கவிதை 35 / 58

உயிரினும் மேலான உயர்ந்த நட்பு!

A Noble Friendship Higher Than Life Itself!

X
உயிரினும் மேலானஉயர்ந்த நட்பு!
அறிவுடைநம்பியாம் பாண்டியன் அறிவு விளக்காக அமைந்திட்டசெறிவுடைச் செந்தமிழ்ப் பேரொளியாம் பிசிராந்தை ;
சோழ நாட்டு வேந்தன் கோப்பெருஞ்சோழன்பால்சொல்லாலே நெய்வதற்கு இயலாத அன்பதனைக் கொண்டிருந்தார்
பிறந்த இடமாம் பிசிர் எனும் ஊரில் - நிழல்அடர்ந்த தோப்பில் நெறியுடைக் கவிஞர் ஒருநாள் ;
ஆருயிர் நண்பன் சோழனைக் குறித்து பாடலொன்று ;யாத்திடும் ஆசை நிறைவேற வேண்டுமென்று,
அன்னச் சேவலை மையமாய் வைத்து - அழகுறப் பாடல்கன்னல் தமிழில் கற்பனையுற்றாய் எழுதியார் புலவர்!
“அன்னச் சேவலே! அன்னச் சேவலே!” என அழைத்துஇன்னுயிருள்ள தன் நெஞ்சைத் திறந்து காட்டி,
மன்னவன் பெருங்கோ கிள்ளியெனும் கோப்பெருஞ்சோழனைஇன்னமும் காணுகிற வாய்ப்பினைப் பெறவில்லையே யென்ற
மனப்புயல் ஒருபுறம், அடக்கிக் கொண்டு - அவன்மார்பகமுற்றி எடுத்துரைத்தார்!
“அன்னச் சேவலே! அன்னச் சேவலே! நீயோகன்னிக் குமரியின் முனையிலேயிருந்து
அயிரை மீனைக் கொத்திய அலகுடன் - வெகுஉயரம் விண்ணில் பறந்தவாறு,
பனிமலை நிறைந்த வடக்கு திசைக்குப்பயணம் செய்கிறாய் ; நின் பயணம் வெல்க!
கடக்கும் வழியில் என் கண்மணிச் சேவலே! பகைஅடக்கும் சோழன் தலைநகர் உளது!
வழியில் நீயும் நின் பெடையுடன் சென்றால் - சோழன்விழியில் அன்பின் ஒளியினைக் காண்பாய்!
ஆந்தையார் எனும் புலவர் வாழ் பிசிர் எனும் ஊரைச்சார்ந்தோர் நாங்கள் எனச் சாற்றுவாயாகில்;
அரசனே ஓடி வந்துமே வரவேற்று வாழ்த்திஅணிமணி பலவும் நின் பேடைக் களிப்பான்!”
★ ★ ★
ஆந்தையார் சொற்கேட்டு அன்னச் சேவலார் - சோழவேந்தனிருக்குமிடம் சென்றாரோ இல்லையோ;
ஆருயிர் நண்பன் சிறப்பைச் செதுக்கிய மனநிறைவுடன்அன்பு மனைவியிடம் புலவர் அதனைப் பாடிக்காட்டி மகிழ்ந்தார்!
“அன்னச் சேவல் கற்பனை மிக அருமை” என்றுரைத்தவாறுஅன்னம் படைத்திட்டாள் துணைவி; அவருக்கும் பேரக்குழந்தைகட்டும்!
“முல்லை வரிசை இரண்டிங்கே சிரிக்கின்ற காட்சி பாராய்”என்றார்!வில்லையொத்த புருவம் விரித்து “எங்கே?” எனக் கேட்டாள்துணைவி!
“பாவையந்தன் பாலைச் சிரிப்போடு - இதோபச்சரிசிச் சோறின் சிரிப்பையுந்தான் முல்லையென்றேன்” என்றார்!
“பார்த்துப் பேசுங்கள்; பக்கத்தில் குழந்தைகள்” என்றாள்! -“நமது மகன்;வார்த்தெடுத்த வைரச் சிலைகளுக்கு இம்மொழி புரிய வயதுபோதாது!
வளர்ந்த மகன், மனைவியுடன் வயலுக்குச் சென்றுளான்- அவர்கள்வருவதற்கு நேரமாகும் ; அஞ்சாதே!” என்றார்.
“வந்துவிடுவார் இப்போது கொஞ்சாதீர்” என எச்சரித்தாள்! - உடன்வாய் மூடிக் கொண்டார் புலவர் ; அவள் வடித்திட்ட சோறாலே! - அது
போய்த் தொண்டையிலே அடைத்ததாலேபுரையேறிப் புலவர் தவித்தார்!
தையலோ தாவிப்பாய்ந்து கணவன் தலையிலே ஒரு தட்டுத்தட்டிக்கையினால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபோது தழுவினார் ;நழுவிவிட்டாள்!
கவலைவென ஒலிக்கின்ற சதங்கைக் போலக் காதல் முதியோர்களிப்புமிகக் கொண்டவாறு சிரித்துவிட்டார்!
கரும்பின் அடிப்பாக இனிப்பைப் போல மழலைக் கொட்டி -பிஞ்சுக்கைகளையே தட்டிக்கொண்டு பேரன் பேத்தி சிரிக்கலுற்றார்!
மடையுடைத்தாற்போல் பொழிந்த மகிழ்ச்சிக்குத் திடுமெனதடைவிதித்தாற் போல் செவியில் விழுந்தது ஒரு செந்தமிழ்செய்தி!
உறையூர் வேந்தன் கோப்பெருஞ்சோழனை எதிர்த்து - அவன்உயிராய் போற்றிய மைந்தர்கள் படை எடுத்தனர் என்றும்,
கிள்ளை மொழித் தமிழால் கவிபுனையும் சோழ மன்னவனோபிள்ளைகளின் செயலால் பெருந்துயரில் ஆழ்ந்திட்டான் என்றும்
வெள்ளை மலர் உள்ளத்தான் வேறு வழியே இன்றிவீர் வாளைக் கரமேந்திக் களம் காண எழுந்திட்டான் என்றும்
தந்தைக்கும் மைந்தர்க்கும் மூண்டு விட்ட போராட்டம் குறித்துவிந்தைச் செய்தியினைக் கேட்டுப் பிசிராந்தைப் புலவர்
சிந்தையில் தொலைத்துவிட்ட பொருளாயிற்றே தமது மகிழ்ச்சிஎனக் கூறிசிந்தை மிக நொந்து புறப்பட்டார் சோழ நாடு!
★ ★ ★
கோப்பெருஞ்சோழன் அமைத்திட்ட ஊர்ப் பொது மன்றமொன்றில்கூடியுள்ளனர் அவ்வூர்ச் சான்றோர் எனக் கேள்வியுற்று
வார்த்தையில் அடங்காப் பரபரப்புடனே இதயம் துடிக்கப்போர்ப்புகை அணைத்ததா என்றறிய அங்கு சென்றார்.
பொத்தியார், பூதநாகனார், நத்தத்தனார் மற்றும்புல்லாற்றூர் எயிற்றியனார் எனும் புலவர் பெருமக்கள்
மன்றத்திலிருந்து குதித்தோடி வந்து, பிசிராந்தையாரைமார்புறத் தழுவி “வருவீர் வருவீர்” என வாழ்த்திக் களித்தனர்!
“அங்கம் பதறி அகம்பதறி வந்துள்ளேன் அய்யாசிங்கத்துக்கும் அதன் குட்டிகட்கும் மூண்ட போர்
என்ன ஆயிற்று?” என வினாக்குறியாய் நின்றார் புலவர்!“எதொன்றும் தீங்காய் முடிந்திடவில்லை கேளீர்!
இன்னவொன்று தோன்றிற்று அதனை இந்தப் பெருமகன்மின்னலெனப் பாய்ந்து சென்று தடுத்து விட்டார்
குஞ்சுகள் மிதிப்பதாலே கோழியும் பதைக்கலாமோ எனக்கேட்டுகொஞ்ச தமிழ்க் கவிதையாலே கோப்பெருஞ்சோழனையேகுளிர்வித்துப்
போர் நிறுத்தம் செய்வதற்குக் காரணமானபுல்லாற்றூர் எயிற்றியனார் இவர்தான்” என்று
பொத்தியார் அறிமுகம் செய்து வைத்தார்!பூரிப்பால் பிசிராந்தை துள்ளினார் - பின்னர் ;
உவகை மலர்ந்திட ஊர் திரும்புவானார் - அவர்உள்ளம் புயலாகும் ஓர் செய்தி அங்கு காத்திருந்தது!
★ ★ ★
கிழக்குதித்த சூரியன் போல் நாடாண்ட சோழ மன்னன் ;தனக்குதித்த பிள்ளைகளின் எதிர்ப்பாலே உடைந்த மனம்ஒட்டாமல் ;
வடக்கிருந்து உயிர் விடுவதற்குச் சென்றான் என்றுமடற்கத்தி போல ஓலையொன்றைக் கண்டார் கவிஞர்!
“இக்கணமே புறப்பட்டு இல்லம் சென்று விடைபெற்றுத்திரும்புகிறேன்இக்கணமாய் நட்புக்கு வாழ்ந்த நாங்கள் இறப்புலகில்பிரிவதில்லை!
வடக்கிருக்கச் சென்றுள்ள சோழனிடம் கூறிடுவீர்! - அவன்அருகிருக்கப் பிசிராந்தை விரைவில் வருவானென்று!”
இதைக் சொல்லிப் புலவர் ஏறு இலையினின்றுதிர் பனிநீர் போலஇமை இரண்டில் விழி நீர் சொட்ட ; பயணமானார்!
★ ★ ★
ஆண்ட நாள் ஆண்ட செந்தமிழ்ச் சோழன் - மைந்தரால்மூண்ட போரினையெண்ணி மூடுபனி நெஞ்சு கொண்டு ;
வடக்கிருந்து மாண்டிடவே விழைந்தான் என்றும் - மனவாட்டம் அறவே தீர அதுதான் மார்க்கமெனத் தேர்ந்தான் என்றும்
தமிழகம் வாழ்புலவர் கேள்வியுற்று - தங்களுயிர்அமிழ்தல்ல என்றுரைத்து அவனோடு சென்றமர்ந்தோரில் சிலர்
வெள்ளமெனக் கருதாமல் வேந்தன் பிரிவதற்குத் துணிந்த உயிர்மெல்லக் கரைந்து மேனிமுற்றும் தளர்ந்த போது - சிலர் ;
கோப்பெருஞ்சோழப் பெருமகனை நோக்கி “மன்னர் மன்னா!பாப்புனையும் பைந்தமிழ்ப் பேராசான் பிசிராந்தையார்,
காணாமலே அகம் கோணாத நட்பு கொண்டவர் என்பாய் - உன்வாணாளும் முடியப் போகின்றதே ; அவர் வராத காரணம்என்ன?” என்றார்!
“அருகிருந்து உயிர் விடுவதாய்ச் சூளுரைத்துப் போனவர் -திரும்பவருகின்றேன் என்ற வார்த்தை என்ன ஆயிற்று?” எனும் கேலிஒலித்திடவே ;
சாவதற்கு வந்த இடத்திலும் நண்பாது சான்றாண்மை குறித்துச்சந்தேகம் எழுப்பியவர்பால் மன்னன் சீற்றம் கொண்டான்.
“பாண்டி நாட்டுப் பழகு தமிழ்ச் சிற்றூராம் பிசிர் எனும் பதியில்தோன்றியெடுத்திட்ட தங்கமாய்த் தோன்றிய ஆந்தையார்நட்போ ;
வாழுங்கால் வந்து தலைகாட்டி ஆடாவிடினும்தாழுங்கால் தயங்காது ஓடிவந்து துணை நிற்கும் தூய நட்பு!
ஆன்றோரே! இதனை அறிவீர்!” என்றே விடையிறுத்த மன்னன் ;ஆவிதனை அடுத்த மறுநாள் விடுத்தே நடுகல்லாய்ஆகிவிட்டான்!
தாமதமாய் வந்தார் எனினும் பிசிராந்தை ; ஆங்குதமது நண்பாது பக்கத்தில் வடக்கிருந்து உயிர் நீத்தநிகழ்ச்சியினை ;
கண்ணகனார் எனும் புலவர், கண்ணீரை மலராக்கிகவிதை மாலை தொடுத்து அந்த நடுகற்களுக்கே சூட்டுகின்றார்!
அது ; இது!
“சான்றோர் என்றுமே சான்றோர் அருகிருப்பர்.....சான்றாண்மை இல்லாதார், வரலாற்றில் சருகாகி உதிர்ந்துபோவார்!”
உயிரினும் மேலான உயர்ந்தநட்பன்றோ ; இந்த உத்தமர்கள் நட்பு!

மூலமும் சான்றும்