ்சோழன் மாண்ட போது ; “மன்னா!
மன்றத்தில் நீ வீற்றிருந்து அரசியல் செய்த அழகே அழகு” எனப்புலவர் பொத்தியார் கலங்கியது கவிதையாக்கியிருப்பதிலிருந்தே ;புரிகிறது!
ஊராண்மை நடத்தும் உறுப்பினர்களும் தலைவர்களும்ஊரவையார் பங்கு பெறும் குடவோலை முறை மூலமே
தேர்வாயினர் என்பதற்கும் அந்நாள் சான்றுண்டு! பல துறைத்திறன் பெற்றார்க்கு ‘ஏனாதி’ ‘காவிதி’ ‘எட்டி’ எனும் பட்டங்கள்வழங்கவுண்டு!
உயர்வு நவிற்சியற்று உள்ளதை உள்ளபடிஉரைத்திடும் ஓங்கு புகழ்ப் புலவர் பெருமக்களுடன்
ஊராளும் மன்னன் ஓய்வு நேரங்களில்,ஒரு பெரும் பகுதியைக் கழிக்கும் வழக்கமும் உண்டு!
சான்றாகக் கோவூர் கிழார் பற்றி அறிந்திருப்பதே போதுமென்பேன்.ஆன்றோர்கள் அத்தனை பேர் அரசர் விரும்பும் கவிஞராய்அமைந்திருந்தார்!
புகார்ப் பட்டினம் போன்ற பெரு நகரங்களில்பொலிவு மிகு மாடமாளிகைகள் - பூஞ்சோலைகள் -
ஆழமற்ற கிணறுகள், அழகான நீச்சல் குளங்கள்இன்ப விளையாட்டுக்கான எழில்மிகு பளிங்கு மண்டபங்கள் -
மணமுறை பற்றியும் சோழ வரலாற்றில்மனந்திறந்து சொல்லுகிறார் ; பி.டி. சீனிவாச அய்யங்கார்!
இருவகை மணமுறை பழந்தமிழர் மணமுறையாம்இசைக் கருவி ஒலித்து, இறையை வணங்கி, மலரும் அரிசியும்கலந்த
மங்கல நீராட்டி - அன்றிரவே மணமக்களை இல்லறப்படுத்திடுதல்.இஃதோர் மண முறை! இன்னொன்று என்னவெனில் ;
“மணமேடையில் எரி வளர்த்தல் இல்லை, தீ வலம் இல்லை -தட்சணை பெறப் புரோகிதர் இல்லை, இது முற்றும்
தமிழர்க்கே உரிய திருமணம் என்கிறார்”சீனிவாச அய்யங்கார்;★ சிலப்பதிகாரத்து மண விழாவில்!
மறைவழி காட்டிட மாமுது பார்ப்பான் வருவதையும் -வலியுறுத்திக் கவனப்படுத்தாமல், தமிழனின் பழைய
வழக்கத்தை மாத்திரம் சுட்டிக் காட்டி விட்டுத் தம்வழியில் சென்றுள்ளார் எனும் வாய்மையைப் போற்றலாமல்லவா?
இளங்கோவடிகள் தீட்டியுள்ளபூம்புகார் இலக்கிய வண்ணனை மட்டுமே
வளங்கொழித்த தமிழகத்தின்பழம்பெரும் நாகரிகச் சிறப்புக்குச் சான்றென
நவின்றிடுவேன் ; இதன் வாயிலாகத்தமிழ் நிலத்தின் வளம், தமிழர்களின் உளம் - அவர்கள்
பெற்றிருந்த காதல், வீரம், கடமை உணர்வு,கற்றிருந்த புவியறிவு, வானறிவு - அடடா ;
இதனைச் சிந்தித்துக் கொண்டே யிருக்கும்போது ;புதிய பூம்புகார் உருவாக்கிடப் பாடுபட்டு வெற்றி கண்ட நமக்கு ;
அந்தப் பழைய பெருமைகளையல்லவாஎருவாக்கி ; இந்தப் பூஞ்செடியை நட்டுள்ளோம் ; இது
பூந்தோட்டமாகிப் பூத்துக் குலுங்கும் மலர்களை நாம் பறித்து,தமிழன்னையின்பொற்பாதங்களில் குவித்து மகிழ்வது எப்போது
என்றல்லவா ஏங்கிட வேண்டியுள்ளது! - நம் கனவுவென்றிட, இன்னும் எத்துணை சுமைகளை நாம் தோள் தாங்கிடவேண்டியுள்ளது?
மேலும் ;
கடைச்சங்கம் முடிவுறும் காலத்தில்கங்கையாறு வரையில் ஆண்டிருந்த
சாகவாகனராம் ஆந்திர மன்னர்களும்,அவர்களுக்கு அடங்கி பல்லவ மன்னர்களும்
கோலோச்சிய காலமும் மாற்றமுற்று ;பாலாற்றுக்குத் தெற்கே பல்லவராட்சி பரவிடத் தொடங்கி ;
பழம்பெரும் நகர காஞ்சி ; அதன் தலைநகர் ஆயிற்று! அங்கிருந்துநாடாண்ட முதல் பல்லவ வேந்தன் - கி.பி.
நான்காம் நூற்றாண்டு தொடக்கத்தில்சிவஸ்கந்த வர்மன் என்பவனாம்!
திரண்டு வரும் மேகங்களால் - வான்இருண்டு ஒளி குன்றுவது போல் ;
சற்றொப்ப அய்நூறு ஆண்டு - ஒளிஅற்றிருந்த சோழவம்சம் ; மீண்டும்
எழுச்சி பெறத் தொடங்கியது - கி.பி.850ஆம் ஆண்டுக்குப் பிறகு!
அப்போது ஆட்சிப் பொறுப்பேற்று ; உறையூரில்அரச கட்டிலில் ஏறி அமர்ந்தவன் ;
வீரன் ஆதித்தனை மகனாகப் பெற்றவிஜயாலயச் சோழ மன்னன்!
மகத்தான அந்த உதயம் ; மறையவில்லை சோழர் பெருமை ;மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பதை மன்பதைக்கு வரலாறாகத்தீட்டியது!
சோழர் நாடு சோர்வுற்றதற்கும் - பின்சோர்வு நீங்கி எழுந்ததற்கும்
இடையே அய்நூறு ஆண்டு இடைவெளிதான்ஆனால் அதற்குள்,
செங்குட்டுவன், கரிகாலன் - இளஞ்சேட் சென்னி எனும் தமிழ்ப் பெயர்கள் மறைந்துவிஜயாலயச் சோழன் எனும் வடமொழிப் பெயர்
விரைந்து வந்ததற்கு என்ன காரணம் எனும்வினாவுக்கு விடை அறிவீரே!விளக்கம் பெறுவீரே!
★ (Vide his “History of the Tamils” - Page 80)

மூலமும் சான்றும்