கவிதை 50 / 58
குருதிக்களமே; கொலு மண்டபம் ஆனது!
The Field of Blood Itself Became the Coronation Hall!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: குருதிக் களமே! கொலு மண்டபம் ஆனது!
குருதிக்களமே;கொலு மண்டபம் ஆனது!
இராசராச சோழனுக்குஇராசேந்திரன் என்ற வீரப் பிள்ளையும்
இராசாதிராசன் என்ற பேரப் பிள்ளையும்மூவரும் ஓரணியாகவும் தனித்தனி அணியாகவும்
போர் நடத்திய நாடுகளில் – தங்கள் தோள்களில்புதிய புதிய வெற்றிகளை மட்டும் தூக்கி வரவில்லை ;
பொன்னும் பொருளும் முத்தும் பவளமும்மின்னும் வைரமும்
இன்னும் விலை உயர்ந்த பொருள்களாகக்கண்ணைப் பறிக்கும் அணிமணிகளும்,
குவியல் குவியலாய்க் கொண்டு வந்தது ; தங்கள்குடியோ கொற்றமோ உயர்ந்திட அல்ல – தஞ்சைக்
கோபுரம், உயர்ந்திட – கங்கைச் சோழபுரஆலயம் ; ஆகாயமளாவ எழுந்திட, மற்றும்
ஆக்கப் பணிகளுக்கே அள்ளிக் குவித்தனர் செல்வத்தை,அருண்மொழி வர்மனும் அவன் வழித் தோன்றல்களும்!
ஆடற்கலை வல்லார்க்கும் இசைவாணர்க்கும்அன்பளிப்புகளும் ; அரச மாதேவியர் வழங்கிடத் தவறியதில்லை.
இதற்கிடையே இராசாதி ராசன் ;இடையூறு விளைத்தவாறு இருந்த
சாளுக்கியரை வென்று அவர்களின்தலைநகர் “காம்பிளி”யைக் கைப்பற்றி –
கிருஷ்ணையாற்று “பூண்டூர்” போரிலும்அவர் படையைப் பூண்டோடு அழித்தான்.
இராசேந்திரனது இறுதிக் காலத்தில் சாளுக்கிய ‘ஆகவமல்லன்’படையெடுத்துப் பார்த்து பலிக்காத காரணத்தால் ; சூது புரிந்து
நண்பனைப் போல் நடித்து நயவஞ்சகமாகநாட்டைச் சுருட்டும் கேட்டைத் தொடங்கும்
சதிச் செயல் திட்டத்துடன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம் ;மதி மயக்கும் மாயமந்திர வாதிகளென அனுப்பி வைத்து ;
அவர்களால் ஆகாத காரியம் எதுவுமில்லை யென்று கூறி – அவர்தம்‘ஆசிர்வாதம்’ பெறுமாறு ஓலையொன்றும் எழுதி வைத்தான்!
வேள்வியும் யாகமுமே வெற்றிக்குக் கை கொடுக்குமென்று கருதி– தன்வீரத்தையும் விவேகத்தையும் நம்பாதவனல்ல என்பதால் ;
சூழ்ச்சிதனைப் புரிந்து கொண்ட இராசாதிராசன்எதிரிக்கு ஏற்ற பதில் இது தான் என்று ; தூதுவராய்
வந்தோரில் இருவரைப் பிடித்து வைத்து,ஒருவனுக்கு ‘அய்ந்து குடுமி’ வைக்கச் செய்தும்
அடுத்தொருவனுக்கு “அரவாணி” பெண் வேடம் போட்டும்அவர்களிருவருக்கும் ; “ஆகவமல்லன்”, “ஆகவமல்லி” எனப்
பெயர் வைத்து ஆகவ மல்லனிடமே அவர்களை அனுப்பிவைத்தான்!ஆத்திரமும் அவமானமும் தாங்காமல் ஆகவமல்லன்,
“போர்! போர்!” என்று முழங்கிக் கொண்டே‘பூண்டி’ எனுமிடத்தில் இராசாதிராசனுடன் மோதினான்.
அதன் விளைவு ஆகவமல்லன் வீழ்ச்சியுற்று; கல்யாணபுரத்தையும்கைப்பற்றிக் கொண்டான் இராசாதிராசன்; “விஜய இராசேந்திரன்”எனும்
வீரம் கொழிக்கும் பட்டத்தையும், அந்தக் களத்திலேயே சூடிக்கொண்டான்.வீராபிஷேகமும் அங்கே நடத்தப்பட்டு; வாயிற்காவலர்சிலையொன்றும்
வழங்கப்பட்டது வெற்றிக்கான அடையாளப் பரிசாக! அந்தவச்சிரச் சிலையின் பீடத்தில் “கலியாணபுரம் வென்று கொணர்ந்த
துவரபாலகர் சிலை” என எழுதப்பட்டிருந்தது ; இன்னமும்தஞ்சைப் பெரிய கோயிலில் அந்தச் சிலை இருக்கிறதாம்!
இதற்கு முன்பு அச்சிலை ; தாராசுரம் அயிராவ தேசுவர்ஆலயத்தில் இருந்ததாகக் கூறுவர் ; ஆய்வாளர்கள்!
★ ★ ★
‘விஜய ராசேந்திர’ விருது பெற்ற மகிழ்ச்சியுடன் மமதையும் சிறிதுகொண்டுபகைவன் எனினும் பண்போடு அணுகாமல்; இராசாதிராசன் ;
ஆகவமல்லனின் தூதர்களை அய்ந்து குடுமி வைத்தும்,அரவாணி வேடமிட்டும்அநாகரிகமாக நடந்து கொண்டது சோழர் வரலாற்றில் ஒரு ‘கறை’தான் என்பேன்!
விஜய இராசேந்திரனால் வெகுவாக அவமானமுற்றசாளுக்கிய ‘ஆகவமல்லன்’ சபதம் செய்து கொண்டு
எப்படியும் எதிர்த்துப் போர் புரிந்து, அவனைவீழ்த்திக் கொல்வதற்கு விபரீத யோசனைகளில் ஈடுபட்டான்.
அவசரப்படாமல் ஆற்ற வேண்டும்அந்தக் காரியத்தை என்றெண்ணி,
கி.பி. 1054 ஆம் ஆண்டு வரையில்இராசாதிராசனைப் பழி வாங்கக்
காத்திருந்த ஆகவமல்லனாம் சாளுக்கியன்சரியான சமயம் பார்த்து சதியை மீண்டும் தொடங்கினான்.
இன்று “சித்திரா பூர்” என அழைக்கப்படும்கிருஷ்ணா நதி வலது கரையிலமைந்த “கொப்பம்” எனும் களத்தில்
பெரும்படை தயாரிப்புடன் இராசாதிராசனாம்விஜய இராசேந்திரனை வீழ்க்க வகுத்து வளைத்தான்.
இரு தரப்பிலும் இடி முழக்கப் போர்!ஆகவ மல்லனின் படை வீரர் அனைவரும்
விஜய இராசேந்திரனையே சூழ்ந்து கொண்டுபழி வாங்கும் பணியை நிறைவேற்றிட
அவனை மட்டுமே குறி பார்த்துக் கணைகளை ஏவினர்வாட்களை வீசினர் ; ஆகவமல்லனின் படையினர்!
பட்டத்து யானை மீதமர்ந்து போர் புரிந்தவீராதி வீரன் வில்லில் விஜயன் எனப் புகழப்பட்ட
இராசாதி இராசன் யானை மீதிருந்தேசாய்ந்திட நேரிட்டது ; சரமாரித் தாக்குதலால்!
சரிந்தான், சாய்ந்தான், சமர்களத்தில்விழுப்புண் பட்டு வீர மரணம் எய்தி ; எந்நாளும்,
விழாப் புகழுக்கு உரியவனானான்.வீரத்தின் விளை நிலமாய்த் திகழ்ந்தவனும்
வெற்றிகளின் உறைவிடமாய் உலவியவனும்விரோதிகளின் விலா எலும்பால்......
தலை சீவிக் கொள்ளும் தைரியம் வாய்ந்தவனும்இந்திரஜித்தன், அபிமன்யுவுக்கு இணையானவனுமான,
எதிரிகளின் சிம்ம சொப்பனமாம் –இராசாதிராசன் எனும் எழுச்சிப் புயலாம் ;
விஜய ராசேந்திரன் வீழ்ந்தது கண்டுவிழி நீரைத் துடைக்கவும் நேரமில்லாமல் ; அவன் தம்பி
இராசேந்திர சோழ தேவன்; இடி, மின்னல், புயல்இவையனைத்தும் இணைந்து தாக்கினாற் போல
எதிரிகள் மீது பாய்ந்து தாக்கினான் –கர கர வெனப் பலர் கரங்களை வெட்டியும்
பட பட வெனப் படைத்தனை ஊடுருவி ;பகைக் கூட்டத்தின் தலைகளை அறுத்தும்,
வெற்றி ; வெற்றி ; என்ற பெருங்கூச்சலிட்டுசாளுக்கியரைச் சடசட வென சாய்த்துக் கொண்டே
சண்ட மாருதமெனப் போரிட்டு வெற்றி கண்டான்.விஜய இராசேந்திரனை வீழ்த்தியவர்கள் வீழ்ந்தார்கள்
விழி ஒளி அணைய உடன்பிறப்பைவீழ்த்தியவர்களை வீழ்த்தி,
வெற்றி கண்ட இராசேந்திர சோழ தேவனின்உடல் முழுதும் ஒரு நூறு கணைகள்!
களத்தில் தைத்த அந்தக் கணைகளுடனே –அவற்றைக் காண்பதில் ஒரு களிப்புடனே ;
“கொண்டு வா மகுடத்தை!” எனச் சோழர் கூட்டம்கூவிடக் கூவிட; கொந்தளித்தது போர்க்களம்!
குருதி பொங்கும் அந்த இடத்தையேகொலு மண்டபமாகக் கொண்டு, சோழ நாட்டுக்
கோவேந்தும் விழா நிகழ்ச்சியைநிறைவேற்றிக் கொண்டான் ;
இராசேந்திர சோழ தேவன்! இதுதோர் புதுமை ;இந்தியத்துப் போர்க்கள வரலாற்றில்!
இவ்வாறு வரலாறு படைத்தஇராசேந்திர சோழ தேவன் ;
அங்கிருந்து கோல்காபூர் சென்றான்ஆங்கே வெற்றித் தூண் ஒன்று நாட்டி விட்டு
அதன் பிறகே தலைநகர் மீண்டான்! முடிசூட்டியது ஒருமனிதனுக்கு ; அதற்காக முடிவெய்திடுவது முப்பதாயிரம்மனிதர்களா ?
இப்படி சமர்களத்தின் பக்கமாகசமணத் துறவி யொருவர் பாடிக் கொண்டே சென்ற காட்சி
இரக்கமற்றோர் கண்களையும்ஏரி, குளமாக்கும் காட்சியாகும்!