கவிதை 37 / 58(மூலத்தில் அச்சிடப்பட்ட எண்: 36)

அன்பால் அவனை விலைகொள்ள முடியுமோ?

Can He Be Bought with Love?

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: அன்பால் அவனை விலை கொள்ள முடியுமா?

X
அன்பால் அவனைவிலைகொள்ள முடியுமோ?
கற்கண்டுத் தமிழில் கவிதைகள் வடிக்கும்நற்கண்ணை என்றொரு பெண்பாற் புலவர்,
இகம், பரம் என்று பாடல் இயற்றிக் கொண்டிராமல்அகம், புறம், நற்றிணை எனும் சங்கத் தொகுப்பில்
கனகமணிகளாய்ப் பதித்திட்ட பாடல்கள் ஆறு - அவைகாதற்கனிகளைப் பிழிந்திட்ட கவிதையின் சாறு!
அந்த ஆறு பாடலுடன்,காவற்பெண்டு எனும் மறக்குலத் தாயொருத்தி
களம் சென்ற மகனைப் பற்றி வினவிய கன்னியிடம்,புலியிருந்த குகையிதோ எனப் பூரிப்பு பொங்கக் கூறி,
புறப்பாட்டு ஒன்றைப் போர்ப் பாட்டாய் இசைத்ததையும்,அந்தத் தாய் தான் பெருநற்கிள்ளி யெனும் சோழப் பெருமகனைச்
சொந்தத் தாய் போல வளர்த்த செவிலித்தாய் என்பதையும்,கிள்ளியின் அழகு, ஆற்றலில் மயங்கி - நற்கண்ணை; அவனை
அள்ளிப் பருகுதல் போல் கனவுலகில் மிதந்ததையும்,பெருநற்கிள்ளியின் பேராண்மையினை - கவிப்
பெருமான சாத்தந்தையார், பீடு நடை போடும்புறப்பாட்டாய்த் தீட்டிப் புகழ் மாலை சூட்டியதையும் - சற்று
ஆழமாய்ச் சென்று ஆய்ந்து படித்ததாலேஆவுக்கு விழுதெனவே தோன்றிற்று ஒரு கற்பனை!
★ ★ ★
நற்கண்ணைக்கு நற்கிள்ளி மீது காவியெழுந்த காதல்,பொற்கிண்ணத்துப் பாலாய்ப் பொங்கித் தரையில் வழிந்தகதையை,
“ஒரு தலைக் காதல்” எனும் உருக்கமிகு தொடரோவியமாய்க்குறுந்தொகைக் காவியமாய்ப் படைத்திட்டேன் ; அந்நாளினைப்
படித்துச் சுவைத்திட முன்னர் ; ‘முரசொலி’ “காலப்பேழை” யில்குடித்துச் சுவைக்கும் கரும்பாக ; அதன் முதல் பகுதி இப்போதுகாணீர்!
இதுவும் சோழர் கால முற்பகுதியின் சரித்திரத்தைச் சுட்டுவதால்இதையும் அச்சரித்திரச் சங்கிலியின் கரணையெனக் கருதிடுவீர்!
★ ★ ★
பச்சைப் பட்டாடை உடுத்திக் கச்சையுடன்பரதமாடும் பருவமயில் போல - கழனியிலே
பயிர்கள் ஆடும் வளமிகு சோழநாட்டின்பழங்காலத் தலைநகராம் உறையூரின்கண்
வீரவேண்மான் வெளியன் தித்தன் என்பான்வெண்டொற்றக் குடையின்கீழ் வீற்றிருந்து,
தாரை வார்த்தபடியிருந்தான் ; அரசின் பெருஞ்செல்வத்தைத்தபோதனர் நடத்துகின்ற வேள்விக்கும் யாகத்திற்கும்!
“தமிழ் மரபுக்கு இது ஏற்றதல்ல” என்று அவன் மகன்தடுத்து நின்று அதனைத் தொடர்ந்து எதிர்த்தும் வந்தான்.
சோழவேந்தன் தித்தனோ; தன் மகன் பெருநற்கிள்ளிசொல்லுகின்ற கருத்தையெல்லாம் புறக்கணித்து
அறியாக் குழந்தை ; நோய் போக்கும் கசப்பு மருந்தின் அருமைதெரியாமல்அதனை அருந்திட மறுத்துத் தட்டுதல் போல நற்கிள்ளியனித்த
நல்லுரை எதனையும் ஏற்றிட மறுத்து,நாட்டின் செல்வம் வாரியே இறைத்தான்.
“அரச கருவூலத்தை நிரப்புவது குடிமக்கள் வேலை! அவர்வாழ்வைத்தரிசு நிலமாக்கி இதயத்தில் சொருகுவதோ வேலை ?
கொற்றவர்க்கு அழகு; குடி தழுவிக் கோலோச்சுதல்;கொள்கை அற்றவர் செயலோ நல்ல குறிக்கோளுக்குக்கொள்ளிவைத்தல்!
பாலும் தேனும் பசுநெய்யும் குடம் குடமாய்த் தீயிலாற்றிப்பலியாக ஆடு, மாடு, குதிரையெலாம் வெட்டி வீழ்த்தி,
அவிர்பாகம் பெறுவதற்கு யாககுண்டங்கள் வளர்த்துத்தவமிருந்தல்‘அன்பே கடவுள்’ எனும் தத்துவத்தின் அடித்தளம் ஆட்டுகின்றசெயலன்றோ ?”
எனக் கேட்டுத் தடுத்தான் கிள்ளி!“நாடாளும் மன்னன் நான் எனை எதிர்த்து என்னமகன் நீயே
நாத்தழும்பேறி நாத்திகம் பேசுவதோ ? உன்நாவை அறுத்து நாய் நரிகளுக்கிடுமுன்
நடந்திடுக நாட்டை விட்டு” என ஆணையிட்டான் தித்தன்!“இன்றே பிரிகின்றேன் எனைப் பெற்ற உறையூரை; ஆனால்மன்னா,
ஒன்றே தெய்வமென்றும் அதற்கு உயிர்ப்பலி வேண்டாமென்றும்நான் கூறியதை நாத்திக மென்றகிறீர் - நீரோ,
வான் மீது தொங்குவதாய்க் கூறுகின்ற சொர்க்கம் காணவையகத்தை நரகமாக்கி வதைக்கின்றீர் உயிர்களையே!
பித்தனையும் தெளிவிக்கக் கூடும்; ஆனால் என் தந்தையாம்தித்தனை இனித்திருத்தல் இயலாதென்ற முடிவோடுபோகின்றேன்” என்று
பொற்கோவாம் பெருநற்கிள்ளி உறையூர் விட்டுமுக்காவல் நாடு ஆமூர் சென்றான்! அக்கணமே
சொற்கோவாம் சாத்தந்தையெனும் புலவர் பிரானும் சோழன் முன்நிற்காமல் கிள்ளியினைப் பின் தொடர்ந்தார்.
அரசிளங்குமரனே கொண்ட கொள்கைக்காக அரியாசனம்துறந்த பின்னர்,
அவைப் புலவர் பதவியது அற்பமென எட்டித் தள்ளி,தமிழ்க் குலத்தின் மானம், வீரம், பண்பாடு, மரபுதாழாது காப்பதற்குச் சூளுரைத்துக் கிள்ளியின் அருகிருந்தார்.
★ ★ ★
முக்காவல் நாட்டு ஆமூரில் ஒரு நாள்முரட்டு மல்லன் ஒருவன் தோள்தட்டி ஓடிவந்து,
“என்னை வென்றிடுவார் யாருண்டு இவ்வூரில் ?”என முழக்கி அறைகூவல் விடுத்ததோடு - தன் முன்னே
நிற்க முடியாமல் அவ்வூரார் தோற்று விட்டால்முக்காவல் நாடு முழுமையும் தனக்குரிமை ஆகுமென்றான்!
நாட்டுடைத் தலைவன் அதுகேட்டுப் போர்நடை போட்டுமுன்வந்து - அந்தக்காட்டெருமை மனிதனை மற்போரில் வீழ்த்த முயன்றுதோற்றுவிட்டான்!
“ஆமூர் இனிமேல் வெற்றி பெற்ற தனக்குத் தான் உரிமையென்றுஆகா! ஊகு !” என்று கத்திய மல்லன் முன்னே,
விண்ணில் நட்சத்திரமொன்று வீழ்கின்ற வேகத்தில்மண்ணில் ஓங்கி உதைத்தவாறு குதித்து ;
‘மல்லனே ; நில்லடா!” என மார்தட்டிக் கொண்டுமறவர் குல மாவீரனொருவன் அந்த மனித மிருகத்தின் மேல்பாய்ந்தான்!
யார் அது ? யார் அது ? என ஆமூர் அதிர்ந்தது!யார் அது ; உறையூர் தித்தன் மகன் பெருநற்கிள்ளியென்று
கையொலி செய்து ஒரு கூட்டம்! என்ன ஆகுமோ என,கண் கலங்க நின்றது மற்றோர் கூட்டம்!
ஆமூர் தலைவனுக்கே கிட்டாத வெற்றி,அதனையிற் குறைந்த இளைஞனுக்குக் கிட்டுமோ என்று
மூக்கின் மேல் விரல் வைத்துமுக்காவல் நாட்டு மக்கள் திகைத்து நின்றார்!
“ஊதினால் துரும்பெனப் பறந்திடுவாய் ;உனக்கு இத்தனை ஆணவமா ?” என்று
மோதினான் முரட்டு மல்லன் கிள்ளியின் மேல்!சண்டமாருதச் சுழற்சிபோல் நடந்திட்ட மற்போர் நிகழ்ச்சியை
சாத்தந்தையார் வழங்கிய பாடலெனும் பலகணி மூலம்சற்றுத் தொலைவிருந்து காண்போம் நாம்!
மல்லன் மீது துள்ளிப் பாய்ந்த நற்கிள்ளிஒரு காலை மார்புக்கு மேல் மடித்து
மற்றொரு காலால் மாற்றானின் தாக்குதல் தடுத்து,முரடனது முதுகின்கண் இறுகப் பிணைத்து ; பசியால்
மூங்கிலைத் தின்ன முயலும் யானை ;அதனை வளைத்தும் முறித்தும் மிதிப்பது போல
மல்லனின் தலையும் காலும் மோதியும் முறித்தும்மண்படக் கரையில் வீழ்த்தி மாண்டிடச் செய்த சோழமகனை
“போரவைக் கோப்பெரு நற்கிள்ளி” எனப்புகழ் விருது வழங்கி வாழ்த்திய புலவர்,
புதல்வனது வீரத்தைக் காண்பதற்கு - உறையூர்ப்புவியாளும் தித்தன் வந்திலையே என மனமிக நொந்தார்.
நற்கிள்ளி போர்புரிந்த வேகத்தைசொற்கவை நனி சொட்டச் சொட்ட
உயர் தமிழ்க் கவிஞர் சாத்தந்தை,உவமை கூறி விளக்குகின்றார் ; இதோ :-
★ ★ ★
“சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்கட்டில் நிணக்கும் இழிசினன் கையதுபோழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ ;ஊர்கொளவந்த பொருநனொடு,ஆர்புனை தெரியல நெடுந்தகை போரே!”
( புறநானூறு - பாடல் - 82பாடியவர் : சாத்தந்தையார் )
இதற்கு உற்ற பொருள் நான் கற்ற தமிழில் அளிக்கின்றேன்.இந்த உவமை நயத்தின் இனிமையை நீவிர் உணர்ந்திடுவீரே!
“கட்டில் பின்னும் கடைநிலைப் பட்டாளியொருவன் - அதனைவிற்றுப் பிழைக்கத் திருவிழா தொடங்குமுன்விரைந்தோடிட வேண்டும் - அவ்வேளையில்
கட்டிய மனையாள் பேற்று வலியால் பெரிதும் துடிப்பதாய்ச்சேதி வந்து செவியினைத் துளைத்திட ; தன்
செயல் முடித்துப் புறப்பட்ட அவன் படபடக்க - வானவீதியில் கதிரோன் மேற்கே வீழ்ந்து கனமழைக்கானஅறிகுறியும் கண்டிடவே
கட்டில் பின்னும் அவன் கையுசி எத்தனைக்கடுமையாய் விரைந்து வாரைச் செலுத்துமோ - அந்தஊசியினும் வேகமாய்ப் போரை முடித்து - எதிரியைத்தூசியென வீசி விட்டான் வீரன் கிள்ளி!”
இவ்வாறுமுத்தமிழ் வித்தகரின் பாமாலைக்கும்முக்காவல் நாட்டு மக்கள் பூமாலைக்கும்
தலை வணங்கி நன்றியினை ; நற்கிள்ளி தெரிவிக்கபோது,கலைவண்ண மங்கையொருத்தி ஆங்கே - காதல்
அலையாயும் நெஞ்சுடனே தோழியிடம் ; - அன்பால் அவனைவிலை கொள்ள முடியுமோ என்று விழியால் கேட்டாள்!
நிலை கொள்ள முடியாமல் தவித்திட்ட அம்மங்கை ;மலை முகடு ஏறிபிறங்கப் பெருமூச்செறிந்திட்டநற்கண்ணையெனும் நங்கை!

மூலமும் சான்றும்