கவிதை 36 / 58
இளையவன்; அவன் ஒரு தமிழ் மகன்!
He Is Young; He Is a Son of Tamil!
இளையவன்;அவன் ஒரு தமிழ் மகன்!
துள்ளி வரும் வேல் கொண்டும் - ஆவேசத்தைஅள்ளிவரும் வாள் கொண்டும்
பள்ளி செல்லாப் பருவத்து இளங்கொழுந்தும்கிள்ளி எறிவேன் பகையை என்று
கிளர்ந்தெழுந்த காலம் அது - தமிழர்க்குத்தங்கமென வாய்த்த காலம் - புலவர் பலர்
சங்கம் வளர்த்த காலம்! வீரர்பொங்கும் புலியெனப் போர்க்களம் சென்றார்
மங்கல மங்கையர் அவரை வாழ்த்தியே நின்றார்காற்றடிக்கும்போதும் - அதில்
தமிழ் வீரம் வந்து மோதும்! கடலின்அலை உயர்ந்து கிளம்பும்- அதில் தமிழன்
நிலை உயர்ந்து விளங்கும்!அகிலின் புகை மணக்கும் - அதிலும்
தமிழின் புகழ் மணக்கும்!முகிலிடை எழில் மதி தோன்றும் - அதில்
முத்தமிழ்க் காவிய நிதி தோன்றும்!அவனி புகழ் பெருநிலத்தை ஆண்டிருந்த
அசோக மன்னன் கூட தன்ஆட்சிக்கு உட்படாதோர்
ஆற்றல்மிகு தென்புலத்தார் என்று சொன்ன ;தென்னகத்துத் திண்டோள் இனத்தாரில்தீரம் நிறை கோசர் எனும் ஒரு பிரிவு!
வீரம் விளைவிக்கின்ற திறன் படைத்தோர்,தூய்மை சேர் வாய்மைக்குப் பேர் பெற்றோர்,
துளுநாடு நீங்கிக் கீழ்க் கடல் வரையில்அலைந்து திரிந்த போக்கினை நிறுத்தி
“நியமம்” “செல்லூர்” பகுதியில் நிலைத்ததாய் வரலாறு!
“● செல்லூர்க் குணா அதுபெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர்இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்கடுங்கண் கோசர் நியமம்”
★ ★ ★
அகநானூறு இலக்கியம் அறிவிக்கும் செய்தி இது.‘அன்னி’யென்றும், ‘மிஞிலி’ யென்றும் அகப்பட்டு ;
அடலேறத் தமிழ் வீரர் இருவரை அறிமுகம் செய்யும்.இருவீர் பெயர் இணைத்து இளையவள் ஒரு தமிழ் மகள்
பருவத்தை விழியைப் போர்க் கருவியாக்கிக் காளையரைவீழ்த்துகின்றபருவத்தாள் எனினும், பண்புடைய திருக்குமரி!
தழுவத்தான் பலர் துடித்தார்- கோசர் சிலர் அவர்தந்தையிடம் பெண் கேட்டார். மறுத்துவிட்டார்.
‘அன்னிமிஞிலி’ எனும் அழகு நங்கைஅமர்க்களத்தில் உயிர் நீத்த அன்னி யெனும் வீரன் போல்
அனல் உமிழும் கற்புடையாள்!‘ஆய் எயினன்’ எனும் வீரனை வென்று வீழ்த்தி
நன்னனது ஊரினையும் தனதாக்கிக் கொண்ட‘மிஞிலி’ எனும் வீரனைப் போல் உறுதிமிக்காள்!
“நிலவுச் சித்திரம் போல் - நீரில்உலவு நீள் விழிக் கெண்டை போல்
குலவிடும் கிள்ளைப் பெண்ணாள் - நற்கலவிக்கு ஏற்ற கண்ணாள்-”
என நினைத்து இனித்து வந்த சில கோசர்களைஎன்ன நினைத்தாய் என் மகளை எனக் கேட்டு
கன்னலடா என செல்வி அதைக் கடுங்குரங்கின்கையில் தரச் சம்மதியேன்! அவள்
எண்ணமெலாம் அழுந்தூரான் மீது அறிவீரோ ?திதியன் எனும் அவ்வூர்க் காவலனே அவளுக்கும் காவலனாம்!
அடுத்தொரு முறை வருவது கூடாது- நான்எடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டு நடந்திடுக உடனேஎன்றார்!
வாய்மை நிறைக் கோசரிலும் வன்னெஞ்சம் கொண்டோர் சிலர்வாழ்ந்திட்டார் என்பதுதான் வரலாறு! அவர்
வகுத்திட்டார் ஒரு திட்டம் வஞ்சிதனைக் கைப்பற்ற!பயற்றும் பயிர் விளையும் பாங்கான நிலங்கள் பல
நியமத்தில் நிலைத்திட்ட கோசர்க்கு உரிமைச் சொத்து!பசுவொன்றே அன்னி மிஞிலியின் அன்பான குடும்பச் சொத்து!
பயங்கரத் திட்டத்தால் அப்பசுவை விரட்டியடித்துத் - தங்கள்பயற்றும் பயிர்க் காட்டில் மேய விட்டார் சில கோசர்!
பசித்திருந்த பசுவுக்குப் பயிர்க்காட்டு மேய்ச்ச லென்றால்பாய்ந்து சென்று தின்னாமல் பயந்து கொண்டா ஓடிவிடும்?
பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையெல்லாம்கூட்டாகச் சேர்த்து தின்று உப்புகின்ற
கொடும் ஆதிக்க வர்க்கத்தின் தொப்பையைப் போல்இனியில்லை இடமென்ற அளவுக்கு உப்பியது அந்தப் பசுவின்வயிறு!
கன்னியில்லை என்று சொன்ன கிழவனதுகண்ணில்லை என ஆக்கிவிட்டால் - பின்னர்
துணையில்லை தோகைக்கு! எல்லோரும் அந்தஇணையில்லாப் பேரழகைப் பகிர்ந்து கொள்வோம்
இப்படித் திட்டமிட்ட இழி குணத்தார் ;செப்படி வித்தை காட்டிச் செயல் புரிந்தார்.
அன்னி மிஞிலியின் அப்பனைக் கூண்டிலேற்றிஅன்றந்தப் பயற்றங்காட்டில் பசுமேய்ந்த கதையைச் சொன்னார்
ஊர் மன்றக் கோசர்களும் உண்மை என்ன உரைப்பீர் என்றார்!கார்கொண்ட வானம் போல் முகம் கறுத்து அக்கிழவர் ;
“யார் கண்டது என் பசு மேய்ந்ததை என நான் கேட்கமாட்டேன் ;யார் எதிர்ப்பினும் பொய் சொல்லாப் பரம்பரை நான்
பயற்றும் பயிரை என் பசு மேய்ந்தது உண்மையே!” என்றார்.குற்றத்தை ஒத்துக் கொண்டான் - அதனால்
குத்திப் பெயர்த்திடுக அவன் கண்ணையென்றுகோசர்களின் மன்றத்தில் தீர்ப்புச் சொன்னார்.
அடுத்த கணம் அன்னி மிஞிலியின் தந்தையை இழுத்துச் சென்றார்பழுத்த கிழம் - பாவம் ; அவர் கண் இரண்டும் பெயர்த்துச் சென்றார் ;
“பார்வையினை இழந்தீரோ அப்பா நீங்கள்!பழிவாங்காமல் விட மாட்டேன் பாவிகளை!” யென்று
போர் முரச ஒலியெழுப்பி மகள் அழுதாள்!“கண்ணை அழித்து விட்டு உன்னைக் கள்வாட
எண்ணி விட்டார்! கற்பெனும் வாளேந்திய என்பெண்ணை நெருங்கிட எவனுக்குத் துணிவுண்டு?”
தந்தை பேசி முடிப்பதற்குள்தலைவில் நின்றவள் பதில் சொன்னாள்.
“உயிர் போன்ற தந்தையினைக் குருடாக ஆக்கியவர்தம்உயிர் போகுமட்டும் - நான்
உண்கலத்தில் உண்ண மாட்டேன்,உடை மாற்றம் செய்ய மாட்டேன்,
பழி வாங்கித் தீரும் வரை பசி தூக்கம் எதுவுமில்லை!பகை முடிப்பேன்! பார்வையிழந்த தந்தைக்குப்பலி கொடுப்பேன் எதிரிகளை!”
அன்னி மிஞிலியின் சூளுரை - அடுத்த நாளேஅழுந்தூர்த் திதியனுக்கு எட்டியது.
கன்னியவளுக்கு உற்ற துயர் கேள்விப்பட்டுக்கவலை கொண்டான் - அவளைக் காணத் துடித்தான்.
செவியில் செய்தி நுழைந்ததைத் தொடர்ந்துசெந்திப் பிழம்பென தன்னெதிர் நின்ற “அன்னி”யைக் கண்டான்.
“கண்ணுக்கினியவளே! கருத்துக்கு ஏற்றவளே! உன் இதயப்புண்ணுக்கு மருந்திட வகையறியேன், வழியறியேன்” என்றுநொந்தான்.
“குதிரைப் படையுண்டு, உன் கோட்டையில் மன்னா!குன்றனையத் தோளுண்டு உனக்கு என் கண்ணா!
அன்னி மிஞிலியாம் என்னை நீ காதலிப்பது உண்மையெனில்அட்டியின்றிப் புறப்படுக போருக்குக் கோசர் மீது!
அந்தகாராய் ஆக்கி விட்டார் தந்தையினை - அந்தஅறியாய்க்காரர்களை வீழ்த்த வேண்டும்.
கண்குத்திப் பாம்புகளைத் துண்டாடும் தீரியென்றுதிண்டோள் திதியனைத் தேடி வந்தேன்” என உரைத்தாள்.
“வாளுறை விட்டு எழுந்தது பார்! என்சூளுரை பொன்றும் அறிக அன்பே!
உன் தந்தையாம் - என் மாமனுக்கு ஊனம் விளைத்தோர்உயிர் போக்கித் திரும்பிய பிறகே
உனைத் தீண்டும் என் கரங்கள்”ஆர்ப்பரித்தான் அழுந்தூரான்!
போர்ப்படை கிளம்பிற்று!பொல்லாக் கோசர் உடல் நொறுங்கிற்று -
நில்லா நெடுஞ்சுவர் போல் வீழ்ந்திறந்தார்.விரும்பியவாறு சூளுரை முடித்தாள்
திரும்பிய திதியனின் தோளில் சாய்ந்தாள்!அகநானூறு பாடல் இதற்கு அடிப்படையானது.
★ ★ ★
குறிப்பு:- (பாணர் பாடிய அகநானூறு பாடல் 262. இந்த வரலாற்றுநிகழ்ச்சியில் வரும் பாத்திரங்கள் கற்பனையல்ல - காலமுரண்பாடும் - இடங்கள் வேறுபாடும் இருக்கலாம். இலக்கியச்சான்றுகளை ஒப்பிடும் பொழுது ; உண்மையில் நிகழ்ந்தஉருக்கமிகு சோழர் கால சரித்திரப் பகுதியேயாகும்)