கவிதை 49 / 58
களம் பல கண்டனர்; கடற்போரிலும் வென்றனர்!
They Saw Many Battlefields; They Won in Naval War Too!
களம் பல கண்டனர்;கடற்போரிலும் வென்றனர்!
தாய் எட்டி பாய்ந்தால்குட்டி பதினாறு அடி பாயும் – இந்தப்
பழமொழி; தந்தை இராசராசன் –தனயன் இராசேந்திரன் –
இருவரையும் பொருத்த ஈடற்றஎடுத்துக்காட்டாகவே அமைந்து விட்டது!
இராசாதிராசச் சோழன், தனதுஆட்சியின் இறுதிக் காலத்தில்தான்
மகன் இராசேந்திரனுக்குமகுடம் சூட்டி மன்னராக்கினான்.
இராசேந்திரச் சோழனோ;ஆட்சியில் அமர்ந்த
ஏழாம் ஆண்டிலேயேநாடாளும் நாயகன் பொறுப்பை
இளைய மகன் இராசாதிராசனுக்குவழங்கி; வரலாற்றில் ஒரு
திடுக்கிடும் திருப்பம் ஏற்படுத்தினான்.மகனும் தந்தையுமாக சோழ
மண்டலத்தை இருபத்தி ஐந்து ஆண்டுகள்இணைந்தே ஆட்சி நடத்தினர் என்பது;
இந்திய நாட்டுச் சரித்திரத்தில்இதுவரை காணாத புதுமை!
இன்னும் சொல்லப் போனால் ;இராசாதி இராசன் இளவரசன் பொறுப்பில்
இருந்து நடத்திய போர்களை வரலாற்றாசிரியர்கள்இரண்டு பகுதிகளாகப் பிரித்து வழங்கிடுவர்.
இரு பகுதிப் போர்க்களங்களிலும்தந்தைக்குத் துணையாகவும் – இணையராகவும்
ஒன்றிரண்டில் தந்தையை மிஞ்சியவனாகவும்இளைய மகன் இராசாதிராசன் புகழ் பெற்றான்.
இடைத்துறை நாட்டுப் போர் – இதுஇரு நதிகள் கிருஷ்ணா, துங்கபத்திரைக்கு
மத்தியில் உள்ள சமவெளி; இன்றைய “ரெய்ச்சூர்”;இங்கே முதல் வெற்றி இராசேந்திர சோழனுக்கே!
கங்கவாடிக்கு வடக்கே – நுளம்பாடிக்கு மேற்கேபொங்கியெழுந்த மேலசாளுக்கியர் படையை;
கொதிக்கும் உலையில் நீர் தெளித்து அடக்குதல் போலதுதித்துத் தொழுதிட வைத்தான் பகையை!
ஆந்திரத்து அய்தராபாத்துக்கு வடகிழக்கில்அன்றைய ‘கொள்ளிபாக்கை’ இன்று “குல்பர்கா”
கூளி முறிப்பது போல் சோழன் படை முறித்துப் போட்டுஅள்ளிக் கொண்டு வந்தது அடுத்தடுத்து வெற்றிகளை!
‘மண்ணைக் கடக்க’மெனும் இராட்டிரகூடர் தலைநகரை வீழ்த்தி‘மண்ணை கொண்ட சோழன்’ எனும் மாப்புகழும் பெற்றான்.
கி.பி. 1017 ஆம் ஆண்டு இராசேந்திரன் படை ;அய்ந்தாம் மகிந்தன் எனும் இலங்கை வேந்தனை –
முற்றுகையிட்டுப் போர் தொடுத்து – முன்னேறியது!முன்பொரு முறை இராசராசனிடம் முதுகு காட்டி ஓடிய
அந்த ஈழவேந்தனை வென்று காட்டி – அவன்பறித்து வைத்திருந்த பாண்டியரின் மணிமுடியை
மீட்டுக் கொடுத்த பெருமையும் – அவனைச் சோழ தேசக்கைதியாகப்பூட்டி வைத்த பெருமையும் இந்த இருவர்க்கும் உண்டு!
இவ்விதமாக ஈழப் போரில்சோழர் படையின் வெற்றியை;
மகாவம்சம் சுட்டிக் காட்டும்; தமிழ்மாவீரர் புகழை நிலைநாட்டும்!
ஈழத்தில் புலிக்கொடி பறக்க விட்டசோழப் பேரரசு; பாண்டிய நாட்டின் மீதும்
படை கொண்டு பாய்ந்தது!அரசர்க்கரசன் இராசராசன் காலத்திலே
அடிமைப்பட்டிருந்த வல்லப பாண்டியன்,இப்போது வணங்க மறுத்தோ என்னவோ
எதிர்த்துச் செயல்படுகிறான் எனக் கேட்டு; அவன்இடுப்பொடித்துப் போட்டது சோழர் படை; என்பதை
‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான்’ எனும்கல்வெட்டு சொல்லிக் காட்டுகிறது!
★ ★ ★
போர்க்களங்கள் பல கண்ட இராசேந்திர சோழன்கங்கை கொண்ட சோழன் என வீர விருது பெறவும் –
அதற்கு அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்றுவெற்றிச் சின்னம் ஒன்று அமைக்கவும் –
தலையாய காரணமாக விளங்கிடுவதுதான் – அவனதுதலையாயப் படையெடுப்பான கங்கைப் படையெடுப்பாம்!
வேங்கி நாடு தொடங்கி, சக்கரக் கோட்டத்துப் போர் முடிவில்ஓங்கி உயர்ந்தது சோழனின் புலிக் கொடி!
நாமணைக் கோணமும், பஞ்சப் பள்ளியும்,சிந்து நதிக் கரையில் மாசுணி தேசப் பகுதியும்,
மகா கோசலமெனும் தென் கோசலத்தின்ஒட்டர தேசமும், மகாநதிக்கரையினை
ஒட்டியுள்ள பகுதிகளையும் வென்று ; பகைவரிடம்பெட்டி பெட்டியாக பன்மணிக் குவியலைத்
திறை கொண்டது சோழர் படையெனதிருவாலங்காட்டுச் செப்பேடு செம்மாந்து பேசுகிறது.
அந்தச் செப்பேடு தான் – நம் செந்தமிழ்ச் சோழன் ;கங்கையாற்றைக் கடந்திட
பல நூறு யானைகளை வரிசையாக நிறுத்திபாலமாக அமைத்து ; அதில் படையை நடத்தி –
மறுகரை சென்றான் என்றும்மாற்றாரை வென்றான் என்றும் இன்னும் கூறும்!
பண்டாரத்தார் கூறுவார் ;பூர்வ தேசமெனும் கோசலப் பகுதியும்போர் முனைப் பரிசாக சோழர்க்கே கிடைத்ததென்று!
எங்கனும் வெற்றி வெற்றி எனச் சுழன்ற வாள்;வங்காளத்து மிதுனபுரி மாவட்டத்தில்
தண்டபுத்தி நாடு தர்மபாலனை நோக்கியும்சுழன்றது ; அதனால் அந்தப் பாலனின் முடி கழன்றது!
அடுத்து அடியெடுத்து வைத்து சோழர் சேனை ;இரணசூரன் எனும் தெக்கண லாட மன்னன் பூமியில்!
மற்றுமோர் வங்க மாநில அரசன் கோவிந்தச்சந்தன்வெற்றியைச் சோழன் காலில் வைத்தான்!
இன்னொருவன் இணையற்ற வீரன் எனும் மகிபாலன் –இவனாட்சி காசி வரை பரவியிருந்ததெனினும் ;
இராசேந்திர, இராசாதிராசர் படைகளிடம் – காற்றில்தூசி போல் பறந்து விட்டதாம்!
வாதாபி வெற்றியின் அடையாளமாகபல்லவ தளபதி பரஞ்சோதி
எடுத்து வந்த சிலை ;வாதாபி கணபதியாம்!
வடபுலத்து மன்னர் பலரைவென்றதின் நினைவாக –
சோழர் தளபதி ; கொண்டு வந்த சிலைதான்குடந்தை நாகேசுவரர் கோயில்
கங்கை விநாயகர் சிலை எனக்கூறுவர் விளக்கம்!
ராசேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிகளில்கடாரம் வெற்றியே களிப்பினில் ஆழ்த்திய வெற்றியாம்.
அதைப் பற்றிய செய்திகளை அவனது மெய்க்கீர்த்திகளும்,திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இன்றைக்கும் கூறுமாம்.
தோற்றுப் போன வடபுலத்துப் படைவீரர் தலைகளில்ஏற்றுக் கங்கை நீர்க் குடங்களை யென்றுரைத்து ;
அவ்வாறே அணி வகுத்து வந்தவர்களை –கோவேந்தர்களாம் இராசேந்திரன் – இராசாதி ராசன்
இருவருமே வரவேற்க நீட்டினர் இரு கை!இனி தலை காட்டுவோம் ஒரு பகை!